முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)
முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட் 2017): ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ விழாக்கள் நடப்பது வழக்கம். இவற்றில், தென் மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி திருவிழாக்கள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழாவின் இறுதி நாளான புதன்கிழமை [02-08-2017] அன்று, பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்காக நேர்ந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நீர்நிலையில் கரைப்பதற்காக அம்மன் கரகத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம், சின்னக்கடைத்தெரு வழியாக வந்தது. இது காலங்காலமாக நடந்து வருகின்றது.
முஸ்லிம்கள் ஊர்வலத்தை வரவெற்றது – பரஸ்பர மரியாதை செய்து கொண்டது: அங்குள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அருகே முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது[1]. அம்மன் கரகம் எடுத்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார்[2]. இந்த நிகழ்ச்சியில் சைரோஸ், நைனார் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்[3]. அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் தலைவர் அங்குச்சாமி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்[4]. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது. அவ்வப்போது, மதப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் ராமநாதபுரத்தில், அவற்றுக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் ஒற்றுமை, இரு தரப்பினைச் சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டாண்டு காலமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முறையை ஏன் மற்ற பகுதிகளில் கடைப் பிடிக்க முடியாது?
2015ல் கீழக்கரையில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்[5]: ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. 02-08-2015 அன்று மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது[6]. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார்[7]. பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன் வாழ்த்துப் பாடல்களை பாடினர். சிறிதளவு முளைப்பாரியினை வழங்கினர். ஏர்வாடி தர்கா ஹக்தார் சபை மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெப்பை கோயில் விழா தலைவர் முத்துமணிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ஏர்வாடி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சி நடந்தது[8]. 2014லிலும் இவ்வாறே நடந்தது[9].
தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோவில் சமத்துவம் [ஜனவரி 2017] ஏன் மற்ற இடங்களில் இல்லை?: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை அன்று அதே பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் ஒன்று காலம் காலமாக வீரகாளியம்மனுக்கு அணிவிக்க பட்டாடை கொடுத்து வருகிறது[10]. இந்த ஆண்டு -2017 அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா என்பவர் தனது தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டைகள் முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார்[11]. அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த ஏழு அம்பலக்காரர்களும் பட்டாடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேம் செய்தார். அதன்பிறகு வழக்கம் போல பூஜாரி கோவில் மாட்டை அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். மேலூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் இரு மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். மேலூரில் நடந்து ஏழுமாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், ஆகஸ்ட் 2017ல், சேலத்து முஸ்லிம்கள் மட்டும் எப்படி மாறாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?
சிராவன மாதமும், ஆடிமாதமும், முகமதியரும்: சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்[12]. சிராவான மாதம் ஜூலை 24, 2017 முதல் ஆகஸ்ட் 23, 2017 வரை உள்ளது. இதில் ஒவ்வொரு நாளுமே விஷேசமான நாள்தான் –
- ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விரதம்,
- செவ்வாய்கிழமை மங்கள கௌரி விரதம்,
- வெள்ளிக்கிழமை லக்ஷ்மிக்கு உதந்ததான விரதம்
சிராவன பௌர்ணமி 07-08-2017 அன்று வந்தது. அன்று சந்திரகிரகணமாகவும் இருந்தது. அன்று நாகபஞ்சமி, ரக்ஷாபந்தன், ஆவனி ஆவிட்டம், நாரளி பௌர்ணிமா [தேங்காய்] என்று பலவாறு இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. ஆகஸ்ட் 14 ஜன்மாஸ்டமி, கிருஷ்ணாஸ்டமி, கோகுலாஸ்டமி என்று வருகிறது. ஆனால், முகமதியர்களுக்கு, இம்மாதத்தில் ஒன்றும் இல்லை. ரம்ஜான் முடிந்ததும், ஹஜ் [30-08-2017] வரை சும்மாதான் இருக்க வேண்டும். ஆனால், இம்மாதத்தில் தான் கந்தூரி விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றனர். அதாவது, பழைய பண்டிகைகளை மாற்றி கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தான் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி கலாட்டா செய்து வருகின்றனர். ஆனால், இந்த உர்ஸ், கந்தூரி, தீமிதி விழாக்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் தான் அடிப்படைவாத-வெறிபிடித்த ஜிஹாதி முஸ்லிம்கள், இவற்றை எதிர்க்கின்றனர். அந்த போகில் தான், இப்பொழுது 2017ல் அம்மன் விழாக்களை எதிர்க்கின்றனர். இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
© வேதபிரகாஷ்
07-08-2017
[1] விகடன், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்!, இரா.மோகன், Posted Date : 12:08 (03/08/2017), Last updated : 12:08 (03/08/2017)
[2] http://www.vikatan.com/news/tamilnadu/97804-people-from-all-religion-joined-mulaipaari-rally.html
[3] தினத்தந்தி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு, ஆகஸ்ட் 03, 2017, 03:30 AM
[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03003215/An-example-of-religious-harmony–Mulberry-marchMuslims.vpf
[5] தினமலர், மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம், பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.2, 2015, 03:26.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1355010&Print=1
[7] தினத்தந்தி, மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை, அக்டோபர் 01, 2015, 04:15 AM.
[8] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/01031227/Mariamman-Temple-Dargah-mulaippari-Yervadi-prayer.vpf
[9] http://temple.dinamalar.com/news_detail.php?id=35380
[10] தமிழ்.ஒன்.இந்தியா, மேலூரில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல், Posted By: Jijo, Published: Tuesday, January 17, 2012, 13:54 [IST]
[11] http://tamil.oneindia.com/news/2012/01/17/tamilnadu-hindu-muslims-celebrate-pongal-madurai-aid0180.html
[12] சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
அண்மைய பின்னூட்டங்கள்