வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

சரித்திரத்தை அறியாத இந்தியர்கள்: சரித்திரத்தை சரியாக இந்தியர்கள் அறிந்து கொள்ளாததாலும், தவறாக எழுதப்பட்டுள்ள சரித்திரத்தைப் படித்தே தமது அறிவை வளர்த்துள்ளதாலும், இந்தியர்களுக்கு உண்மைகள் நிறையவே தெரியாமல் உள்ளன[1]. இன்று தீவிரவாதத்தை-பயங்கரவாதத்தை யாதொரு மதத்துடனும் இணக்கலாகாது என்று ஆவேசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர், வற்புறுத்துகின்றனர்[2]. அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்களே பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்நிலையில் உண்மையைச் சொன்னால் கூட கோபித்துக் கொள்வார்களோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கியும் இருக்கின்றனர். இப்படி மூளைசலவை செய்யப்பட்டும், மூளை மழுங்கியும் இந்தியர்கள் மீதுதான் – ராணுவ வீரர்கள் முதல் பாமர மக்கள் வரை – இத்தகைய தாக்குதல்கள் நடைப் பெற்று வருகின்றன.

உண்மையை மறைப்பவர்கள், மறுப்பவர்கள்: ஓட்டு வங்கி அரசியலில் பிழைக்கும் அரசியல் கட்சிகள் தெரிந்தும் உண்மைகளைப் பற்றி பேசவே பயப்படுகின்றன. ஊடகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு முன்னுக்கு முரணான செய்திகளை தந்தும், தேவையில்லாத விவாதங்களை ஒலி-ஒளிபரப்பியும், சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றனர். உயிர்களை இழந்தவரிகளின் உறவினர்கள் தவிக்கும் போது, டிவியில் தாம் தோன்றலாம் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடனும், மெழுகு வர்த்தி ஏற்றி வரும் கூட்டமும் பெருகி வருகிறது[3]. ஆனால், எப்படி தீவிரவாதத்தை-பயங்கரவாத ஜிஹாதிகள் கத்தியிலிருந்து, பீரங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என்று மாறி-மாறி தங்களது போர்களை நடத்தி வருகின்றனர் என்று அறியாமல் இந்தியர்கள் உள்ளதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பின்னணியில் உள்ளதா?: ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் [the United Jehad Council (UJC)] என்ற தீவிரவாத அமைப்புதான் ஐதராபாத் வெடிகுண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜைஸ்-உல்-மொஹம்மது, மற்றும் அல்- பதர் என்ற மூன்று பயங்கரவாத ஜிஹாதி குழுக்கள் பிப்ரவரி 13ம் தேதி கூடிப்பேசி, பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்புகளைச் செய்துள்ளதாகத் தெரிகிறது[4].

ஐந்து மறைமுகத்தாக்குதல் குழுக்கள் இந்த தில்குஷ் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஐதராபாதிலிருந்தே அதற்கான வெடிப்பொருட்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இதன் விஷயமாக பீஹாருக்குச் சென்று விசாரிப்பதாகத் தெரிகிறது[5].

ஒரு கிலோ வெடிப்பொருள் உபயோகப்படுத்தியுள்ளனர். சிகப்பு மற்றும் பழுப்புந்நிற திரவங்களும் காணப்பட்டன. தாமதித்து வெடிக்கும் கடிகாரம் கொண்ட சாதனமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[6].
நவீன உள்ளே வெடித்து சிதறும் குண்டுகள் தயாரிக்கும் விதம்[7]: மூன்று விதமான வெடிகுண்டுகள்:
- சிறிய அளவில் பாக்கெட்டுகள் போன்ற உருவமுடையவை[8] (Package-Type Improvised Explosive Devices (IEDs).
- வண்டிகளில் எடுத்து வந்து மோதி வெடிக்கும் வகை[9] [Vehicle Borne IEDs (VBIEDs)].
- தற்கொலை / மனித வெடிகுண்டுகள்[10] [Suicide Bombs].
இத்தகைய குண்டுகளை ஜிஹாதிகள் தாராளமாக உபயோகித்து வருவது, நடந்துள்ள வெடிகுண்டு தீவிரவாத-பயங்கரவாத நிகழ்ச்சிகளினின்று தெரிந்து கொள்ளலாம். 150 மீட்டர் இடைவெளி வைத்து பைக்குகள் உள்ள இடத்தில் வைத்திருப்பதால், அவை வெடிக்கும் போது, அதன் விளைவால் பக்கத்தில் உள்ள பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிழம்பை உருவாக்கும். கூர்மையான பொருருட்கள் 30 அடி வரை இருக்கும் மக்களை தாக்கி பாதிக்கும்[11].

According to sources, terrorists used over one kg of ammonium nitrate — 400gm in one and 700gm in another — and packed them in aluminum containers with sharpnels. Sources, however, said not too many shrapnels were found from the spot. “Either few shrapnels were used or they were lost in the melee that followed the incident. A timer device, which could be a clock or a cellphone, is suspected to have been used in the circuit, while the charge to the detonator was given using a .3 volt or .9 volt battery. It’s a classic IED used by terror groups,” said an official from the National Bomb Data Centre[12]. |
ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் – 400 கிராம் ஒன்றில், 700 கிராம் மற்றொன்றில் – பெட்ரோல் மற்றும் கூர்மையான ஆணிகள், பால்பேரிங்குகள் வைத்து, அலுமீனிய டப்பாக்களில் அடைத்து, அவை வெடிப்பதற்காக, செல்போன் அல்லது நேரத்திற்கு வெடிப்பதற்கான மின்னணு சாதனம் இணைக்கப்பட்டது. வெடிப்பதற்கான சாதனம் .3 volt or .9 volt பாட்டரியுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய தயாரிப்பு முந்தைய “இந்திய முஜாஹித்தீன்” தயாரிப்புக்களை ஒத்துள்ளது. |
அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக எளிதில் கடைகளில் விற்பக்கப்படுகின்றன. இதனை 94:6 என்ற விகிதத்தில் ஏதாவது ஒரு எளிதில் எரியும் தன்மைக் கொண்ட திரவத்துடன் கலந்தால், அது வெடிகுண்டு தயாரிக்கும் பொருளாகி விடும்[13]. அமெரிக்காவில் அம்மோனியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அவற்றைத் தயாரித்து, சைக்கிள்களில் வைத்து விட்டுச் சென்றால், யாருக்கும் சந்தேகமே வராது என்று திட்டமிட்டு, இந்த ஜிஹாதிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர்[14].
தப்பிப் பிழைத்தவன் சந்தேகத்தில் உள்ளான்: அப்துல் வாசிப் மிர்ஜா (Abdul Wasif Mirza of Kala Pathar) ஆடைகளை விற்றுவரும் நபர் மறுபடியும் வெடிகுண்டில் காயமடைந்துள்ளது சோகமான கதையென்றே சொல்லலாம், ஏனெனில், கடந்த 2007 குண்டு வெடிப்பில் தனது காலை இழந்தார்[15]. இரண்டு குண்டு வெடிப்பிலும் அந்த இடத்தில் இருந்துள்ளதாலும், தப்பித்துப் பிழைத்துள்ளதாலும், காலாபத்தர் என்ற ஏழு கி..மீ தூரத்திலிருந்து அங்கு டீ குடிக்க வந்தேன் என்று சொல்வதாலும் போலீசார் அவனை சந்தேகிப்பதாகத் தெரிகிறது[16].
வேதபிரகாஷ்
23-02-2013
[1] “வந்தார்கள் வென்றார்கள்” இப்பொழுது எழுதப்பட்டால், எப்படி எழுதப்படும் என்று யோசிக்கும் போதே உண்மை தெரிகிறது. நிச்சயமாக அந்த எழுத்தாளர் எழுத துணிவிருக்காது என்றே தெரிகிறது.
[2] விஜயும், கமல் ஹஸனும் சந்தோஷமாக இருப்பார்களா அல்லது மற்றொருத் திரைப்படம் எடுக்க துணிவைப் பெறுவார்களா என்றும் தெரியவில்லை.
[3] இதனை ஐதராபாத் விஷயத்தில் ஊடகங்களே ஒப்புக் கொண்டது வியப்பாக இருந்தது.
[5] Sources informed that 5 sleeper cells were involved in carrying out the twin blasts in Dilsukh Nagar. The explosive used in the blast was bought in Hyderabad itself and a team of NIA officials will soon head to Darbhanga (Bihar) in search of clues, sources added.
[6] Reports say over 1 kg explosive was used in each bomb in Hyderabad. Also, red and grey liquid was found after the blasts and timer was used to carry out the dastardly incident.
அண்மைய பின்னூட்டங்கள்