Posted tagged ‘செக்யூலரிஸ வித்வான்கள்’

குதுபுதீன் நஜீம்– பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

பிப்ரவரி 6, 2023

குதுபுதீன் நஜீம் – பள்ளி தாளாளரின் பாலியல் பிரச்சினை, மாணவிகள் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தது, விவகாரம் வெளிப்பட்டு கைதானது!

செக்யூலரிஸ பாலியல் பிரச்சினை, மதசார்பற்ற விவகாரங்கள், அணுகும் முறை: பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவாக சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி செய்திகள் வெளிவருவதில்லை. சென்ற வருடம், இத்தகைய இரச்சினை பற்றி தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. ஆனால், சிறுபான்மையினர் பள்ளிகளின் பாலியல் விவகாரங்கள் மறைக்கப் பட்டன. பிறகு, செக்யூலரிஸத் தனமாக, ஒன்று கிருத்துவப் பள்ளி, இன்னொன்று முஸ்லிம் பள்ளி என்று செய்தி வெளியிடப் பட்டு, பாலியல் குற்ற வழக்குகள் அமைதியாகி விட்டன. “சிவசங்கர் பாபா” போன்று துப்பறிய நக்கீரனும் குதிக்கவில்லை, துடிக்கவில்லை. இப்பொழுது, இன்னொரு வழக்கு செய்தியாக வருகிறது.

900 மாணவிகள் படித்துவரும் பள்ளியில் தாளாளரின் பாலியல் அத்துமீறல்: நெல்லையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத் துணையாக அவரின் மனைவியும் பள்ளித் தலைமை ஆசிரியையும் இருந்தது தெரியவந்திருக்கிறது. ஆக, திட்டமிட்டு, கூட்டாகத்தான் இந்த பாலியல் தொல்லை, செக்ஸ் குற்றம் அரங்கேற பெண்களே துணையாக இருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது[1]. 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அந்தப் பள்ளியில் 900 மாணவிகள் படித்துவருகிறார்கள்[2]. பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீம் (47) என்பவர் இருக்கிறார்[3]. பள்ளியில் தலைமை ஆசிரியையாக காதரம்மாள் பீவி (57) பணியாற்றி வருகிறார்[4]. இந்தப் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், தனது அறைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்[5]. பிறகு, மாணவிகள் ஏன், எதற்கு சென்றனர் என்று ஊடகங்கள் விவரிக்கவில்லை.

04-02-2023 அன்று விவகாரம் வெளிவந்தது: இரு தினங்களுக்கு முன்பு 04-02-2023 அன்று வழக்கம்போல குதுபுதீன் நஜீம் தனது அறைக்கு மூன்று மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்[6]. அதனால் அச்சம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், நடந்த விவரங்களை சக மாணவிகளிடம் சொல்லி அழுதிருக்கின்றனர்[7]. “அச்சம்” அடையும் நிலைக்கு, உச்சத்திற்கு அப்படி செய்தார் என்று தெரியவில்லை. அதாவது, இப்பொழுது இவ்விவகாரம் வெளிப்பட்டு விட்டது என்றாகி விட்டது. அறையிலிருந்து தப்பி ஓடும் அளவுக்கு அந்த காமுகன் அறைக்குள் என்னமோ செய்திருக்கிறான். அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்[8]. மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன, என்று விகடன் கூறுகின்றது. பிறகு, மூன்று மாதங்களாக, ஏன் அமைதி காக்க வேண்டும், விசயங்கள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்று புரியவில்லை.

இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது: தகவலறிந்து வந்த பெற்றோர், இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது[9]. “இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது,” என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. அதாவது, சிறுபான்மையினர், மைனாரிட்டி, முஸ்லிம்கள் என்றால், “நமக்கு எதற்கு பிரச்சினை, வம்பு……,” அல்லது, தாக்கப் படலாம்………………………போன்ற அச்சமும் உருவாகும் தன்மை அறியப் படுகிறது. இதனால், போலீஸாரும் மற்றவர்களும் கூட கண்டுகொள்ளாமல் இருக்கும் போக்கு காணப் படுகிறது. இப்பொழுது, “வடக்கன், வடக்கத்தியர்……” என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப் படுகிறது, அவ்ர்களால் தான் பிரச்சினை, குற்றங்கள் என்ற நிலையில் விமர்சிக்கும் போக்கு, செய்தி வெளியிடல் போன்றவையும் சகஜமாகி விட்டது. ஆனால், பாலியல் குற்றங்கள் என்று வந்தால், “பத்மா சேஷாத்ரி” போன்ற வேகம், தீவிரம், துப்பறியும் தன்மை எல்லாம் வருவதில்லை, அப்படியே அடங்கி விடுகிறது. ஏதாவது, ஒரே ஒரு செய்தி இப்படி வெளிவந்து விட்டால், அதை மட்டும் பி.டி.ஐ பாணியில், அப்படியே போட்டு அடங்கி விடுவர். பிறகு, என்னவாயிற்று என்று கண்டுகொள்வதில்லை.

முதலில் பேச்சு வார்த்தை நடந்தது: சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[10]. அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். ஆக, அத்தனை அதிகாரிகள் வரவேண்டியுள்ளது போலும். உடனடியாக அங்கு சென்ற மேலப்பாளையம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அமைதியை ஏற்படுத்தினர்.

பிறகு முறையாக போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இந்த நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகாரளித்தனர். அதாவது சட்டப் படி நடவரிக்கை எடுக்க வேண்டிய முறை ஆரம்பிக்கப் பட்டது என்று தெரிகிறது. எனெனில், எங்களூகு எந்த புகாரும் வரவில்லை என்று போலீஸார் சொல்லலாம். மூன்று மாதங்கள் அவ்வாறே காலம் கடந்திருக்கலாம். இப்பொழுது, புகார் கொடுத்த பட்சத்தில், அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போலீஸார் மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதாவது, விசாரணையே இப்பொழுது தான் ஆரம்பிக்கப் படுகிறது. அதில் பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது, என்று ஒரே வரியில் செய்தி முடிகிறது, அல்லது முடிக்கப் படுகிறது. அந்த விவரங்களும் கொடுக்கப் படவில்லை. .

05-02-2023 அன்று கைது செய்யப் படுவது: இது தொடர்பாக மாணவிகள் சிலர் ஏற்கெனவே பள்ளித் தலைமையாசிரியை காதரம்மாள் பீவியிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. அவரும் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர், தாளாளர்மீது புகார் தெரிவித்த மாணவிகளை அழைத்து பாடங்களில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்[11]. இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கின்றனர்[12]. இதெல்லாம் மாணவிகளை எந்த அளவுக்கு, மனரீதியில் மிரட்டப் பட்டு, கட்டுப் படுத்தி வைக்கப் பட்டுள்ளனர் என்பதனை காட்டுகிறது. இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது[13]. அதனால் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் 05-05-2023 அன்று கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்[14]. எனவே, இனி மேல் என்ன நடக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

05-02-2023.


[1] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தாளாளர் உள்பட மூவர் கைது, ப.ராம்குமார், Published on 06/02/2023 (16:06) | Edited on 06/02/2023 (16:45)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/3-people-including-school-principal-nellai-were-arrested-by-pocso

[3] நக்கீரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மூவர் போக்சோவில் கைது , நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 06/02/2023 (13:11) | Edited on 06/02/2023 (13:29).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tirunelveli-melapalayam-government-aided-school-incident

[5] தமிழ்.இந்து,  திருநெல்வேலி | பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைது, செய்திப்பிரிவு, Published : 06 Feb 2023 06:35 AM; Last Updated : 06 Feb 2023 06:35 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/939639-school-principal-arrested.html

[7] சமயம், நெல்லையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முதல்வர், தாளாளர் உட்பட 3 பேர் கைது..!, Authored by திவாகர் மேத்யூ | Samayam Tamil | Updated: 5 Feb 2023, 3:00 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/crime/3-persons-including-the-principal-were-arrested-in-the-case-of-sexual-harassment-of-schoolgirls-in-nellai/articleshow/97621351.cms

[9] மாலைமலர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது, By Maalaimalar, 5 பிப்ரவரி 2023 11:04 AM

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-harassment-case-school-principal-arrested-568756

[11] தினமணி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளித் தாளாளா் உள்பட மூவா் கைது, By DIN  |   Published On : 06th February 2023 07:12 AM  |   Last Updated : 06th February 2023 07:12 AM

[12] https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2023/feb/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3996171.html

[13] விகடன், நெல்லை: பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியைகைதான மூவர்!, பி.ஆண்டனிராஜ், Published: Today 06-02-2023 at 9 AM; Updated:Today at 9 AM.

[14] https://www.vikatan.com/news/crime/three-persons-arrested-including-a-school-correspondent-for-sexual-harassment

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

 

 டிஎன்ஏ சோதனை: யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர். இதில் பீகார் போலீசார் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். “நான் அவனில்லை” என்ற வாதங்கள் வருவதால், புலன்விசாரணைக் குழு இதனை உறுதி செய்ய தீர்மானித்துள்ளது. இதனை அறிந்து தான், ஒருவேளை தந்தை, மாமா மற்ற உறவினர்கள் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள் போலும்.

விசாரிக்க கர்நாடகம்,  குஜராத் போலீஸ் தீவிரம்[1]: கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “பெங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்படும்”, என்றார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது: “யாசின் பட்கலை எங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் கோருவோம்”, என்றார்.

முல்லாயம் சிங் கட்சி முஸ்லிம் தலைவர் தீவிரவாதிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது,  பேசுவது ஏன்?: இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், மனித உரிமைப் போராளிகள், செக்யூலரிஸ வித்வான்கள், சமத்துவ ஞானிகள், மனிதநேய விற்பன்னர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய தீவிராவாதிகள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றே, சில முரண்பட்ட செய்திகளை போட்டு வைக்கிறார்கள். தீவிரவாதிகளின் பெயர்களைக் கூட வேண்டுமென்றே மாற்றி-மாற்றி குறிப்பிடுவார்கள். அவற்றை தீவிரவாதிகள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, யாசீன் போன்ற படித்த தீவிரவாதிகள் “நான் அவனில்லை” போன்ற வாதங்களை வைத்து, “அலிபி”, அதாவது “அந்நேரத்தில் நான் அங்கில்லை” என்றும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

யாசின் பட்டகல் மற்றும் அவனது வக்கீல் எம். எஸ். கான் வாதிப்பது ஏன்?: யாசின் பட்டகல் சொல்கிறான், “இந்திய முஜாஹித்தீனை தோற்றுவித்தவர்களுள் ஒருவன் நான் என்பதனை நான் மறுக்கிறேன்”, என்கிறான். பிறகு, “தில்லி மற்றும் 7 தொடர்குண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் நானும் வேறு”, என்கிறான். ஆனால், யாசின் பட்டகல், அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா என்ற எல்லோரும் ஓரே நபர் தான் என்று என்.ஐ.ஏ எடுத்துக் காட்டியது[2]. இப்பொழுது கூட, எம். எஸ். கான் என்ற யாசினின் வக்கீல் அத்தகைய வாதங்களை வைத்துள்ளது கவனிக்கத்தக்கது[3].

ஊடகங்களின்  தேவையற்ற செய்திகள், பிரச்சாரங்கள்: யாசின் பட்டகல் பாகிஸ்தானில் இருந்தான், ஐ.எஸ்.ஐ.யினால் பயிற்சி கொடுக்கப்  பட்டான் என்ற உண்மை அவனை விசாரிக்கும் போது தெரிய வந்துள்ளது. இதுவரை அவன் லச்கர்-இ-தொய்பா தான் பயிற்சி கொடுத்தது என்று நம்பி வந்தார்களாம்[4]. இப்படிபட்ட செய்திகள் வெளியிடும் போக்கும் என்னவென்று தெரியவில்லை. இந்திய துப்பறிவாளர்கள் என்ற நினைத்தார்கள், நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம், இந்தியர்களுக்கு வேண்டிய செய்திகளா? முன்பு கூட மும்பை வெடிகுண்டுவெடிப்பிற்கு பிறகு, யாசின் தில்லிக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றதில் மும்பை மற்றும் தில்லி போலீஸார் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றன[5]. யாசின் தப்பிச் செல்ல தில்லி போலீஸார் தான் காரணம் என்ரு மும்பை போலீஸார் கூறினர்[6]. வழக்கம் போல, சி.என்.எநை.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முதலிவவர்களை வைத்துக் கொண்டு “பட்டி மன்றம்” நடத்தி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய உண்மைகளை தருவது போல “டமாரம்” அடித்துக் கொள்வார்கள். இதுதான் இந்தியாவின் லட்சணம் என்று விசயம் தெரிந்தவர்கள் பரிகாசம் செய்வார்கள். முதலில், இனிமேல் இந்தியாவில் இவர்களது கொட்டம் அடக்கப்படும், அவர்களது கூட்டாளிகளின் வால்கள் அறுக்கப்படும், இந்தியாவில் இருந்து கொண்டு ஆதரவு காட்டி வரும் சதிகாரர்கள் அடக்கப்படுவார்கள். அதனால், இனி குண்டுவெடிப்புகளே நிகழாது என்றுதானே தைரியமாக சொல்ல வேண்டும். மாறாக, இத்தகைய பிரச்சாரங்களால், சாதாரண மக்களுக்கு என்ன லாபம்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] However, District Judge I S Mehta, who remanded Bhatkal and his close associate and alleged top IM operative Asadullah Akhtar for custodial interrogation for 12 days, did not accept his claims saying NIA has said that he was the IM co-founder. ‘Both the accused have been produced before the court on the issuance of NBWs (non-bailable warrants) on July 18, 2013 wherein the accused Yasin Bhatkal and accused Asadullah Akhtar alias Haddi alias Danial. In the present application it is stated that Mohd. Ahmed Siddibappa is Yasin Bhatkal and he is the same person against whom the NBWs were issued.

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[3] Yasin Bhatkal today failed in his attempt in a Delhi court to falsify the claim of investigators that he was the same person whom the NIAhas dubbed as the co-founder of Indian Mujahideen (IM) involved in a string of terror strikes in the country in the last seven years. His lawyer M S Khan opposed National Investigation Agency (NIA’s) plea seeking 14-day custody saying ‘the accused person before the court is Mohmmad Ahmed and not Yasin Bhatkal.’

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[6] A series of reports on an alleged botched operation to catch Indian Mujahideen operative and purported 13/7 mastermind Yasin Bhatkal has left the Maharashtra Anti-Terrorism Squad and the State government fuming. A top official told The Hindu on Thursday that the government was upset with the leaks from the Delhi police and is sure to take up the matter with the Ministry of Home Affairs “at the right time.” The ATS, which is investigating the 13/7 blasts, has already flagged off its grievance to Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-flays-delhi-police-on-137-leaks/article2814646.ece?ref=relatedNews