Posted tagged ‘சுல்தான்பேட்டை’

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்!

மார்ச் 24, 2020

பெரியார் மண் ஈரோடுக்கு வந்த தாய்லாந்து ஏழு துலுக்கர், கரோனா வைரஸ், இறந்தவன் ஒருவன், பாதிப்பில் மற்றவர், மூடமட்ட இரு மசூதிகள், தடை செய்யப்பட்ட ஒன்பது தெருக்கள்!

Sultanpet, Erode, The Hindu photo

கரோனாவை பாதிக்கும் செக்யூலரிஸம்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் எல்லாமே அரசியல், ஜாதி, மதம், அந்தஸ்து, பணம் என்ற ரீதியில் தான் கவனிக்கப் படுகிறது. இதில் சித்தாந்தம் கலந்தால், பல உண்மைகள் மறைக்கப் படும். அதிலும், சிறுபான்மையினர் சம்பந்தப் பட்டது என்றால், அமைதியாகி விடுவர். விசயம் பிரச்சினை என்றால் அடக்கி வாசிப்பர். மிகவும் பெரியது என்றால், பெயரைக் குறிப்பிடாமல் செய்திகளை வெளியிடுவர். பேராபத்து என்றால் ஐசிஸ், தீவிரவாதி என்பர், கரோனா என்றால், சுத்தம். ஒன்றையும் குறிப்பிட மாட்டார்கள். புகைப்படம் கூட இருக்காது. ஆனால், ஈரோடு விசயத்தில் எல்லாமே இருந்தாலும், புகைப்படங்கள் வெளியிட்டதால், அது துலுக்கர் பிரச்சினையாக்கி, அமுக்கி வாசிக்கப் படுகிறது. கேரளாவில் இது போன்ற சட்டமீறல்கள் மூன்று நடந்திருப்பதாகத் தெரிகிறது. அங்கும், சம்பந்தப் பட்ட நபர்களின் பெயர்கள் கூட குறிப்பிடாமல் செய்திகள் வெளியிடப் பட்டன / பட்டு வருகின்றன. இது குறிப்பிட்ட மதத்தினரின் பிரச்சினை இல்லை என்றாலும், மிகவும் அபாயகரமான இலையில், அவ்வாறு மறைப்பது தான் சந்தேகங்களை எழுப்புகின்றன.

The Five cae to Erode IE

16-03-2020ல் வெளிநாட்டவர் வந்தனர்: ஈரோட்டில் உள்ள கொல்லம்பாளையம் சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த மார்ச் 16ந்தேதி வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேரில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது[1] என்று 23-03-2020 அன்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, செய்திகள் இவ்வாறு வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்கிய பகுதிகளில் 9 வீதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது[2]. சில ஊடகங்கள் 10 வீதிகள் என்று குறிப்பிடுகின்றன. அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். வீடுகளை அடையாளம் காணும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் உள்ளவர்களின் வலது கையில் , அழியாத மையால் முத்திரை வைக்கப்பட்டது. 160 வீடுகளை சேர்ந்த, 695 நபர்கள், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Erode Sultanpettai,GOOGLE, 24-03-2020

கரோனா வைரஸ் – தடை செய்யப் பட்ட தெருக்கள்: தாய்லாந்து துலுக்கன்களால் பாதிக்கப் பட்டதால், கீழ்கண்ட தெருக்களில் உள்ளோர் வெளியே போகக் கூடாது. வெளியிலிருந்தும் யாரும் உள்ளே நுழையக் கூடாது.

1.       புதிய மசூதி சாலை.

2.       கொங்காலம்மன் கோவில் தெரு

3.       கிழக்கு கொங்காலம்மன் கோவில் தெரு

4.       சுல்தான்பேட்

 

5.       மேற்கு கொங்காலம்மன் கோவில் தெரு

6.       கந்தசாமி தெரு

7.       கந்தசாமி சந்து.

8.      ஒட்டுக்கார சின்னைய்யா தெரு

9.       ஹசன் தெரு

The Five cae to Erode

வந்தவர் ஏழு பேர், சென்றுவிட்டவன் – 1, இறந்தவன் – 1, மீதி ஐந்து: தாய்லாந்திலிருந்து ஏழு துலுக்கன்கள் மார்ச் 12, 2020 அன்று வந்ததாகவும், அவர்கள் மூன்று மசூதிகளில் தங்கியதாகவும் தெரிகிறது. அதில் ஒருவன் தாய்லாந்திற்கு திரும்பிச் சென்று விட்டான். அதில் மற்றொருவனுக்கு ஜுரம் வந்ததால், கோயம்புத்தூர் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்று 17-03-2020 அன்று இறந்து விட்டான். சோதனையில் கரோனா வைரஸ் இல்லை, சிறுநீரக கோளாரினால் இறந்தான் என்று தெரிந்ததாம். ஆனால், அதில் மற்ற இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப் பட்டது. அதனால், பெருந்துறையில் இதற்காக பிரத்யேகமாக கட்டப் பட்டுள்ள ஐ.ஆர்.டி  மருத்துவ கல்லூரி பிரிவுக்கு 16-03-2020 அன்று அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்து தங்கிய இரண்டு மசூதிகளை மூடுமாறு ஆணையிடப் பட்டுள்ளது. அவர்களது உதவியாள், சமையல்காரன் மற்றும் இருவர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். முதலில் இவர்கள் ஒத்துழைக்காமல் தகராறு செய்ததாகவும், பிறகு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டதாகவும், பாலிமர் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

Erode Sultanpettai, Kollampalayam, identified, 24-03-2020
ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது[3], “ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்துவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. பொதுமக்களைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இருந்து மார்ச் 1ம்தேதிக்கு பிறகு யார் வந்திருந்தாலும், அவர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டுகிறோம். அவ்வாறு தகவல் கொடுத்தால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியும். இந்த தகவலை யாரும் மறைக்கக் கூடாது. இதற்காக கிராம அளவில் தொடங்கி பல்வேறு குழுக்களை அமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”.

Thailand returned, Erode, Tamil Hindu, 24-03-2020
கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள்: சி.கதிரவன் தொடர்ந்து கூறியதாவது[4],கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 உறுப்பினர்களை அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளோம்[5]. இவர்களின் வீடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெளியில் இருந்து யாரும் அப்பகுதிக்குச் செல்லக் கூடாது[6]. அதே நேரத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அடிப்படைத் தேவையை அப்பகுதியிலேயே நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளிமக்களோடு பழகக் கூடாது. எதிர்வரும் 15 நாட்கள் மிக சவாலான காலமாகும். அதற்கு பொதுமக்கள், ஊடகம் என அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,” என்றார்[7]. இதற்குப் பிறகு, செய்திகளாக இவை வெளியிட ஆரம்பித்தன[8]. ஆனால், எந்த ஊடகக் காரனும், தையமாக அந்த தாய்லாந்துக் காரனையோ, மசுதியின் காஜியையோ பேட்டிக் கண்டு விவரங்களை வெளியிடவில்லை. துலுக்கர் என்றதும் அடங்கி விடுகிறது. இதுதான், செக்யூலரிஸத்தில் புதிதாக இருக்கிறது.

Erode Sultanpettai,mosque-2

பெரியார் மண்ணில் நடந்த கரோனா வைரஸ் விஜயம் செய்தது: 16-03-2020 அன்று ஈரோடுக்கு வந்தார்கள் என்றால், கரோனா பிரச்சினை பிரிதாக இருக்கும் நிலையில் எப்படி, விமான நிலையத்திலிருந்து, வெளியே வந்தனர் என்பது புதிராக உள்ளது. மேலும் 23-03-2020 அன்றுதான் தெரிய வந்துள்ளது என்பது அதை விட பெரிய ஆச்சரியமாக உள்ளது. ஆக ஒரு வாரம் வரை, இவர்கள் கணுபிடிக்காத படி இருந்தார்கள் என்பது வியப்புதான். 22-03-2020 அன்று தேசிய ஊரடங்கு அறிவித்த போது, இந்தியாவில், வெளிநாடுகளிலிருந்து நுழைந்தவர்களின் விவரங்களை பரிசோதித்து, விவரங்களை அந்தந்த மஐலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதனால், திடுகிட்ட மாநில அரசுகள் பயந்து போய், உடனடியாக நடவடிக்கை எடுத்தன. அதனால், அடுத்த நாளே, 23-03-2020 கலெக்டர் போகிறார்,, சோதனை நடக்கிறது, செய்திகள் வருகின்றன. இல்லையென்றால், அவ்வளவு தான், ஈரோட்டின் கதி அதோகதி ஆகியிருக்கும். பெரியார் மண், புண்ணாயிருக்கும்.

Erode Kollampalayam, identified, 24-03-2020

சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள்: ஈரோடில், கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தங்கி, மத பிரசாரத்தில் ஈடுபட்ட, தென்கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தைச் சேர்ந்த இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது[9]. அவர்கள் நடத்திய ஆய்வில் கொல்லம்பாளையம், கொங்கலம்மன் கோவில் அருகில் உள்ள சுல்தான்பேட்டை மசூதியில் 169 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் தொழுகை ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கரோனா தொற்று உள்ள தாய்லாந்தை சேர்ந்த இருவரும் அதில் பங்கேற்றுள்ளனர் என்பதும்[10], தொழுகையில் ஈடுபட்ட 697 பேரில் 13 பேருக்கு காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது[11]. பின்னர் காய்ச்சல் உள்ள 13 பேருக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து கரோனா தொற்று உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது[12]. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்கும் வகையில், இம்மருத்துவமனையை, ‘கொரோனா சிகிச்சை மருத்துவமனை’யாக மாற்ற, சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது[13]. இதன்படி, 300 படுக்கை வசதிகளுடன், இரண்டு நாளில் மாற்றப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்[14].

© வேதபிரகாஷ்

24-03-2020

Carona affected cases, data, The Hindu, 24-03-2020

[1] தினத்தந்தி, ஈரோடு அருகே 9 வீதிகளுக்கு சீல் வைப்பு – 695 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல், பதிவு : மார்ச் 24, 2020, 08:35 AM

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/03/24083551/1203327/Corona-in-Erode.vpf

[3] தமிழ்.இந்து, ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியில் வசித்தோர் வீட்டை விட்டு வெளியேற தடை: ஆட்சியர் உத்தரவு,, எஸ்.கோவிந்தராஜ், Published : 23 Mar 2020 20:41 pm, Updated : 23 Mar 2020 22:31 pm.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/545815-erode.html

[5] தினமணி, ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினா் தங்கிய பகுதிகள், வீடுகளில் அடையாள வில்லை, கைகளில்சீல், By DIN | Published on : 24th March 2020 01:02 AM

[6] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/24/thailand39s-homeland-in-erode-3387388.html

[7] NewsTM, தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : அதிரவைக்கும் தகவல், By Aruna | Mon, 23 Mar 2020

[8] https://newstm.in/tamilnadu/in-one-district-alone-696-people-are-isolated-shocking/c77058-w2931-cid498221-s11189.htm

[9] புதியதலைமுறை, தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பிலிருந்த 696 பேர் வீடுகளிலேயே இருக்க அறிவுரை: ஈரோடு ஆட்சியர், Web Team, Published :23,Mar 2020 03:49 PM.

[10] http://www.puthiyathalaimurai.com/newsview/66907/696-people-from-Erode-who-have-been-in-contact-with-Thailand-have-been-instructed-to-stay-at-home-said-the-collector

[11] நக்கீரன், கரோனா: ஈரோட்டில் 694 பேருக்கு வைரஸ் விழிப்புணர்வு முத்திரை!, ஜீவாதங்கவேல், Published on 23/03/2020 (23:20) | Edited on 23/03/2020 (23:22).

[12] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-erode

[13] தினமலர், கொரோனாபாதித்தவர்கள் நடமாடிய 10 வீதிகளுக்கு, ‘சீல்‘ :ஈரோடில் உச்சகட்ட உஷார், Added : மார் 24, 2020 01:19

[14] https://www.dinamalar.com/news_detail.asp?id=2508187