Posted tagged ‘சுலைமான்’

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

திசெம்பர் 2, 2016

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

al-quida-terrorist-arrested-at-madurai-abbas-dawood-samsudeen-ayub-28-11-2016

முதலில் இருவர், நால்வர் என்று இறுதியாக அறுவர் கைதானது: இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் 29-11-2016 அன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த  பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.

  1. தாவூத் சுலைமான்(வயது 23), [கரீஸ்மா பள்ளிவாசல், மதுரை[1]]
  2. அப்பாஸ் அலி(27) [மதுரை இஸ்மாயில்புரம் நயினார் முகமது மகன்[2]],
  3. கரிம் ராஜா(23), [புதூர் விஸ்வநாதநகர் ராமுகொத்தனார் காம்பவுண்டைச் சேர்ந்த முகமது ஜைனுல்லாபுதின் மகன். பி.காம் படித்தவன், சிக்கம் கடை வைத்துள்ளவன்[3]]
  4. முகமது அயூப் அலி(25), [மதுரை திருப்பாலை ஐஸ்லாண்ட் நகர் முகமது தஸ்லிம் மகன்[4]]
  5. சம்சுதீன் என்ற கருவா சம்சுதீன்(25)[சிக்ந்த்ரின்மகன், நெல்பேட்டையைச் சேர்ந்தவன்[5] ]
  6. மொஹம்மதுஅயூப் [25, மொஹம்மதுதஸ்லிமின்மகன்[6]]

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seizedமுக்கிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது: மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர்[7]. பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[8]. கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

dm-nia-arrested-al-queda-men-including-it-techie-at-madurai-29-11-2016

தீவிரவாத பயிற்சி அளித்தவர்கள் கைதாகியுள்ளனர்: 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல்,   கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்[9].  இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது[10]. இதற்காக மதுரை மேலூர்,  சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர்[11]. மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர்.  சுலைமான் கைது, விவகாரங்களை சுலபமக்கியுள்ள்து[12].

nia-searches-at-sulaiman-house-dm-30_11_2016_005_003

கணினி வல்லுனனான சுலைமான் தலைவன்: இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பான். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார். ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்[13]. இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[14]. இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[15].

© வேதபிரகாஷ்

02-12-2016

nia-arrested-connected-with-five-blasts-base-movement

[1] Dawood Suleiman, 23 yrs, s/o Saeed Mohd. Abdulla of Karimsa Pallivasal, Madurai, now

residing at Chennai. He works in a software firm and was the main leader of the terrorist gang.

He has been arrested in Chennai today 28-11-2016, for the involvement in the crime.

[2] Abbas Ali, 27 yrs, s/o Nainar Mohammed, resident of 11/23, 2nd floor, 4th street, Ismailpuram, Munichalai Road, Madurai. He studied up to 8th standard, and a painter. He is also running a library in the name ‘DARUL ILM’ at Madurai. He has been arrested in Madurai today [28-11-2016], for his involvement in the crime.

[3] Samsum Karim Raja, s/o V.S. Mohammed Jainullah- buddin, resident of No.17, Ramu kothanar compound, Viswanatha Nagar, K. Pudur, Madurai. He is a B.Com graduate and runs a chicken broiler shop at Kannimara Koil street in Madurai. He has been arrested in Madurai today 28-11-2016, for his role in the crime.

[4] Md. Ayub Ali, age 25 yrs, s/o Mohd Tasleem, resident of Island nagar, Madurai. He is a Public liaison officer for a hearing aid company. He is being further examined in Madurai for his role in the crime.

[5] Today 29-11-2016, NIA has arrested accused namely Shamsudeen, aged 25 yrs, S/o

Sikander, R/o No.13-C, Kilamarat Veedhi, Opposite Thayir Market, Nelpettai, Madurai

[6] Today 29-11-2016, NIA has arrested accused namely Mohd Ayub aged 25 yrs, S/o Mohd Dhaslim, Island Nagar, 2nd Cross Street, Kaipathur, Madurai in Madurai in RC-03/2016/NIA/HYD.

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/TCS-techie-who-plotted-to-target-PM-Modi-held-in-TN/articleshow/55677420.cms

[8] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/114_1_PressRelease_29_11_2016_1.pdf

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/360_1_PressRelease_29_11_2016_2.pdfUPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், By: Veera Kumar, Published: Tuesday, November 29, 2016, 15:33 [IST]

[10] The Hindu, NIA detains four youths for blasts in courts, Vijaita Singh, MADURAI/NEW DELHI: NOVEMBER 29, 2016 01:07 IST UPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST.

[11] http://www.thehindu.com/news/national/NIA-detains-four-youths-for-blasts-in-courts/article16717767.ece

[12]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/mysuru-blast-2-more-from-base-movement-secured-nia-268498.html

[14] The Hindu, NIA arrests one more terror suspect in Madurai, by S. Sundar, MADURAI NOVEMBER 29, 2016 20:47 IST UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IST.UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IS

[15] http://www.thehindu.com/news/national/NIA-arrests-one-more-terror-suspect-in-Madurai/article16721360.ece

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!

திசெம்பர் 2, 2016

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரைகுறி அத்வானி முதல் மோடி வரை!

dm-nia-arrested-al-queda-men-at-madurai-29-11-2016மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.

nia-detains-four-youths-the-hindu-29-11-2016மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

nia-arrested-connected-with-five-blasts

கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].

  1. ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
  2. கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
  3. கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
  4. ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
  5. கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.

நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.

nia-took-the-arrested-to-melur-court-dm-30_11_2016_005_004_001மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.  இதில், –

  1. மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
  2. மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].

இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

© வேதபிரகாஷ்

02-12-2016

two-arrested-by-nia-in-mdurai-out-of-six

[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST

[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf

[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25

[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.

[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service  |   Published: 28th November 2016 08:31 PM  |

Last Updated: 29th November 2016 08:12 AM.

http://www.newindianexpress.com/nation/2016/nov/28/chittoor-blast-nia-arrests-interrogates-three-al-qaeda-suspects-in-madurai-1543528.html

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece

[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467

[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST