டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது – பழனியில் வெடிகுண்டு மிரட்டல் – முஸ்லிம் சகோதரர்கள் கைது!
டிசம்பர் 6ம்தேதி – பீதிகிளப்பும், பொதுமக்களைதொந்தரவுசெய்யும்தினமாகமாறிவருவது[1]: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பழனி கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல் (05-12-2013): அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனி கோவிலுக்கு தினசரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவதுண்டு. தற்போது சபரிமலை சீசன் காலமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழனி மலை கோவிலுக்கும் வந்து சாமிதரிசனம் செய்து செல்கின்றனர். டிசம்பர் 6–ந்தேதியை முன்னிட்டு பழனி மலைக்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதியம் சுமார் 2 மணியளவில் ஒரு மர்மநபர் தொலைபேசியில் பழனி கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
சிம் கார்டை மாற்றி பேசி, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் (06-12-2013): பழனி மலைக்கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது[2]. டிஐஜி வெற்றிச்செல்வன், எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். மலைக்கோவில், அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு விடிய, விடிய நடத்தப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது[3]. தவிர, மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுக்க பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படாததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து பழனிக்கோயிலில் கூடுதலாக வின்ச், ரோப்கார், படி வழிப்பாதைகளில் மொத்தம் நான்கு டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 20 போலீஸாரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு தைப்பூசம் திருவிழாக்காலம் வரை பணியிலிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை வைத்து எந்த செல்போனில் இருந்து பேசப்பட்டது என்றும், அந்த மர்ம நபர்கள் தற்போது எந்த எண்ணில் பேசி வருகின்றனர் என்றும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விடுமுறையில் பழனி வந்த இவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், மிரட்டல் விடுத்த பின் சிம்கார்டை மாற்றியதும் தெரியவந்தது[4].
பழனிகோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக முஸ்லிம் சகோதரர்கள் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்[5] (07-12-2013): இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த செல்போனுக்கு எந்த டவரில் இருந்து சிக்னல் வருகிறது என்று போலீஸார் கண்காணித்தனர். இதையடுத்து புதுஆயக்குடி மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் மகன்கள் பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்[6]. முகமது அலி அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இவரது மகன்கள் பைசூல் மன்னாரும், சுலைமான் சேட்டும் 13 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மிட்டாய் வியாபாரத்துக்காக சென்று அங்கேயே தங்கி விட்டனராம். கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிரந்தர முகவரி, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கேரள மாநிலம் பாலக்காடு முகவரியிலேயே உள்ளது. இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டனராம். இவர்களுக்கு ஏதும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கேரள முஸ்லிம்களும், குண்டுவெடிப்புகளில் அவர்களது பங்கும்: இப்பொழுதுள்ள நிலைமையில் முஸ்லிம்கள் இவ்வாறு செய்வது விளையாட்டல்ல, விபரீதத்தை விட மேலான விசயமாகும். மேலும் குண்டுவெடிப்புகளில் கேரள முஸ்லிம்கள் அதிகமாக சம்பந்தப் பட்டு ஏற்கெனவே கைது செய்யப்பாட்டிருக்கின்றனர். இந்நிலையில், மறுபடியும் முஸ்லிம்கள் சம்பந்தப்படுவது அதிகமான சந்தேகத்தையே எழுப்பும்.
வேதபிரகாஷ்
© 09-12-2013
[1] https://islamindia.wordpress.com/2013/12/07/december-6-a-day-of-remembrance-or-terror-induement/
[2] மாலைமலர், வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பழனி கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 07, 3:44 PM IST
அண்மைய பின்னூட்டங்கள்