கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?
கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.
ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].
கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.
வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாது–சவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].
சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].
நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.
© வேதபிரகாஷ்
26-06-2020
[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லை… கட்டணம் திரும்ப கொடுக்கப்படும் –முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST
[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf
[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் – சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM
[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf
[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.
[6] https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152
[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.
[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html
[9] இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?
[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.
[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185
[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு…, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.
[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020
[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM
[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html
[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020
[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.
அண்மைய பின்னூட்டங்கள்