Posted tagged ‘சிவில்’

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஆதரவுஎதிர்ப்பு (3)

Modes of talaq

ஆதரவுஎதிர் பிரச்சாரங்கள், முஸ்லிம்கள் செய்து வருவது: முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[1].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறியதாக ஒரு செய்தி. ஆனால், தெரிவித்த உதவி ஜனாதிபதி மனைவி சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[2], என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். இதிலிருந்து, முஸ்லிம்களில் சிலர், சில இயக்கங்கள், முத்தலாக்கை ஆதரித்து, அவ்வாறே பெண்கள் கஷ்டப்பட்டு, அவதிபட்டு, ஜீவனாம்சம் இல்லாமல் அல்லது குறைவாக வாங்கிக் கொண்டு, குழந்தை-குட்டிகளோடு இருக்க வேண்டும் என்று சொல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அமைதி காக்கின்றன.

Modes of talaq -ul - whatsup etc

இந்தியாவில் உள்ள சிவில்கிரிமினல் சட்டநிலைகள்: நாட்டில் பல விவகாரங்கள், விவரங்கள், பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் கையாளப்பட்டு வருகின்றன.  பொது இடங்கள், சாலைகள் போன்ற இடங்களில் எல்லோரும் பொதுவாக-சமமாக பாவிக்கப் படுகிறார்கள். அதாவது, சிவில்-கிரிமினல் சட்டங்கள் ஒன்றாக இருந்தால் தான், மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்க முடியும், சட்டமுறை அமூலாக்க முடியும். பொதுவாக குடும்பம் என்றாலே, தாய், தந்தை, குழந்தை என்று தான் உள்ளது. குழந்தை தனது தாய், தந்தை யார் என்று அறிந்து தான் வளர்கிறது. இப்பந்தம், சொந்தம், உறவுமுறை பிறப்பு சான்றிதழ் முதல், அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென்று தாய், தந்தை மாறிவிட்டால், அதாவது விவாக ரத்தாகி விட்டால், குழந்தைக்கு குழப்பம் ஏற்படுகிறது. வளர்ந்த மகன் அல்லது மகளுக்கு பிரச்சினை உண்டாகிறது. தாய், தந்தை மறுவிவாகம் செய்து கொண்டு விட்டால், அக்குழப்பம் பெரிதாகிறது. தாய் ஒருவர், தந்தை வேறு அல்லது தந்தை ஒருவர், தாய் வேறு என்று குறிப்பிட்டு, முந்தைய-பிந்தைய ஆவணங்கள் இருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே, வருத்தம் ஏற்படுகிறது. சிந்தனை போராட்டம் ஏற்படுகிறது. இது பொதுவாக உள்ள நிலை.

Modes of talaq -ul - biddat

முஸ்லிம்களின் பலதார முறை, விவாக ரத்து, குடும்பப் பிரச்சினைகள்: ஆனால், மதரீதியில், இஸ்லாமியர், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்றால், அந்நேரத்தில், ஒரு நதை மூலம், நான்கு தாய்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால், தலாக்-தலாக்-தலாக் என்ற விவாக ரத்தால், ஒரு மனைவி விவாகரத்து செய்யப்பட்டு, அவள், இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு அந்த ஆணின் மூலமும் இன்னொரு குழந்தை பிறக்கலாம். ஆனால், அவ்விரு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டால், தமக்கு தாய் ஒருவர் தான், ஆனால், தந்தை வெவ்வேறானவர்கள் என்று தெரிய வரும். இது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவி என்று நீண்டால், குழந்தைகள் கதி அதோகதிதான். குழந்தைகள் வளர-வளர, சமூகத்தில் அவர்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால்,  பாதிப்பும் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் நான்கு என்பதில்லை, இரண்டு என்றால் கூட, விவாகரத்தின் நிலைமை பாதிப்பதாக உள்ளது. இந்துக்களில் பலதார முறை, முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கிறது என்று வாதிக்கின்றனர். ஆனால், 85%ல் 15% என்பதும் 15%ல் 85% என்பதிலும் உள்ள நிதர்சனத்தை கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்து சமூக சீர்திருத்ததிற்கு செல்ல வேண்டுமே தவிர, அங்கும் உள்ளது, அதனால், இங்கும் இருக்கட்டும் போன்ற வாதம் சரியாகாது.

Muslim women oppose talaq etc

நிக்கா ஹலாலா போன்ற முறைகள்[3]: முகமதிய விவாகரத்து, மறுமணம் போன்றவற்றில், மதரீயில் உள்ளவை, நடைமுறையில் பிரச்சினையாக, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைகளில் உள்ளன. உதாராணத்திற்கு, நிக்கா ஹலாலா என்பதை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண், தனது முந்தைய மனைவியை திருமணம் செய்ய விருப்பப் பட்டால், முதலில் அவளை இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, அவள் அவன் கூட சேர்ந்து வாழ வேண்டும். உடலுறவு கொண்ட பிறகே, அவள் விவாக ரத்து பெற முடியும். அவ்வாறான பிரிந்திருக்கும் கலத்தை இத்தத் எனப்படுகிறது. இதெல்லாம் நடந்த பிறகே, அவன் / முதல் கணவன் அவளை திருமண செய்து கொள்ள முடியும். இந்த உறவுகளின் முடிவுகளைப் பற்றி சிந்தித்து, விவாதிக்க முடியாது. பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றியும் பேச முடியாது.

முஸ்லிம்கள் அல்லாத பெண்களுக்கு பிரிந்து வாழ்வதால் / விவாக ரத்தாகி தனியாக வாழ்ந்தால் ஏற்படும் தொல்லைகள், சங்கடங்கள், நஷ்டங்கள்: இதே பிரச்சினை மற்ற மதத்தினருக்கும் ஏற்படலாம். ஆனல், சட்டப்படி கட்டுப்படுத்தப் படுவதால், அத்தகைய பிரச்சினை மிகக்குறைவாகவே உள்ளது அல்லது காணப்படுவதில்லை எனலாம். பொதுவாக, இந்து பெண்கள், கணவன் விவாக ரத்தானாலோ, பிரிந்து வாழ நேர்ந்தாலோ, குழந்தையை தன்னோடு, எடுத்து வந்து வளர்க்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனா/ளாகும் வரை அவன்/அவள் பல இடங்களில், பல நேரங்களில் உன்னுடைய தந்தை யார் என்றால், பெயரைத்தான் சொல்ல முடிகிறதே தவிர ஆளைக் காட்டமுடிவதில்லை. பெண்ணிற்கும் / மனைவிக்கும் அதைவிட கொடுமையான நிலைமை, குடும்பத்தார், சமூகத்தார் என்று எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதற்கு, அவளது குடும்பத்தினர் உதவுகின்றனர். இவ்வாறு, அந்த சோகமானது மறைக்க/மறக்கப் படுகிறது.

Muslim women oppose , PROTEST talaq etc

முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், இன்று போராட வந்து விட்ட நிலை: ஆனால், முகமதிய பெண்கள், அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அவர்கள் இன்று துணிச்சலாக உரிமைகள் கேட்டு போராட ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தில், வழக்கும் பதிவு செய்து விட்டனர். அதன் தொடர்ச்சிதான், இப்பொழுதைய நிகழ்வுகள், மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள். இதற்குள்,  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட இயக்கம் [AIMPLB ] இவ்விசயத்தில், 90 நாட்களில் / மூன்று மாதங்களில் தாங்களே, முத்தலாக் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று அறிவித்துள்ளது[4]. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதாரமுறை இஸ்லாமிய பெண்களின் சமத்துவம் மற்றும் சுயமரியாதைகளை மீறுவதாக உள்ளதாகவும், அவை, அரசியல் ந்ர்ணய சட்டப் பிரிவு 25(1)  [Article 25(1) of the Constitution] ற்கு புறம்பாக இருப்பதாகவும், 10-04-2017 அன்று உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது[5].  உச்சநீதி மன்றம் இதனை ஏற்றுக்கொண்டது[6]. அடுத்த விசாரணை மே மாதம்.11, 2017 அன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது[7]. மேலும், உபியில், முத்தலாக் செய்யப்பட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது[8]. பஸ்தி மாவட்டம், திகாவுரா கிராமம், பைக்வாலியா போலீஸ் ஷ்டேசன் கீழ்வரும் இடத்தில், இது நடந்துள்ளது[9].

© வேதபிரகாஷ்

11-04-2017

mO UNIFORMITY ON ucc

[1] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[2] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[3] Nikah halala is a practice intended to curb incidence of divorce under which a man cannot remarry his former wife without her having to go through the process of marrying someone else, consummating it, getting divorced, observing the separation period called Iddat and then coming back to him again.

http://www.firstpost.com/india/triple-talaq-impacts-dignity-of-muslim-women-denies-fundamental-rights-centre-to-supreme-court-3378828.html

[4] ZeeNews, Triple talaq: AIMPLB says will do away with practice in 18 months, no need for govt intervention, By Zee Media Bureau | Last Updated: Tuesday, April 11, 2017 – 10:48.

[5] http://zeenews.india.com/india/triple-talaq-aimplb-says-will-do-away-with-practice-in-18-months-no-need-for-govt-intervention-1994931.html

[6] The Hindu, Polygamy is not a religious practice, government tells Supreme Court, NEW DELHI APRIL 11, 2017 00:58 IST UPDATED: APRIL 11, 2017 12:49 IST.

[7] http://www.thehindu.com/news/national/polygamy-is-not-a-religious-practice-government-tells-sc/article17915070.ece

[8] Financial Express, Triple Talaq victim hangs herself in Uttar Pradesh, another sits on dharna outside in-laws’ house, By: FE Online | Noida | Updated: April 11, 2017 2:01 PM.

[9] http://www.financialexpress.com/india-news/shocking-triple-talaq-victim-hangs-herself-in-yogi-adityanaths-uttar-pradesh/623732/