Posted tagged ‘சிலை வழிபாடு’

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

மார்ச் 18, 2010

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?

ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது  என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!

“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.

“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”

தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.

கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.

சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.

“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.

“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!