பாகிஸ்தானில் கிருத்துவர்கள் மீது, தொடர்ந்து தூஷண வழக்குகள் போடப்படுவது ஏன்?
பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் நிலை: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. மதத்தின் அடிப்படையில் தான் அது உருவாக்கpபட்டுள்ளது. ஷரீயத் என்ற இஸ்லாமியச் சட்டம் தான் அங்கு அமூலில் உள்ளது. இதன்படி, முஸ்லீம்கள் அல்லாதவர்கள் காஃபிர்கள் எனப்படுவர். இஸ்லாமிய சட்டத்தில் அவர்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. முஸ்லீம் யாராவது புகார் கொடுத்துவிட்டால், அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லீம் முஸ்லீமுக்குத்தான் சாட்சி சொல்ல முடியும், ஆனால், காபிருக்கு சாதகமாகச் சொல்ல முடியாது. ஆனால், பாதகமாக வேண்டுமானல் சொல்லலாம், அது இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும், அதன்படியே தண்டனையும் கொடுக்கப்படும்[1].
கடந்த வருடங்களில் நடந்த வழக்குகள்: கடந்த மே மாதத்தில் அப்படி பொய் வழக்குப் போட்டதாக, இரு கிருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கர்மா பத்ராஸ் என்ற பாஸ்டரும் கைது (அக்டோபர் 2012) செய்யப்பட்டு, பைளில் / ஜாமீனில் (பிப்ரவரி 2013) விடுவிக்கப்பட்டுள்ளார்[2]. ரிம்ஸா மஷிஹ் (Rimsha Masih) என்ற 14 வயது பெண்ணும், இதே போல கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டாள்[3]. அவள் குரானின் சில பக்கங்களை எரித்ததாக குறாஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டாள். ஆனால், யாருமே அவள் அவ்வாறு செய்ததை கண்ணால் பார்க்கவில்லை அதாவது பார்த்ததாக சாட்சி சொல்லவில்லை என்பதனால் விடுதலை செய்யப்பட்டாள்[4]. 1990லிருந்து இதுவரை 250ற்கும் மேற்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், 52 பேர் கொல்லப்பட்டூள்ளனர் / தூக்கிலிடப்பட்டுள்ளனர்[5].
3000 கிருத்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன: லாஹூரில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி சவன் அல்லது பப்பி (Savan, alias Bubby) என்ற கிருத்துவன் விமர்சித்துள்ளதாக தெரிகிறது. இதைக் கேள்வி பட்ட சபிக் அஹமது (Shafiq Ahmed) கத்தியுடன் சவன் வீட்டிற்குச் சென்றுள்ளான். ஆனால், அவன் அங்குக் காணப்படவில்லை. இதனால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சபிக் அஹமது வெள்ளிக்ழமை அன்று (08-03-2013) சுமார் 3000 பேர்களுடன் நூர் சாலையில் இருக்கும் ஜோஸப் காலனியில் உள்ள கிருத்துவர்கள் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளான்[6]. சவனுடைய அப்பா சனமன் மஸ்ஹி (Chaman Masih, 65) இருந்துள்ளார், அவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்[7]. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின[8], கிருத்துவர்கள் உயிருக்குப் பயந்து கொண்டு ஓடிவிட்டனர்[9]. சவன் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளான்[10].
பாஸ்டர் மீது அவதூறு வழக்கு: இதேபோல, கடந்த மாதமும் அஸ்கர் நிஜாம் ராஞ்சா என்ற பாஸ்டர் உயிருக்கு பயந்து ஓடியிருக்கிறார். அவரும் இஸ்லாமிற்கு விரோதமாக ஏதோ பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தனக்கு வேண்டாதவர்கள் அவ்வாறு திரித்துக் கூறியுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கெனவே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அவர் மீது தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், தான் தாக்கப்படலாம் என்று ஓடிவிட்டார்[11].
கிருத்துவ பெண் மீது வழக்கு: இதே போல, மார்த்தா என்ற கிருத்துவப் பெண்மணியும் அவதூறு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாள். அவள் ஷெர்-இ-ரப்பானி என்ற மசூதி அருகில் மொஹம்மது நபியை(pbuh)ப் பற்றி அவதூறாகப் பேசியதாக புகார் கொடுக்கப்பட்டது[12]. தூஷணத்திற்கான பிரிவு 295-Aவில் வழக்குப் போடப் பட்டதால், மரணதண்டனை அளிக்கப்படும்.
கிருத்துவர்கள் பேசுவது எப்படி தூஷணமாகின்றன?: கிருத்துவர்கள் அப்படி என்ன பேசியிருக்கிறார்கள், அவை ஏன் இஸ்லாமிற்கு எதிராக உள்ளன. பைபிளில் உள்ளவற்றை பேசினால், இஸ்லாமிற்கு தூஷணமாகுமா? ஏசுகிருஸ்துவைப் பற்றி பேசினால், குரானில் சொல்லப்பட்டதற்கு விரோதமாக போகுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், செய்திகளில் விவரங்கள் சொல்லப்படவில்லை.
வேதபிரகாஷ்
09-03-2013
[1] முகலாயர்கள் / முகமதியர்கள் இந்தியாவை ஆண்டபோது, அப்படித்தான் இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் இந்தியர்களை நடத்தினர், ஆட்சி செய்தனர். அதனால் தான் கோவில் உடைக்கப்பட்டன, ஜெசியா வர் விதிக்கப்பட்டது என்றெல்லாம் சரித்திரத்தில் உள்ளது.
[2] Karma Patras, a 55-year-old pastor of Bado Malhi, Sangla Hill, had been languishing in Sheikhupura District Jail since October after preaching on Christ’s sacrifice at a funeral attended mainly by Christians. Some Muslims present thought he was speaking against the Islamic animal slaughter ritual observed at the time, and Patras was confused when police showed up at his home later that day (Oct. 13, 2012) and arrested him on charges of defaming Islam .
[4] Rimsha Masih, believed to be no older than 14, was charged with burning pages of the Koran in August but was granted bail in September after a cleric was detained on suspicion of planting evidence to stir up resentment against Christians. Masih’s lawyer, Tahir Naveed, said the Islamabad High Court’s decision to throw out the case was based on the fact that no one had seen her burning pages of the Koran.The case provoked international concern and she could, in theory, have faced execution under Pakistan’s blasphemy law despite her age and reported mental problems.
http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120
[5] The number of blasphemy cases brought under the law is rising. Since 1987, there have been almost 250 cases, according to the Center for Research and Security Studies think-tank.Convictions are common, although the death sentence has never been carried out. Most convictions are thrown out on appeal but mobs often take the law into their own hands.The think-tank said 52 people had been killed after being accused of blasphemy since 1990. http://www.reuters.com/article/2012/11/20/us-pakistan-blasphemy-idUSBRE8AJ0B420121120
[8] http://www.pakistantoday.com.pk/2013/03/09/city/lahore/100-christian-homes-burned-by-mob-in-lahore/
[9] http://tribune.com.pk/story/518123/blasphemy-accusation-hundreds-of-christians-in-lahore-forced-to-flee/
அண்மைய பின்னூட்டங்கள்