Posted tagged ‘சிறுபான்மையினர் நலத்துறை’

பாகிஸ்தான் மததுவேஷ சட்டத்தை எதிர்த்த கிறிஸ்துவ அமைச்சர் சுட்டு கொலை!

மார்ச் 3, 2011

பாகிஸ்தான் மத துவேஷ சட்டத்தை எதிர்த்த கிறிஸ்துவ அமைச்சர் சுட்டு கொலை!

இஸ்லாமியர் / முஸ்லீம்கள் / முகமதியர் / முஸல்மான்கள் / மூர்கள் எந்த அளவிற்கு மற்ற மதத்தினரை மதிக்கின்றனர் அல்லது கொடுமைப் படுத்துகின்றனர் என்பதற்கான உதாரணம் தான் இந்த கொலை. வழக்கம் போல இந்திய ஊடகங்கள் தமக்கேயுரித்தான வகையில் வெளியிட்டிருக்கின்றன. பாகிஸ்தானில் அமைச்சர் சுட்டுக் கொலை[1], பாகிஸ்தானை உலுக்கியது அமைச்சர் படுகொலை[2] என்ற ரீதியில் தான் தலைப்புகள் இருந்தன. பாகிஸ்தான் மத துவேஷ சட்டத்தை எதிர்த்த கிறிஸ்துவ அமைச்சர் சுட்டு கொலை[3],  கிறிஸ்துவ அமைச்சர் கொலை என்று பி.பி.சி[4] வெளியிட்டிருந்தது! ஆக கிருத்துவர் கொலை செயப்பட்டார் என்பதனால், செய்திகள் வெளிவருகின்றன, அதுவே, இந்துக்கள் கொலை செய்யப்படிருந்தால், எந்த செய்தியும் வந்திருக்காது. இதுவும், அனைத்துலக செக்யூலரிஸ சித்தாந்தம் போலிருக்கிறது!

பாக் கிறிஸ்துவ அமைச்சர் கொலை[5]: பாகிஸ்தானின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவரான சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இறை தூதர் முகமது நபியை இழிவுபடுத்தியதற்காக, கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீவிக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இந்நிலையில், காலை 11.20 மணிக்கு இஸ்லாமாபாத்தில் செக்டார்-1பி-யில் உள்ள தன் வீட்டிலிருந்து ஷாபாஸ் பட்டி காரில் புறப்பட்டார். அவருடன் டிரைவரும், மற்றொரு அடையாளம் தெரியாத பெண்ணும் காரில் அமர்ந்திருந்தனர். பாதுகாவலர்கள் யாரும் இல்லை. ஷாபாஸ் பட்டியின் கார் வீட்டை விட்டு வெளியே வந்த போது, துப்பாக்கியுடன் வந்த ஒருவன் காரை நிறுத்தினான். டிரைவரையும், காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணையும் கீழே இறங்கும்படி கூறிய அவன், அவர்கள் இறங்கியதும், அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டான். 20 வினாடிகள் வரை சுட்டு விட்டு, தப்பினான். பலத்த காயம் அடைந்த அமைச்சர் ஷாபாஸ் பட்டியை, உடனடியாக அருகிலிருந்த ஷிபா சர்வதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு அவர் இறந்தார்.அமைச்சரின் காரை துப்பாக்கியுடன் வந்த நான்கு பேர் பல கோணங்களில் இருந்து தாக்கியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்டது ஏன்? தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் காரில் வந்த முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் அவரைச் சுட்டிருந்தனர். இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தாலிபான்கள் கூறுகின்றனர். அமைச்சரை துப்பாக்கியால் சுட்டவர்கள் உருது மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றுள்ளனர். அதில், மத துவேச சட்டத்திற்கு எதிராக ஷாபாஸ் அடிக்கடி பேசி வந்ததால், கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட அமைச்சர் ஷாபாஸ் பட்டி, தனது உயிருக்கு ஆபத்து உள்ள விவரம் குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இருந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ஷாபாஸ் பட்டி படுகொலைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய கொலை இரண்டாவதாகும்: இன்றைக்கு இந்தியாவில் பேச்சுரிமை, எழுத்துரிமை என்று என்னென்னமோ செய்து வருகின்றர்கள். காஷ்மீரட்தில் செய்யாத அட்டூழியமே இல்லை என்ற அளவிற்கு செய்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானில் நிலை இப்படியுள்ளது. இந்த வருடத்தில் இதுமாதிரியாக நடந்துள்ள இரண்டாவது படுகொலை இது. ரோமன் கத்தோலிக்கரான ஷாபாஸ் பட்டி, பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி வந்தவர் ஆவார்.

மதநிந்தனைச் சட்டங்களில் என்ன உள்ளன[6]? ஒருவர் மதநிந்தனைச் செய்ததாக சாட்சியம் சொன்னாலே போதும் அந்த சாட்சியத்தை நிரூபிக்கும் கூடுதல் தடயம் எதுவும் இல்லாமலேயே குற்றம் சாட்டப்படுபவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்பதுபோல இந்த மதநிந்தனைச் சட்டம் அமைந்துள்ளது. படுகொலை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, அந்நாட்டின் ஒரே கிறிஸ்தவ அமைச்சராவார். தவிர பாகிஸ்தானில் சிறுபான்மை நலத்துறைக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ஆக்கப்பட்ட முதல் கிறிஸ்தவரும் இவர்தான். சென்ற மாதம் தான் இவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாபாஸ் பட்டி யார்?: பஞ்சாப் மாநிலத்திலுள்ள லாகூரில் 1968ல் பிறந்தவரான ஷாபாஸ் பட்டி 1985லேயே பாகிஸ்தான் சிறுபான்மையினர் கூட்டணி என்ற அமைப்பு உருவாவதில் பங்கு வகித்ததிருந்தார். பாகிஸ்தானின் மதச் சிறுபான்மையினருடைய பிரதிநிதியாகவே இவர் பலகாலமாகக் கருதப்பட்டு வந்துள்ளார். 2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்த இவர் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருந்தார். பாகிஸ்தானின் கிறிஸ்தவ விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராகவும், பாகிஸ்தானின் மனித உரிமைக் கவுன்சில் செயல் இயக்குநராகவும் இவர் இருந்துவந்தார். தனது பணிகளுக்காக மத சுதந்திரத்துக்கான சர்வதேச விருது ஒன்றையும் இவர் பெற்றிருந்தார். இந்த சர்வதேச விருதை வாங்கிய முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. வன்முறை வழியிலல்லாது உத்தியோகபூர்வ வழிகளில் மூலமாகவே சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்பியவர் இவர். குற்றவாளிக்கு மரண தண்டனைகூட விதிக்க முடியும் என்றுள்ள பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வாதிட்டு வந்தவர் இவர்.

முந்தைய கொலை ஏன் நடந்தது? அண்மையில் இந்தச் சட்டத்தை எதிர்த்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தஸீர் தனது மெய்க்காவலர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்த ஷாபாஸ் பட்டிக்கும், பாகிஸ்தானின் முற்போக்கு பெண் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மானுக்கும்கூட கொலை மிரட்டல்கள் வந்திருந்தன. சல்மான் தஸீர் கொல்லப்பட்ட சமயத்தில் பிபிசியிட கருத்து வெளியிட்டிருந்த ஷாபாஸ் பட்டி மிரட்டல்களைக் கண்டு தான் ஓய்ந்துவிடப்போவதில்லை என்று கூறியிருந்தார். தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், பிபிசியிலும் பிற ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கான வீடியோ செய்தி ஒன்றை இவர் உருவாக்கி வைத்திருந்தார்.

இந்துக்களின் கதி என்ன? ஒபாமோ, ஹில்லரி முதலியோர் கண்டத்தைத் தெர்வித்துள்ளனர்[7]. காட்டு ராஜ்ஜியத்தினால் தான், அவர் கொல்லப் பட்டார் என்று கார்டிய நாளேடு குற்றஞ்சாட்டியது[8]. இன்றுள்ள அனைத்துலக அரசியலின் படி பாகிஸ்தான் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது[9]. இங்கு கூட, சிறுபான்மையினர் என்றால், கிருத்துவர்களுக்குத் தான் முக்கியத்துவம் தருகிறார்கள் போலிருக்கிறது. அப்படியென்றால், கோடிக்கணக்கில் அங்கிருந்த இந்துக்கள் எங்கே, இந்துகளின் நலன்களைப் பற்றி பேச எந்த அமைச்சர் உள்ளார்? ஏன் அங்கு ஒரு இந்து அமைச்சர் கூட இல்லை? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க எந்த செக்யூலரிஸ இந்தியனுக்கும், இந்துக்கும், முஸ்லீமுக்கும், கிருத்துவனுக்கும் தோன்றுவதில்லை போலும்!

வேதபிரகாஷ்

03-03-2011


[1] தினமணி, பாகிஸ்தானில் அமைச்சர் சுட்டுக்கொலை, First Published : 02 Mar 2011 12:39:13 PM IST;  Last Updated : 02 Mar 2011 03:00:11 PM IST

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=384649&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[2] தினமலர், பாகிஸ்தானை உலுக்கியது அமைச்சர் படுகொலை, மார்ச் 02, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=198343

[7] US President Barack Obama and Secretary of State Hillary Clinton joined the international community in expressing their outrage at the assassination of Pakistan’s Minister for Minority Affairs Shahbaz Bhatti.

http://www.bbc.co.uk/news/world-south-asia-12621225

[8] Shahbaz Bhatti: a victim of mob rule In Pakistan, violence is crudely justified as defence of Islam. The government must defend human rights and the rule of law.

http://www.guardian.co.uk/commentisfree/belief/2011/mar/02/shahbaz-bahtti-pakistan-violence