திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K
ஜெயந்தி கூட்டத்தில் பேசிய விவரங்கள்: சித்தராமைய்யா, கிரிஸ் கார்னாட், பரகூரு ராமசந்திரப்பா, கோ சன்னபசப்பா, பேராசியர் சியிக் அலி, என்.வி. நரசிம்மைய்யா, விரப்ப மொய்லி, முதலியோர் திப்புவைப் புகழ்ந்து பேசினர். கிரிஸ் கார்னாட், திப்பு ஒரு இந்துவாக இருந்திருப்பின், சிவாஜி போன்று இடத்தைப் பெற்றிருப்பான், போற்றப்பட்டிருப்பான் என்று ரீதியில் பேசினார்[1]. அதுமட்டுமல்லாது, “தீபாவளி நாங்கள் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறோம், இதை நாங்கள் பிஹார் நாள் என்று கூட கொண்டாடுகிறோம்”, என்றெல்லாம் தொடர்ந்து பேசினார். “பெங்களூரில் தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்”, என்றெல்லாம் கூட பேசினார்[2]. சித்தராமைய்யாவும் அவர் பேசியதை ஆமோதித்துப் பேசினார். மற்றவர்களும் திப்பு சுல்தான் செயூலரிஸ ஆட்சியாளர், கோவில்களுக்கு மானியம் வழங்கினான் போன்ற வழக்கமான விசயங்களை அள்ளி வீசினர். அவர்கள் பேசியதெல்லாம் திப்பு ஜெயந்தியை நடத்தினர் என்பதை விட, இந்த சாக்கை வைத்துக் கொண்டு, பிஜேபியைத் தாக்குவதும், இந்துக்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain
தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்: கிரிஸ் கார்னாட் இவ்வாறு சொன்னது, எல்லோரையும் உசுப்பி விட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிஷ் கர்னாட் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது உளறல்களுக்கு எதிராக நிறைய பேர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்[3]. குறிப்பாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான்[4], தான் பேசியதனால் ஏற்பட்டுள்ளா பாதிப்பை உணர்ந்தார் போலும். இதனால், அரண்டு போன கிரிஸ் கார்னாட் புதன் கிழமை 11-11-2015 அன்று[5], “என்னுடைய விமர்சனத்தினால், யாராவது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்……..நான் என்ன பலனைப் பெறப்போகிறேன் (அவ்வாறு விமர்சனம் செய்ததனால்)”, என்று சொன்னதிலிருந்தே, அவரது குற்ற உணர்வும், அதிகப்பிரசங்கித் தனமாக உளறியதும் மற்றும் விரக்தியும் வெளிப்பட்டது. மேலும், சித்தராமையா, “கிரிஸ் கார்னாட் அவ்வாறு பேசியது தப்புதான். …..அவர் ஏன் அத்தகைய விமர்சனம் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் அவ்வாறு பேசியபோது அங்கிருந்தேன். அவர் சொன்னதை மறுத்துப் பேச நினைத்தேன். ஆனால், நான் செய்யவில்லை”, என்று சொன்னதிலிருந்துதான்[6], பிரச்சினையை எந்த அளவுக்கு வகுப்புவாத, ஜாதீய முறையில் மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியது வெளிப்படுகிறது. அங்கு விழாவின் போது, இவர் ஆதரித்துப் பேசியைதைக் கவனிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது, “அந்தர்-பல்டி” அடிக்கிறார்! அடித்தது, தங்களையே திரும்ப அடிக்கும் நிலை வந்ததை உணர்ந்து ஜகா வாங்கியிருப்பதும் தெரிகிறது.
தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது: கர்நாடகாவில் இவ்வாறு பல இடங்களில் எதிர்ப்பு, போராட்டங்கள் என்று நடந்த வேளையில், தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது[7]. தக்ஷிண கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம். மேலும், இதற்கு சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி [SDPI] என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் செய்தது. அவ்விழாவில் பேசியவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்றிருந்தாலும், சொல்லி வைத்தால் போல, திப்புப் புராணம் பாடியுள்ளது, தமாஷாக இருந்தது எனலாம். அதற்குள், மரடிகேரியில் முஸ்லிம்கள் அனுமததீல்லாமல் ஊர்வலம் நடத்தியுள்ளதாக பிஜேபி குற்றஞ்சாட்டியுள்ளது[8]. ஒரு நபரைப் பற்றி சர்ச்சைகள் உள்ளான என்றபோது, அறிந்தே, அந்நபரது ஜெயந்தி என்று அரசே தீர்மானித்து நடத்தியிருப்பது, மக்களை தூண்டிவிடும் போக்குதான் காணப்படுகிறது. மேலும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்ற நிலையில் பேசியும் தெளிவாகியுள்ளது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால், ஞானபீடம் விருது வாங்கியவருக்குஙென்ன பேசுகிறோம் என்று தெரியாமலா பேசினார். இவ்வளவு நடந்தும், ஒரு முஸ்லிம் சார்புடைய தளம், “திப்பு ஜெயந்தியை” ஆதரித்து பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்[9]. ஆற்றோரம்.காம் என்ற தளம் சொல்லியிருப்பதை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“திப்பு ஜெயந்தி” விழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா – காவி கயவர்களின் சதியை முறியடித்த கர்நாடக அரசு! சங்பரிவாருக்கு அஞ்சாமல் “திப்பு ஜெயந்தி” விழாவை சிறப்பாக கொண்டாடி முடித்தது![10]: “இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் நடத்தியவரும்,ஆங்கிலேயரை முதன்முதலாக துணிச்சலுடன் எதிர்கொண்ட மாவீரரான திப்பு சுல்தானை மக்கள் மறந்தாலும்,கர்நாடக அரசும் அதன் குடிமக்களும் மறப்பதில்லை.காரணம் திப்பு சுல்தான் பிறந்த வீரமண்தான் கர்நாடக மாநிலம் மைசூர் அவருடைய தியாகத்தை போற்றுவதற்காக வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி “திப்பு ஜெயந்தி” விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம். இதை கண்டு பொறாமைப்பட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவ்விழாவினை கொண்டாடும் மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். 10-11-2015 ன்று தலைநகர் பெங்களூரில் விதான்னா சௌதா பகுதியில் அமைந்திருக்கும் பேண்குவைட் மஹாலில் “திப்பு ஜெயந்தி” விழாவினை ஊர்மக்கள் ஒன்றுகூடி நடத்தவிருந்தனர். இவ்விழாவிற்கு சங்பரிவார கயவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கர்நாடக அரசாங்கமே முழு களமிறங்கி அம்மஹாலில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து விழாவினை சிறப்போடு நடத்தி முடித்தனர். அவ்விழாவில் திப்பு சுல்தானின் வீரமும், தியாகமும், இந்தியாவிற்காக அவர் பாடுபட்ட பொதுநலனையும் அதிகாரிகள் பேசினர்! மேலும்,அடுத்த வருடம் முதல் பெருவாரியான மண்டபங்களில் திப்பு ஜெயந்தி விழாவினை அரசே ஏற்று நடத்தும் எனவும், அதற்கு மிரட்டல் விடும் சமூக விரோதிகளுக்கு கடுங்காவல் தண்டனக அளிக்கப்படும் எனவும் அவ்விழாவில் ஆட்சியாளர்கள் உறுதி கூறினர்!” ஆக, நாங்கள் ஷிர்கை ஆதரிக்கிறோம் என்கிறார்களா முஸ்லிம்கள்?
வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதி “திப்பு ஜெயந்தி” விழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம்: ஆற்றோரம்.காமலிந்த அளவுக்கு பொய் சொல்வது, செக்யூலரிஸம் கொடுத்த லைசென்ஸ் போலிருக்கிறது. முன்பு 2012ல் கேரளாவில் மாத்ரு பூமி இதழில் சரித்திர உண்மைகளை எடுத்துக் காட்டியபோது “டுசர்கிள்ஸ்நெட்” என்ற முஸ்லிம் இணைதளம் அதனைக் கடுமையாக சாடியது[11]. ஆக, முஸ்லிம்கள் தங்களுக்குள்ள முரண்பாடுகளை வேண்டுமென்றே காபிர்களை வைத்து கலவரங்களை உருவாக்கி, இந்துக்களை இத்தகைய “புதிய ஜிஹாத்” அல்லது “செக்யூலரிஸ ஜிஹாத்” மூலம் கொன்று வருகிறார்கள். இங்கும் அந்த “ஷிர்க்” முரண்பாடு வருகிறது. திப்புவை “ஹஜரத்” ஆக்கி. “பிறந்த நாள்” கொண்டாடுவோம் என்பது, எந்த விதத்தில் ஆசார இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. திப்புவின் முகமே முரன்பாடாக உள்ளது. அதாவது கருப்பு நிறம் மற்றும் குரூர தோற்றத்தில் உள்ள அவனது முகம், உருமாறி, நிறமாறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு மாற்றுவதை எப்படி சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒரு பெரிய மோசடியாகும். சரித்திரவரவியலில் இந்த அளவுக்கு மோசடிகளை செய்து, ஒரு குரூரக் கொடுங்கோலனிடமிருந்து, ஒரு புலியை உருவாக்கியுள்ளது மிகப்பெரிய சரித்திர மோசடி எனலாம்.
திப்புவை ஏன் பர்காவும், என்டிடிவியும் ஆதரிக்கின்றன?: சரதிந்து முகர்ஜி (இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசெர்ச்), “காங்கிரஸ் டிப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதின் மூலம் ஜிஹாதை ஊக்குவிப்பது போலிருக்கிறது”, என்று என்டி-டிவி விவாதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொழுது, பர்கா தத் என்ற பெண்மணி, நக்கலாக, என்ன இதை அரசியல்படுத்தும் முறையில் பேசுகிறீர்களே என்று தனது கருத்தை வைத்தார்[12]. மேலும் “In a controversial statement, NDA government-appointed member of Indian Council of Historical Research Saradindu Mukherji says, “Congress is trying to promote jihad” by celebrating birth anniversary of Tipu Sultan”, என்று அந்த இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 60 ஆண்டுகளாக அரசுசார்ந்த நிறுவனங்களில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் தான் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பொழுது மட்டும், ஏதோ புதியதாகக் கண்டு பிடித்த விதத்தில் இவ்வாறு குறிப்பிடுவதும், பர்கா நக்கலாக பேசுவதும் கவனிக்கத்தக்கது[13]. NDTV-Hindu சேர்ந்து டிவி செனல் நடத்துவதும், அவை தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருவதும், உள்ள பிரச்சினையை ஊக்குவிப்பது போலத்தான் உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
12-11-2015
[1] தைஜி.வார்ல்ட், Bengaluru: Tipu would have enjoyed status of Shivaji if he was a Hindu: Karnad, நவம்பர்.10.2015.
[2] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367915
[3] http://www.thehindu.com/news/cities/bangalore/protests-over-tipu-jayanti-continues-bjp-targets-karnad/article7866212.ece?ref=relatedNews
[4] http://www.thehindu.com/news/cities/bangalore/girish-karnads-remarks-on-tipu-create-a-stir/article7866381.ece?ref=relatedNews
[5] ….the noted playwright and actor sought to end the controversy, saying, “If anybody has been hurt by my remarks, I apologise… what will I gain by doing it (by making such comments).”
[6] Mr. Siddaramaiah also said it was a mistake on the part of the Jnanapith award winner to have made such remarks. “It is a mistake. I have told you,” he said. “I do not know why Girish Karnad made such a remark. I was also there (when he made the remark), I wanted to counter but I did not do,” he said.
[7] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367842
[8] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367973
[9] http://www.aatroram.com/?p=35379
[10] ஆற்றோரம்.காம், “திப்பு ஜெயந்தி” விழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா, BY ஹாரிஸ் அஹ்மது ON NOVEMBER 11, 2015
[11] http://twocircles.net/2012nov16/attempts_distorting_history_tipu_sultan.html#.VkPokNIrJdg
[12] NDTV, It’s Jihad by Congress to Celebrate Tipu: Government-appointed Historian, PUBLISHED ON: NOVEMBER 10, 2015 | DURATION: 2 MIN, 01 SEC 66
[13] http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/it-s-congress-jihad-to-celebrate-tipu-sultan-govt-appointed-historian/390428
அண்மைய பின்னூட்டங்கள்