Posted tagged ‘சிகையறுத்தல்’

கலிமா சொல்ல மறுத்த சீக்கிய இளைஞனின் சிகை அறுக்கப்பட்டது!

ஜூலை 30, 2010

கலிமா சொல்ல மறுத்த சீக்கிய இளைஞனின் சிகை அறுக்கப்பட்டது!

முதுன்பால் சிங் என்ற இளைஞர் (திரல் என்ற இடத்தில் வசிப்பவர்) அடையாளம் காணமுடியாத நபர்களால் பிடித்து அடிக்கப்பட்டு, அவரது சிகைமுடி அப்படியே கொத்தாக அறுக்கப் பட்டது. இந்நிகழ்ச்சி, ஸ்ரீநகரிலிருந்து 160 கி.மீ தொலைவிலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்துள்ளது.

அவர்கள் அந்த சீகிய இளைஞனைப் பிடித்துக் கொண்டு, “காஷ்மீர விடுதலை” முழக்கமிட ஆணையிட்டனர். பயந்த அவன் அவ்வாறே செய்தான். அடுத்ததாக, கலிமா சொல்லச் சொன்னதற்கு மறுத்துள்ளான். ஆகையால் நன்றக அடித்து, அவனுடைய மத அடையாளமான வளர்ந்துள்ள சிகையை அறுத்துள்ளனர்.

விஷயம் அறிந்த சீக்கிய இளைஞர்கள் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையை மறித்து ப்;ஓராட்டம் நடத்தினர்.  ஆனால், போலீஸார் லத்தி-சார்ஜ் செய்து கூட்டத்தைக் களைத்து விட்டனர்.

அகில இந்திய சிசோமணி அகாலி தள தலைவர், “யாரோ சீக்கியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரிவு உண்டாக்கவே இவ்வாறு செய்துள்ளனர்”, என்றார்.

மஸ்ரத் ஆலம்-பாகிஸ்தான்

மஸ்ரத் ஆலம்-பாகிஸ்தான்

ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத இயக்கம், சீக்கியர்களை அமைதியாக இருக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், இதே ஹுரித்தின் மற்ற அவதார தீவிரவாத இயக்கங்கள் தாம், காஷ்மீரத்தில் கலாட்டா, கல்லடி கலவரம் முதல் மற்ற பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருகின்றன.

பாகிஸ்தான் ஆதரவாளனான, மஸ்ரத் ஆலம் என்பவன் இப்பொழுது பொறுப்பேற்றுள்ளானாம்.

முஹமது யாஸின் மாலிக் [Jammu Kashmir Liberation Front (JKLF) chairman Muhammad Yasin Malik], மீர்வாயிஜ் உமர் ஃபரூக் [chairman of Hurriyat’s moderate faction Mirwaiz Umar Farooq] and சையது ஐ ஷா ஜிலானி  [its hard-line chairman Syed Ali Shah Geelani] முதலியோரை மௌனமாக இருக்கச் சொல்லி, இவனுடை குரல்தான் ஒலிக்கிறதாம். இதனால், காஷ்மீரத்தில், இன்னும் கலவரங்கள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரத்தில் உள்ள பிரிவினை சக்திகளை ஒட்டுமொத்தமாக அடக்கப்படும் வரை, மக்களுக்கு அமைதி திரும்பும் என்பது கனவுதான்.