Posted tagged ‘சான்றிதழ்’

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

திசெம்பர் 4, 2022

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

ஓகஸ்ட் 26, 2016

காதர் பாட்சா எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? திருமணம் செய்து கொண்ட பெண்கள் முட்டாள்களா?

காதர்பாட்சா மீது 8வது மனைவி புகார். தினகரன்

பலதார திருமணங்களில் பெண்கள் சிக்குவது விசித்திரமான நிகழ்வாக இருக்கிறது: பலதாரத் திருமணம் நடந்து கொண்டே இருப்பது, பெண்களின் பலவீனத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறாது, ஏனெனில், இப்படி, ஒரு ஆண், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. “வேலைக்குப் போகிகிறானா, இல்லையா?” என்று கூட தெரியாமல், ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால், அவாற்றையும் மீறி, இத்தகைய திருமணங்கள் நடக்கின்றன எனும்போது, வியப்பாக இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணிடம் அவ்வளவு எளிதாக ஏமாந்து விடுவாளா என்று நினைக்கும் போது திகைப்பாக உள்ளது. அடிப்படையிலேயே ஏதோ தவறு-தப்பு இருப்பது தெரிகிறது. எந்த பெண்ணும் தனது கற்பை, தாம்பத்தியத்தை அவ்வளவு எளிதாகக் கொடுத்து விடமாட்டாள். அந்நிலையில், ஒரு பெண் தெரிந்து செய்கிறாள் என்றால், கற்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றாகிறது. பிறகு, அது மிக்க தீவிரமான சமூகப் பிரச்சினையாகி விடுகிறது.

8 பேரை மணந்தவர் கைது - 23_08_2016_015_023

பலதார திருமணம் மற்றும் பணமோசடி என்ற குற்றங்களில் ஈடுபட்ட காதர் பாட்சா: திண்டுக்கல் பெண் உட்பட 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்தவர், ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதர் பாட்சாவின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[1] என்று இப்பொழுது – ஆகஸ்டில் தினமலர் செய்தி வெளியிட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், ஜூலை 25ம் தேதியே, இம்மோசடியில் சம்பந்தப்பட்ட காதர் பாட்சா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தூத்துக்குடியில் பதுங்கியிருந்த காதர்பாட்சாவை போலீசார் 24-07-2026 அன்று கைது செய்து மதுரை 5வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்[2]. தலைமறைவாக உள்ள தஸ்லிமா, அப்துல் கயூம், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்[3] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- எட்டாவது மனைவி புகார்

சலாமியா பானு மதுரையில் கொடுத்த புகார்: பிறகு எட்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். மதுரை புதுார் இ.பி., காலனியை சேர்ந்தவர் சலாமியா பானு (28). இவர் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து அளித்த புகார் மனு[4]: “எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டோம்[5]. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது தாயாருடன் ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவி தஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது[6].  கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[7].

 காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- 8வது மனைவி புகார்

ஜூன் 26.2016ல் காதர் பாட்சாவுடன் திருமணம்: சலாமியா பானு தொடர்கிறார், “இந்த நிலையில் தஸ்லிமா தனது உறவினர் பையன் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த மே மாதம் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு அவரை பிடிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனது தாய், தந்தையரின் அனுமதி பெற்று தன்னை காதர்பாட்சா என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு வங்கியில் வேலை செய்வதாக கூறினார். அப்போது அவர், என்னுடைய உறவினர் காதர் பாட்சா என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்[8]. மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் காதர்பாட்சா (32). தொடர்ந்து தஸ்லிமா எனது பெற்றோருடன் பேசி, சம்மதம் பெற்று எனக்கும், காதர் பாட்சாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு ஜூன் 26.2016ல் திருமணம் நடந்தது”.  ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தஸ்லிமா தன்னை வற்புருத்தி கல்யாணம் செய்து வைத்தாள் என்கிறார்[9].

 8 பேரை மணந்தவர் கைது - Webdunia 22-07-2016

காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லைஎன்ற தோழி: சலாமியா பானு தொடர்கிறார், “அப்போது மணமகனின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி நான் தஸ்லிமாவிடம் கேட்டேன். அதற்கு காதர்பாட்சாவுக்கு தாய், தந்தை இறந்து விட்டார்கள். சகோதர, சகோதரிகள் யாரும் இல்லை என்றார். இவர் அருப்புக்கோட்டை வங்கியில் பணியாற்றுவதாக கூறி என்னை திருமணம் செய்தார். 2 பேரும் எனது தாய் வீட்டில் / புதூரில் உள்ள எங்களது வீட்டில் தங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தோம். அப்போது கணவர் காதர்பாட்சா திருமணத்திற்காக வங்கியில் 40 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன் என்றார். இதைதொடர்ந்து ரம்ஜான் நோன்பு தொடங்கியது. அப்போது அவர் வேலை விஷயமாக ஒரு வாரம் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தார்.

 8 பேரை மணந்தவர் கைது -தினகரன் - 22-07-2016

பணம், நகையோடு மாயமான காதர் பாட்சா:  சலாமியா பானு தொடர்கிறார்,திருமணமாகி பல நாட்கள் ஆகியும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து நான் கேட்ட போது, சரிவர பதில் கூறாமல் ஏமாற்றி வந்தார்[10]. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட். 2ஆம் தேதி காதர் பாட்சா வேலை வி‌ஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றார்[11]. பின்பு என்னிடம் இருந்த 3 லட்சம் ரூபாய், 8 பவுன் நகை, .டி.எம்., கார்டுகளை எடுத்துச் சென்றார். .டி.எம்., கார்டை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் கொடுத்துவிடுவதாக தெரிவித்தார். அதன்பின்னர் ரம்ஜானுக்கு முதல்நாள் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது செல்போன்சுவிட்ச் ஆப்செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் வைத்திருந்த 5 செல்போன் எண்களுக்கும் மாறி, மாறி போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு ஏதேனும் ஆகி இருக்குமோ என்று எனக்கு பயம் வந்து, தஸ்லிமாவிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] தினமலர், 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் திண்டுக்கல்லில் மோசடி : தனிப்படை போலீசார் தேடல், ஆகஸ்ட்.22 2015: 23.56

[2] தினகரன், 7 பெண்களை மணமுடித்தகல்யாண மன்னன்கைது : பெண் உட்பட 3 பேருக்கு வலை, Date: 2016-07-25@ 02:00:17.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=233498

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1590948

[5] வெதுனியா, 8 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த வாலிபர், வெள்ளி, 22 ஜூலை 2016 (02:05 IST).

[6] தினத்தந்தி, நகை, பணத்துடன் மாயமாகி விட்டார்: 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 12:29 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 22,2016, 5:00 AM IST.

[7] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/woman-petition-on-her-husband-he-who-married-many-women-116072200004_1.html

[9] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[10] தமிழ்முரசு, 8 பெண்களை மணம்புரிந்த கல்யாணராமன் மீது புகார், 23 Jul 2016

[11] http://www.tamilmurasu.com.sg/2016/07/23/216412367-3931.html