மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:
- ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
- கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
- அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
- கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
- நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
- ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]
- இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
- இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
- எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
- தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
- இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
- மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
- இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
- காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].
என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.
பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.
மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
26-08-2016
[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf
[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf
[3] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf
அண்மைய பின்னூட்டங்கள்