Posted tagged ‘சலாபிஸம்’

செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?

ஏப்ரல் 25, 2014

செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில்,  பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?

 

சிரியாவில் செக்ஸ்-ஜிஹாதில் ஈடுபட்ட இளம்பெண்கள்

சிரியாவில் செக்ஸ்-ஜிஹாதில் ஈடுபட்ட இளம்பெண்கள்

ஜிஹாத்  அல்நிக்காஹ்  ( ஜிஹாதிற்காக  கல்யாணம்  செய்து  கொள்வது): இஸ்லாத்தில் உள்ள  “நிக்காஹ்”க்கள் போதாது என்று,  இப்பொழுது புதியதாக,  இன்னொரு நிக்காஹ் செயல் படுகிறது.  அது ஜிஹாத் அல்-நிக்காஹ்  [‘jihad al-nikah’ – (sexual holy war, in Arabic)]  என்று அரேபியத்தில் அழைக்கப் படுகிறது.  இதன்படி,  துனிஸிய நாட்டுப் பெண்கள் சிரியாவுக்குச் சென்று,  அங்கு போராடிவரும்,  முஸ்லிம் தீவிரவாதிகளுடன் படுத்து,  உடலுறவுகொண்டு,  மகிழ்வித்துத் திரும்பி வந்துள்ளார்களாம்[1].  ஆனால்,  ஒருபெண் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளவில்லை,  ஒரே நாளில் பல ஆண்களுடன் உடலுறவு கொண்டு வந்துள்ளார்கள்.  அது மட்டுமல்லாது,  அப்பெண்களின் முகங்கள் மறைக்கப் பட்டிருக்குமாம். இருப்பினும், செக்ஸில் உச்ச நிலையை அடையும் போது,  துணியை அகற்றி முகங்களைப் பார்த்திருக்கலாம்,  ஏனெனில், செக்ஸில் அத்தகைய நிலை ஏற்படும் என்று சொல்லவேண்டிய அவசியல் இல்லை.

 

உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ

உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ

விவகாரம் ஆரம்பித்த இடம்: சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi  mountains) தான் இவ்விவகாரம் வெளி வந்துள்ளது.  இங்குதான் டுனிசிய ராணுவம் அல்-குவைதாவைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் டிசம்பர்  2012லிருந்து போராடி  வருகிறது. அரசு தரப்பின்படி,  இங்குதான், களைத்துப் போன போராளிகளுக்கு உற்சாகம் சொடுக்க, செக்ஸ்-ஜிஹாத் செய்த 19 பெண்களை கைது செய்யப்பட்டனர் என்று அறிவித்துள்ளது[2].  அக்குடும்பத்தினர் துக்கத்தினால் உறைந்து போயிருக்கின்றனர்.  ஒரு குறிப்பிட்ட பெண் அல்-தௌபா மசூதியிலிருந்து கைது செய்யப் பட்டிருக்கிறாள்[3].

 

சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi mountains) தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

சாம்பி மலைகளில் ஜெபல் எக் சாம்பி என்ற இடத்தில் []Jebel ech Chaambi (Chaambi mountains) தான் இவ்விவகாரம் வெளிவந்துள்ளது.

டுனிசிய உள்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்ட விசயம்: இது ஏதோ,  ஜனரஞ்சகமான செய்தி அல்லது இஸ்லாத்தை விமர்சிக்கும் செய்தி என்றெல்லாம் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. “பெண்கள்  20,  30,  100  தீவிரவாதிகளுடன் உடலுறவுக் கொண்டு வந்துள்ளார்கள்,  இப்பொழுது கர்ப்பமாக உள்ளார்கள்”,  என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ [ Lotfi ben Jeddou]  அந்நாட்டு பாராளுமன்றத்தில் எம்பிக்களிடம் கூறியுள்ளார்[4]. கர்ப்பமாக இளம்பெண்கள் திரும்புவது பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[5].  ஆனால்,  அவர் எத்தனை பெண்கள் அவ்வாறு கர்ப்பமுற்று தீவிரவாதிகளின் ஜிஹாதிகளின் குழந்தைகளைத்  திரும்பியுள்ளன என்று எண்ணிக்கையைக் குறிப்பிடவில்லை[6].  இருப்பினும் இதை எதிர்த்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.  நிச்சயமாக அரசாட்சியில் உள்ளவர்கள் அத்தகைய அறிக்கைகளை விட பயிற்சிப் பெற்றிருப்பார்கள் அல்லது அவருடைய தலைவர்  / பயிற்சியாளர், அவ்வாறே சொல்லச் சொல்லியிருப்பார்.

 

ரஹ்மா செக்ஸ் ஜிஹாதி

ரஹ்மா செக்ஸ் ஜிஹாதி

செக்ஸ்ஜிஹாத் விபச்சாரம் தான் என்று சொன்ன முப்தியும், பதவி இழப்பும்: மதரீதியில், மதஅடிப்படைவாதத்தில், இறையியல் ரீதியில் செக்ஸ்-ஜிஹாத் குறிப்பிட்ட முஸ்லிம் குழுக்கள் ஊக்குவித்தாலும்,  முஸ்லிம் மதத்தலைவர்களும் இதனை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஷேக் ஓத்மான் பட்டிக் [Sheikh Othman Battikh]  என்ற முந்தைய துனிசியாவின் முப்டி கூறுவதாவது[7], “இந்த  13  பெண்களும் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள்.  உண்மையில் அவர்கள் சிரியாவிற்குச் சென்று அங்குள்ள ஜிஹாதிகளுக்கு செக்ஸ்-சேவை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.  இத்தகைய செக்ஸ்-ஜிஹாத் எல்லாம் விபச்சாரத்திற்கு சமமாகும்.  அங்கு ஜிஹாத் நடக்கவேண்டும் என்று இங்கிருந்து பெண்களை அனுப்புகிறார்கள்.  13 பெண்கள் அத்தகைய செக்ஸ்-ஜிகாதிற்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.  இது விபச்சாரம்தான்.  நீதிமுறைப் பாடம்த வறாகச் சொல்லப்பட்டிருக்கிறது”! இவர் இப்படி வெளிப்படையாக பேசியதால்,  அந்நாட்டு ஜனாதிபதி முன்சிப் மர்ஸுக் [Muncif Marzouk] அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்[8].  இருப்பினும்,  இன்னொரு முஸ்லிம் மதத்தலைவர்,  ஷேக் பரீத் எல்பாஜி [Sheikh Fareed Elbaji]  அவ்வாறு சென்ற பெண்களின் குடும்பங்களை தனக்குத் தெரியும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்[9].  “நீதிமுறைப்பாடம் தவறாகச் சொல்லப் பட்டிருக்கிறது”, என்று இவர் சொல்வதிலிருந்து, இஸ்லாம் மதப்புத்தகங்கள் எப்படிவேண்டுமானாலும், திரித்துக் கூறப்படும், விளக்கம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

 

டுனிசிய செக்ஸ் ஜிஹாத் கர்ப்பம்

டுனிசிய செக்ஸ் ஜிஹாத் கர்ப்பம்

சலாபிஸ இஸ்லாம் இறையியல் செக்ஸ்ஜிஹாத்தத்துவத்தை ஆதரிக்கிறதாம்: இஸ்லாம் ஒன்று,  ஒன்றே ஒன்றுதான் என்றாலும்,  இறையியல் ரீதியில் பல உள்ளன என்று தெரிகிறது. ஒரு முப்தி இதனை விபச்சாரம்,  அபச்சாரம் என்றாலும், இன்னொரு மதப்பிரிவு இல்லை இது ஆசாரம்தான்,  ஏற்றுக் கொள்ளப்படும் என்கிறது.  அதனால், “சலாபிஸம்” என்ற இறையியலை பின்பற்றும் சுன்னி முஸ்லிம்கள்,  இது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித யுத்தமுறைகளில் ஒன்று என்று கொண்டுள்ளார்கள்[10]. அதற்காக வேண்டிய செக்ஸ்-ஜிஹாத் பத்வா சில மாதங்களுக்கு முன்னர் விடப்பட்டது.  சென்ற ஆகஸ்ட் மாதத்தில் பர்ஸ் நியூஸ் [Fars News]  என்ற நாளிதழ் ஜிஹாதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு, மணிகளுக்கு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று அத்தகைய  பத்வா   (மதரீதியிலான ஆணை)  போடப்பட்டது என்று அறிவித்தது.  இதை ஏற்றுக்கொண்டு பெண்கள் சென்று வந்துள்ளார்கள் என்பதனால்,  இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மற்ற அமைப்புகள் கூறுகின்றன.

 

unisian women protest against sex-jihad

unisian women protest against sex-jihad

செக்ஸ்ஜிஹாதிற்காக பத்வா போட்டது யார்?:  ஷேக் எம். ஏ என்பவர் அத்தகைய பத்வா ஆணையைப் பிறப்பித்தார் என்று டுனிசிய இணைதளங்கள் எடுத்துக் காட்டுகின்றன[11].  சலாபிஸம் என்ற இறையியல் சித்தாந்தமும் இதனை ஆதரிக்கிறது.  இது டுனிசிய எல்லைகளுக்கு வெளியேயிருந்து ஊக்குவிக்கிறது என்று தெரிகிறது.  மேலும்,  சில பெண்களின் இயக்கங்களே அத்தகைய செக்ஸ்-ஜிஹாதை ஊக்குவிக்கின்றன.  அதாவது,  இளம்பெண்களை அவ்வாறு மயக்கி, இழுக்க பெண்களே அவ்வாறு ஏஜென்டுகளாக செயல்படுகிறார்கள் என்றாகிறது.  உதாரணத்திற்கு,  ரஹ்மா என்ற பெண்ணின் விவகாரம் சொல்லப்படுகிறது.  ரஹ்மா என்ற  18க்கும் கீழான வயதுடைய பெண் திடீரென்று காணாமல் போய் விட்டாளாம். பிறகு திரும்பி வந்துள்ளாள். அவர்கள் பெற்றோர் கூறுவதாவது,  தங்கள் பெண் ஒன்றும் தீவிரவாத, மதவாத எண்ணங்களைக் கொண்டவள் அல்ல.  ஆனால்,  அவளது சகதோழிகள் அவளை மூளைசலவை செய்து அவ்வாறு முஜாஹித்தீன்களை ஆதரிக்கும்படி சொல்லியிருக்கலாம்.  அதனால்,  இவ்வாறு வழிமாறி சென்றிருக்கிறாள் என்கின்றனர்.  எந்த பேற்றோர்களுக்கும்,  திருமணம் ஆவதற்கு முன்னரே பல ஆண்களுடன் உடலுறவு கொண்டு , கர்ப்பத்துடன் வந்துள்ளாள் என்றால்,  அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

 

heikh Fareed Elbaji says he knows families whose daughters were involved in sexual jihad

heikh Fareed Elbaji says he knows families whose daughters were involved in sexual jihad

செக்ஸ்ஜிஹாத் பெண்கள் உருவாகும் நிலை,  மனப்பாங்கு , இஸ்லாமிய இறையியல்:  இளம்பெண்கள் அவ்வாறு செக்ஸ் அளித்தால் ஜிஹாதிகள் நன்றாக,  உற்சாகமாக போராடுவார்கள் என்று பெண்களின் மனங்களில் அத்தகைய எண்ணங்களை ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்[12].  சரி,  பிறகு இளம்பெண்கள் எப்படி திடீரென்று போர் நடக்கும் இடங்களுக்குச் சென்று கூடாரங்களில் படுத்து செக்ஸ் கொடுக்க முடியும்?  அது என்ன அவ்வளவு சதாரணமான விசயமா?  இல்லை, இதற்கு பயிற்சி அளிக்கிறார்களா? உடல் ரீதியாக செக்ஸ் கொடுக்க வேண்டும் என்றால்,  மன ரீதியாக தயார் செய்யப் படவேண்டும். மதத்திற்காக செய்யும் காரியமாதலால், அது புண்ணியமாகும் என்றும்,  அல்லா ஆசிர்வதிப்பார் என்றும் மூளைசலவை செய்யப் பட்டுள்ளது[13].  அதனால்,  முதலில் அவர்கள் யாருடனோ செக்ஸ் அனுபவம் பெற்று தயாராகி இருக்கிறார்கள் என்றாகிறது. ஒரே பெண் இல்லையென்றால்,  அவ்வாறு ஒரே தினத்தில் பல புதிய ஆண்களுடன் படுக்க முடியாது,  ஈடு கொடுக்க முடியாது.  எனவே,  இதில் போதை மருந்து போன்றவை உபயோகிக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.  மனநிலை, உடல்நிலை முதலியவற்றை சரிபடுத்தி,  இறையியல் ரீதியில் அனுப்படுகிறார்கள் என்றாகிறது.

 

This family told Ahmed Maher (pictured) their daughter had been brainwashed

This family told Ahmed Maher (pictured) their daughter had been brainwashed

தற்காலிக ஒப்பந்தத்தில் கொடுக்கும் செக்ஸ்: முன்னர் ஒரு பதிவில்  “மூதா”  முறை நிக்காஹ் பற்றி விளக்கியிருந்தேன். அதன்படி, குறுகிய காலத்திற்கு, பத்து நிமிடம்,  அரைமணி,  ஒரு மணி என்ற ரீதியில் ஒரு பெண்ணை நிக்காஹ் செய்து கொண்டு, அனுபவித்து அனுப்பி விடலாம். அதுவும் இஸ்லாத்தில் செல்லுபடியாகிறது.  எனவே, இதுவும்,  அதே போல செயல்படுகிறது என்றாகிறது.  அதன்படி, தற்காலிக ஒப்பந்தத்தின்படி,  ஒரு பெண் பல ஆண்களுடன் ஒரே நாளில் செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்ளலாம்[14]. முஸ்தபா பின் ஒமர் [Mostafa Bin Omar]  என்கின்ற அரசு பாதுகாப்புத்துறை இயக்குனர்,  சென்ற ஆகஸ்ட் மாதத்தில்,  டுனிசியாவின் மேற்கு பகுதிகளில்,  அல்-குவைதா  அதிகமாகஇருக்கும் இடங்களில் இருந்த ஒருசெக்ஸ்-ஜிஹாத் கும்பலை உடைத்தார் என்று அறிவித்துள்ளார்.  அல்-அரேபியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது, அல்-குவைதாவின் அன்ஸார் ஷரீயா  [ Ansar Shariah]  என்ற குழு,  இளம்பெண்களின் முகங்களை மறைத்தபடி,  அவர்களை செக்ஸ்-ஜிஹாதிகளுக்கு அர்ப்பணித்தார்,  என்று அல்-அரேபியா செய்தி கூறுகிறது.

 

sex-jihad-virgin-girls-offered-to-jihadis-for-sex-Tunisia

sex-jihad-virgin-girls-offered-to-jihadis-for-sex-Tunisia

குரான் படி நடக்கிறோம் என்கின்ற அல்குவைதா பெண்களை இவ்வாறு நடத்துவதேன்?: ஜிஹாதிகள்,  அல்-குவைதா,  தலிபான் முதலியவை குரானின் படித்தான் நடக்கிறோம் என்கிறார்கள். அதே நேரத்தில்,  மற்ற முஸ்லிம்கள்,  முஸ்லிம் பெண்களுக்கு ஏகப்பட்ட  உரிமைகள் உள்ளன,  அவையல்லாம் உலகத்தில் வேறேந்த மதபெண்களுக்கும் கிடையாது என்று மார்தட்டிக் கொண்டு பேசுகின்றனர்.  ஆனால்,  இங்கு நடப்பதென்ன?  இளம் பெண்களை மூளைசலவை செய்து,  இவ்வாறு செக்ஸ் / உடலுறவு கொள்வதற்கு அனுப்பப் படுகிறார்கள்.  இதனை பெண்களின் பேற்றோர், முப்தி மற்றும் அரசே எதிர்க்கின்றனர், இருப்பினும், ஆதரிக்கும் மதக்குழுக்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளன.  பிறகு அவை எப்படி இளம்பெண்களை, குடும்பத்திலிருந்து பிரிக்கின்றனர், கற்பு பறிபோக மூளைசலவை செய்கின்றனர்,  ஒரே நாளில் ஒரே பெண் பலருடன் செக்ஸ்-ஜிஹாத் என்ற பெயரில் உடலுறவு கொள்ள செய்கின்றனர் என்பதெல்லாம் புதிர்களாக இருக்கின்றனவே.

 

Mutah prohibited in Islam - book

Mutah prohibited in Islam – book

சிரியாவில் நடக்கும் கிஹாதிகளின் போராட்டத்தின் பின்னணி: சிரியாவின் ஜனாதிபதியான பஷர் அல்-அஸாதி  [Bashar al-Assad]  என்பவரின் கீழ் நடக்கும் ஆட்சியை தூக்க,  துனிசியாவிலிருந்து நூற்றுக்கணக்கான துனிசிய நாட்டு ஜிஹாதிகள் சிரியாவிற்குச் சென்றுள்ளனர்.  இங்கும் உள்துறை அமைச்சர் லோட்பி பென் ஜெட்டௌ,  சிரியாவுக்குச் சென்ற ஜிஹாதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் தான் மார்ச்சில் பதவி ஏற்றுக்கொண்ட போது சுமார்  6,000  இளைஞர்கள் அங்கு செல்வது தடுக்கப்பட்டது என்றார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிரிய ஜிஹாதி இளைஞர்கள் துருக்கி மற்றும் லிபியா வழியாக பிரயாணித்து,  ஆப்கானிஸ்தான், இராக், சிரியா முதலிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிகிறது. அபு இயாத் என்ற அக்ஸார் அல்-ஷாரியா என்ற இயக்கத்தை நடத்துபவர்,  கடந்த ஆண்டில் டூனிஸில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினார் என்று சந்தேகிக்கப் படுகிறது.  ஒரு ஆப்கானிஸ்தானிய தலைவரைக் கொன்றதிலும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.  செப்டம்பர் 9, 2001  அன்று அஹ்மது ஷா மசூத்  [Ahmad Shah Massoud]  என்ற தலிபன் எதிப்புப் படை தலைவரை தற்கொலைப் படைமூலம் கொலை செய்ததற்கும் காரணமாகிறா ன்செப்டம்பர் 7, 2001  அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது[15].

 

© வேதபிரகாஷ்

24-04-2014

 

[1] http://www.huffingtonpost.com/2013/09/20/sexual-jihad-syria-tunisian-women_n_3961904.html

[2] http://www.bbc.com/news/world-africa-24448933

[3]The mother says that her daughter used to go to al-Tawba mosque where she was arrested. http://www.bbc.com/news/world-africa-24448933

[4] http://www.hurriyetdailynews.com/tunisian-women-waging-sex-jihad-in-syria-minister.aspx?pageID=238&nID=54822&NewsCatID=352

[5] http://www.businessinsider.in/Tunisian-Girls-Are-Coming-Home-Pregnant-After-Performing-Sexual-Jihad-In-Syria/articleshow/22875739.cms

[6] http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/10322578/Sex-Jihad-raging-in-Syria-claims-minister.html

[7] http://english.alarabiya.net/en/variety/2013/09/20/Tunisia-says-sexual-jihadist-girls-returned-home-from-Syria-pregnant.html

[8]Former Mufti of Tunisia Sheikh Othman Battikh in April said that 13 Tunisian girls “were fooled” into traveling to Syria to offer their sexual services to rebels fighters. The mufti, who was subsequently dismissed from his post, described the so-called “sexual Jihad” as a form of “prostitution.” “For jihad in Syria, they are now pushing girls to go there. Thirteen young girls have been sent for sexual jihad. What is this? This is called prostitution. It is moral educational corruption,” Al Arabiya cites the mufti as saying. http://rt.com/news/sexual-jihad-tunisia-syria-133/

[9]Another prominent Muslim scholar in Tunisia, Sheikh Fareed Elbaji, told the BBC he personally knew families who had discovered that their daughters had gone to Chaambi and Syria to offer sex in support of the militants, apparently in obedience to fatwas or religious edicts issued on the battlefields of Syria. http://www.bbc.com/news/world-africa-24448933

[10]Some Sunni Muslim Salafists, however, consider sexual jihad as a legitimate form of holy war. http://rt.com/news/sexual-jihad-tunisia-syria-133/

[11]News websites and social networks in Tunisia circulated a fatwa attributed to Sheikh M. A., in which he calls upon “Muslim women” to perform jihad through sex. However, sources close to the sheikh denied that he had issued the fatwa, stressing that anyone who circulates or believes it is insane.

http://www.al-monitor.com/pulse/culture/2013/03/tunisia-girls-syria-sexual-jihad.html#

[12] “Muslim women prostituting themselves in this case is being considered a legitimate jihad because such women are making sacrifices—their chastity, their dignity—in order to help apparently sexually-frustrated jihadis better focus on the war to empower Islam in Syria,” writes author and Islam expert Raymond Ibrahim for The Investigative Project On Terrorism, a nonprofit research organization that studies jihad.

[13] http://www.investigativeproject.org/4048/guest-column-the-sex-jihad

[14]The sexual Jihad Fatwa made its first appearance in Syria several months back. It allows for fighters to enter sexual relations with a woman after agreeing upon a temporary contract that loses effect after a few hours, Fars News reported in August.  The temporary nature of the contract allows the woman to have sex with multiple partners a day.

[15] Abu Iyadh, who leads the country’s main Salafist movement Ansar al-Sharia, is the suspected organiser of a deadly attack last year on the US embassy in Tunis and an Afghanistan veteran.He was joint leader of a group responsible for the September 9, 2001 assassination in Afghanistan of anti-Taliban Northern Alliance leader Ahmad Shah Massoud by suicide bombers. That attack came just two days before the deadly Al-Qaeda attacks on the World Trade Centre in New York and Pentagon in Washington.