Posted tagged ‘சமாதி’

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

பிப்ரவரி 7, 2021

முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [2]

1972ல் பெரியார் அழுதது, பேசியது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “முன்னதாக காயிதே மில்லத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த புதுக் கல்லூரிக்குப் பெரியார் வந்தார். அப்போது அங்கே கடுமையான கூட்டம். பெரியாரின் நெருங்கிய நண்பரான ஈரோடு கே.ஏ.எஸ். அலாவுதீன் சாஹிப், கூட்டத்தினரை விலக்கிவிட்டு பெரியாரை காயிதே மில்லத் உடல் அருகே அழைத்துச் சென்றார். அப்போது தேம்பிய பெரியார், “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. உத்தமமான மனிதர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்,” என்று அனைவரின் காதுகளிலும் விழும்படி கூறினார். இதை அலாவுதீன் சாஹிபே பதிவுசெய்திருக்கிறார். பெரியார் சாதாரணமாக யாரையும் புகழ மாட்டார். அப்படிப்பட்ட பெரியாரிடம் இருந்து காயிதே மில்லத் பற்றி வெளியான இந்த வார்த்தைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு காயிதே மில்லத்தின் பெயரைச் சூட்டி அவரைப் பெருமைப்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்துக்கு வெளியே காயிதே மில்லத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு அரசியல் தலைவர்கள் கடமை ஆற்றினார்கள்.,” என்று எழுதி முடித்தது. காயிதே மில்லத்தின் நினைவிடம், சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 2016ல் ஈவேரா துலுக்கர் ஆனார் என்று கதைகட்டி விட்டனர். ஆனால், எடுபடவில்லை.

இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா, எதிர்த்தரா - அட்டை

பெரியார் துலுக்கர் ஆனாரா?- முகமதியர் சுற்றில் விட்டுள்ள பெரியாரின் பேச்சு[1]: விடுதலையில் 20-12-1970ல் வெளிவந்ததாக கூறி, அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம் மாறியதைப் பற்றி பேசியதை அதில் சேர்துள்ளார்கள்[2]. “பறையன், சக்கிலியன், சண்டாளன்….முகமதிய மதம்…..” போன்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. இதில் ஏதோ இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால், ஆதிதிராவிடர், எஸ்.சி, பட்டியல் ஜாதியினர்களின் சமூக நிலமையே மாறி விடும் என்பது போல பேசியுள்ளார்[3]. இதிலிருந்தே, அவருக்கு இஸ்லாத்தைப் பற்றிய முழுவிவரங்கள் அல்லது நடைமுறை விவகாரங்கள் தெரிந்திருக்கவில்லை என்பது புலனாகிறது[4]. முசல்மான்களைத் திருப்தி படுத்த பேசிய விதமாகவே தெரிகிறது. பிறகு, எஸ்.ஐ.ஆர். சங்கம், திருச்சியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மார்ச்.18, 1947 அன்று பேசிய பேச்சை இணைத்திருக்கிறார்கள். அப்பொழுது அவருக்கு ரூ.1080/- கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் தமிழில் “கடவுள்”, ஆங்கிலத்தில் “காட்”, அரேபிய மொழியில் “அல்லா” என்று சொல்கிறார்கள், எல்லாமே ஒன்று என்பது போல பேசியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில், முகமதியர்களுக்கு அல்லா தான் அல்லா, அது “கடவுள், காட்” ஆகாது. ஏனெனில், பிறகு, இவர் சொல்லிவரும் சித்தாந்தம் “கடவுள் இல்லை…….கற்பித்தவன் முட்டாள்……” அதற்கு எதிராகி விடும்[5]. இக்கருத்தை 1919, 1909 லிருந்து கடந்த 28 வருடங்களாக சொல்லி வருகிறேன் என்றார். மேலும் குடி அரசு, தலையங்கம் 17.11.1935ல் காணப்படும் அவரது கருத்துகளிலிருந்து, அவருக்கு முகமதிய பதத்தில் உள்ள பிரசினைகள் தெரிந்திருக்கின்றன என்றாகிறது. அதில் அம்பேத்கர் மதமாறுவது பற்றியும் விமர்சித்துள்ளார்.

பெரியார் முஸ்லிம்

ஈவேரா முஸ்லிமாகச் சாவேன் என்றது (05-08-1929): ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னது: ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையில் ஈடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கு அனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்”. (திராவிடன் 05-08-1929)[6]. ஆனால், இதனை யாரும் அப்பொழுது பொருட்படுத்த வில்லை[7]. ‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன்”, என்றதை, பெரியார் தாசன் போன்றோர், “சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள்!”, என்று மாற்றி கட்டுக்கதையை புனைய ஆரம்பித்துள்ளனர்[8].

சாவதற்கு முன்னார் கலிமா சொல்லி மரணிப்பேன் - பெரியார்

பிரச்சாரம் கட்டுக்கதைகள் ஆராய்ச்சி ஆகாது: இவ்வாறு, துலுக்கர் அடிக்கடி, புதிய கதைகளை உருவாக்கி, பிரபலமடையச் செய்து, பரப்பி வருவதில், பெரிய விற்பன்னர்கள் எனலாம். இப்பொழுது, இன்னொரு கதையைக் கிளப்பி விடுகிறார்கள் போலும். இந்துத்டுவ வாதிகள், முக்கியமாக, ஆவணங்களை சரிபார்த்து ஆராய்ச்சி செய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஏதோ, ஒருபக்கமாக ஒரு சாரார் பேசியதாக அச்சில் வந்துள்ளவை என்றெல்லாம் வைத்து, முடிவுக்கு வருவது, தொடரும் போக்கு தெரிகிறது. தம்பி எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே. நான் போயி என் தம்பி உயிருடன் இருந்திருக்கக் கூடாதா? இந்த சமுதாயத்தை இனி யார் காப்பாற்றுவாங்க,என்று கூறி தனது தள்ளாத வயதிலும், மூத்திரப் பையை கையில் சுமந்து கொண்டு, தன் தம்பி காயிதே மில்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்த தந்தை பெரியார் கதறி அழுத காட்சி அவ்விரு தலைவர்கள் இடையில் நிலவிய மாறாத அன்பை, உண்மையான நேசத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது,” என்று இப்பொழுது, இத்தகைய விசயங்கள் வெளிவருவது விசித்திரமாக இருக்கிறது..“முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று / போன்று பிதற்றினாரா?,” என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். ஆன்மா இல்லை, ஆவி இல்லை …..என்றெல்லாம் பேசி, கிண்டலடித்து வந்த பெரியார், பெரிய சித்தர் என்றெல்லாம் சிலர் போற்றி வந்த நிலையில், அவர் அழுதார், அரற்றினார், உடன் இறக்க முயன்றார்… என்று செய்தி உருவானது திகைப்பாக இருக்கிறது. மூலம் / உண்மை ஒன்று என்றால், சமீபத்தை நிகழ்வுகள் பற்றி ஒன்றிற்கு மேலான விவரங்கள் வருவது சிந்திக்க வேண்டிய பொருளாக மாறுகிறது

© வேதபிரகாஷ்

07-02-2021


[1] முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியவை அந்தந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்கள். பெரியாரே “முகமதிய மதம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[2] வேதபிரகாஷ், நாயக்கர் துலுக்கனாகி விட்டார், ஈவேரா சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முசல்மானாக தயாராக இருந்தார்பெரியாருக்கு சுன்னத் செய்து வைத்த பெரியார் தாசன்!, 02-04-2016.

[3] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/converting-periyar-to-islam-falsification-of-recent-history-by-muslims/

[4] https://socialsubstratum.wordpress.com/2009/07/27/3/

[5] கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, இது 1967ல் பெரியார் திடலில், பெரியார் வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

http://www.unmaionline.com/new/2589-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html

[6] வேதபிரகாஷ், 19-12-1973 அன்று பெரியார் தாசன் திநகரில் இருந்தாரா, இல்லை 24-12-1973 அல்லது 25-12-1973 அன்றாவது இருந்தாராபெரியாருக்கு சுன்னத் எப்படி செய்து வைத்தார் அப்துல்லாஹ்!, 02-04-2016.

[7] https://dravidianatheism.wordpress.com/2016/04/02/islamization-of-dravidian-movement-by-making-periyar-a-mohammedan/

[8] புஷ்ரா நல அறக்கட்டளை, சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !, செப்டம்பர்.9, 2013, http://bushracare.blogspot.in/2013/09/5.html

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)

திசெம்பர் 7, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)

Ibn Battuta, traveller

துருக்கரின் குரூர மாபாதக செயல்கள்இபின் பதூதாவின் புத்தகத்தின்படி[1]: இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான். தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான். கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது.

What mohammedan rule brought to Madurai

மதுரை சூரையாடியதைப் பற்றி கங்காதேவியின் விளக்கம்[2]: கங்கா தேவி தனது மதுரா விஜயம் என்ற நூலில், இவ்வாறு மதுரைவாசிகளின் நிலையை பதிவு செய்துள்ளார்[3], “கோவில்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன, அவற்றில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. ……….மதுரையைச் சுற்றியுள்ள தோட்டங்கள் எல்லாம் சீரழிந்து கிடந்ததைப் பார்க்கும் போது மிக்கத் துயராமாக இருந்தது. ………………….எல்லா புறங்களிலும் வரிசையாக கொம்புகள் நடப்பட்டிருந்தன, அவற்றில் மனித மண்டையோடுகள் செருகப்பட்டிருந்தன. ……………..தாமிரபரணி ஆற்றில் பசுக்களின் ரத்த ஓடிக் கொண்டிருந்தது. வேதங்கள் மறக்கப்பட்டன நீதி ஓடிவொளிந்து கொண்டது……………திராவிடவாசிகளின் முகங்களில் சோகமு அப்பிக் கொண்டிருந்தது.” அந்நூல் பாண்டியரது மிகப்பழமை வாய்ந்த, பாரம்பரிய அரசு கத்தி எவ்வாறு கம்பண்ணாவிடம் சென்று விட்டது என்பதையும் குறுப்பிடுகிறது. பாண்டியர் தமது சக்தியை இழந்ததால், அகத்தியர் கொடுத்த கத்தி, கம்பண்ணாவிடம் சென்று விட்டது. பாண்டியரால் முடியாததால், மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்கும் பணிக்காக அது அவனிடம் சென்று சேர்ந்தது[4]. ஆக மொத்தத்தில், மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்கள் துலுக்கரால் கொள்ளையடிக்கப் பட்டது, இடிக்கப்பட்டது, நிரூபனமாகிறது.

Kambanna saw the broken linga by Malikafur
விஜயநகர பேரரசு [1336-1646] முதல் நாயக்கர் காலம் வரை: விஜயநகர பேரரசு 1336-1646 வரை சிறந்து விளங்கி, துலுக்கரால் அழிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. 300 வருட ஆட்சியில், தென்னிந்தியா பல வழிகளில் சிறந்தோங்கியது. துலுக்கர்களுக்கும் படை, அரசு முதலியவற்றில் வேலைகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாணயமாக செயல்பட்டனரா அல்லது ரகசியங்களை அவ்வப்போது, துலுக்க அரசுகளுக்கு தெரிவித்தனரா என்பது கேள்விக்குரியது. இருப்பினும், 1565ல் தலைக்கோட்டைப் போரில், பீஜப்பூர், பீடார், பேரார், அஹமது நகர், கோல்கொண்டா, முதலிய கூட்டு சுல்தான் படைகளால், விஜயநகர பேரரழு வீழ்த்தப்பட்டது, நகரமே சூரையாடப் பட்டது. பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது என்று இக்காலத்து செக்யூலரிஸ எழுத்தாளர்கள் பறைச்சாற்றிக் கொண்டலும்[5], 1347-1527 வரை நடந்த இவர்களது ஆட்சியில், தக்காணப் பகுதியிலுள்ள பகுதிகள், அதிக அளவில் சூரையாடப்பட்டன. அவ்விழிவிகளிலிருந்து தான், இப்பொழுதைய சரித்திரமே எழுதப் பட்டுள்ளது. பிறகு நாயக்கர்கள் ஆட்சியில், ஓரளவிற்கு, உயிர்த்தெழுந்தது. அவர்களால் மறுபடியும் கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன.  பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தாலும், ஓரளவிற்கு, சுரண்டல்கள் அவர்களின் யுக்திகளில் நடந்தேறின. சுதந்திரம் பிறகும் நிலைமை மாறாவில்லை.

Woman with mustache, beard

சுதந்திரத்திற்குப் பிறகு செக்யூலரிஸமும், ஜிஹாதி பயங்கரவாதமும் சேர்ந்த நிலை: அப்பொழுது துலுக்கர் குதிரைகள் மீது வந்து கொள்ளையடித்தனர் என்றால், இப்பொழுது, கடைகள் வைத்துக் கொண்டு, கள்ளக்கடத்தல், பதுக்கல், போலிப் பொருட்கள், கள்ளப்பணம், ஹவாலா, வரியேய்ப்பு முதலியவற்றில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை வளைத்துப் போட்டு, தங்களது சட்டமீறல் காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். கோவில் கொள்ளை இப்பொழுது, வேறு விதமாக நடந்து வருகிறது. முதலில், கிராமப் புறங்கள், ஒதுக்குப் புறமாக இருக்கும் கோவில்களுக்கு அருகில் குடிசை போட்டுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். பிறகு மின்சார இணைப்பு முதலியவற்றைப் பெற்று, பட்டா வாங்கிக் கொள்கின்றனர். குடிசை வீடுகளாகி, மசூதியும் கட்டிக் கொள்கின்றனர். கோவில் நிலம், அருகில் உள்ள மண்டபங்கள் முதலியவற்றை அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டு மாற்றி விடுகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, இந்த முறைதான் கையாளப்பட்டு வருகின்றது, இனி, திருப்பரங்குன்ற தர்கா விசயத்தைப் பார்ப்போம்.

Sikander Dargah, Kuthirai sunai thittu

திருப்பரங்குன்றம் மலை உச்சியில்குதிரை சுனை திட்டுஎனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண்: இவ்விவரங்கள் “விஜய பாரதம்” இதழில் வந்துள்ளது என்று இணைய தளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துக் கொண்டு அலசப் படுகிறது. திருப்பரங்குன்றம்,  அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது பற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்….    – ஆசிரியர் [விஜயபாரதம்].

 Sikandar Dragah - Tirupparangundram.light attempted 2014

நின்றுபோன கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.

 Sikandar mosque claim.PFI

மலையில் பச்சை பிறைக் கொடி: முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.

 

© வேதபிரகாஷ்

06-12-2017

Woman with broken hands

[1] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm

[2] Madurā Vijayam (Sanskrit: मधुरा विजयं), meaning “The Conquest of Madurai”, is a 14th-century C.E Sanskrit poem written by the poet Gangadevi. It is also named Vira Kamparaya Charitham by the poet. It chronicles the life of Kumara Kampanna Udayar or Kumara Kampanna II, a prince of the Vijayanagara Empireand the second son of Bukka Raya I.

[3]  K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p. 242

[4]  K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37.

[5] Wikipedia – போன்றவையும் சேர்த்து.

தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா?

பிப்ரவரி 4, 2016

தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா?

Zakia Soman, bharatiya Muslim Mahila Andolan

தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது?: தர்காவுக்குள் நுழைய பெண்கள் அனுமதி கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குரு உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார்[1]. பெண்கள் வீட்டில் தொழுகலாம். ஆனால் சமாதி மற்றும் தர்காவுக்கு வர அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை என்றார்[2]. ஆனால், டாக்டர் ஜீனத் சவுகத் அலி கூறுவதாவது,[3] “இஸ்லாமிய மதநூல்களில் எங்குமே பெண்கள் சமாதிகளுக்குச் செல்லக் கூடாது என்றில்லை.மொஹம்மது நபியே சமாதிகளுக்கு செறுள்ளது மட்டுமல்லாது, மற்றவர்களையும் ஆண்-பெண் வித்தியாசம் பாராட்டாமல் செல்லுமாறு பணித்தார். இஸ்லாத்தில் ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன……நபி சொல்லும் இரண்டு காரணங்கள் – இறைப்பை நினைப்பூட்டுகிறது மற்றும் இறந்தவர்களுக்காக தொழுகின்றோம். நபியின் மனைவியான ஹஜரத் ஆயிஸா சித்திக், தனது சகோதரரான அப்த் அர்-ரஹ்மானின் சமாதிக்கும், நபியின் மகளான ஹஜரத் பாத்திமா ஜெஹ்ரா தனது மாமாவான ஹஜரத் ஹம்ஜாவின் சமாதிக்கும் செல்லும் வகத்தைக் கொண்டிருந்தனர்”. இவர் உரையாடல், சமரசம் மற்றும் பாலியில் நீதி முதலியவற்றிற்கான உலக இஸ்லாமிய படிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்[4].

Muslim worshipping inside Amir Khusros Tomb Sahil Ahuja Pixelated Memories

சபரிமலை தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்தது ஏன்?: மும்பையில் உள்ள, ஹாஜி அலி தர்காவில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[5].  இந்திய நீதிமன்ரங்களில், பென்களைப் பொறுத்த வழக்குகள் இவ்வாறு சேர்த்து விசாரிக்கும், நீதி வழங்கும் போக்கில் இருந்ததில்லை. குறிப்பாக ஷாபானு வழக்கு, அதன் தீவிரத்தன்மை, ராஜிவ்காந்தி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முதலியவை எல்லாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எப்பொழுதுமே, தங்களுக்கு தங்களது ஷரீயத் சட்டம் தான் செல்லுமே தவிர மற்ற சட்டங்கள் செல்லாது என்று அடிப்படைவாததுடன் இருந்து வருகின்றனர். இதனால் தான் ஷாபானு என்ற அந்த வயது முதிர்ந்த பெண்மணியே கஷ்டப்பட நேர்ந்தது. ஆகையால், சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதும், தர்காவுக்குள் நுழைவதும் ஒரே பிரச்சினையாகக் கருதுவது, செக்யூலரிஸ முரண்பாடே ஆகும். என்னத்தான் பேசினாலும், இந்தியாவில் சட்டதிட்டங்கள், நீதிமுறைகள், நீதிமன்ற நியதிகள் முதலியவை செக்யூலரிஸ மயமாக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கு முஸ்லிம்கள் என்றுமே ஒத்துப் போனதில்லை. எனவே, நீதிபதி தப்பித்துக் கொள்ளவே அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

Women inside Haji Ali Dargah

பெண்களின் உரிமைகள் எவ்வாறு விவாதிக்கப்பட போகின்றன?: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், புகழ் பெற்ற, ஹாஜி அலி தர்கா உள்ளது; இங்கு, ‘பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களும் தர்காவைக் காண அனுமதிக்க வேண்டும்’ என, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, மும்பை ஐகோர்ட், இதேபோல, சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்து, விசாரணையை, பிப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது[6]. 03-02-2016 அன்று, மாநில அரசின் பதிலை தாக்கல் செய்யும்படி, அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரி மலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்., 8ல், தீர்ப்பு வழங்க உள்ளது. மும்பையை சேர்ந்த வழக்கறிஞரும் மத்திய வக்பு கவுன்சில் உறுப்பினருமான எஜாஸ் அப்பாஸ் நக்வி தடை குறித்து கூறும் போது,” நாடு முழுவதும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையெனில் வரவேற்கப்படும் ஒன்றாக அது இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் ஏன் அறங்காவலராக நியமிக்கப்படகூடாது? ஏன் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? மேற்கத்திய நாடுகளில் இது போன்று இல்லை” என தெரிவித்தார்[7].

 Rabb ne thod di ji - boys and girls should not sit together

ஆணும்பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளனஆனால், ஒரே பெஞ்சில் ஆண்களுடன் உட்காரக்கூடாது: முஸ்லிம்கள் தங்களது மதத்தில் நடக்கும் பாலியல் மீறல்கள், தொந்தரவுகள் மற்றும் வக்கிரங்களைப் பற்றி, பொதுவாக வெளியில் சொல்வதில்லை. ஏதாவது, அங்கும்-இங்கும் செய்திகள் வந்தாலும், அவை அத்துடன் முடிந்து விடுகின்றன. அதற்கு மேல் என்ன நடந்தது என்பதெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக விளம்பரம் இல்லாமல், நீதிமன்றங்களுக்கு செல்லாத முறையில், அவர்களுக்குள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், சமீபத்தில், கேரளாவில், முஸ்லிம்களைப்பற்றிய விவாதங்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, பரூக்கிக் கல்லூரியில், மாணவ-மாணவிகள், ஒரே பெஞ்சில் சேர்ந்து உட்காரக்கூடாது, தனித்தனியாகத்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள கல்வி அமைச்சர் அப்டு ரப் [Kerala education minister Abdu Rabb] சொன்னது பிரச்சினையாகியது[8]. அப்படி உட்கார்ந்து கொண்டால், என்ன ஒட்டிக் கொள்ளும் அல்லது தீட்டு ஏற்படும் என்றேல்லாம், எந்த முற்போக்குவாதியோ, நாத்திகவாதியோ. கம்யூனிஸவாதியோ கேட்கவில்லை. சமூகவளைதளங்களில் சில கமென்டுகள் வந்தன[9], அதோடு சரி! “ஆணும்-பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” என்றெல்லாம் பெருமையாக அடித்துப் பேசுவர். ஆனால், நடக்கும் விசயங்கள் வேறு மாதிரியாகத்தான் இருந்து வருகின்றன. இருப்பினும் எதிர்பார்த்தபடி, அந்த “பால்-நீதி” (Gender Justice), “சமத்துவ நீதி” பிரச்சினை (Equity, equality of justice), அமுங்கி விட்டது. ஆனால், அதன் பின்னணில்யில், அதிகமான பிரச்சினைகள் இருக்கும் என்று தெரிகிறது.

Aboobacker Mudliyar attack gender equality

பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது: இந்நிலையில், அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர் [Aboobacker Musliyar], கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், பல மதரஸாக்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர், “பால்-சமத்துவம் என்பது நிஜமல்ல, பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக மாட்டார்கள். ஆபத்து நேரங்களில் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. பெண் மருத்துவர்கள் பொது மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவத்தில் சிறக்கலாமே தவிர, பெரிய அறுவை சிகிச்சை வல்லுனராக முடியாது[10]. அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை”, என்ற கருத்தை வெளியிட்டார்[11]. இதனால், பெருத்த சர்ச்சை ஏற்பட்டது. இருப்பினும், ஊடகங்கள், ஒருதடவை, செய்தியாக அறிவித்து, பிரசுரித்து அமைதியாகி விட்டன. ஆனால், அது வேறு வகையில், கிளர்ந்தெழுந்தது. “அபூபக்கர் முசலியார் பெண்களுக்காக பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார், பெந்கல்வியை ஆதரிக்கிறார், அவற்றையெல்லாம் நானே சென்று பார்த்திருக்கிறேன், ஆனால், அவர், ஏன் அப்படி சொன்னார் என்பது எனக்கு திகைப்பாக இருக்கிறது”, திரும்ப-திரும்ப “நியூஸ்-எக்ஸில்” சொல்லிக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவர் ஏன் அப்படி சொன்னார், என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை!

வேதபிரகாஷ்

03-02-12016

[1] http://www.athirvu.com/newsdetail/6787.html

[2] http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html

[3] The graves, she said quoting Prophet Muhammad, should be frequented by men and women for two reasons: one, it reminds them of death and two, they can pray for the people buried there. Citing instances, she said, “Prophet Muhammad’s wife Hazrat Ayesha Siddiqua used to visit the grave of her brother Abd ar-Rahman. Also, Hazrat Fatima Zehra, the Prophet’s daughter, used to visit the grave of her uncle Hazrat Hamza regularly.

http://www.firstpost.com/living/men-can-visit-graveyards-why-not-us-ask-muslim-women-2606368.html

[4]  She is also the founder-director general of The World Institute of Islamic Studies for Dialogue, Organisation of Mediation and Gender Justice.

[5] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1436166

[7] http://www.dailythanthi.com/News/India/2016/01/29104437/Muslim-women-stage-protest-demand-entry-into-Mumbais.vpf

[8] http://www.hindustantimes.com/india/boys-girls-shouldn-t-sit-on-same-benches-in-class-kerala-minister/story-eqVy6zH7h0QEN5m5snr79L.html

[9] http://www.dnaindia.com/india/report-social-media-reacts-strongly-to-kerala-education-minister-s-comments-2146737

[10] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/

[11] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

மார்ச் 10, 2013

தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

Ajmer-Sharif-shrine-chief-boycotted-but-deputed-others

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.

உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

Ajmer Sharif Mannat

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.

தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

Qawwali  dance ajmeeri dargah

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.

தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

Sufi dance dailyfresher.com

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Sufi dance at Ajmir dargah Urs festival 2012

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

Pakistan urs festival - Kalandar

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!

பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

760th Urs celebrations of Hazarat Lal Shahbaz Qalander RA in Sehwan Sharif Pakistan

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!

இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

Khushi dance at Ajmir Sharif Urs

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

Khushi dance at Ajmir Sharif Urs festival

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

Ajmer-dargah-map

வேதபிரகாஷ்

10-03-2013


உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

மார்ச் 1, 2013

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

JK assembly-2013 broken mike

 

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!

காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர்  (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

JK assembly-2013 MLAs fight

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

Jammu & Kashmir Assembly March 2012

 

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!

முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

March 2011 - JK Assembly

 

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!

விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது.  அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

JK MLA uproar

 

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!

கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

Six JMB militants hanged in Bangaladesh

 

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!

புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

01-03-2013


 


மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

நவம்பர் 12, 2011

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

 

நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.

 

கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].

 

இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?

 

நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.  அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10].  இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?

 

வேதபிரகாஷ்

11-11-2011


[1] என்னுடைய உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும்: தாவூத் இப்ராகிம்

புதுடெல்லி , வியாழன், 10 நவம்பர் 2011

http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/10/1111110033_1.htm

[5] Zubair Khan, son-in-law of Dawood Ibrahim’s sister Haseena Parkar, is making a film on the life and crimes of the dreaded don which is titled Lakeer Ka Fakir. The film also deals with roles of Karim Lala and Chhota Shakeel and their association with Dawood.

http://searchandhra.com/cinema/a-film-on-dawood-ibrahim-by-his-relative

[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!

In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.

http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm

[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.

[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.

[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/

[11] Zee News said the Mumbai Crime Branch was also aware of the don’s desire to be buried in India. Himanshu Rai, chief of the Crime Branch, has been quoted as saying, “We have received credible inputs regarding this.”

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/