திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு (1)
இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம் (07-12-2017)[1]: பெரம்பூரில் ஜமாலியா என்ற இடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாபில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவா் தொல்.திருமாவளவன் 06-12-2017 அன்று பேசுகையில்[2], “இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன…பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள். எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும். ….திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரத்தைக் கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரம் கட்டப்படவேண்டும் ….சொல்லிக் கொண்டே போகலாம்”. இது பாலிமர் டிவி வீடியோவின் ஆதரமான பேச்சாகும். இதையே மற்ற இணைதள செய்திகளாக வெளிவந்துள்ளன[3]. அந்த பேச்சு ஆக்ரோஷமாக, தீவிரமாக இருந்தது திருமாவின் முகமே காட்டுக் கொடுத்தது. அவர் பேச்சுக்கு முஸ்லிம்களின் கைதட்டல் வேறு!
களப்பிரர்கள் காலத்தில் தான் தமிழக சின்னங்கள் அழிக்கப்பட்டன[4]: இதனால், நிச்சயமாக சாதாரண இந்துக்களும் திகைப்படைய, அவர்கள், திருமாவைக் கண்ண்டித்தனர். “தமிழன்” என்ற முறையில், ஒரு எதிர்ப்பு இவ்வாறு இருந்தது. திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக் கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம்[5].
கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொள்ள அருகதை இல்லை[6]: அந்த இணைதளம் தொடர்ந்தது, “ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?
“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்
மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்
செம்பொற் கிரிதரித்த செண்டு”
மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே? கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்[7]. இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!” என்று முடித்தது.
08-12-2017 அன்று விடுத்த திருமாவின் அறிக்கை[8]: இதற்குள் நிலைமை மோசமாகிறது என்று உணர்ந்த, திருமா, “டேமேஜ் கன்ட்ரோல்” போல ஒரு அறிக்கையை விடுத்ததும் வேடிக்கையாக இருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]: “விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை ஜமாலியாவில் கடந்த 6–ந்தேதி தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். என்னையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டி சிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் ராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர்”.
இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன[10]: திருமா தொடர்ந்து கூறியது, “இந்த வாதம் சரி என்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும், பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா? இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்டவேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ, அப்படித்தான் அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதை தான் நான் சுட்டிக்காட்டினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது. பொய்களின் மூலமாகவும், அவதூறுகள் வாயிலாகவும் அரசியல் லாபம் தேட முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகள் இனியாவது தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்,” என்று முடிந்தது.
சொதப்பலான அறிக்கையும், மேன்மேலும் இந்து–விரோதம் வெளிப்பட்ட விதமும்: மாலைமலர் பேட்டியில், “நான் வரலாற்று உண்மையைத்தான் பேசி இருக்கிறேன்”, என்றும் உள்ளது[11]. அதே போல தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவது இல்லை[12]. புத்த விஹாரங்கள் இருந்த இடத்தில் கோவில்கள் கட்ட்டப்பட்டிருப்பட்து குறித்து பல வரலாற்று சுவடுகளும் ஆய்வறிக்கைகளும் இருப்ப்பதாகவும் கூறினார்[13]. இச்செய்தியை முதலில் பாலிமர் டிவி தான் வீடியோவுடன் வெளியிட்டது[14].. இப்பொழுது அந்த வீடியோவை நீக்கி விட்டு, தினத்தந்திக்கு பேட்டி கொடுத்த வீடீயோவை சேர்த்து, செய்தி வெளியிட்டுள்ளது[15]. அதாவது, இங்கும் அகங்காரத் தொணி தான் உள்ளது. ஆனால், இவரது முகமதியர் சார்ந்த நிலைப்பாடு, ஏற்கெனவே, எஸ்.சிக்களிடம் அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “தலித்-முஸ்லிம்” போர்வையில், இப்பொழுதெல்லாம், இவர் பேசி வருவது, அரசியல் ரீதியிலும், விரும்பப்படாமல் இருக்கின்றது.
© வேதபிரகாஷ்
09-12–2017
[1] இந்து கோவில்களை இடித்து தள்ள வேண்டும் – திருமாவளவன் திடீா் ஆவேசம், TOI Contributor | Updated: Dec 7, 2017, 04:28PM IST
[2] https://www.youtube.com/watch?v=oyY3E5lC9tM
[3] https://tamil.samayam.com/latest-news/state-news/thirumavalavan-speech-against-hindu-temples/articleshow/61963414.cms
[4] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)
[5] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-
[6] newstm, தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?, Posted Date : 11:04 (07/12/2017)
[7] http://www.newstm.in/Tamilnadu/1512665079313?Is-Thirumavalavan-a-traitor-of-tamilians-
[8] தினத்தந்தி, இந்து கோவில்கள் பற்றி பேசியது என்ன? திருமாவளவன் அறிக்கை, டிசம்பர் 09, 2017, 01:45 AM
[9] http://www.dailythanthi.com/News/TopNews/2017/12/08230606/Thirumavalavan-report.vpf
[10] மாலைமலர், இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம், பதிவு: டிசம்பர் 08, 2017 15:38; மாற்றம்: டிசம்பர் 08, 2017 15:39.
[11]http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/08153859/1133456/Thirumavalavan-says-he-did-not-tell-that-he-will-destroy.vpf
[12] புதியதலைமுறை, இந்துக்கள்ளின் மனதை புண்படுத்தும்படி பேசவில்லை: திருமாவளவன் விளக்கம், December 08, 2017, 01:08 pm.
[13] http://www.puthiyathalaimurai.com/news/politics/36786-the-hindu-temple-affair-was-misunderstood-thirumavalavan.html
[14] பாலிமர்.டிவி.செய்தி, இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்பது தனது கருத்தல்ல – திருமாவளவன் விளக்கம், 08-டிசம்பர்-2017 19:06
[15] https://www.polimernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-2/
அண்மைய பின்னூட்டங்கள்