Posted tagged ‘சதித்துவம்’

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html