அப்துல் கய்யூம் சேய்க் குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான்
அப்துல் கய்யூம் சேய்க் துபாயிலிருந்து விசாரணைக்கு வரவழைக்கப்பட்டாலும், மூன்று வருடங்களுக்குப் பிறகு, அபு சலீமின் நெருங்கிய குட்டாளியான அவன் போதிய ஆதாரங்கள் இல்லை என்று குல்ஷன்குமார் கொலை வழக்கிலிருந்து மும்பை நீதிமன்றத்திலிருந்து 14-07-2010 அன்று விடுதலை செய்யப்பட்டான். 2002ல் வழக்கு தொடர்ந்து நடந்தபோது 18 பேர் இவ்விதமாக விடுதலை செய்யப்பட்டனர்.
குல்ஷன்குமார் கொலை: ஆகஸ்ட் 12, 1997ல் குல்ஷன்குமார் மும்பையில் அந்தேரி என்ற இடத்தில் கோவிலுக்கு அருகில் மூன்று நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டர். இவர் டி-சீரீஸ் என்ற பெயரில் கேசட்டுகள் வெளியிட்டு அதன்மூலம் நிறைய சம்பாதித்தார். அப்பொழுது மும்பை தீவிரவாதக் கூட்டம் மும்பை சினிமாக்காரர்களிரமிருந்து மாமூல் வசூலிப்பது வழக்கமகக் கொண்டிருந்தது. அதே போல குல்ஷன்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியபோது, கொடுக்கததால், துபாயில் திட்டமிட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்ற சினிமாக்காரர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் தீர்மானித்ததால், தமக்கு மென்மையாக உள்ள தாக்குதலுக்கு, அவரை தேர்ந்தெடுத்துக் கொலை செய்தனர்.
கொலைசதித்திட்டம் துபாயில் போடப்பட்டது: நதீம் சைஃபீ என்ற இசையமைப்பாளரும், இத்திட்டம் துபாயில் தீட்டியபோது இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த சதிதிட்டக் கூட்டம் அனீஸ் இப்ராஹிம் என்ற தாவூத் இப்ராஹிமின் சகோதரன் அலுவலகத்தில் நடந்தது. நதீம் சைஃபீ தலைமறைவாகியுள்ளான், அதாவது கொலை நடந்தபோது, லண்டனுக்குச் சென்றவன் திரும்பவில்லையாம். இந்திய அரசாங்கம் அவனை வரவழைக்க வழக்குப் போட்டாலும், இங்கிலாந்து நீதிமன்றது அவ்வழக்கு தோல்வியடைந்தது. 2007ல் துபாயிலிருந்து, விசாசரணைக்காக இந்தியாவிற்கு வரவழைக்கப் பட்டான். ரமேஷ் தௌரானி என்ற மற்றொரு இசையமைப்பாளருக்கும் குல்ஷன்குமாருக்கும் இடையே நிலவியிருந்த வியாபாரப் போட்டியால்தான், குல்ஷன்குமார் கொலை செய்ய ரூ.25 லட்சம் அவரால் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனல், இதை மெய்ப்ப்பிக்க முடியாததால் தான் 2002ல் இவரையும் சேர்த்து 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அப்துல் கய்யூம் சேய்க் 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வழக்கில் ஒரு முக்கியமான குற்றவாளி, மற்றும் தாவூதின் முக்கியமான ஆள். இவன் 15 ஆண்டுகளுக்கு முன்பு 1995ல் துபாயிக்குத் தப்பைச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. தவூதின் கணக்கு வழக்குகளை, இவந்தான் நம்பகரமாக நிர்வகித்துவந்தான்.
அப்துல் கய்யூம் சேய்க் சஞ்சய்தத்திற்கு துப்பாக்கி விற்றது” சி.பி.ஐயின் வழக்குப் படி, கய்யூம் 9 செ.மீ பிஸ்டலை சஞ்சய்தத்திற்கு செப்டம்பர் 1992ல் விற்றதாக உள்ளது. சஞ்சய்தத் தன்னுடைய வாக்குமூலத்தில், ஒரு சினிமா படபிடிப்பின்[போது சந்தித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். பிறகு ஸ்டூடியோவில் ரூ.40,000 கொடுத்ததாக குறினார். கய்யூம் வடமேற்கு மும்பையில் மாஹிம் என்ற இதத்தில் வாழ்ந்த ஆசாமியாம். 2000ல் ஜூஹு போலீஸ் ஸ்டேஷனில், ஒரு வழக்கிற்காக கைது செய்யப் பட்டான்.,.
அண்மைய பின்னூட்டங்கள்