Posted tagged ‘சச்சரவு’

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

மே 18, 2013

சுன்னி-ஷியா குண்டுவெடிப்பு, கொலைகள் – ஜிஹாதா, இஸ்லாமா, அமைதியா?

இரான்-இராக் சண்டை, சச்சரவு, போர், யுத்தம், மோதல் – இவற்றை மற்ற நாட்டவர், குறிப்பாக இந்தியர்கள் புரிஎது கொள்ளாமல், ஏதோ பெட்ரோலுக்காக, மெக்கா-மெதினா, ஹஜ் போன்ற விஷயங்களுக்காக அரித்துக் கொள்கின்றனர் என்று நினைக்கலாம்.

ஆனால், முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவரையொருவர் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியை, மசூதி இல்லை என்கிறார்கள்?

முஸ்லீம்களாக இருந்து கொண்டு, எப்படி ஒருவர் மற்றவருடைய மசூதியைத் தாக்குகிறார்கள்?

இராக்கில் இரண்டு குண்டு வெடிப்புகளில், ஒன்று மசூதி மற்றும் இரண்டு இறுதி / சாவு ஊர்வலம் – என்று குண்டுகள் வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1].

பாகிஸ்தானில் சுன்னிகள், ஷியாக்களை மசூதி இடிப்பு, குண்டு வெடிப்புகள், கொலை என்று  கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்[2]. பெண்கள் கல்லூரி என்றலும் விடுவதில்லை[3]. ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

இராக்கின் தலைநகரான பாக்தாத்தின், வடமேற்கில் உள்ள பகுபா என்ற இடத்தில் உள்ள மசூதி வளகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. பிறகு, இன்னொரு குண்டு, உதவி செய்து கொண்டிருந்த போது வெடித்தது.

கடந்த இருவாரங்களாக ஷியைத் / ஷியா முஸ்லீம்களின் மீது நடத்தப் பட்ட கார் வெடிகுண்டு மற்றும் இதர தாக்குதல்களில் சுமார் 40 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்[4]. சதாம் உசைன் போன பின்பும் இங்கு அமைதி திரும்பவதாகத் தெரியவில்லை. சுன்னி-ஷியா முஸ்லீம்கள் இடையில் கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருக்கின்றது[5]. 2006-07 காலங்களில் அமெரிக்கத் துருப்புகள் இருந்தபோதும், இந்நிலைமை இருந்தது[6].

ஷியாமுஸ்லீம்கள்சன்னிமுஸ்லீம்களா; தாக்கப்படுவது: ஷியா முஸ்லீம்கள், சன்னி முஸ்லீம்களால் தாக்கப்படுவது, செக்யூலரிஸ இந்தியர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் பாகிஸ்தானில் “முஸ்லீம்கள்” என்று கருத/மதிக்கப்படுவதில்லை. அவர்களும், அவர்கள் மசூதிகளும் பலமுறைத் தாக்கப்பட்டுள்ளன[7]. சென்ற 04-09-2010 அன்று அவர்கள் தாக்கப்பட்டனர்[8]. செப்டம்பர் 1, 2010 அன்று, லாஹூரில் ஒரு ஷியா மசூதியில் – கர்பலா கமய் ஷா (Karbala Gamay Shah) ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜரத் இமாம் அலியின் இறப்பு – உயிர்த்தியாகம் மற்றும் தொழுகைக்காகக் கூடியிருக்கும் போது (Yaum-e-Ali), குண்டுகள் வெடித்ததில் 17 / 28 பேர் கொல்லப்பட்டனர்[9]. பல ஆண்டுகளாக அவர்கள் தாக்கப்படுவது / கொல்லப்படுவது விவரங்களை இங்கு கொடுத்துள்ள[10] அட்டவணையில் பார்க்கலாம்.இஸ்லாம்பெயரில் இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாமைத் தாக்குகிறார்கள்[11] என்பதனை இஸ்லாமியர்கள் விளக்க வேண்டும்[12].

© வேதபிரகாஷ்

18-05-2013


[6] Iraq saw destructive sectarian conflict during the height of the U.S. engagement in the country in 2006 and 2007, and the so-called Arab Spring political uprisings in Iraq’s neighbors have contributed to a resurgence of sectarian volatility here.