Posted tagged ‘கோவிலுக்குச் செல்ல அனுமதி’

20 ஆண்டுகளில் 170 கோவில்கள் சேதம்: ஜம்மு காஷ்மீரில் தான் இந்த சோகம்!

ஏப்ரல் 10, 2010
20 ஆண்டுகளில் 170 கோவில்கள் சேதம்: ஜம்மு காஷ்மீரில் தான் இந்த சோகம்
ஏப்ரல் 10,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23890

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பயங்கரவாதிகள்  வன்முறை சம்பவத்தில், 170 கோவில்கள் சேதமடைந்துள்ளதாக அம்மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில், மக்கள் வந்து செல்லவும், காஷ்மீர் பண்டிதர்கள் தினசரி பூஜைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

எனினும், வன்முறைகளின் போது சேதப்பட்ட ஏராளமான கோவில்களை, சீரமைக்கும் பணி திருப்திகரமாக இல்லை; எனவே, அரசு கூடுதல் நிதிகள் ஒதுக்கி, கோவில்களை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென, காஷ்மீர் பண்டிதர்கள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் சட்டசபையில் மாநில வருவாய் துறை அமைச்சர் ராமன் பல்லா கூறியதாவது:

காஷ்மீர் பள்ளதாக்கு பகுதி, பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு ஆளாவதற்கு முன், அங்கு 430க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தன. அதில், 266 தற்போதும் நல்ல நிலையில் உள்ளன;

170 கோவில்கள் சேதமடைந்து காணப்பட்டன.

அதில் 90 கோவில்கள், 33 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன.

பதட்டம் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள 17 கோவில்களுக்கு, பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமன் பல்லா கூறினார்.

Advertisements