Posted tagged ‘கொடுக்கு வைத்தியம்’

சங்கராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

ஜூலை 14, 2010

சங்சராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

சங்கராச்சாரி பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஏதோ கூறிவிட்டார் என்றதும், ஆதினத்தையே முற்றுகையிடுவோம் என்று ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி மிரட்டினர். தமிழ்நாட்டிலும் இப்படி “நக்கீரன்” வடநாட்டு ஊடகங்களைப்போல “ஸ்டிங் ஆபரெஸன்” செய்திருக்கிறர்கள் போல. பாவம், இந்த சாமியார்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது?

கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை!

அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!!

முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன!

அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!

இப்பொழுதுதான், கனிமொழியை, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும்.

அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள்.

கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்]

அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்!

எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!

(தொடரும்).