Posted tagged ‘கொக்கி போடுதல்’

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

திசெம்பர் 30, 2011

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

இஸ்லாத்தில் பத்வாக்கள்: இஸ்லாத்தில் பலவிதமான விஷயங்களுக்கு பத்வா போடுவது வழக்கம். “நாயை வைத்துக் கொள்ளலாம, கூடாதா, புகைப்படம் எடுக்கலாமா, கூடாதா, மனைவியை மருத்துவர் தொட்டு சிகிச்சை செய்யலாமா, கூடாதா”, ……….என்று இப்படி பல கேல்விகள் எழும். அதற்குஇ முல்லாக்கள், இமாம்கள் மற்ற குருமார்கள் விளக்கம் கொடுத்து பத்வா போடுவார்கள். பிறகு, முஸ்லீம்கள் அதன்படித்தான் நடக்க வேண்டும். சில நேரங்களில், பத்வா கொடுத்தவரை விட, பெரிய-அதிகாரமுள்ளவரிடம் சென்று வேறு விதமான பத்வாக்களை வாங்கி வருவதும் உண்டு.

மேலே காட்டப் பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி ரூ.2,000/-ற்கு விற்கப்படுகிறது. இதனால், மின்சார உபயோகத்தை குறைத்துக் காட்டும்.

மின்சாரம் திருட்டிற்கு பத்வா போடலாமா? மீர்வாயிஸ் உமர் பரூக், இந்திய எதிருத்துவ ஹுரியம் மாநாடு என்ற இயக்கத்தின் தலைவர். தேவையில்லாமல், இந்தியா இவருக்கு அதிக சலுகைகள் கொடுத்து வருகிறது. ஆனால், அந்த ஆளோ அதைப் பற்றி கவலைப் படாமல், தான் ஏதோ ஒரு அந்நிய நாட்டில் இருப்பது போல பேசுவது தான் வழக்கம். அதற்கு அருந்ததி ராய் போன்ற கொள்கையற்ற பேர்வழிகளும் அதிகமாக கொஞ்சிக் குலவி ஆதரித்து வருகின்றனர் (இதற்கு ஆதாரமாக புகைப்படங்களுடன் கூடிய எனது இதர பதிவுகளை பார்க்கவும்). இப்பொழுது, ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி, பஉமர் அப்துல்லா கேட்டுள்ளார்[1], “ஏனய்யா, முஸ்லீம்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்களே. இப்படி செய்தால் எப்படி நமது மாநிலம் உருப்படும். அடுத்த வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு, மின்சாரம் திருடக் கூடாது என்று ஒரு பத்வாவை போடுவீரா?”, என்று கேட்டுள்ளார்.

இப்படி ஒரு கருவியை, மின்சாரகம்பத்திலியே பொறுத்தி மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அந்த கருவிக்கு குண்டி என்று பெயர். ஒருவேளை, கொக்கி / கம்பி போட்டுத் திருடுவது என்பது தான், இப்படி நவீனமாக செய்கிறார்கள் போலும்!

மின்சாரத்தை யார், ஏன், எதற்குத் திருடிகிறார்கள்?  மாநிலத்தில் மின்சார நிலைமைக் குறித்து உரிய அரசாங்கப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த போது, அதிகமளவில் மின்சாரத்தை பிரிவினைவாதிகள் முதலியோர் மற்றும் அரசியல்வாதிகள் திருடுவதாகவும், அதனை கேட்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாகவும் அறிவித்தனர்[2]. கேட்டால் “முஸ்லீம்களின் எதிரிகள்” என்றும் அறிவிப்பார்கள் என்று பயப்படுகின்றனர். “மக்கள் ஒத்துழைக்காவிட்டால், மாநில முன்னேற்றத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ரூ 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப் படுகிறது. இதனால், மாநிலத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது”, என்று உமர் அப்துல்லா கூறுகிறார்[3]. “குண்டி” என்ற உபகரணத்தை உபயோகித்து வெளிப்படைகயாக மின்சாரத்தைத் திருடுகிறார்களாம்[4]. காஷ்மீரத்தில் இதெல்லாம் சகஜமான விஷயமாம்[5]. மின்சார வாரியம் எத்தனை மீட்டர்கள் வைத்தாலும்[6], அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், குண்டி மூலம் மின்சாரத்தை இழுத்து விடுகிறார்கள். இதனால், புதிய யுக்திகளை கையாள விரும்புகிறது[7]. 2003லிருந்து, எல்லோருடைய இல்லத்திற்கும் மீட்டர் வைக்க ஆரம்பித்தது[8]. அதாவது, அதற்கு முன்னர், இலவசமாகவே இணைப்புக் கொடுத்தார்கள். அதாவது, அவர்களாகவே ஏதாவது கட்டினாகல், வாங்கிக் கொள்வார்கள், இல்லையென்றால், “காந்தி கணக்கில்” எழுதி விடுவார்கள் போலும்.

மீட்டரின் இணைப்பை எடுத்து விடிகிறார்களாம், இல்லை ஏதோ பத்து-பதினைந்து நாட்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்களாம்!

இந்திய விரோதிகளை ஏன் ஊக்குவிக்கிறார்கள்? ரூ 2,000 கோடி மின்சாரத்திருட்டு என்றால், வெறும் ஒரு கோடி அபராதத்தை[9] வசூலித்துள்ளதாம்! குஞ்சு மைனர் ரூ. 5,000/- அட்வான்ஸ் கொடுத்து ரேப் செய்த விவேக் ஜோக் போல உள்ளது. அப்படி 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. அந்த மின்சாரம் இந்திய விரோதிகள் – பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தாம் தீவிரவாத-பயங்கரவாத செயல்களுக்கு உபயோகப் படுத்துகின்றனர். முஸ்லீம்கள், முஸ்லீம்களிடமிருந்தே திருடலாமா? அல்லது, இதில் கூட வேறு ஏதாவது, விவகாரம் உள்ளாதா? டிஜிட்டல் மீட்டர்களையே, செயலிழக்கச் செய்து, குறைவாகக் காட்ட, உபகரணங்களை தயாரித்து ரூ.2,000/-ரற்கு விற்கும் கூட்டத்தை போலீஸாறர் கைது செய்துள்ளனர்[10]. இவர்களும் முஸ்லீம்கள் தாம். பிறகு என்ன நியாயம், தர்மம் எல்லாம் பேசுகிறர்கள் என்று தெரியவில்லை. அதாவது, மதத்தின் மீது குறை கூறவில்லை, ஆனால், அதே நேரத்தில் மதத்தை வைத்துக் கொண்டு தான், இக்காரியங்களை செய்து வருகிறர்கள் என்று கவனிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால், ஒரு முஸ்லீம் முதலமைச்சர், மின்சாரத்திருட்டைத் தடுக்க பத்வா போடவேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்?


[1] Talking to Greater Kashmir Omar said, “Mirwaiz has held government responsible for Valley reeling under darkness. We know our responsibilities and limitations. I hope he (Mirwaiz) in his next Friday sermon issues a Fatwa against those who indulge in power theft. If he is serious then he should see both the sides and act accordingly.”

http://www.greaterkashmir.com/news/2011/Dec/30/issue-fatwa-against-power-theft-omar-tells-mirwaiz-71.asp

[3] Till people don’t stop indulging in power thefts government won’t be able to help them,” he said. “State is losing Rs 2000 crores to power theft. If there were no power theft, Government would have generated power worth Rs 1500 crores.”

[8] The metering drive was started in 2003 during the government headed by Mufti Mohammad Sayeed, but it was limited to cities and towns.

http://www.dnaindia.com/india/report_j-and-k-govt-to-install-7-lakh-electricity-meters_1502977

[10] During investigation a gang of three persons Adil Nazir Wani of Batamaloo, Showkat Ahmad Akhoon and Parvez Ahmad Dar of Hazratbal, who were expert in tampering the digital electricity meters, were nabbed. The trio confessed during questioning that they have tampered many digital electric meters in different parts of City for Rs 2000 by consumers to get low cost electricity bills.

www.risingkashmir.com/news/crime-branch-busts…