Posted tagged ‘கையெறி குண்டுகள்’

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

16-11-2022 அன்று ஊடகங்களின் செய்திலேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது: சோதனைகளில் கிடைத்த பொருட்கள்:

  1. இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
  2. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
  3. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2]

 மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதாரங்கள் பகுப்பாய்வுக்கு உட்பட்டவை ஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.  நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.

என்.. சோதனைகளுக்கு முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.

28-09-2022லிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்குச்சீல் வைப்பது முதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தினகரன், கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலி சென்னையில் என்ஐஏ சோதனை: 4 இடங்களில் நடைபெற்றது; முக்கிய ஆவணங்கள் பறிமுதல், 2022-11-16@ 00:31:32.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=814529

[3] நியூஸ்18தமிழ், ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?,  NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 10, 2022, 12:29 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/kovai-car-blast-nia-and-chennai-police-raid-in-several-places-834109.html

[5] இ.டிவி.பாரத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு, Published on: October 27, 2022, 5;36 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/ministry-of-home-affairs-orders-sealing-of-popular-front-of-india-office/tamil-nadu20221027173604186186836

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

28-09-2022 அன்று [Popular Front of India (PFI)] தடை செய்யப்பட்டது[1]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் அமைப்பாகும், இது முஸ்லீம் சிறுபான்மை அரசியலின் தீவிர மற்றும் தனித்துவ பாணியில் ஈடுபடுகிறது. இந்துத்துவா குழுக்களை எதிர்க்க உருவாக்கப்பட்டது, என்று விகிபீடியா வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 28 செப்டம்பர் 2022 [28-09-2022] புதன்கிழமை அன்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது[2]. UAPA வின் பிரிவு 2(1)(p) ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A அல்லது 153B பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது குற்றத்தையும் அதன் பொருளுக்குக் கொண்ட ஒரு அங்கமாக “சட்டவிரோத சங்கம்” என்று வரையறுக்கிறது – அதாவது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களை உருவாக்குதல். ஒரு சட்டவிரோத சங்கம் என்பது “எந்தவொரு சட்டவிரோத செயலை மேற்கொள்ள நபர்களை ஊக்குவிக்கும் அல்லது உதவுவது, அல்லது உறுப்பினர்கள் அத்தகைய செயலை மேற்கொள்வது முதலியவை அடங்கும்”.

கைதுகளும், அலுவலகங்களுக்கு சீல் வைத்தலும்: 27-09-2022 தடை அறிவித்தாலும், 13-10-2022 வரை அலுவலகங்களுக்கு சீல் வைப்பது தாமகம் ஆகியது. அப்பொழுதே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு-ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது[3]. 01-10-2022 அன்று இதற்கு சீல் வைக்கப் பட்டது[4].தமிழகத்தில் PFIன் அலுவலகங்கள் சீல் வைப்பது கூட தாமதமாகச் செய்யப் பட்டன. ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது[5]. 13-10-2022 அன்று இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்[6]. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  27-09-2022 முதல் 13-10-2022 வரையில், தாராளமாக பல ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. அப்படி காலதாமதம் செய்தும், சீல் வைத்தபோது, போலீஸ் பாதுகாப்பு ஏன், பதட்டம் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தியா முழுவதும் நடைபெறுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது, இதில் ஒன்றும் வித்தியாசமோ, மாறுபாடோ இருக்க முடியாது.

27-10-2022 முதல் என்.. விசாரணை, சோதனைகள் ஆரம்பம்: 23-10-2022 அன்று கோவை ஜமேஷா முபின்[7] நடத்திய குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்[8]. 27-10-2022 அன்று என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்கு ஒப்படைத்தப் பிறகு, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. 28-10-2022 அன்று NIA முதல் தகவல் அறிக்கை FIR போட்டது[10]. இருப்பினும், சிறப்பு காவல்துரையும் சோதனை எய்தனர் என்ற செய்திகளும் வந்து கொன்டிருந்தன. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி [10-11-2022, வியாழக்கிழமை] சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[11]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது[12]. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

10-11-2022 அன்று மேற்கொன்ட சோதனை: இதனை தொடர்ந்து 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆக, இவ்வாறு தேதிகளில்-நாட்களில் இடைவெளி இருக்கும்பொழுது, 

  • 23-10-2022 முதல் 27-10-2022 வரை,
  • 27-10-2022 முதல் 10-11-2022 வரை
  • 10-11-2022 முதல் 15-11-2022 வரை

சம்பந்தப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய, மாட்டிக் கொள்ளும் வகையில் உள்ள ஆவணங்களை, சான்றுகளை அப்படியே வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், சோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. தமிழக ஆளுனர் முன்பு இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்றும் கவனிக்கத் தக்கது. துப்பறியும் நிபுணத்துவ ஊடக வல்லுனர்கள் இதைப் பற்றியெல்லாம் மூச்சுக் கூட விடாமல் இருப்பதை கவனிக்கலாம். வெள்ளம் வரும் பொழுது, தடுக்காமல், தடுக்க நடவடிக்கை எடுக்காமல், பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்றால், என்னாகும்? அந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. 1998ல் நடந்து விட்டது, 2022லும் அரங்கேறிவிட்டது, ஆனால், தப்பித்தாகி விட்டது.

15-11-2022 அன்று 43 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது[13]. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது[14]. சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். கோவையில் வெடித்த பழைய கார் சுமார் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸார் சோதனை நடத்தினா்.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] Popular Front of India (PFI) is an Islamic political organisation in India,[5][6] that engages in a radical and exclusivist style of Muslim minority politics. Formed to counter Hindutva groups, it was banned by the Indian Ministry of Home Affairs under Unlawful Activities (Prevention) Act (UAPA) on 28 September 2022 for a period of five years.

[2] Section 2(1)(p) of the UAPA defines an “unlawful association” as an association which has for its object any unlawful activity or offence defined under Sections 153A or 153B of the Indian Penal Code — that is, promoting enmity between different groups and making imputations, assertions that are prejudicial to national integration. An unlawful association is also one that “encourages or aids persons to undertake any unlawful activity, or of which the members undertake such activity”.

[3] மாலைமலர், பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்தமிழக அரசு அதிரடி நடவடிக்கை, By Maalaimalar, 1 அக்டோபர் 2022 11:45 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/tamil-news-pfi-head-office-sealed-in-chennai-519150

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பி.எப். அமைப்புக்கு தடை: கோவையில் அலுவலகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்,   Updated: October 14, 2022 3:44:56 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pfi-ban-officials-seal-offices-in-coimbatore-tamil-news-525222/

[7] Jameesha Mubin, who was questioned by the NIA in 2019 for alleged terror links, was charred to death in suspicious circumstances after an LPG cylinder inside a vehicle he was driving exploded near Kottai Eswaran temple in Ukkadam around 4am on October 23, a day before Diwali. The incident took place around 200 metres from a police patrol.

[8] தினத்தந்தி, #Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை, By தந்தி டிவி 15 நவம்பர் 2022 8:06 AM.

[9] https://www.thanthitv.com/latest-news/houses-of-suspected-isis-affiliates-raided-in-chennai-148618

[10] In the FIR filed on October 28, the NIA said 109 articles, including Potassium Nitrate, Black Powder, match box, cracker fuse length of about 2 meters, nitroglycerine, PET powder, aluminium powder, and 9-volt battery, were recovered from Mubin’s residence.

[11] காமதேனு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, Updated on: 15 Nov, 2022, 10:16 am.

[12] https://kamadenu.hindutamil.in/national/keeping-up-with-terrorist-movements-nia-raids-at-4-places-in-chennai

[13] தினமணி, தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல், By DIN  |   Published On : 11th November 2022 01:04 AM  |   Last Updated : 11th November 2022 05:34 AM

[14] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/11/nai-raids-42-locations-in-tamil-nadu-important-documents-seized-in-coimbatore-car-blast-case-3947394.html

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

gold-bars-seized-and-four-arrrested-from-ap-05_02_2017_013_006

தெலிங்கானாசென்னை .எஸ் தொடர்புகள்: ஜல்லிக்கட்டு-சசிகலா விவகாரங்கள் ஐ.எஸ்.தொடர்புள்ளவர்கள் கைதான விவரங்கள், சென்னையில் சதி-திட்டம் தொஈட்டியது முதலிய விவாகரங்களை பின் தள்ளிவிட்டடு அல்லது சென்னைவாசிகள் ஜாலியாக சசிகலா மோகத்தில் மூழ்கி விட்டனர் என்றே தெரிகிறாது. தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கனிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் ஒரு பின்னப்பட்ட வலை போல வேலைகள் நடந்து வருகின்றன. தங்கம், போதை மருந்து, போலி ரூபாய் புழக்கம் என்ற ரீதியில் அவர்கள் நன்றாகவே வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு (02-02-2017) ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 03-02-2017 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

isis-linked-11-arrested-in-mp-11_02_2017_001_005

03-02-2017 அன்று தங்கத்துடன் பிடிபட்ட முகமது இக்பால்: இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்[2]. இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது[3]. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை – மயிலாப் பூரை சேர்ந்த-

  1. காஜா நஜிமுதீன் (42),
  2. சகாபுதீன் (38),
  3. ஜமாலுதீன் (30),
  4. முகமது இக்பால் (35)

ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது[4]. இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசிக்கத் தக்கது.

gold-bars-seized-comimg-from-telingana-05_02_2017_004_007

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் .எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி / “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] அளித்துள்ளான்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் 05-02-2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது[5]: “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, .எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, .எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளான்[7]. இதுவரை மும்முறை நிதியுதவி செய்தது தெரிய வந்துள்ளதால், அவற்றின் விவரங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை கைப்பற்ற ராஜஸ்தானிலிருந்து துப்பறியும் போலீஸார் வந்தனர்[8]. இந்நிலையில் தான் இக்பால் தங்கத்துடன் பிடிபட்டுள்ளான். ஆக, ஐ.எஸ்,சுக்கு பணம் பட்டுவாடா / நிதியுதவி செய்து வந்த திருவள்ளூர் முகமது இக்பால் தான் இப்பொழுது பிடிபட்டுள்ளான். இதை “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] என்றேயாகிறது. நவம்பரில் கைதானவர்களின் தொடர்பும் இதில் பினைந்துள்ளது. சுபஹனி ஹாஜா மொஹிதீன் கதை இதில் உள்ளது.

isis-terror-links-with-chennai-dccan-chronicle-chn_2017-02-08_maip3_6

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: சென்னைக்கும், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள தொடர்புகளும் திகைக்க வைக்கின்றனர். ஏற்கெனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளில் சென்ற நவம்பர் 2016ல் சிலர் கைது செய்யப்பட்டனர். சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை. நவம்பரில் கைதானவர்களில் இன்னொருவன் – சுவாலிக் முகமது.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னை கொட்டிவாக்கத்தில் சுவாலிக் முகமது கைது (அக்டோபர் 2016): சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: “12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[9]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

swalih-mohammed-isis-link-arrested

கத்தாருக்கு செல்ல திட்டம் போட்ட சுவாலிக் முகமது: பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

© வேதபிரகாஷ்

12-02-2017

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

[1] தினத்தந்தி, ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின, பிப்ரவரி 05, 01:16 AM.

[2]  http://www.dailythanthi.com/News/State/2017/02/05011622/Luxury-bus-from-Andhra-Pradesh-and-Rs-1-crore-smuggled.vpf

[3] தமிழ்.இந்து, தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது, Published: February 5, 2017 09:32 ISTUpdated: February 5, 2017 09:32 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9522479.ece

[5] தினமலர், .எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான், பதிவு செய்த நாள். பிப்ரவரி.6, 2017. 23.50.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1705753

[7] A 40-year-old man from Chennai who was arrested along with three others while trying to smuggle Rs 1 crore worth gold bars from Rajamundhry on Saturday (03-02-2017) morning at Arambakkam near Chennai was picked up for questioning by central agencies for his suspected links with ISIS. Mohamed Iqbal has been picked up after he was found donating generously to ISIS. He had made three donations to ISIS and a team of IB officials from Rajasthan had come to trace him based on evidence of his transactions. A team of Intelligence Bureau officials on Saturday (03-02-2017) nabbed four people with 3.3  kg of 20 gold bars worth Rs 1 crore, in an omnibus coming from Rajahmundry to Chennai at Arambakkam near Gumudipoondi in neighboruing Thiruvallur district. All the four were later handed over to DRI for further action with regard to smuggling while Mohamed Iqbal was taken for further questioning him on money donation to ISIS.

Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

[8] Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/080217/chennai-gold-smuggler-picked-up-for-isis-link.html

[9] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

 

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)

Mamta with Muslims encouraging terrorism

Mamta with Muslims encouraging terrorism

மம்தாவின் மறைப்பு வேலைகள் (05-11-2014 அன்றைய பேச்சு)[1]: இவ்வளவு நடந்தும், மம்தா இவ்விசயத்தை அரசிய ரீதியிலேயே திரித்து விளக்கம் கொடுத்துக் கொண்டுருக்கின்றார். 05-11-2014 (புதன்கிழமை) கட்சியின் தொண்டர்களுக்கு முன்பாக 24-பர்கானாவில் பேசும்போது, “துர்கா பூஜை மற்றும் ஈத் பண்டிகைகளின் போது கூட குண்டு வெடித்தது, ஆனால் யாரும் பாதிக்கப் படவில்லை. தீவிரவாதிகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது……… ஆனால், மேற்கு வங்காளத்தில் மக்களை மதரீதியில் பிரிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் பங்களாதேசத்தை விரும்புகிறேன், ஆனால், எல்லை ஊடுருவல்களை எதிர்க்கிறேன்…………..ஆனால், ஊடுருவல்கள் நடக்கும் எல்லைகளுக்கு யார் காவல்?”, என்று வினவினார். அதாவது, தேசிய எல்லை பாதுகாப்புப் படையினர் தாம் பொறுப்பு என்ற தோணியில் பேசினார். “எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகள் போல குறிப்பிடுகிறார்கள். ஆனால், எல்லைகளைத் தாண்டி எனது மாநிலத்தில் வந்து பிரச்சினையைக் கிளப்புகிறார்களே, ஏன்”, என்று கேட்டுவிட்டு, “நாங்கள் சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தை நம்புகிறோம். விவேகானந்தர் ஒரு முஸ்லிம் வீட்டிற்குச் சென்று ஹுக்கா புகைத்தார், தனது ஜாதி போய் விட்டதா என்று உறுதி செய்தார். உங்கள் மதத்தை விரும்புங்கள், அதே போல மற்ரவர்களின் மதங்களையும் விரும்புங்கள்”, என்று உபன்யாசம் செய்தார். எல்லாம் சரிதான், ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லையே? பிறகு அவர்களுக்குத்தானே இந்த அறிவுரைகளை சொல்ல வேண்டும்?

mamta's secularism and swami vivekananda

mamta’s secularism and swami vivekananda

ஷேக் அஸினாவுக்கு மம்தா என்ன பதில் சொல்வார்?: பங்களாதேச பிரதம மந்திரி இவ்விவகாரத்தில் கூறியிருப்பது நோக்கத்தக்கது[2], “பங்களாதேசத்துத் தீவிரவாதிகள் மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருப்பதும், அவர்கள் எங்களது அரசுக்கு எதிராக செயல்படுவதும், மிக்க வருத்தத்தை அளிக்கிறது”. முதலில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப் படவேண்டும் என்றார். “மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருக்க” எப்படி மம்தா மற்றும் முந்தைய அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும்? இதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக “இடம் பெயந்த வேலையாட்கள்” என்ற ரீதியில் தங்கியிருக்கும் பங்காளதேசத்தவர்களும் பிடிபட்டுயுள்ளனர்[3]. இதில் பங்காளதேசத்து இரட்டை வேடங்களையும் கவனிக்க வேண்டும், ஏனெனில், அங்கு வேலையில்லை, இடமில்லை போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு, பங்களாதேசத்து ராணுவமே, மக்களை இந்தியாவிற்குள் விரட்டியடிக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முன்பு ஊடுருவல் ஏன் என்றதற்கு, தமது நாட்டில், மக்கள் பொங்கி வழிகின்றனர், அவ்வாறு வழியும் போது, சிதறி மக்கள் பக்கத்தில் உள்ள இந்திய பகுதிகளில் சிந்தத்தான் செய்வார்கள், என்று தத்துவ விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் மக்களாக இல்லாமல், முஸ்லிம்களாக இருந்து, அவர்கள் அவ்வாறே அடிப்படைவாதத்துடன் இருந்து, ஜிஹாதிகளுடன் சேந்து, இந்தியவிரோத செயல்களில் ஈடுபடும் போது தான், அத்தகைய சிதறல்கள், இயற்கையானது அல்ல, திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது.

Burdwan blast timeline Telegraph

Burdwan blast timeline Telegraph

பெங்காளிஎனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், ஜே.எம்.பியின் ஜிஹாதிவடிவமைப்பும்: மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பங்காளதேசம் இவற்றை இணைத்து ஒரு செயல்திட்டத்தை, பாகிஸ்தானை ஆதரமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய முஜாஹித்தீன் இணைதள பரிமற்றங்கள், இ-மெயில் உரையாடல்கள் மூலம் கடந்த ஜூலை 2013 காலத்திலேயே வெளிவந்தது. இவற்றில் பங்கு கொண்டவர்கள் – அஹமது சித்திபாபா அல்லது யாஸின் பட்கல், ஆபீப் ஜிலானி மோடா, மீட்ஜா ஷாதாப் பேக், அசதுல்லா அக்தர் முதலியோர். அது பி.என்.ஜி “bng” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தைக் குறிக்கும் என்று, அந்த பெங்காளி -“Bengali”- திட்டத்தை ஆராய்ந்த என்.ஐ.ஏ குழுவினர் எடுத்துக் காட்டினர். ஜே.எம்.பியும் அதே முறையில் 2007லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் ஷைகுல் இஸ்லாம் அல்லது அப்துல்லா அசாமில் கைது செய்யப் பட்டான். இவன் ஷகீல் அஹமது அல்லது ஷமீன் என்கின்ற ஜே.எம்.பியின் கூட்டாளி. இவர்கள் எல்லோருமே, ஒருவரையொருவர் அறிந்தவர்களே. யாஸின் பட்கல் கொல்கொத்தாவில் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப் பட்டதும், திட்டத்தின் அங்கமாக இருக்கலாம். சுமார் 50 மேற்கு வங்காள அரசில்வாதிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனராம். ஆகவே, “பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், இந்த ஜே.எம்.பியின் ஜிஹாதி-வடிவமைப்புடன் ஒத்துப் போகிறது.

Burdwan bomb making cartoon

Burdwan bomb making cartoon

40 அரசியல்வாதிகளின் தொடர்பு, 27 வழிதடங்கள், 57 தீவிர அமைப்புகள்: பர்த்வான் குண்டுவெடிப்புத் தொழிற்சாலை விசயத்தில் சுமார் 40 அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்[4]. இதை மம்தா பேனர்ஜியை சந்தித்த போதும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். பங்காளதேசத்திலிருந்து, உள்ளே நுழைந்து, வெளியே செல்ல 27 வழிதடங்களை உபயோகப்படுத்தியதையும் கண்டறிந்துள்ளார்கள். அவையாவன –

  1. ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  2. ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
  3. நேபாளம் மற்றும் பங்களாதேசம் நாடுகளின் எல்லைகளில் உள்ள பிரதேசங்களுக்குள் நுழைவது-வெளியே செல்வது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 57 தீவிர அமைப்புகளை பர்த்வான், மூர்ஷிதாபாத், பிர்பும், ஜல்பைகுரி, கொச்-பிஹார், ஹௌரா, வடக்கு மற்ரும் தெற்கு 24-பர்கானா மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளார்கள். இவை உபி, பிஹார், ஜார்கெண்ட் மற்றும் சிக்கிம் மற்றும் நேபாளம் மற்றும் பங்களாதேசம் முதலிய இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக அமைத்திருக்கிறார்கள்[5]. 2007-14 வரை, இந்த அளவிற்கு அவர்களால் முடிந்துள்ளது என்றால், உள்ளூர்வாசிகள் எந்த அளவிற்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அதாவது முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற வகையில் தான் உதவி, செயபட்டிருக்கிறார்களே அன்றி, இந்தியர்களாக அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, தீவிரவாதிகளாகவே கருதவில்லை. ஜிஹாதிகளை ஷஹீதுகளாக/உயிர்த்தியாகிகளாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது புரிகிறது.

Women involvement in bomb making etc

Women involvement in bomb making etc

இளம் ஜோடிகள் ஜிஹாதியில் ஈடுபட்டுள்ள விசயம்[6]: இவ்வழக்கில் பல இளம் ஜோடிகள் ஈடுப்பட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 12-ஜோடிகள்  இதில் சம்பந்தப் பட்டிருப்பதுஇரான் மற்றும் இராக் நாடுகளில் ஈடுபடுத்தப் படும் பெண் ஜிஹாதிகள் மற்றும் ஐசிஸ் வேலைப்பாடு போன்று தோன்றுகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் பிரச்சினை போன்று செக்யூலரிஸ ஊடகங்கள், அறிவிஜீவிகள், சமூகவியல் பண்டிதர்கள் முதலியோர் மௌனம் காக்கின்றனர்.

  1. பாத்திமா-ஸஜித்.
  2. ஆயிஸா-யூசுப்.
  3. மோனியா பேகம்- தல்ஹா ஷேக்
  4. ரஸியா பீவி – ஷகில் அஹமது.
  5. அலினா பீவி – ஹஸான் சாஹிப்
  6. சமீனா-நஸிருல்லாஹ்
  7. அலிமா-ஹலான்
  8. கைஷா-நயீம்
  9. செலினா பேகம்- கலாம்.
  10. ரபியா-ஹபிபூர்
  11. சய்மா-லத்தீப்
  12. கதீஜா-ஷேய்க்கு

இப்படி 12 ஜோடிகள் வெடிகுண்டு ஜிஹாதியில் பயிற்சி பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் ஆண்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தினராக இருப்பதும், பெண்கள் இந்தியர்களாக இருப்பதும் வியப்பை அளிக்கிறது. மேலும் இந்திய பெண்களின் விவரங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக ஜிஹாதி சித்தாந்தாத்தை ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்பது புதிராக உள்ளது. என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகத்திற்க்கு கொடுத்துள்ள ஆரம்ப கட்ட அறிக்கையில் ஜே.எம்.பி பற்றியோ, ஷேக் ஹஸீனா மற்றும் காலிதா ஜியா இவர்களை கொல்ல சதி போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லையாம். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பு ஜிஹாதில் ஈடுபட்ட 14 பெண்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்! அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) சொன்னதாவது[7], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” அதாவது, முஸ்லிம் பங்களாதேசத்து பெண்களும், இந்திய மாநிலங்களில் நுழைந்து ஜிஹாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்று தெரிகிறது[8]. பெண்கள் ஜிஹாதிகளாக மாறுவது, ஜிஹாதிகளாக வேலை செய்வது, இப்படி ஜோடிகளாக இணைந்து வேலை செய்வது, ஒரு திட்டமிட்ட மனப்பாங்கை, தீர்மானமாக உள்ள போக்கைக் காட்டுகிறது.

பெண் ஜிஹாதிகள் உருவாகும், உருவாக்கும் முறை: மேற் குறிப்பிட்ட 12-ஜோடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அறியப் படுவதாவது[9]:

  1. பெண்களை வைத்து பெண்களை இந்த வேலைக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் என்பதாலும், சட்டம்-காவல் துறையினர் உடனடியாக அவர்களிடம் விசாரணை, சோதனை முதலியவற்றை மேற்கொள்ள முடியாது. பர்கா அணிந்து கொண்டிருப்பதால், பலதுறைகளில் அவர்களது அடையாளம் மறைக்கப் படுகிறது.
  2. முதலில் மதரீதியில் ஆரம்பித்து ஊக்குவிப்பது, அவர்களது மனங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது, பிறகு ஜிஹாதிக்கு தயார் செய்வது.
  3. முதலில் உடல் பயிற்சி, சித்தாந்த வகுப்புகள், சொற்பொழிவுகள், முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  4. மதத்திற்காக எதையும் செய்வேன் என்ற நிலையை உருவாக்குவது – ஷயீத் தத்துவத்தை ஏற்க வைத்தல்.
  5. பிறகு படிப்படியாக துப்பாக்கி சுடுதல், குண்டுகள் தயாரித்தல் முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்தி, ஜிஹாதியில் ஈடுபடுத்துதல்.
  6. அதற்கான ரசாயனப் பொருட்கள் வாங்குவது, ஜாக்கிரதையாகக் கொண்டு வருவது, அதற்கு பர்கா உடையை பயன்படுத்துவது.
  7. பணத்திற்காக, கள்ளநோட்டுகளை உபயோகித்தல், விநியோகித்தல், மாற்றுதல் முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
  8. பயிற்சி பெற்ற பெண்கள், மற்ற பெண்களுக்கு பயிற்சி கொடுப்பது. இதற்கு வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை அதிகமாகப் பயன் படுத்தப் படுவது.
  9. முடிந்த வரையில் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினர்களை இச்செயல்களில் ஈடுபடுத்துதல்.
  10. எந்த நேரத்திலும் ரகசியத்தைக் காப்பது – அல்லாவின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வது, ஜிஹாதிகளுக்குக் கட்டுப்படுவது முதலியன.

© வேதபிரகாஷ்

16-11-2014

[1] http://www.newindianexpress.com/nation/Mamata-Plays-Down-Blast-Lambasts-BJP/2014/11/06/article2509368.ece

[2] Prime Minister Sheikh Hasina said it was painful to know that “Bangladesh’s terrorists are getting sanctuary in West Bengal and hatching a conspiracy against the government.”

http://www.thehindu.com/todays-paper/tp-national/hasina-urges-india-to-flush-out-bangladeshi-militants/article6554208.ece

[3] http://www.thehindu.com/news/cities/kolkata/bengali-migrant-workers-released-by-jk-police/article6551473.ece

[4] In their report to NIA DG Sharad Kumar, sleuths hinted at the involvement of at least 40 politicians helped these terrorists gain a foothold in Bengal.

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/NIA-hints-at-link-of-40-netas-with-terror-module/articleshow/44964492.cms

[6] Yatish Yadav, NIA Probe in Burdwan Finds Jihad a Family Business in West Bengal, Published in Indian Express: 02nd Nov 2014 06:07:00 AM

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[8] Assam Chief Minister Tarun Gogoi on Tuesday said that terror outfit Jamaat’ul Mujahideen of Bangladesh (JMB) was trying to establish a women’s wing in the state under the garb of selling burkhas to Muslim women. Assam districts of Barpeta and Nalbari. He said some youth from these two districts had also gone abroad for undergoing training in jihadi activities.

[9] http://www.newindianexpress.com/thesundaystandard/NIA-Probe-in-Burdwan-Finds-Jihad-a-Family-Business-in-West-Bengal/2014/11/02/article2503641.ece

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

 

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏவா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பர்த்வான் சோதனை -nia

பர்த்வான் சோதனை -nia

சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014

[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘,  Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html

ரஷ்யாவில் ஜிஹாதிகளின் தீவிரவாதச் செயல்கள் – செசன்ய தீவிரவாதிகளினால் ரஷ்யா படும் பாடு!

ஏப்ரல் 29, 2013

ரஷ்யாவில் ஜிஹாதிகளின் தீவிரவாதச் செயல்கள் – செசன்ய தீவிரவாதிகளினால் ரஷ்யா படும் பாடு!

06_Central_Eurasian_Asian_Extremists_Nov8 copyரஷ்யஜிஹாதிகளும், இஸ்லாமியத்தீவிரவாதமும்: அமெரிக்க ஜிஹாதிகளுக்குப் பிறகு, இப்பொழுது ரஷ்ய ஜிஹாதிகளும் பேசப்படுகிறார்கள். 2011ற்குப் பிறகு, அமெரிக்கா சொர்னேவ் சகோதரர்களைப் பற்றி எச்சரித்துள்ளதாக உளவுத்துறை கூறுகிறது[1]. இப்பொழுது ரஷ்யாவை எச்சரித்துள்ளது. ஆனால், சொர்னேவைப் பற்றி முன்னமே ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது[2].எப்படியும் இரு நாடுகளும் தீவிரவாததைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியுள்ளது. ரஷ்யாவைப் பொறுத்த வரைக்கும், ஜிஹாதிகள் செசன்யா வழியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர்.

செசன்ய தீவிரவாதிகள், 1994லிருந்து ரஷ்யாவில் நடத்தப் பட்ட பல தீவிரவாதங்களுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

  • அதில் மிக்கவும் பயங்கரமானது, 2004ல் சுமார் 30 செசன்ய தீவிரவாதிகள் 1,128 மக்களை பேஸியன் பள்ளியில்  (Beslan’s secondary school in North Ossetia) பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, தண்ணீர், உணவு இல்லாமல் 50 மணி நேரம் வாட்டி எடுத்தனர். மூன்று நாட்களில் 334 மக்களைக் கொன்றனர், அதில் 186 பேர் சிறுவர்கள் / குழந்தைகள். சமில் பஸேவ் (Shamil Basayev) என்பவன் பொறுப்பேற்றான்[3].
  • 2002ல் துப்ரோவ்கா சினிமா தியேட்டரில் சுமார் 40 செசன்ய தீவிரவாதிகள் புகுந்து பார்வையாளர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். வேறு வழியில்லாமல், நச்சு வாயுவை உள்ளே விட்டதால், தீவிவாதிகளோடு சேர்ந்து 130 பேர் இறக்க நேர்ந்தது.
  • 2006ல் இவன் கொல்லப்பட்டாலும், சுமார் 15 திவிரவாத செயல்களுக்கு அவன் பொறுப்பேற்றான்.
  • சமில் பஸேவ் (Shamil Basayev) இறந்த பிறகு, டோகு உம்ரோவ் (Doku Umarov ) என்பவன் ஜிஹாதி வேலைகளை செய்து வருகிறான், என்று ரஷ்ய உளவுத்துறைக் கூறுகின்றது.[4]
  • ஆகஸ்ட் 13, 2007ல் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை தாக்கி 60 மக்களை காயப்படுத்தினர்.
  • ஜனவரி 24, 2011 அன்று மாஸ்கோ விமானநிலையத்தில் தாக்குதல் நடத்தியதில் 36 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்[5].

சோவியத் யூனியன் – USSR உடைந்த பிறகுதான், இந்த செசன்ய இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா சோவியத் யூனியன் உடைய அதை பிரயோகித்துள்ளது என்றும் தெரிகிறது. அல்-கைதா, தலிபான் தொடர்புகளும் இதில் காணப்படுகின்றன.

Doku Umarov, Russian jihadistசொர்னேவ் சகோதர்களின் ஜிஹாதி தொடர்புகள் அதிகமாக சந்தேகிக்கப் படுகின்றன: அமெரிக்காவின் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்ட இருவரும், ரஷ்யாவின் செசன்யாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆதரித்தனர் என்றும் செய்திகள் வெளியான. இந்தநிலையில் நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த இஸ்லாமியர்களில் 140 பேரை தீவிரவாதச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று கருதி ரஷ்ய நாட்டுக் காவல்துறையினரும், பாதுகாப்பு அதிகாரிகளும், கைது செய்துள்ளனர். இவர்களில் 30 பேர், தங்கள் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் இங்கு வந்துள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஸ்டன் சம்பவம் நடந்த ஒரு வார காலத்திற்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[6].

Gadzhimurad Dolgatovசுபைதா சொர்னேவ் – சொர்னேவ் சகோதர்களின் தாயார் ஜிஹாதி பற்றி பேசியது: பாஸ்டன் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சகோதரர்களின் தாயார் சுபைதா சொர்னேவ் (Zubeidat Tsarnaeva), அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளால், 18 மாதங்களுக்கு முன்னால் குறிக்கப்பட்ட தீவிரவாதிகளின் வரிசையில் இடம்பெற்றிருந்ததாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருவதால் தகவல்கள் வெளியிடப்படக்கூடாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சுபையா தீவிரவாதிகளுடன் 2011ல் பேசிய உரையாடலை அமெரிக்கர்கள் பதிவு செய்துள்ளனர்[7]. ஒரு அலங்காரம் செய்யும் பெண்மணியாக வேலை செய்து எந்த சுபைதா, எப்படி ஜிஹாதித்துவத்தால் ஈர்க்கப்பட்டாள் என்பது புதிராக உள்ளது[8]. ஆயினும், அவர்களுடைய தாயார் இதனை மறுத்துள்ளார்[9].  அமெரிக்க ஊடகங்கள் இதைப் பற்றி முரண்பட்ட செய்திகளை[10] வெளியிட்டு வருகின்றன[11].

Subeidat Sorneva - mother talikinh jihadரஷ்யா தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த விரும்புகிறது: பாஸ்டனில், செசன்ய தீவிரவாதிகளின் தொடர்பு சந்தேகிக்கப் படுவதாலும், ரஷ்யா அமெரிக்காவிற்கு தகவல்களைக் கொடுத்து உதவியுள்ளதாலும், ரஷ்யா தீவிரவாதிகளால் தாக்கப் படும் என்ற விஷயம் வந்துள்ளதால், ரஷ்யா ரிய நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனால் தான், சந்தேகப்படும் முஸ்லிம்களை கவனித்து வருகின்றது. ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட மாவட்ட அலுவலகத்தில் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கு முன்னால், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள், இந்த மசூதிக்கு வந்துசென்றுள்ளனர் என்ற தகவல்கள் மட்டும் கிடைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  கட்ஜிமூரத் டொல்கதோவ்  (Gadzhimurad Dolgatov) என்ற ஜிஹாதி, சொர்னேவ் சகோதர்களை ஜிஹாதி தாக்கத்தில் வைத்திருந்தான் எனத் தெரிகிறது[12].

Sornev parents - Russiaஇந்தியாவின்நிலை: இப்படி வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளே ஜிஹாதிகளிடம் தவிக்கும் போது, செக்யூலார் இந்தியா என்ன செய்ய முடியும்? மேலும், முஸ்லீம்களிடம் தாஜா செய்து கொண்டு, ஓட்டு வங்கி அரசியலில் உழன்று வரும், இந்திய அரசியல்வாதிகளை, இதைப் பற்றியெல்லாம் பொறுட்படுத்துவதாகவே தெரியவில்லை. அதனால் தான் “இந்திய முஜாஹித்தீன்” என்று ஒஎயர் வைத்துக் கொண்டு, இந்தியாவிலேயே, குண்டுகள் வைத்து, அப்பாவி மக்களைக் கொன்ரு வருகின்றனர். நாளைக்கு இந்திய தலிபான், இந்திய அல்-கைதா என்றெல்லாம் தோன்றினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. அவற்றையும் ஆதரிக்க செக்யூலார்வாதிகள் தயாராக இருப்பார்கள்.

வேதபிரகாஷ்

29-04-2013


[3] The most notorious attack shook the world in 2004, when over 30 Chechen terrorists captured 1,128 people as hostages in Beslan’s secondary school in North Ossetia, on the first day of the school year, September 1. For more than 50 hours, the hostages were held at gunpoint and denied water, food or medical help. The three-day siege left 334 people dead, 318 of them hostages, including 186 children. Chechen warlord Shamil Basayev claimed responsibility for the terrorist act.

http://rt.com/news/terror-attacks-chechen-rebels-115/

அல் – காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்!

மே 4, 2010
அல் – காய்தாவினர் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவல்
புதுடெல்லி , செவ்வாய், 4 மே 2010( 13:07 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/04/1100504027_1.htm

அல் – காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்தே இந்த உளவுத் தகவல் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே நாட்டின் மேற்கு பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் உஷாராக இருக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவகள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் களத்தில் உள்ள மத்திய உளவுத் துறையினரிடமிருந்து கிடைத்த இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வி எழுந்தபோதிலும், இந்தியாவில் தாக்குதல் நடத்த அல் – காய்தாவும், லஷ்கர் இயக்கமும் தீவிரமாக உள்ள தற்போதைய நிலையில் எந்த விதமான மெத்தனத்திற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இதனையடுத்தே அல் – காய்தாவினர் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதரபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

ஹைதராபாத், செவ்வாய், 4 மே 2010( 10:49 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/04/1100504005_1.htm

ஹைதராபா‌த்‌தி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட சோதனை‌யி‌லல‌ஸ்க‌ர் இ தொ‌ய்பா ‌தீ‌விரவாஇய‌க்க‌த்தசே‌ர்‌ந்முகமது ஜியாஉல்ஹக் எ‌‌ன்பவ‌னபது‌ங்‌கி இ‌ரு‌ப்பதக‌ண்டு‌பிடி‌த்தகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர். செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஇ‌ந்தகவ‌லதெ‌ரி‌வி‌த்காவ‌ல்துறஆணைய‌ர் ‌ி.ே.கா‌ன், ‌கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌தி முகமது ஜியாஉல்ஹக், ஹைதராபா‌த், செக‌ந்‌திராபா‌த்‌ உ‌ள்பட ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லகு‌ண்டுவெடி‌ப்புகளை ‌நிக‌ழ்‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டஇரு‌‌ந்ததாகூ‌றினா‌ர். அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.தீ‌விரவா‌தி முகமது ஜியாஉல்ஹ‌க்‌கி‌ன் சொ‌ந்த ஊ‌ர் ஆந்திர மாநில‌ம் அடிலாபா‌த் மாவ‌ட்‌டத்த‌ி‌ல் உ‌ள்ள கா‌ன்பூ‌ர் எ‌ன்று கூ‌றிய காவ‌ல்துறை ஆணைய‌ர் ஏ.கே.கா‌ன், வேலை‌க்கான சவூ‌தி அரே‌பியா நா‌ட்டி‌ற்கு செ‌ன்‌றிரு‌ந்தபோது ல‌ஸ்க‌ர் இ தொ‌ய்பா தளப‌தி அ‌ப்து‌ல் அஜி‌த்துட‌ன் அவனு‌க்கு தொட‌ர்பு ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.பி‌ன்‌ன‌ர் பா‌கி‌ஸ்தானு‌க்கு செ‌ன்று அ‌‌ங்கு‌ள்ள ல‌ஸ்க‌ர் இ தொ‌‌ய்பா ‌தீ‌விரவாத முகா‌மி‌ல் ப‌யி‌ற்‌சி பெ‌ற்ற முகமது ஜியாஉல்ஹக், அ‌ங்‌கிரு‌ந்து ஹைதராபா‌‌த்‌தி‌ற்கு வ‌ந்து கு‌ண்டுவெடி‌ப்புகளை நட‌த்துவத‌ற்காக கா‌த்‌திரு‌ந்த நேர‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன‌‌ர் கைது செ‌ய்து ‌வி‌ட்டதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.முகமது ஜியாஉல்ஹக்வுட‌ன் ‌‌தீ‌‌விரவா‌திக‌ள் ‌மேலு‌ம் சில‌ர் ஊடுரு‌வி இரு‌க்கலா‌ம் எ‌ன்று ச‌ந்தே‌கி‌க்க‌ப்படுவதா‌ல் ஹைதராபா‌த் முழுவது‌ம் உஷா‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டு க‌ண்கா‌ணி‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ஏ.கே.கா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.