பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)
நடிகை ராதா 22-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், புகார் கொடுத்த பரபரப்புப் புகாரையடுத்தார்[1]. 28-11-2013 வியாழக்கிழமை அன்று ஷ்யாம் என்ற பைசூலுக்கு முன் ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்[2]. தொழிலதிபர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 05-12-2013 வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. சுந்தரா டிராவல்ஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூலும் தானும் 2008 முதல் 2012 வரை கணவன் மனைவிபோல் வாழ்ந்ததாகவும். வைர வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றதாகவும், திருமணம் செய்ய மறுத்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தொழில் அதிபர் பைசூல் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதெல்லாம் சரி, அப்பா பெயர் எங்கே?… ராதாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் பைசூல் வக்கீல்![3]: அப்போது பைசூல் தரப்பில் வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மார்க்கரெட் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின்போது ராதா தரப்பு வக்கீல் வாதிடுகையில், பைசூலுக்கு ஜாமீன் தரக்கூடாது. பைசூலால் ராதா கர்ப்பமாகியுள்ளார். அவரது கட்டாயத்தால் அபார்ஷன் செய்து விட்டார். அதுதொடர்பான ஆதாரங்கள் இதோ என்று ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து குறுக்கிட்ட பைசூல் தரப்பு, அதெல்லாம் சரிதான். அதில் அப்பா பெயரே இல்லையே. பைசூல்தான் தந்தை என்றால் அப்பெயர் இருக்க வேண்டுமே என்று கிடுக்கிப்பிடி போட்டனர்[4]. இதே கேள்வியை நீதிபதி அரசு வக்கீலிடம் எழுப்பி விளக்கச் சொன்னார். அபார்ஷண் செய்து கொள்ளும் போது, “தந்தையின்” பெயரைஉக் கேட்பார்களா என்று தெரியவில்லை. “மேரி ஸ்டோப்ஸ்” போன்றவை ரகசியமாக அபார்ஷண் செய்து வருகின்றன.
பைசூல் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதால் முன்ஜாமீன்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் (04-12-2013)): அதற்கு அரசு வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக சொல்ல முடியாது. கற்பழிப்பு வழக்காகவும் எடுத்துக்கொள்ள முடியாது. இப்போதைக்கு பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்றே விவகாரம் உள்ளது. தீர விசாரித்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடருவோம். பைசூலை கைது செய்யலாம். ஆகவே, அதுவரை பைசூலை கைது செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார். அப்போது போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.எல்.ஜெகன் ஆஜராகி, ‘நடிகை ராதா கொடுத்த புகார் குடும்ப பிரச்னை தொடர்பானது. உரிய விசாரணை நடத்தப்பட்டு புகாரில் போதிய முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள்‘என்றார். பைசூல் தரப்பில் வக்கீல் மார்கரெட் வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார். பின்னர் மதியம் நீதிபதியிடம் அரசு வக்கீல் ஜெகன், பைசூல் மீது மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி எப்ஐஆர் நகலை தாக்கல் செய்தார்[5]. இதையடுத்து, பைசூலின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்[6]
பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் (02-12-2013): நடிகை ராதாவின் பெயரைச் சொல்லி, அக்ரம் கானின் அடியாட்கள், ஒரு கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக, பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் அளித்தார்[7]. ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த, நாயகி ராதா, பைசூல் என்ற வைர வியாபாரி மீது பரபரப்பு புகார் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் மீது, போதை பொருள் கடத்தல் புகார் தரப்பட்டது[8]. இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, பைசூலின் சகோதரி மரியம் பீவி புகார் அளித்தார். அதன் விவரம்: “தாயாரின் மறைவுக்கு பிறகு, சகோதரிகள் ஜரினா, லக்சூரியா, சகோதரர் முஜிப் ரகுமானுடன், மற்றொரு சகோதரரான பைசூலின் வீட்டில் வசிக்கிறோம். அவர் மீது, உண்மைக்கு மாறாக, போதை பொருள் கடத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம், இரவு 8:30 மணிக்கு, எங்களது வீட்டிற்கு வந்த, அக்ரம் கானின் ஆதரவாளர்கள், ‘உங்கள் தூண்டுதலின் பேரில்தான் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். அதையும் சேர்த்து, நாங்கள் அளித்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லை என்றால், இரண்டு நாட்களில், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மறுத்தால், குடும்பத்துடன் கொன்று விடுவோம்”, என, மிரட்டிச் சென்றனர். மேலும், திருவல்லிக்கேணி பகுதியில், பைசூல் குறித்து அவதுாறு விளம்பரங்களும் செய்துள்ளனர்[9]. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மரியம் பீவி போலீசில் புகாரை மறுக்கும் பர்வீன் என்ற ராதா (03-12-2013): இந்த புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது: “பைசூல் என்னுடன், 2008ம் ஆண்டு முதல், ரகசியமாக குடும்பம் நடத்தியது, மரியம் பீவி உட்பட அனைவருக்கும் தெரியும். பைசூல், என் எதிர்காலத்தை சீரழித்து, கருவை கலைத்து, மூளைச்சலவை செய்து, 50 லட்சம் ரூபாயை அபகரித்து சென்றார். நகையை அடகு வைத்து சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கும் நான், பணம் கொடுத்து மிரட்டுகிறேன் என்பதில் துளியளவும் உண்மை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். அக்ரம் கான் கூறுகையில், ”பைசூல் குறித்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால், பொய் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டப்படி சந்திப்போம்,” என்றார்.
2007லிருந்து 2012 வரை தைவான் சிறையில் இருந்த அக்பர் பாஷா: அக்பர் பாஷா என்பவர், பைசூலினால் தான், தான் தைபை விமானநிலையத்தில் போதை மருந்து வைத்திருந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டான், ஐந்தாண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டான், இப்பொழுது பைசூல் தான் காரணம் என்று சென்னை போலீசாரிடம் 02-12-2013 அன்று புகார் கொடுத்துள்ளான்:
More than five years ago, Akbar Basha left Chennai for a job in Taiwan with stars in his eyes. When he landed in Taipei airport though, he found himself in custody for smuggling narcotics. After serving a five-and-a-half year prison sentence, he’s back in Chennai and has lodged a police complaint against two people who sent him abroad promising him a job but instead turned him into an unwilling carrier of drugs. On Monday (02-12-2013), Basha, 32, met police commissioner S George and filed the complaint, naming two men Faizal and Nizar. He said he’d approached the police after reading news reports of actor Radha lodging a complaint of cheating against a businessman named Faizal, who was probably the same man who duped him[10].Basha, a class 8 drop-out and the eldest of three brothers, had been looking for a job abroad as his family needed the money. The resident of Triplicane lost about Rs 20,000 to agents who had promised him jobs abroad. Nizar, who lived in the same locality, promised to help in 2007. Nizar introduced Basha to Faizal, who said he would fix Basha up with a job in Taiwan without a commission.Faizal gave him the name of a person to contact in Taiwan and said he’d be given the details of the job there. They gave him a SIM card and two wooden flowerpots. Basha was to hand over the pots as a gift to the person he met there. On November 29, 2007, Nizar accompanied him to Mumbai airport where Basha caught a flight to Bangkok and from there to Taiwan.He cleared immigration in Chennai and Mumbai and reached Taiwan. “Faizal asked me to call him once I reached Taiwan. But I was caught by immigration officials in Taiwan before I could meet the person to whom I was to give the flowerpots,” said Basha. “I realized that I had been used as a carrier only when the Taiwan officials told me that I had smuggled narcotics,” he said.Since his English was poor, he could not explain the situation to them. He was told that he was carrying ketamine. A court sentenced him to 10 years in prison. An appellate court accepted his mercy pleas and he returned to Chennai in February after serving half the sentence.
“I earned money in the printing press job inside the prison and managed to reach India with the money I saved,” he said. He reached Chennai in February and tried to contact Faizal but his efforts proved futile. Finally, he decided to go to the police for help. |
பிப்ரவரியில் சென்னைக்கு வந்தாலும், இப்பொழுது தான் புகார் கொடுக்கிறான். கேட்டதற்கு நடிகை ராதா புகார் கொடுத்ததை அறிந்து தானும் கொடுப்பதாகக் கூறுகிறான்[11]. ஆகவே, பைசூல்-பர்வின் பிரச்சினை வேறுவிதமாக செல்கிறது என்றாகிறது. செக்ஸ், சேர்ந்து வாழ்தல், புளூபிளிம், போதைமருந்து, போதைமருந்து-கடத்தல், சிறைவாசம், பரஸ்பர குற்றச்சாட்டுகள்………………….இப்படி!
வேதபிரகாஷ்
© 06-12-2013
[1] https://islamindia.wordpress.com/2013/11/23/why-parveen-becomes-radha-faisul-shyam-for-sex-or-business-of-convenience/
[2] https://islamindia.wordpress.com/2013/12/03/now-complaint-on-faizul-includes-ketamine-smuggling-also/
[4] http://tamil.oneindia.in/news/tamilnadu/baisool-s-lawyers-tame-actress-radha-s-charges-court-188804.html
[6] தினகரன், நடிகைராதாபுகாரில்வழக்குபதிவுதொழிலதிபர்முன்ஜாமீன்மனுசெஷன்ஸ்கோர்ட்தள்ளுபடி, சென்னை பதிப்பு, 05-12-2013.
[9] தினமலர், ‘ரூ.1 கோடிகேட்டுமிரட்டல்விடுக்கிறார்‘ வைரவியாபாரியின்சகோதரிபுகார், பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2013,22:39 IST.
[10] http://articles.timesofindia.indiatimes.com/2013-12-03/chennai/44708847_1_taiwan-officials-chennai-man-taipei
[11] “In prison, I met several people who said they were similarly sent by Faizal. They all said they were unaware that they had been used as carriers,” he said. Though he returned to India in February, Batcha said he had come forward to lodge the complaint now as recently, cine actress Radha also lodged a complaint against Faizal.Akbar Batcha said that he was coming out in public as he did not want others to get cheated by Faizal.
அண்மைய பின்னூட்டங்கள்