Posted tagged ‘குஷித் ஆலம் கான்’

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம் – வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர், தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

மார்ச் 9, 2013

தலைவெட்டியவன் சாமி கும்பிட வருகிறானாம்வரவேற்கும் மானங்கெட்ட இந்திய அமைச்சர்,  தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!

ISI awarded Rs 5 lakhs for beheading Indian soldier

இந்திய வீரர்களின் தலைவெட்டியவனுக்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பு: ஆஜ்மீர் தர்காவுக்கு சனிக்கிழமை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃபை புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தார். அவர் விட்டில் இருந்ததாக சொல்லிக் கொண்டாலும், ராஜாவிற்கு வேண்டிய மரியாதைகள் தர்காவில் மற்ற பூஜாரிகளால் அளிக்கப்பட்டன. ராஜஸ்தான் அரசு 1000 வீரர்கள் முதலியவர்களை வைத்து தர்காவைச் சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு[1] செய்துள்ளது! பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் பந்தோபஸ்துகளில் ஈடுபட்டனர்[2]. வீரமணி போன்றவர்கள், ஏன் அங்கிருக்கும் சூபி தனது மகிமையினால் அவரைக் காப்பாற்ற மாட்டாரா என்று விடுதலையில் எழுதுவாரா என்று தெரியவில்லை!

பூசாரி வரவேற்க மாட்டார் இல்லை அவர் வரும் போது இவர் வரமாட்டாராம்!: இது குறித்து சையது ஜைனுல் அபெதின் அலிகான் (Syed Zainul Abedin Ali Khan) வெள்ளிக்கிழமை கூறியதாவது: “(அவரை வரவேற்பது) தலைத்துண்டிக்கப் பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை அவமதிப்பதாகும் செயலாகும். இந்தியபாகிஸ்தான் எல்லைக் கோடு பகுதியில் இரு இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இச்சூழலைக் கருத்தில் கொண்டே, இங்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதில்லை அல்லது அவர் வரும்போது புறக்கணிப்பது என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்”. இச்செய்தியை பாகிஸ்தான் நாளிதழும் வெளியிட்டுள்ளது[3]. அப்படி சொன்னாலும், என்ன நடக்கப் போகிறது என்பது இன்று (சனிக்கிழமை) தெரிந்து விட்டது. ஆமாம், அவர் வரவில்லை, ஆனால், மற்றவர்கள் கவனித்துக் கொண்டார்கள். இவரது அனுமதி இல்லாமல் அது நடந்திருக்காது. மேலும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்ததே இவர் தான்! [Chishti met Ashraf twice in Islamabad last year, in December and August. During the meeting in August, Chishti invited the premier to visit Ajmer. Ashraf accepted the invitation and said he would visit Ajmer at “the first available opportunity.”].

Last voyage of the beheaded soldiers

தலைகளைக் கொண்டுவரச் சொல்லும் பூசாரி!: “அவர்களின் தலைகளை திரும்ப எடுத்து வரவேண்டும்” என்றும் மத சம்பிரதாயங்களுக்கான குருவாகக் கருதப்படும் ஜைனுல் அபெதின் கூறியுள்ளது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து[4]. ஆனால், அது பெறும் பேச்சுதான், முஸ்லீம் என்றும் முஸ்லீம் தான் என்று அனைவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வெளிப்பட்டது. ஆமாம், அந்த குர்ஷித் ஐந்து நடசத்திர ஓட்டலில் நல்ல மெனுவில் விருந்து ஜோராக ஏற்பாடு செய்து தின்று விட்டுத்தான் சென்றுள்ளார். 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி ஞானி குவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா மிகவும் பழமையானது. காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்’ என்றார்.

 Beheaded photos - not Indians3  Beheaded photos - not Indians2

மேலே காட்டப்பட்டுள்ளது உதாரணத்திற்காக – இந்திய வீரரது உடல்-தலை இல்லை. இரக்கமற்ற அரக்கர்கள் எப்படி மனிதர்களைக் கொன்று தங்களது குரூரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதனைக் காட்டவே, காண்பிக்கப்பட்டுள்ளது.

Beheaded photos - not Indians

இப்படியும் நடக்குமா என்று நினைக்கலாம் – ஆனால் இப்படியும் நடந்துள்ளது என்பதனைக் கட்டத்தான் இப்புகைப்படங்கள்!

குஷித் ஆலம் கான் விருந்து கொடுக்கப் போகிறாராம்!: முஸ்லீம் தான் நான் என்று ஆர்பரித்து, “எனது பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன்” என்று மிரட்டியதிருவாளர் / ஜனாப் குஷித் ஆலம் கான் விருந்து கொடுத்துள்ளார்! கூட அந்த வீரர்களின் குடும்பத்தாரையும் அழைத்துக் கொள்ளலாம் / கொல்லலாம்!! சோனியா படு சந்தோஷமாகி விடுவார்!!! ராஹுல் அதே நேரத்தில் ஜியா ஹுல் ஹக் என்ற போலீஸ் அதிகாரி வீட்டிற்குச் சென்றுள்ளது கவனிக்க வேண்டும். தலைவெட்டப்பட்ட வீரர் உறுதி மரியாதையிலும் கலந்து கொள்ளவில்லை, அவரது வீட்டிற்கும் செல்லவில்லை. பிறகு அந்த வீட்டிற்கு ஏன் சென்றார்? ஆமாம், கொல்லப்பட்ட அந்த ஆள் முஸ்லீம், கொல்லப்பட்ட இந்த ஆள் இந்து! என்னே காங்கிரஸின் செக்யூலரிஸம்?

வேதபிரகாஷ்

09-03-2013


[2] A security team from Pakistan reached Ajmer on Friday to look into the security arrangements. The team, including officials of Pakistan high commission, reached Ajmer early on Friday and had a meeting with officials of the district administration. They remained in the dargah to find out the rituals and the arrangements made for Ashraf’s visit.