Posted tagged ‘குரானில் புத்தர்’

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்

ஜூன் 2, 2010

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்

இஸ்லாம் மீதான பௌத்தத்தின் தாக்கம்: ஜைனம்[1] மற்றும் பாகவதம் கிருத்துவம் தோன்றியதற்கு எப்படி காரணமாக இருந்ததோ[2], அதேபோல இஸ்லாம் தோன்றியதற்கு பௌத்தம் காரணமாக இருந்தது[3]. கிருத்துவம் கிருஷ்ணனின் கதைகளில் கட்டுண்டிக் கிடக்கிறது[4]. மேலாக பௌத்தத்தின் பூச்சு உள்ளது. ஆனால், இஸ்லாத்தில் பௌத்தத்தின் தாக்கம்  அதிகமாகவே உள்ளது. முகமது தன்னுடைய விக்கிரங்களை அழிப்பதில் ஆரம்பித்த அந்த உடைப்பு, இடிப்பு வேலைகள் தாம், முகலாய சுல்தான்கள், பாதுஷாக்கள் வரை வெளிப்பாட்டு, இப்பொழுதும் தாலிபான்களின் உருவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய இஸ்லாமும் அத்தகைய கோவில் உடைப்பு, இடிப்பு, அழிப்புகளில் சிக்குண்டுள்ளது[5].

பௌத்தம், இஸ்லாம், வியாபாரம்: பௌத்தம் ஒரு வியாபாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் வணிகத்துடன் வளரந்த மதம். வியாபார நிமித்தமாக அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பரவினர். ஐம்பெருங்காப்பியங்களில் எப்படி வணிகர்கள் எல்லோருமே ஜைனர்களாக, பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதனைப் பார்க்கலாம். அத்தகைய ஆக்ரோஷமான எதிர்ப்புத்தன்மைக் கொண்ட, கொள்கைகளைத்தான் அரேபியர்களும், பின்னர் இஸ்லாமியர்களும் தம்முடைய வியாபார-வணிகக் கொள்கைகளில் பின்பற்றினார்கள். கடல் கொள்ளை, கடத்தல், அதிக லாபம் வைத்து விற்பது, பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று விற்பது, வரிஏய்ப்பு, முதலிய தன்மைகளை இன்றும் முஸ்லீம்களிடம் பார்க்கலாம். அது மட்டுமல்லாது, குரானிலேயே, நீங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று வியாபரம் செய்யலாம் என்றுள்ளது.

எதிர்மறை விளைவுகளின் தன்மைகளின் ஒருத்துவ உருவம் இஸ்லாம்: கடவுளே இல்லை என்றுதான் ஆரம்பத்தில் வளர்ந்தது பௌத்தம். ஆனால், வழிப்பாட்டில் சரணம் சொல்லிக் கொண்டிருந்து அமைதியை பரப்புவோம் என்று பிரச்சாரம் செய்தனர், மாற்றியமைக்கப் பட்ட இஸ்லாத்தில் “கடவுளே இல்லை, ஆனால் அல்லாவைத்தவிர” (லா இலா இல்லாலா) என்றுதான் அக்கொள்கை வெளிப்படுகிறது. முகமது ஆரம்பத்தில் மெக்காவில் உள்ள விக்கிரங்களை உடைத்து தனது விக்கிர வழிப்பாட்டினை எதிர்த்து ஆனல், காபாவில் இருந்த விக்கிரத்தை மட்டும் அங்குள்ள மக்களின் வேண்டுக்கோலிற்கு இணங்க விட்டுவைத்தார். அந்த விக்கிரத்தின் உடைந்த பாகங்களே இன்றும் இஸ்லாத்தின் மையமாக இருந்து[6], முஸ்லீம்களால் மிகவும் சிரத்தையாக வழிபாடு செய்யப் பட்டு வருகிறது. இஸ்லாம் தீவிரமாக வளர்ந்த பிறகும், பாமியனில் அத்தகைய மிகப்பெரிய புத்தர்சிலைகள் இருந்திருக்கின்றன என்பதிலிருந்தே இஸ்லாமிய நாடுகளில் பௌத்தம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஆயிரக்கணக்கான வருடங்களாக ஏற்படுத்தி வந்துள்ளது என்பதனை அறியலாம். அதனால் தான் குரானிலேயே பௌத்தத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

Buddha-at-Luxor

Buddha-at-Luxor

குரானில் புத்தர், அரசமரம், முதலியன: குரானில் “துல் கிஃபில் (Dhu’l Kifl)” என்பது கபிலவாஸ்து என்ற இடத்திலிருந்து வந்த நபி (21.85 and 38.48) என்பது புத்தரைக் குறிக்கிறது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. அதே மாதிரி குரானில் குறிப்பிடப்பட்டுள்ள மரமும் [fig tree (95.1-5)], புத்தர் ஞானோதயம் பெற்ற அரச மரம்தான் என்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. எகிப்தில், லக்ஸார் கோவிலில் இருக்கும் புத்த சிலையை மறைக்கப் பார்த்தாலும், அதெப்படி அங்கு வந்தது என்று யாரும் விளக்குவதில்லை[8].

  • “இஸ்மாயில், இட்ரிஸ் மற்றும் துல் கிஃபில் எல்லோருமே பொறுமையைக் கடைப்பிடிக்கும் வழிவந்தவர்கள் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் [And (remember) Ismail and Idris and Dhul-Kifl, all were from among those who observe patience.”[Qur’an 21:85–86]
  • “இஸ்மாயில், இட்ரிஸ் மற்றும் துல் கிஃபில் எல்லோருமே மிகச்சிறந்தவர்கள்  (மம்சத்தின் வழிவந்தவர்கள்) என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் [And remember Ismail and Al-Yasa and Dhul-Kifl, and they were all from the best.”[Qur’an 38:48]

துல் கிஃபில் என்றால் எஸக்கியல் என்ற நபி என்றும் (ca. 1600–1400? BCE) குறிப்பிடுகின்றனர். இங்கு வேடிக்கையென்னவென்றால், ஒர்ரு கணாக்கீட்டின் படி, புத்தரின் காலமும் இக்காலத்துடன் ஒத்துப்போகிறது. அரேபியத்தில் துல் கிஃபில் என்றால், கிஃபிலை உடையவன் என்று பொருள்[9]. ஆகவே குரானில் அத்தகைய பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். உதாரணத்திற்கு துல் நூன் என்றால், மீனுடன் இருப்பவன் என்று பொருள் (யூனிஸைக்குறிக்கலாம்). துல் கரனாய்ன்இரண்டு கொம்புகளுடைய நபி என்று பொருள்படும். ஆகவே கிஃபில் என்றால், இரண்டு, இரட்டை, மடிப்பு, என்றெல்லாம் பொருள் வரும். மடிப்பு எனும்போது, துணியின் மடிப்பு என்றும் பொருள் வரும். ஆக, இரண்டு பாகங்களை / பகுதிகளைக் கொண்டவன் என்ற பொருள் வரும்[10]. ஹஜ் யாத்திரையின் போது, மடிப்புடன் ஒரே ஆடையை இரண்டு போல உடுத்திக் கொண்டுச் செல்வதைக் காணலாம். அதாவது, பிறந்தது, பிறகு இருந்தது என்ற இருநிலையைக் காட்டும் மனிதத் தன்மையைக்காட்டக் கூடியது என்றும் பொருள் வரும். ஒரு சடங்கு செய்யப்பட்டபிறகுதான், அந்த மத நம்பிக்கையாளன் என்று கருதப் படுவான்[11]. அதேபோல, நபிகள் தங்களது திறமை, அதிசயங்கள், சின்னங்கள் முதலியவற்றை வெளிப்படுத்து, தமது நிலையை நிரூபித்துக் கொள்கின்றனர்.

சரணம் என்ற சரணாகதி தத்துவம் ஆழப்பதிந்துள்ளது: அல்லாவிற்கு முஸ்லீம் முழுவதுமாக சரணாகதி அடைந்துவிடவேண்டும். அல்லா சொல்வதற்கு எதிராக எதையும் ஒரு முஸ்லீம் செய்யக் கூடாது. அத்தகைய முழுவதுமான, மொத்த அடக்கம், பணிவு அடிபணிதல், இஸ்லாத்தில் எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், அத்தகைய சரணாகதி கண்ணுக்குத் தெரியாத இறைவனைத்தவிர, கண்ணுக்குத் தெரியும் தீர்க்கதரிசியையும் நம்பி வந்ததினால், முகமது தான் ஒரு தீர்க்கதரிசி என்றும் வெளிப்படுத்திக் கொண்டார். ஆக,  அல்லாவைத்தவிர கடவுள் இல்லை, முஹம்மதுதான் நபி: என்றது முஸ்லிம்களின் மனங்களில் ஆழப்பதிந்தது.

பழமையை மறைப்பதால், மறுப்பதால், மறப்பதால் இஸ்லாத்தில் குழப்பங்கள் வளர்கின்றன: “ஜஹல்லியா” என்று சொல்லிக் கொண்டு, ஹிஹிரி ஒன்றிற்கு முன்னதாதான எல்லாவற்றையும் அப்படியே ஒழித்துக் கட்டிவிடமுடியாது. மனித இனம் தொடர்ந்து இருந்து வந்திருக்கும்போது, மிகவும் பழமையான, புராதனமான மதம், அதன் தாக்கம், கலாச்சாரம், பாரம்பரியம், மூதாதையிரிடமிருந்து தொடர்ந்து வரும் மற்ற காரணிகள் முதலியவற்றை துடைத்து, அழித்து, ஒழித்துவிட முடியாது. இன்று ஜீன்களிலேயே அவை பதிவாகியுள்ளது என்கிறார்கள். சரித்திர ரீதியில் அவற்றைப் பின்பற்றி அல்லது எப்படி முகமதுவே பழைய சின்னங்கள், வழிபாட்டு முறைகள் (ஹஜ்ஜில் பெருமான்மையாகக் காணலாம், உணரலாம்) இஸ்லாத்தில் தகவமைத்துக் கொண்டாரோ, அதுபோல ஏற்றுக் கொள்ளவேண்டும். முஸ்லீம்கள் எல்லொருமே அரேபியர்கள் அல்ல, ஆக, அரேபிய கலாச்சாரம்தான் முஸ்லிம்களின் கலாச்சாரம், அரேபிய பாரம்பரியம்தான் முஸ்லிம்களின் பாரம்பரியம்,………………..என்றெல்லாம் இருக்கமாக இருந்துவீடமுடியாது.

வேதபிரகாஷ்

02-06-2010


[1] நிர்வாண / திகம்பரம் கிரேக்கதிலும், எஸ்ஸென்ஸ் என்ற குழுமத்திலும் காணப்பட்டது.

[2] J. M. Robertson, Christianity and India,  Cosmos, New Delhi, 1973.

Apocryphal New Testament

[3] The Buddhist Archives of Dr. Alexander Berzin, http://www.berzinarchives.com/web/x/nav/n.html_1867868580.html

[4] Count C. F. Volney, Ruins of Empire,

[5] ஆனால், குற்றங்களை மறைக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தில், இன்னொரு பிரச்சினையை எடுத்துக் மொண்டு வந்து, அதனை மறைக்க பார்ப்பர்.

[6] காபத்துல்லாஹ் (கடவுளின் வீடு), என்ற இடத்தின் அந்த கல்லின் வரலாறு பல உண்மைகளைச் சொல்கின்றது.

[7] Alexander Berzin,. Introduction to Buddhism from an Islamic Point of View, Buddhism and Its Impact on Asia. Asian Monographs, no. 8. Cairo: Cairo University, Center for Asian Studies, June 1996.

http://www.berzinarchives.com/web/en/archives/study/islam/general/buddhist_islamic_view.html

[8] One group of people Therapeutae sent by Asoka on an embassy to Pharaoh Ptolemy II in 250 BC were considered as Buddhists. The word ‘Therapeutae’ is itself of Buddhist origin, being a Hellenization of the Pali ‘Thera-putta’ (literally ‘son of the elder.’). Philo Judaeus, contemporary of Josephus, described the Therapeutae in his tract ‘De Vita Contemplativa’. They were a religious brotherhood of reclusive ascetics, devoted to poverty, celibacy, good deeds and compassion, just like Buddhist monks. Thus, they were considered as the Essenes (a similar monkish order in Palestine) and  the Gnostics – adepts of philosophical speculations.

[9] இந்த நபி எஸக்கியல் என்று குறிப்பிடப்பட்டு, பாக்தாதில் “துல் கிஃபில் கோவில்” ஒன்று உள்ளதை எடுத்துக் காட்டுகிறார்கள். 1316ல் முஸ்லீம்கள் யூதர்களின் வழிபாட்டுத்தலமாக இருந்த இதனை இடித்து மசுதியாக்கி விட்டார்கள்.

[10] http://en.wikipedia.org/wiki/Dhul-Kifl

[11] ஞாபஸ்தானம் பெறுவது, சுன்னத் செய்து கொள்வது முதலியன.