Posted tagged ‘கும்மாளம்’

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

பிப்ரவரி 13, 2013

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0652

மக்களைக் கொல்லும் மாலிக்: யாஸின் மாலிக் ஒரு முஸ்லீம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற இந்திய-விரோத, பிரிவினைவாத இயக்கத்தை நடத்தி வருபவன். கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தப் பின்னணியில் அவ்வியக்கத்தினர் உள்ளனர். இஸ்லாமாபாதில் நடந்த உண்ணாவிரத போராட்டதில், பயங்கரவாதி-தீவிரவாதி ஹாவீஸ் சையீத் கலந்து கொண்டுள்ளான். JKLF பேனர் பின்னால் இருக்கிறது. ஆகவே, அக்கூட்டத்தில் அவனைக் கலந்து கொள்ள அழைத்துள்ளாதத் தெரிகிறது. இருப்பினும், மாலிக் மறுத்துள்ளான்[1]. எதற்காக இதிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, காந்தி கூட, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார் என்றான்[2].

Photo0653

நண்பர்களுடன் உல்லாசம்!

Photo0648

ஆட்டத்தில் கிக் ஏருகிறது போலும்!

Photo0649

அலேக்காக தூக்குதல்!

Photo0654

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[3]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0650

இருவரையும் பிரித்து விடுகின்றனர்!

Photo0651

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்[4]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[5]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[6]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

 

வேதபிரகாஷ்

13-02-2013


[4] Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/