Posted tagged ‘குடல்’

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

மார்ச் 1, 2013

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

JK assembly-2013 broken mike

 

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!

காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர்  (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

JK assembly-2013 MLAs fight

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

Jammu & Kashmir Assembly March 2012

 

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!

முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

March 2011 - JK Assembly

 

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!

விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது.  அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

JK MLA uproar

 

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!

கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

Six JMB militants hanged in Bangaladesh

 

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!

புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

01-03-2013