முஸ்லீம்-கிருத்துவ மத கலவரத்தில் 500க்கும் மேல் சாவு!
கடந்த ஞாயிற்றுக் கிழமை 07-03-2010 நைஜீரியா நாட்டின் நான் கு கிராமங்களில், இரண்டு மதக்குழுவினர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஃபுலானி (Muslim Fulani ethnic group) எனப்படும் அதிகமாக உள்ள முஸ்லீம் மக்கள், கிருத்துவ பெரோம் (Christian Berom ethnic group) என்ற குடிமக்களைத் தாக்கியதில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்………….என இறக்க நேரிட்டுள்ளது. டோகோ நஹவா, ரஸாத், ஜோத் மற்றும் ஸென் என்கின்ற நான்கு கிராமங்களில் அதிகாரிகள் இறந்த உடல்களை திங்கட்கிழமை எண்ண ஆரம்பித்தபோது 378 பிணங்கள் கிடைத்தது கண்டு அதிர்ச்சியுற்றனர்.

நா ஹௌவா என்றைடத்தில், ஒரு பெரிய குழியில் புதைக்கப்படுள்ள பிணங்கள்!
![]() |
திங்கட்கிழமை அன்று 416 சடங்கள் கிடைத்த போது, அவை மொத்தமாக அடக்கம் செய்யப் பட்டது. |
செவ்வாய் கிழமையான இன்றும் பிணங்கள் கிடைக்கின்றன.
அண்மைய பின்னூட்டங்கள்