இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)
பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின் இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4]. “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].
இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.
காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்
19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.
- பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
- பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
- பள்ளிகளை எரித்தது,
- அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது
போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:
- சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
- நயீம் கான் [Naeem Khan],
- பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
- காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
- மற்றும் பலர் [and others]
இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri
காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு – கல்லெறி–ஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
© வேதபிரகாஷ்
30-07-2017
[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST
[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms
[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.
[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html
[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.
[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.
[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.
http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf
[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்.ஐ.ஏ., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.
அண்மைய பின்னூட்டங்கள்