“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
போபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.
அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.
வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9]. அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.
ஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
07-11-2016
[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am
[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/
[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST
[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html
[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.
[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST
[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.
[8] Indian Express, Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.
[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.
[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.
[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece
அண்மைய பின்னூட்டங்கள்