Posted tagged ‘கார் ஓட்டுவது’

சவுதி அரேபியாவில் காரை ஓட்டியதற்காக ஒரு பெண் கைது!

மே 30, 2011

சவுதி அரேபியாவில் காரை ஓட்டியதற்காக ஒரு பெண் கைது!

 

சவுதி அரேபியாவில் பெண்கள் காரை ஓட்டக்கூடாதாம். ஆனால், இத்தடையை மீறி ஒரு பெண் காரை ஓட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்[1]. மனல் அல்-சரிஃப் (Manal al-Sharif) என்ற அந்த பெண், அந்நாடு அரசர் தன்னை விடுவிப்பார் என்று நம்புகிறார். இம்மாதம் 21ம் தேதி அல்-கொபார் என்ற இடத்தில், இப்பெண்மணி காரை ஓட்டியுள்ளார். பிறகு, இது தெரியவந்ததும் போலீஸார் கைது செய்தனர்[2]..