2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் லீக்கின் இரட்டை வேடங்கள், யுக்திகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (2)
பிளவு பட்டுள்ள முஸ்லிம் லீக் போடும் இரட்டை வேடங்கள்: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் மார்ச்.20 அன்று தெரிவித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[2], “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது”, என்றும்[3], அவர்கள், பின்வருமாறு, என்றும் சொல்லப்பட்டுள்ளது[4]:
- பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (மாநிலத் தலைவர்)
- கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் (படத்தில் இருப்பவர்)
- எம்.எஸ்.ஏ. ஷாஜகான்,
- எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.,)
- எச். அப்துல் பாசித் (முன்னாள் எம்.எல்.ஏ.,)
- வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்.
இது தேவையில்லாத விசயம் என்றே தெரிகிறது. பிப்ரவரி 8ம் தேதியன்றே திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காதர் மைதீன் கோரிக்கை விடுத்தது நோக்கத்தது[5]. ஆக முன்னமே தீர்மானித்து திமுகவிடம் பேரம் பேச்சியது தெரிய வருகிறது.

முஸ்லிம்கள் போராட்டம் நெல்லை 28-01-2014.. ஊடக விளம்பரம்.
முஸ்லிம் மாநாடுகளில் ஸ்டாலின் கலந்து கொண்டது (மார்ச்.10, 2016): தேர்தலின் போது, முஸ்லிம்கள் தங்களது மாநாடுகளை அரசியல் பேரம் செய்ய உபயோகப்படுத்திக் கொள்வது, ஈவேரா காலத்திலிருந்து இருந்து வருகிறது. அப்பொழுது, தமிழகத்தில் தலைமை ஹாஜி அறிவிக்கும் நாளை பின்பற்றாமல் முஸ்லிம் பண்டிகையை விருப்பம்போல் கொண்டாடுகின்றனர். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அவர்களது பண்டிகையை ஒரே தினத்தில் தான் கொண்டாடுகின்றனர். ஆனால், போட்டி ஜமாத்துக்களை வைத்துக் கொண்டு மதத்துக்கு எதிராகவும், முஸ்லிம் அமைப்புகளை பிளவுபடுத்துகிற வகையிலும் செயல்படுகின்றனர். என்றெல்லாம் விவாதிக்கப்பாடன[6]. இதை ஒருங்கிணைக்கவே ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. ஆனால், முஸ்லிம் அமைப்புகளில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. சமீபத்தில் ஷிர்க் மாநாடு நடத்தப் பட்டதும் நோக்கத்தக்கது. தேர்தல் சமயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர். விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 10-ம் தேதி நடைபெற்றபோது அதில் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக / பார்வையாளராகக் கலந்து கொண்டார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு: விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் 10-03-2016 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு எந்த தகுதியுள்ளது என்று தெரியவில்லை. இது என். ராம் போன்றோர், கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வது போலத்தான். மார்க்சிஸம், கம்யூனிஸ உதிரிகள், நாத்திகம், கிருத்துவ-முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள், முதலியவை கலந்து கொள்வது போலத்தான். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும் என கூறினார்[7]. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இம் மாநாட்டின் சிறப்பு அம்சமாக பள்ளிவாசல், கபரஸ்தான், திருமணப் பதிவேடு ஆகியவற்றின் சிறந்த பராமரிப்பு, மதரஸா, கல்வி நிலையம், மருத்துவ மையம், பைத்துல் மால், ஷரீஅத் பஞ் சாயத்து உள்ளிட்டவை நடத்துதல், ஏழைக்குமர் திருமண உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி போன்ற நல காரியங்களில் முன்மாதிரியாகத் திகழும் மஹல்லா ஜமாஅத்களுக்கு விருது வழங்கப்பட்டது[8]. ஆக இவர்களுக்கு இதெல்லாம் “ஷிர்க்” இல்லாமல் போய் விட்டதாக்கும். குறிப்பாக “ஷிர்க்” மாநாட்டுக்காரர்கள் இதையெல்லாம் ஏன் எதிர்க்கவில்லை என்று எந்த ஊடகக்காரனோ, செக்யூலரிஸப் பழமோ கேட்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அரசியல் மாநாடு 11-03-2016 அன்று மாலை விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தேசிய பொதுச்செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஷாஜகான், முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல்மஜீத், காயல் மகபூப், அப்துல் பாசித், ஜீவகிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்[9]. மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் வரவேற்றார். முன்னர் கருணாநிதியே கலந்து கொள்வது வழக்கம். அப்பொழுது, அவர் திராவிட சித்தாந்திகளுக்கும், முகமதியர்களுக்கு எப்படி “மாமன்-மச்சான்” போன்ற உறவுகள் எல்லாம் இருந்தது என்று கதை விடுவார். ஆனால், எப்படி பெரியாரை ஜின்னா ஒதுக்கித் தள்ளினார், கடிதங்கள் மூலம் சாடினார் என்பதை சொல்ல மாட்டார். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் எப்படி தீவிரவாதிகளால் மிரட்டப்பட்டார் என்பதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். இப்பொழுது முடியவில்லை என்பதனால், தந்தைக்குப் பதிலாக தனயன் வந்துள்ளான் போலும்!
ஸ்டாலின் கொடுத்த வாக்கு – திமுக ஆட்சிக்கு வந்தால்: மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் தாய் சபையாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளது. கழகத்துக்கு எவ்வளவு சோதனை வந்தாலும், உங்களுக்கு எவ்வளவு வேதனை வந்தாலும், உங்களோடு ஒருங்கிணைந்து தான் இருப்போம். ஆளும் கட்சியாக இருந்தபோது, உங்கள் கோரிக்கை நிறைவேற்றியவர் கருணாநிதி. 2-வது முறையாக அவர் பொறுபேற்ற போது, தமிழ் பேசும், உருது பேசும், முஸ்லிம் மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். 3-வது முறையாக முதல்–அமைச்சராக இருந்த போது, சிறுபான்மை நல வாரியம் அமைத்தது மட்டுமின்றி, அதற்கு சட்டபூர்வ அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தந்தார். நான்காவது முறையாக பொறுப்பேற்ற போது உருது அகாடமி அமைக்கப்பட்டது. சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது. சிறுபான்மை மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் ரூ.331 கோடியில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திட்டங்களை பட்டியலிட்டு, ஆதாரத்தோடு கூறமுடியும். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார். அவரை பொருத்தவரை சொன்னதை செய்வார். சொல்லாதையும் செய்வார். நீங்கள் நினைத்ததையும் நிறைவேற்றுவார். நினைக்காததையும் நிறைவேற்றுவார். யாரும் கவலைப்பட தேவையில்லை. மே மாதம் நடக்கும் தேர்தலுக்கு பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும், நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்,” இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்[10]. ஆக கதை சொல்வதில் தானும் சளைத்தவனல்ல என்பதனை தனயனும் மெய்ப்பித்து விட்டான்.
© வேதபிரகாஷ்
23-03-2016
[1] தமிழ்.ஒன்.இந்தியா, தொகுதி பங்கீடு குறித்து பேச இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் குழு அமைப்பு: காதர் மொகிதீன் அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Monday, March 21, 2016, 21:05 [IST].
[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-seat-indian-union-muslim-league-party-group-organization-116032100069_1.html
[3] வெப்துனியா, திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: குழு அமைப்பு, திங்கள், 21 மார்ச் 2016 (23:37 IST)
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/indian-union-muslim-league-has-formed-speak-on-seat-sharing-249485.html
[5] தி.இந்து, திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்: காதர் மைதீன் கோரிக்கை, Published: February 9, 2016 15:39 ISTUpdated: February 9, 2016 15:39 IST
[6] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-12-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8213954.ece
[7] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்: மு.க. ஸ்டாலின், By: Karthikeyan, Updated: Friday, March 11, 2016, 1:23 [IST]
[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-speech-on-indian-union-muslim-league-meeting-at-villu-248720.html
[9] மாலைமலர், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மார்ச் 11, 8:18 AM IST
[10] http://www.maalaimalar.com/2016/03/11081808/MK-Stalin-speech-DMK-regime-Is.html
அண்மைய பின்னூட்டங்கள்