2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)
முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.
காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
கருணாநிதியும் முஸ்லிம் கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உங்களோடு நீண்ட நாட்களாக கூட்டணியிலே உள்ள கட்சி. இப்போது மனிதநேய மக்கள் கட்சி உங்கள் கூட்டணியிலே சேருகிறது. அதனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு உள்ள இடம் குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.
அதிமுகவிலிருந்து திமுக கூட்டணியில் தாவியுள்ள மனிதநேய மக்கள் கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை ஜவாஹிருல்லா சந்தித்து பேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].
திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.
விஜயகாந்தை மிரட்டிய எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
23-03-2016
[1] தினத்தந்தி, ‘தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம்: இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை’ கருணாநிதி பேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.
[2] http://www.dailythanthi.com/News/India/2016/03/22012602/Didnt-lose-hope-of-DMDK-joining-DMK-alliance-Karunanidhi.vpf
[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணியில் மமக தேர்தலை எதிர்கொள்ளும்: ஜவாஹிருல்லா, Published: March 19, 2016 14:39 ISTUpdated: March 19, 2016 14:39 IST
[4] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக கூட்டணியில் இணைந்தது ம.ம.க: மு.க. ஸ்டாலினுடான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா அறிவிப்பு, By: Mathi, Updated: Saturday, March 19, 2016, 17:46 [IST].
[5] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-join-dmk-alliance-jawahirullah-meets-mk-stalin-249330.html
[7] தினமணி, பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: எஸ்டிபிஜ கட்சி வலியுறுத்தல், By திண்டுக்கல், First Published : 22 February 2016 08:58 AM IST
[8]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/02/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A/article3290737.ece
அண்மைய பின்னூட்டங்கள்