Posted tagged ‘காஃபிர்’

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பு, அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்குஅழைப்பு விடுத்தது (1)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (1)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி மற்றும் மதரஸாவுக்கு விஜயம் செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.

சுமுகமான பரஸ்பர பேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய  வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.

மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1]  Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.

[2] தமிழ்.இந்து, ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2022 03:26 AM; Last Updated : 23 Sep 2022 03:26 AM.

[3] https://www.hindutamil.in/news/india/871799-background-of-mohan-bhagwat-meeting-with-the-muslim-leader.html

[4] விகடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா‘ ” – தலைமை இமாம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM

[5] https://www.vikatan.com/government-and-politics/politics/mohan-bhagwat-is-rashtra-pita-says-top-muslim-cleric-after-rss-chief-visits-mosque

[6] தினகரன், மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், 2022-09-23@ 00:19:20

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801407

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி, By Vigneshkumar, Updated: Thu, Sep 22, 2022, 21:20 [IST].

[9] https://tamil.oneindia.com/amphtml/news/delhi/top-muslim-cleric-says-rss-chief-mohan-bhagwat-is-rashtra-pita-477061.html

[10] g7tamil, மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், By G7tamil, September 23, 2022.

[11]https://g7tamil.in/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

மார்ச் 15, 2013

இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளானாம்!

இஸ்லாமிய அடிப்படைவாதி கைது: இஸ்லாமிய வெறியர்களின் குரூரக்கொலைகளைக் கண்டும் இனி காணாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதும், இந்துக்களின் மீது குரூர-கொடுமை-வன்முறைகளைத் தூண்டிவிட்டதாக, பங்களாதேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. வியாழக்கிழமை 14-03-2013 அன்று ஜமாத்-இ-இஸ்லாமி [Jamaat-e-Islami (JI)] என்ற அந்த அடிப்படைவாத இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவனான, சிட்டகாங்கில் இந்துக்கள் மற்றும் கோவில்களைத் தாக்கியதற்குத் தூண்டுதலாக இருந்த ஆலம்கீர் கபீர் சௌத்ரி என்பவன் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

தொடரும் குற்றங்கள்: ஜமாத்தின் இளைஞர் இயக்கமான இஸ்லாமி சத்ரா ஷிபிர் முன்னரே குறிப்பிட்டபடி பல இடங்களில் இந்துக்களைத் தாக்கி, அவர்களது, உடமைகள், வீடுகள், கோவில்கள் என்று அனைத்தையும் சூரையாடினர்[1]. போலீஸ் மற்றும் குற்றத்தடுப்பு விரைவு நடவடிக்கை படையினர் சேர்ந்து அவனை கைது செய்தனராம்[2]ளதாவது அந்த அளவிற்கு முஸ்லீம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்று தெரிகிறது. பங்சாலி என்ற இடத்தில் நடந்த தாக்குதல்களில் 70ற்கும் மேற்பட்ட கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் இந்துக்கள் ஆவர்[3]. 1971 குற்றங்களுக்கு ஒரு வெறியன் தண்டிக்கப்படுகிறான் என்றால், அதை வைத்துக் கொண்டு, அதே மாதிரியான குற்றங்களை முஸ்லீம்கள் செய்துள்ளனர்[4]. இந்துக்களால் அழத்தான் முடியும் போலிருக்கிறது[5]. விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[6].

இன்னும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: காஜல் தேவ்நாத், பங்களா பூஜா உட்ஜாபன் பரிஷத்தின் தலைவர், “அப்பகுதியில் இருக்கும் இந்துக்கள் இன்னும் பீதியில் தான் வாழ்ந்து வருகின்றனர். உள்ளூர் எம்.பி மற்றும் இதர முஸ்லீம்கள் அத்தகைய குரூரத் தாக்குதல்கள் நடத்த ஆதரவாக இருந்தனர். அவாமி லீக் மற்றும் முக்கிய எதிர் கட்சியான பி.என்.பி Bangladesh Nationalist Party (BNP) கட்சியினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கின்றனர்”, என்று கூறியுள்ளார்[7].

இந்துக்களைப் பற்றிப் பேச யாரும் இல்லை: இந்தியாவில் ராஜ்யசபாவில் பி.ஜே.பி மட்டும் தான் இந்துக்களைக் காக்கும் படி, கோரிக்கையை வைத்தது, தாக்குதல்கள் பற்றியும் பேசியுள்ளது[8]. கோவில்கள் தாக்கப்படுவது, இன்னும் தொடர்ந்து வரவதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன[9]. இவ்வளவு நடந்தும், நடந்து கொண்டிருந்தாலும், போர்க்குற்றங்கள் நடந்ததற்கான சாட்சிகள் நம்பகமாக இல்லை என்று குற்றவாளிகள் சார்பில் வாதம் புரிகின்றனர்[10].

வேதபிரகாஷ்

15-03-2013


[1] Chowdhury’s arrest came two weeks after suspected activists of Jamaat and its student affiliate Islami Chatra Shibir went on rampage at their southeastern stronghold attacking and vandalizing several houses and temples of Hindu community alongside the local government establishments.

http://timesofindia.indiatimes.com/world/south-asia/Jamaat-leader-held-for-inciting-anti-Hindus-attacks-in-Bangladesh/articleshow/18975225.cms

[2] “Police and (elite anti-crime Rapid Action Battalion) RAB teams jointly arrested Banshkhali upazila chairman Alamgir Kabir Chowdhury on charges of inciting violence against Hindu community and attack on their temples and property,” a police official in the port city of Chittagong told PTI by phone.

[3] Banskhali was one of the areas where the followers of the Hindu faith came under attacks during the recent violence which saw deaths of over 70 people, including six policemen, while several dozen Hindu temples were vandalized.

[7] “A sense of fear is still there among the Hindu community although no fresh violence was reported in the past two days … we are disappointed that the lawmakers of the (ruling) Awami League and main opposition BNP and peoples representatives at local levels are not taking initiatives for social and political resistance,” Bangladesh Puja Udjapon Parishad vice-president Kazal Debnath told PTI.

இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: ஆனால் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி!

செப்ரெம்பர் 28, 2011

இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: ஆனால்  மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி!

 

திருமாவளவனின் கஞ்சி குடிப்பும், தேர்தல் கூட்டும்: சென்னை புறப்பகுதிகள், மற்ற மாவட்டங்களில், திருமாவின் தோற்றங்கள் டிஜிடல் பானர்களில் விசித்திரமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். சிவாஜி, அதாவது சத்ரபதி சிவாஜி போலக்கூட, சித்திரக்க்கப்பட்டிருப்பார்! முஸ்லீம்கள் கூட்டம் என்றால் கேட்கவே வேண்டாம், குல்லாவோடு காட்சியளிப்பார். போஸ்டர்கள், பேனர்களும் அப்படியே! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் விடுதலைச் சிறுத்தைகளும் கலந்து பேசி நல்லிணக்கத்தோடு, நடைபெறவுள்ளவிழா, உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்[1].
இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய தொல்.திருமாவளவன், “இந்தக் கூட்டணியில் மொத்தம் உள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாம் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.  நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள். அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணி சேர அழைப்பு விடுத்தோம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அழைப்புக்கு யாரும் உடன்படவில்லை. பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி சேர அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் யாரும், மாற்று அணிக்கு தலைமை பொறுப்பேற்க முன் வரவில்லை. விருப்பமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், சிறுபான்மை சமூகமும், தலித் அமைப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம். இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் திராவிட கட்சிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது சவாரி செய்து வந்திருக்கிறது. ஆகவே சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்தால்தான் மாற்றம் ஏற்படும்.  ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஜனநாயகம் உரிமையை காக்க வேண்டும். மக்கள் தொகையில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்ப்பட்டோருக்கும் அதிகார பகிர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்”, என்றார்.

 

உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி: உள்ளாட்சித் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது.”உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி நீடிக்க பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், உறுதியான முடிவை கூறாமல் காலதாமத தந்திரத்தை அ.தி.மு.க., கடைபிடித்தது. இதை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது’ என, தெரிவித்துள்ளார்[2].

 

முஸ்லீம்களின் யுக்தியா? இப்படி நிற்பது, முஸ்லீம்களின் யுக்தியா என்று ஆராய வேண்டியுள்ளது. தனித்து நிற்போம், சேர்ந்து நிற்போம் என்று நின்று, ஓட்டுகளைப் பிரிப்பதால், ஓட்டு வங்கிகளக செயல்படும் முஸ்லிம்கள் வெற்றிப்பெற, திருமா உதவுகிறாரா என்றும் எண்ணத்தோன்றுகிறது. 3/9 அதாவது 33.33% கொடுத்து விட்டேன் என்றும் நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம். எப்படியாகிலும் “காபிர்-மோமின்” உறவு தொடர்கிறதா இல்லையா என்று, நம்பிக்கையாளர்கள் பார்த்த்க் கொள்ளலாம்.


[2] தினமலர், உள்ளாட்சிதேர்தலில்மனிதநேயமக்கள்கட்சிதனித்துபோட்டி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322162

ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

நவம்பர் 8, 2010

ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!

“ஜிஹாதைப் பற்றி தங்களது கருத்து என்ன?” என்று அந்த மாணவி கேட்டதும் ஆடியே போய் விட்டார் ஒபாமா!

ஜிஹாத்தைப் பற்றிய ஒபாமா விளக்கம்[1]: “ஜிஹாத் என்ற வார்த்தை இஸ்லாத்தில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு பதரப்பட்ட விள்ளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் எல்லோரும் அந்த பெரிய மதமானது சில தீவிரவாதிகளின் கைகளில் சிக்குண்டு வன்முறையை அப்பாவி மக்களுக்கு எதிராக நியாயப்படுத்தி வருகின்றது என்பதை அறிகிறோம், ஆனால், அதை அப்படி நியாயப்படுத்த முடியாது. புனிதப் போர் என்ற திரிபு விளக்கங்களை அளிப்பவரை நாம் தனிமைப் படுத்த வேண்டிய சவாலைத்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன்”[2].

“உங்களது மதம் என்னவாகயிருந்தாலும், உலகத்திற்கேற்ப பொது சித்தாந்தம் மூலம் ஒருவரையொருவர் மதித்து நடக்கலாம். உங்களைப் போன்ற இளைஞர்கள் மற்றவர்களை கீழே தள்ளாமல், உங்களது மதநம்பிக்கைக்களை தாராளமாகவே பின்பற்றலாம். நான் சொல்வதைவிட நீங்கள் எப்படி ஒருவரையுஒருவர் பரஸ்பரமாக நடந்து கொள்வர் என்பதுதான் முக்கியம். இன்றைய உலகில் மக்கள் பலதரப்பட்ட பிண்ணனியில், பல இனங்கள், மனிதகுழுமங்கள் ஒன்றக சேர்ந்து பேசி, உரையாடி வேலை செய்ய வேண்டியுள்ளதால், உலகம் சுருங்கியுள்ளது”[3]

ஒபாமாவின் “ஜிஹாத்” விளக்கத்தை விமர்சனிக்கும் அமெரிக்கர்[4]: ஒபாமாவின் இந்த விளக்கம் “நிர்வாக” ரீஇதியிலானது என்றும், ஏனெனில் ஷாஃபி இறையியல் விளக்கத்தின்படி, ஜிஹாத் என்றால் காஃபிர்களுக்கு எதிரான மதரீதியிலான தொடுக்கப் படும் போர்தான். அந்த விஷயத்தில் ஷாஃபி இறையியலிலேயோ அதனை சட்டப்புத்தகமாகக் கொண்டுள்ள சுன்னி ஆசாரப் பிரிவினருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.  ஜிஹாதை தீவிரவாதத்துடன் பிரித்துப் பார்த்து விளக்கம் கொடுப்பதை உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அமெரிக்கர்கள் ஒப்புக்க் கொள்வதில்லை. இருப்பினும், பொருளாதார ரீதியில் அமெரிக்க நெரிக்கடியில் உள்ளதால், இத்தகைய மென்மையான போக்கைக் கடைபிடித்து இரண்டு நாடுகளையும் தாஜா பிடித்து காரியங்களை சாதித்துக் கொள்ளவே ஒபாமா விரும்புகிறார் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] The New York Times, Obama Pointedly Questioned by Students in India, http://www.nytimes.com/2010/11/08/world/asia/08prexy.html?src=me

[4] His critics have been charging the president with using national security issues for scoring political points. It may be recalled that one of the President’s counter terrorism advisers, John Brennan , had went to the extent of describing jihad as a “legitimate tenet of Islam”. While speaking in a seminar at the Center for Strategic and International Studies , Brennan had described those who practice jihad as “victims of political, economic and social forces”.  But the Obama administration’s critics say that such “outreach” is “dangerous”. According to them there has been no ambigity in the interpretation of the term by the Shafi’i school —which prepares the manual of law for the Sunni orthodoxy or the Hanafi school as both emphasise that jihad is a religious war against non-believers. The energised Tea Party activists have been attacking the president for holding national security issues a hostage to his “political correctness”.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Obama-replies-in-line-with-administrations-view-on-jihad/articleshow/6886028.cms

குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்!

ஓகஸ்ட் 31, 2010

குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்!

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் முதல்வர் கலைஞர் துணை முதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருமிதம்[1]: சென்ற வருடம் அன்பழகன் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து உளறிவிட்டு போனார். இந்த தடவை, கருணாநிதி தனது மகனை அனுப்பிவைத்துவிட்டார்போலும். சென்னை, ஆக.31 துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.8.2010) தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில்[2] நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :

குல்லா-போட்ட-ஸ்டாலின்-மாறன்-2010

குல்லா-போட்ட-ஸ்டாலின்-மாறன்-2010

31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஸ்டாலின்: “இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் அவர்கள் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவறுவதில்லை என்று கூறினார்[3]. எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்[4].

H. D. Kumaraswamy 2007

H. D. Kumaraswamy 2007

நான் சிறப்பு விருந்தினர் அல்ல, உங்களில் ஒருவன் நான்: என்னுடைய கனிவான கோரிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகின்றீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களில் ஒருவன் நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்று வருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களில் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். இங்கு பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களும், தம்பி தயாநிதிமாறன் அவர்களும் ஒன்றை குறிப்பிட்டனர். தலைவர் கலைஞர் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்றும், உங்களுக்காக நடக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்கள். எதிர் கட்சித் தலைவர் நம்முடைய ஆட்சியைப் பற்றி கூறும் போது மைனாரிட்டி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் இது மைனாரிட்டி ஆட்சி தான். இஸ்லாமிய பெருமக்கள் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சி என்று தொடர்ந்து பதில் கூறுவார்.

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah - Rahul-Mullah-Topi

முஸ்லீம்களுக்காக செய்யப்பட்ட சாதனைப்பட்டியல்: கலைஞர் அவர்கள் எத்தனையோ சிறப்பான திட்டங்களை சிறுபான்மை மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி வருகிறார். தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த சாதனை குறிப்புகளை பார்க்கும் போது, அது ஒரு பெரும்பட்டியலாக உள்ளது.

1969ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001 இல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் அவர்களின் கழக ஆட்சியில் தான். 1973 ஆம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான்.

1974ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லுரிக்கு கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர்தான்.

1989ஆம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது.

1998 இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பது 2200 ஆக உயர்த்தப் பட்டு, 2008 இல் 2400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ஆம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கை விட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர்தான்.

1999ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று உருவாக் கியவர் கலைஞர். ஆனால், செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003இல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006இல் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த கலைஞர் மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தி.மு.க. அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.

2000 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப் பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007இல் அண்ணா அவர்களின் 99ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர் அவர்களே.

2008 இல் சீறாப் புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர்தான். உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேலவையிலும், டில்லி மேலவையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம் பெறச் செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணைபுரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்[5]. சிறப்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த திருப்பூர் அல்தாப் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்”,  இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

mulayam singh yadavs iftar diplomacy muslims

mulayam singh yadavs iftar diplomacy muslims

ஜெயலலிதாவின் இஃப்தார் பார்ட்டி[6]: அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது: “மதத்தின் மீது மாறாப் பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து தூண்களாகும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளை நோன்பு! பெரியவர் முதல் சிறியவர் வரை உணவு உண்ணாமல், நீர்கூட பருகாமல் நோன்பினை மேற்கொண்டு உள்ளத் தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இல்லாதார்க்கு தர்மம் செய்யும் பேரு இந்த ரமலான் மாதத்தில்தான் கிடைக்கிறது. இந்நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாவதுடன், அறிவியல் அடிப்படையிலும் மிகச் சிறந்த பயனளிக்கிறது. பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை காலம் என்றும் ஏற்றிப் புகழும் என்பதற்கு ஒரு சிறு கதையை சொல்கிறேன்.

Jaya Participates Iftar Party

Jaya Participates Iftar Party

ஜெயலலிதா கூறிய கதை: ஒரு முறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இறைவா! உனது படைப்பில் ஏன் இந்தப் பாகுபாடு?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும் நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்துவிடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்.” இந்தக் கதை சொல்லுகின்ற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும்; ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதித்து வைத்துக் கொள்ளும், புகழ்ந்து மகிழும் என்பதுதான். இதனை வலியுறுத்துவது போலவே இஸ்லாம் மதத்தின் இணையில்லா தத்துவங்களில் ஒன்றாகவே பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம் இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகைய உயரிய நோன்பினை நோற்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் நடத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்றார் ஜெயலலிதா.

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

கருணாநிதி கலந்து கொண்டால், இந்துமதத்தைப் பற்றி அவதூறு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்: கருணாநிதி குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டு, பல தடவை இந்து மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஆனால், வேடிக்கையென்னவென்றால், இணைத்தளங்களில் கூட, ஒரு புகைப்படம்கூட இல்லாமல், நீக்கியிருப்பது, பெரிய அதிசயம்தான். சென்ற வருடம், கருணாநிதிக்கு, உடல் நலம் சரியில்லை என்று, சென்னை, செப். 17, 2009 அன்று அன்பழகன் கலந்துகொண்டார்:   “”கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது” என்று  க. அன்பழகன் தெரிவித்தார்.  “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசினார்[7].

ராவ்-குல்லா-ஆந்திரா

ராவ்-குல்லா-ஆந்திரா

காஃபிர் பணத்தில் இஃப்தார் பார்ட்டி நடத்தலாமா, சாப்பிடலாமா? இஃப்தார் பார்ட்டி என்றாலே, செக்யுலார் அரசு தன் செலவில், இப்படி விருந்துகளைக் கொடுத்து லட்சக் கணக்கில் பணத்தை செலவவட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி, காஃபிர்கள் கொடுக்கும் பணத்தில், இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி, கஞ்சி குடிக்கலாமா? நன்றாக சாப்பிடலாமா? அதுமட்டுமல்லாது, எல்லா அரசியல்வாத்களும், ஏதோ மாறுவேடப் போட்டி நடத்துவது போல, வகை-வகையான குல்லாக்கள் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிக்க வந்து விடுகிறார்கள்!


[1] http://www.viduthalai.periyar.org.in/20100831/news16.html

[2] http://thatstamil.oneindia.in/news/2010/08/31/dmk-protector-minorities-rights-stalin.html

[3] இப்போழுதெல்லாம் ஏன் கலந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை. முஸ்லீம்களே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா, அல்லது கருணாநிதியே செல்வதை நிறுத்தி விட்டாரா அல்லது அவ்வாறு யாராவது அறிவுரை சொன்னார்களா?.

[4] அதாவது 31 வருடங்களாக, குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறாராம், அதனால் முஸ்லீம்களில் ஒருவராகி விடுவாரா?

[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73811

[6] http://www.hindu.com/2010/08/19/stories/2010081954920400.htm

[7] வேதபிரகாஷ், ரம்ஜான் கஞ்சியும், இந்துவிரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/