Posted tagged ‘கல்வீச்சு’

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (2)

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supetr jihadi

புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supari jihadi

கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார்.  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2].

Kashmir separatist leaders aiding and abeting terror

அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.  “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியாபாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.”

Two ISI agents arrested in April 2017

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ?

Sharad Yadav in front of Hurriat - Sep.2016

ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும்.

Yachuri, H Raja - in front of Hurriat - Sep.2016

பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான்.  விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10].

 © வேதபிரகாஷ்

08-05-2017

Yachuri waving hand as if .... - in front of Hurriat - Sep.2016

[1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece

[3] TIMES NOW,  TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST.

[4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”,  lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses.

http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605

[5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST

[6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/

[7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf

[9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh,   Lucknow, Updated: May 03, 2017 22:52 IST

[10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்

போலீசார் காயம்

போலீஸே போலீஸ் மீது நடவடிக்கைஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?  மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:

  • கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
  • நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
  • மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
  • ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
  • பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
  • 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
  • ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
  • 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
  • ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
  • சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
  • பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
  • தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html

[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லைஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.

[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html

[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector

[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (1)

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

ஜூலை.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டது: ஜூன்.19 அன்று மார்டின் பிரேம்ராஜ் [C. Martin Premraj] கைது செய்யப்படவேண்டும் என்று ஆம்பூர் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தனர், புகாரும் கொடுத்தனர். அவர் கைது செய்யப்பட்டதில் தாமதம் ஏற்பட்டதால் தான் கலவரம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின[1]. ஷமீல் அகமது மரணம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் காணாமல் இருந்து, பிறகு கைது செய்யப்பட்டவுடன், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல் அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஜூன் 15 முதல் 18 வரை போலீஸ் கஸ்டடியில் ஷமீல் அகமத் இருந்தார்[2]. பிறகு அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர்

ஷமீல்அகமது இறப்பு, தௌவீத் ஜமாத் ஆர்பாட்டம், மார்ட்டின் பிரேம்ராஜ் மருத்துவவிடுப்பு: ஜூன்.19 அன்று ஆம்பூரில் உள்ள பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். ஜூன்.23ம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஜூன்.26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி மருத்துவ மனையில் இறந்தார்[3].  தௌவீத் ஜமாத் [Thoweed Jamath] ஆட்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு கடந்த ஜூன் 27ம் தேதி ஆர்பாட்டம் செய்தனர் இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது[4]. அன்றிலிருந்தே, மார்டின் உடல்நலம் சரியில்லை என்று மருத்துவ-விடுப்பில் சென்று விட்டார்[5]. இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிறகு வழக்கில் இவரது பெயர் சேர்க்கப்பட்டு[6] சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது[7]. ஒருபுறம் போலீஸார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். பெண் போலீஸார் தாங்கள் எப்படி துரத்தப் பட்டனர், மானபங்கத்திற்கு உள்ளாகினர் என்றெல்லாம் கதறியபடி தங்களது அனுபவங்களை சொல்லி வந்தனர். ஆனால், மறுபுறம் இந்நடவடிக்கையும் தொடர்ந்தது.

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

இறந்த ஷமீல் அகமது, ஆம்பூர்

ஜூன்.19 முதல் 26 வரை சிகிச்சை அளித்தது: ஷமீல் அகமது எட்டு நாட்களில், மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார்.

சிகிச்சை தேதிகள் மருத்துவமனை, இடம் சிகிச்சை பெற்ற நாட்கள்
ஜூன்.19 முதல் 23. 2015 வரை ஆம்பூரில் உள்ள பொது மருத்துவமனை ஐந்து நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.23  முதல் 25. 2015 வரை அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மருத்துவமனை இரண்டு / மூன்று நாள் நாள் சிகிச்சை பெற்றுள்ளார்.
ஜூன்.26. 2015 சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அன்று மாலை உயிரிழந்தார்.

அதனால், அங்கு இவருக்கு என்ன சிக்கிச்சை அளிக்கப்பட்டது, எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான, ஆவணங்கள் இருக்கும். எதனால், இறப்பு ஏற்பட்டது என்பதையும் மருத்துவரீதியில் இவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். போலீஸ் விச்சரணையின் போது மாமனார் என்.கே. முகமது கௌஸ் [N. K. Mohammed Ghouse, father-in-law of Shamim Ahmad] தான் ஷமீம் அகமதுவைப் பார்க்க தினமும் அங்கு சென்றுள்ளதாகவும், மார்டின் ஒரு விருந்தினர் மாளிகைக்கு, ஷமீம் அகமதுவை எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.  ஆனால் ஒரு பேட்டியில், ஜவஹருல்லா, மார்டின் தன்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினார் என்கிறார்[8].

ஆம்பூர் கலவரம் - மார்டின் இன்ஸ்பெக்டர் கைது - மாலைமலர்

ஆம்பூர் கலவரம் – மார்டின் இன்ஸ்பெக்டர் கைது – மாலைமலர்

ஜூலை 31ம் தேதி மான் வேட்டையாடியதாக மார்டின் பிரேம்ராஜ் கைது: ஷமீல் அகமது இறந்த விசயம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது [the summons issued by the CB CID in the case under section 176 (inquiry by a magistrate into the cause of death)[9]]. ஆனால் அவர் ஆஜராகவில்லை, நண்பர்களுடன் தலைமறைவாக இருந்தார்[10]. மருத்துவவிடுப்பில் சென்றார் என்று முன்னரே குறிப்பிடப்பட்டது. போலீஸார் அவரைத் தேடி வந்தனர்[11]. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  அழகிய பாண்டியபுரம் வனச்சரக காடுகளில் மிளா / மான் வேட்டையாடியதாக [under Section 4 of the Wildlife Act ] மார்ட்டின் பிரேம்ராஜ் (50), பணி நீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டெபில் சி. கிறிஸ்டோபர்(51), டி. ஐயப்பன் (46), என். கோபாலகிருஷ்ணன் (22), முதலியோர்[12] வனத்துறையினர் உரிய வனச்சட்டதின் கீழ் ஜூலை 31ம் தேதி கைது செய்யப்பட்டனர்[13]. 40 கி இறைச்சி, மான் தோல், கொம்புகள் முதலியவற்றுடன் இரண்டு வண்டிகள், துப்பாக்கி முதலியன கைப்பற்றப்பட்டன[14]. பிறகு நாகர்கோவில் / பாளையகோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்[15]. அதில் மார்டின் பிரேம்ராஜ் தேடப்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் ஆவர்[16]. இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்[17]. அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[18]. இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[19].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Delay-in-Booking-Inspector-led-to-Ambur-Clash/2015/07/08/article2908517.ece

[2] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1311782

[4]  தினமலர், ஆம்பூர் கலவர வழக்கு விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் 3 நாள் விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[6] http://www.deccanchronicle.com/150708/nation-crime/article/suspended-inspector-named-ambur-custody-death-absconding

[7] தினகரன், ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை, ஆகஸ்ட்.8, 2015.

[8]  ராஜ்-டிவி, கோப்பியம் நிகழ்ச்சி, https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-takes-custody-of-pallikonda-inspector/article7505510.ece

[10]  தி இந்து, ஆம்பூர் கலவரத்தில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: வேலூர் நீதிமன்றம் உத்தரவு, Published: August 6, 2015 08:02 ISTUpdated: August 6, 2015 08:04 IST.

[11] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-Launches-Manhunt-for-Inspector-in-Ambur-Case/2015/07/14/article2919051.ece

[12]  The Hindu, Inspector suspended over Ambur clash held for hunting deer, Updated: August 1, 2015 05:53 IST.

[13] http://www.newindianexpress.com/states/tamil_nadu/CB-CID-to-Grill-Premraj-for-3-days/2015/08/06/article2960000.ece

[14] http://www.thehindu.com/news/national/tamil-nadu/inspector-suspended-over-ambur-clash-held-for-hunting-deer/article7487594.ece

[15] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/08/05184106/Ambur-murder-case-of-a-young-man3-days-inspectorCipiciaiti.vpf

[16] During the questioning that followed it was found that they were C Christopher (51) of Kottricode, T Iyyappan (46) of Puthukadai, N Gopala Krishnan (22) of Puthukadai all from Kanyakumari district and C Martin Prem Raj (50) of Thirukoviloor in Villupuram district, said forest officials. All the four were booked under section 9 of Wild Life Protection Act on charges of trespassing into a reserve forest and poaching a sambar deer. They were arrested and were produced at the forest court, officials added. Of the arrested four Martin Prem Raj was an inspector of police who was on the look out list of Vellore police in connection with the Ambur riots in Vellore district recently.

http://m.newindianexpress.com/tamil-nadu/511278

[17] தினத்தந்தி, ஆம்பூர் வாலிபர் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டரை 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி..டி. போலீசார் விசாரணை வேலூர் கோர்ட்டு அனுமதி, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 06,2015, 2:30 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 05,2015, 6:41 PM IST.

[18]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7506466.ece

[19] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=160119

காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

ஜூலை 31, 2010

காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

பெண்களும் கல்லடிக்கிறார்கள்: காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல்லடி கலாட்டாவில் பெண்களும் இறங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ருக்ஸானாக்களா, மெஹ்பூபா முஃப்திகளா என்று இனிமேல்தான் தெரியவரும். முன்பு, கல்லடி கலாட்ட வீரர்களுக்கு ஒருநாலைக்கு ரூ.300/- முதல் 600 வரை பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல, ஒருவேளை பெண்களுக்கும் அளிக்கப் படுவதால், வீட்டிற்குல் சும்மா கிடப்பதைவிட, இவ்வாறு கல்வீசி காசு சேர்க்கலாம் என்து இறங்கி விட்டார்களா என்று அவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

போலீஸாரை, பாதுகாப்பு வீரர்களின் மீது கல்லடிப்பது ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா: ஏற்கெனெவே பிரச்சினையாகி, இப்பொழுதுதான் அமைதி திரும்பியிருக்கிறது, என்ற நிலையில், உடனே வெள்ளிக்கிழமையிலிருந்து 30-07-2010, இப்படி புதிய தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கல்லடிப்பதிலிருந்து, அவர்கள் வேடிக்கைக்காக அடிக்கவில்லை, ஏதோ தீர்மானமாக, ஒரு குறிக்கோளுடன் அடிப்பதாக, முகபாவம் நன்றாகவே காட்டுகிறது. முன்பு மனித குண்டுகளாகவே செயல்பட்ட ஜிஹாதி-பெண்கள், இப்படி, கல்லடி ஜிஹாதிகளாக மாறுங்கள் என்ற், யாராவது, ஆணையிட்டிருக்கிறார்களா என்பதும், இனிமேல்தான் தெரியவரும்.

Woman-also-stonepelt

Woman-also-stonepelt

பெண்களை முன்னிருத்தி போராட்டம் செய்வது, பின்னிருந்து ஆண்கள் ரகளையில் ஈடுபட்டு, கலவரத்தை உண்டாக்குவது, பிறகு கட்டு மீறும்போது, துப்பாக்கி சூடு என்றாகும்போது, ஏதாவது சாவு என்றாகும் போது, மனித உரிமைகள் மீறல்……………..என்றெல்லாம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, மறுபடியும் கலாட்டா செய்வது………………இனி இதை “கல்லடி ஜிஹாத்” என்று கூட சொல்லலாம்!

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

ஜூலை 12, 2010

காஷ்மீரில் அமைதி குலைத்து ஜிஹாதி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=36728

என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்? மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர்.  கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.

பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல்  இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.

பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.

தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.

குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும்,  அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்’ என, தெரிவித்துள்ளது.

இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,”இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்’ என்றார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,”முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்’என்றார்.

மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது.  அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம். குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்

காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).

சுற்றுலாவை  சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில்,  அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

– நமது சிறப்பு நிருபர் -நன்றி-தினமலர்.