Posted tagged ‘கல்லடி கலாட்டா’

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (2)

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supetr jihadi

புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supari jihadi

கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார்.  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2].

Kashmir separatist leaders aiding and abeting terror

அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.  “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியாபாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.”

Two ISI agents arrested in April 2017

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ?

Sharad Yadav in front of Hurriat - Sep.2016

ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும்.

Yachuri, H Raja - in front of Hurriat - Sep.2016

பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான்.  விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10].

 © வேதபிரகாஷ்

08-05-2017

Yachuri waving hand as if .... - in front of Hurriat - Sep.2016

[1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece

[3] TIMES NOW,  TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST.

[4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”,  lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses.

http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605

[5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST

[6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/

[7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf

[9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh,   Lucknow, Updated: May 03, 2017 22:52 IST

[10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

ஏப்ரல் 19, 2016

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

Kupwaraa, Handwara JK map

வீடியோ மூலம் வதந்தி, கலவரம் ஆரம்பித்து வைக்கும் போக்கு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 12-04-2016 செவ்வாய் கிழமை அன்று, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்[1]. ஹந்த்வாரா நகரில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு/ சிறுமிக்கு ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதற்குள் ஒரு இளம்பெண் கற்பழிக்க பட்டாள் என்பது போன்ற வதந்திகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் முதலியவற்றில் மொபைபோன்கள் மூலம் பரப்பி விடப்பட்டன. நம்பிய இளைஞர்கள் இதனை கண்டித்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டனர். “கல்லடி கலாட்டா” என்பது கலவரத்திற்கு ஆரம்பம் என்பது அறிந்ததே. சிறுவர்கள்-பெண்களை முன் வைத்து, பிரிவினைவாதிகள் பின்னிருந்து செய்யும் கலவரம் ஆகும். பிறகு கண்டித்து பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது[2].

Scene after massive stone-pelting in Handwara on Tuesday 1204-2016- Firdous Hassan-GK

வழக்கம் போல பிண ஊர்வலத்தை வைத்து கலவரத்தைப் பெரிதாக்கியது: ஆனால், இதற்கு பிரிவினைவாதிகளின் சதிதிட்டம் இருப்பது ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றே துப்பாக்கி சூட்டில் ராஜா பேகம் என்ற பெண் காயமடைந்தாள். 13-04-2016 புதன் கிழமை அன்று, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாலும், பலனின்று இறந்ததும், அவளது பிணம் லங்கேட் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டதும், கலவரம் ஆரம்பித்தது. இவ்வாறு யாதாவது ஒரு அப்பாவி இறப்பது, அப்பிண ஊர்வலத்தை சாக்காக வைத்துக் கொண்டு, மறுபடியும் இன்னொரு கலவரத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் மீறல் என்ற வாதங்களை வைப்பது, உடனே அவற்றை ஊடகங்கள் பெரிதாக்கி, செய்திகளை போடுவது, பரப்புவது என்பனவெல்லாம் வாடிக்கையாகி விட்டன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwaraபிரிவினைவாத கோஷங்கள் எழுப்புவது, போலீஸார்ராணுவ வீரர்களைத் தாக்குவது முதலியன: ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள டிரக்மல்லா பகுதியில் 13-04-2016 அன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுதந்திரத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன, என்று ஊடகங்கள் செய்திகளைப் போட்டாலும், பிரிவினைவாத-தேசவிரோத கோஷங்கள் என்று குறிப்பிடுவதை மறைக்கும் போக்கை கவனிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து மாநில போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலன் எதுவும் ஏற்படாததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இப்படி வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை, நல்லெண்ணம் படைத்த காஷ்மீர் அறிவிஜீவுகள் யாரும் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. கலவரம் ஏற்பட வேண்டும், அதில் யாராவது சாக வேண்டும், அதை வைத்து மேலும் கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்ற போக்கு சகஜமாகவே கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் ஒரு குண்டு ஜெகாங்கிர் அகமது என்ற வாலிபரின் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ராணுவத்தை கண்டித்த ஹந்த்வாரா, குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இதனால் பதற்றத்தை தணிக்க பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலையே நீடித்து வருகிறது[3].

Activists from the Muslim Khawateen Markaz -MKM-take part in a protest in Srinagar over the killing of youth in Handwara-AFP Photoமொபைல் இன்டர்நெட் சேவை ரத்து: இப்பொழுதெல்லாம், இப்பிரிவினைவாத-தேசவிரோத செயல்களுக்கு பலரை வேலைக்கு அமர்த்தி இன்டெர்நெட் மூலமும் பிரச்சாரம் நடந்து வருகிறது. அங்கங்கு எடுத்த புகைப்படங்கள், விடியோக்கள் முதலியவற்றை கலந்து, தூண்டிவிடும் பேச்சுகள் முதலியவற்றைச் சேர்ந்து பரப்பி விடுகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சேவை நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க சேவை நிறுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குப்வாரா, பாராமுல்லா, பாந்திபோரா, கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது[4]. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் மக்களும் இன்டர்நெட் சேவையை அணுக முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அங்கு நிலை சீரடைந்த பின்னர் சேவை வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Army attacked by the JK youth 12-04-2016கலவரம் பெரிதாகி, துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் இறத்தல்: அங்கு கலவரம் வெடிக்க, இன்று ஸ்ரீநகரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர்[5]. இது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர்[6]. அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது, கூடவே முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

Handwara, Kupwara, JK girl stated no molestation 12-04-2016.முதலமைச்சர், துணைமுதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது: துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் சந்தித்து பேசினர். ராணுவத்தினர் எந்த காரணத்திற்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதனைதான் ராணுவ அமைச்சரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்[7]. வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார்[8]. மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்[9]. ராணுவ வீரரின் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10].

Handwara, Kupwara, JK girl viedo turned riot 12-04-2016.பாத்ரூம் சென்ற பெண்ணை கலாட்டா செய்து பொய் செய்தியை பரப்பிய விதம்: அதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்தார்[11]. உண்மையில் அவள் தன் தோழியுடன் பொதுக்கழிப்பறை / பாத்ரூம் சென்று வரும் போது, சில இளைஞர்கள் அவளிடம் கலாட்டா செய்துள்ளனர். பள்ளி சீறுடை அணிந்த ஒருவன் அவளது பையினைப் பிடுங்கிக் கொண்டு, “ராணுவ வீரருடன் உனக்கென்ன பேச்சு, காஷ்மீரில் என்ன பையன்களா இல்லை”, [அதாவது எங்களை விடுத்து ஏன் மற்றவர்களிடம் போலீஸார்-ராணுவத்திடம் செல்கிறாய்] என்று நக்கலாக பேசி, கன்னத்தில் அறைந்துள்ளனர். ஹிலால் என்ற பையன் “நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்?…………………..” [தான் யாருடனோ உறவு கொண்டிருப்பதைப் போன்ற தொணியில்] பேசினான்[12]. அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். இந்நிலையில் பல மாணவர்கள் அங்கு கூடினர். அப்போது அருகில் போலீஸ் காவலர் ஒருவர் நின்றிருந்தார். அவரை சுட்டிக்காட்டி புத்தகப் பையை தராவிடில் அவருடன் நான் காவல் நிலையம் செல்வேன் என்றேன். உடனே அந்த மாணவர் எனது பையை தராமல் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து பிற மாணவர்களும் பிரச்சினை செய்யத் தொடங்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டதாக கருதுகிறேன்” என்றார்[13]. உண்மையில் அங்கு ராணுவத்தினர் யாரும் இல்லை என்று விளக்கினாள்[14]. ஆனால், ஒருவேளை, இதனை வேறு கோணத்தில் வீடியோ எடுத்து, அதற்கு வசனத்தையும் சேர்த்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

19-04-2016

[1] வெப்துனியா, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது, திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:51 IST)

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714

[3] http://www.dailythanthi.com/News/India/2016/04/14112558/Mobile-internet-services-suspended-in-Kashmir.vpf

[4] தினத்தந்தி, காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஏப்ரல் 14,2016, 11:25 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஏப்ரல் 14,2016, 11:25 AM IST

[5] http://www.4tamilmedia.com/newses/india/36206-2016-04-13-06-18-32

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jammu-kashmir-girl-denies-molestation-by-army-soldier-116041800005_1.html

[7] http://www.thehindu.com/todays-paper/more-troops-sent-to-kashmir-valley/article8484421.ece

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210593

[9] தினகரன், காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதட்டம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு, ஏப்ரல்.17, 2016.09.09.51.

[10] தமிழ்மீடியா, காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு, WEDNESDAY, 13 APRIL 2016 08:18.

[11] http://www.indiatvnews.com/news/india-no-molestation-girl-clarifies-after-2-protesters-killed-seeking-arrest-of-army-jawan-323730

[12] தமிழ்.தி.இந்து, உள்ளூர் இளைஞர்கள்தான் தொந்தரவு செய்தனர்: ராணுவ வீரர் பாலியல் தொல்லை தரவில்லைகாஷ்மீர் பள்ளி மாணவி விளக்கம், Published: April 14, 2016 10:07 ISTUpdated: April 14, 2016 10:08 IST.

[13]http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8475117.ece

[14] “I went to the (public) washroom and handed my bag to a friend. When I came back, a Kashmiri student heckled me and snatched my bag. The boy in school uniform slapped me and asked ‘if there were no boys in the valley’ (angrily insinuating that the girl was in a relationship with a soldier). I was shocked and confused about what he had said. Suddenly, several boys gathered. The boy asked me to go to the police station with him. There was a police uncle nearby. I told the boy to return my bag so that I could go to police station with the cop. He said he would not return my bag and started abusing me.” There was no soldier there (near or in the washroom). I saw Hilal (an acquaintance). He slapped me and asked me what I was doing there. I asked him how he too could accuse me of any such thing (allegation of an illicit relationship) knowing me and our family. He too started abusing. It seemed that they had conspired in advance. The boy instigated all other boys too to create trouble,” the girls says in the video.

http://timesofindia.indiatimes.com/india/JK-firing-Handwara-girl-says-no-soldier-molested-her-accuses-local-youth-of-harassment/articleshow/51808725.cms

இந்தியதேசியக் கொடி எரிக்கப்படும் இடத்தில், அக்கொடியை ஏற்றினால் எப்படி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்?

ஜனவரி 20, 2011

இந்தியதேசியக் கொடி எரிக்கப்படும் இடத்தில், அக்கொடியை ஏற்றினால் எப்படி அமைதிக்கு பாதிப்பு ஏற்படும்?

லால்சௌக் என்பது பிரிவினைவாத, இந்தியவிரோத, ஜிஹாதி கூட்டங்கள் பொதுவாகக் கூடும் இடமாக இருந்து வந்துள்ளது. அங்கு பலதடவை இந்தியதேசியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. இதை போலீஸார், பாதுக் காபுப் படையினர், ஏன் ராணுவம்ம் கூட கைக்கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்து வருவது வழக்கமான விஷயம் தான். ஏனெனில், ஆட்சியாளர்கள் குறிப்பாக மாநில முஸ்லீம் கட்சிகள் மற்றும் மத்திய காங்கிரஸ் கட்சியாளர்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று உத்தரவு இட்டுள்ளதால்தான்! ஆனால், அதே இடத்தில் தெசிய-மூவர்ணக் கொடியை ஏற்றினால் பிரச்சினை வருமாம்? அதென்ன பிரச்சினை? அமைதிகு பாதிப்பு வருமாம்? அதென்ன அப்படி பட்ட விஷயம்?

உண்மையான முஸ்லீம்கள் வெட்கப்படவேண்டாமா? கோடிகளில் பணம், மற்ற எல்லா விஷயங்களிலும் எல்லா வசதிகளையும் பெற்று, இந்திய விரோதமாகத்தான் இருப்போம் என்று இந்த முஸ்லீம் கூட்டத்தினர் இருந்தால், அரசு அவர்கள் முஸ்லீம்கள் என்று பாவித்துக் கொண்டு, ஏன் தேசியவிரோதத்தை பாலூட்டி வளர்த்துக் கொண்டு வரவேண்டும்? அது பாம்பிற்கு பாலூட்டும் செயல்போன்றதல்லாவா? தெரிந்து-தெரிந்து, அத்தகைய பேடித்தனத்தை ஏன் செய்யவேண்டும்? குறிப்பாக, முஸ்லீம்கள் ஏன் காஃபிர்கள் கொடுக்கும்பணத்தை வைத்துக் கொண்டு உயிர் வளர்ப்பது? உண்மையில் இஸ்லாம்தான் தமக்கு வேண்டாம் என்றால். அந்த இந்திய பணத்தைத் தொடக்கூடாடு ஆயிற்றே? பிறகென்ன, இந்திய பணத்தில் உட வளர்த்துவிட்டு, சொந்த தாயையே கற்பழிப்பத் போல, இந்தியாவின் மீதே அட்டூழியங்களை செய்து வருவது?

சிதம்பரத்தின் சதி வேலைகள்[1]: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் “அந்தர்-பல்டி” அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடியும் தோய்ந்து தேய்ந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[2]. அவர்களுக்கும் அத்தகைய பேதி / பீதி கிளம்பிவிட்டதா அல்லது முஸ்லீம்களில் ஏஜென்டுகளாக வேலைசெய்கின்றனரா? 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[3]. ஏன் அப்படி? அது இந்தியாவில் இல்லையா? ஏன் உமர் லால் சௌக்கிற்கு வந்து கொடி ஏற்றாக்கூடாது? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[4]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியாவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய நாட்டுப் பற்றை, தேசிய விசுவாசத்தை அவ்வாறு கொடியேற்றி பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[5]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[7]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] வேதபிரகாஷ், லால்சௌக்கில் இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!, http://secularsim.wordpress.com/2011/01/20/why-oppose-hoisting-tricolour-at-lalchouk/

[2] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[5] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[7] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

ஜூலை 31, 2010

காஷ்மீர் கல்லடி கலாட்டாவில் பெண்களும் ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா?

பெண்களும் கல்லடிக்கிறார்கள்: காஷ்மீர் தெருக்களில் நடக்கும் கல்லடி கலாட்டாவில் பெண்களும் இறங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் ருக்ஸானாக்களா, மெஹ்பூபா முஃப்திகளா என்று இனிமேல்தான் தெரியவரும். முன்பு, கல்லடி கலாட்ட வீரர்களுக்கு ஒருநாலைக்கு ரூ.300/- முதல் 600 வரை பணம் கொடுக்கப்பட்டது. அதேபோல, ஒருவேளை பெண்களுக்கும் அளிக்கப் படுவதால், வீட்டிற்குல் சும்மா கிடப்பதைவிட, இவ்வாறு கல்வீசி காசு சேர்க்கலாம் என்து இறங்கி விட்டார்களா என்று அவர்கள்தாம் தெரியப்படுத்தவேண்டும்.

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

போலீஸாரை, பாதுகாப்பு வீரர்களின் மீது கல்லடிப்பது ஈடுபடுவது, எதிர்ப்பா, வீரமா, தீவிரவாதமா: ஏற்கெனெவே பிரச்சினையாகி, இப்பொழுதுதான் அமைதி திரும்பியிருக்கிறது, என்ற நிலையில், உடனே வெள்ளிக்கிழமையிலிருந்து 30-07-2010, இப்படி புதிய தாக்குதல் ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கல்லடிப்பதிலிருந்து, அவர்கள் வேடிக்கைக்காக அடிக்கவில்லை, ஏதோ தீர்மானமாக, ஒரு குறிக்கோளுடன் அடிப்பதாக, முகபாவம் நன்றாகவே காட்டுகிறது. முன்பு மனித குண்டுகளாகவே செயல்பட்ட ஜிஹாதி-பெண்கள், இப்படி, கல்லடி ஜிஹாதிகளாக மாறுங்கள் என்ற், யாராவது, ஆணையிட்டிருக்கிறார்களா என்பதும், இனிமேல்தான் தெரியவரும்.

Woman-also-stonepelt

Woman-also-stonepelt

பெண்களை முன்னிருத்தி போராட்டம் செய்வது, பின்னிருந்து ஆண்கள் ரகளையில் ஈடுபட்டு, கலவரத்தை உண்டாக்குவது, பிறகு கட்டு மீறும்போது, துப்பாக்கி சூடு என்றாகும்போது, ஏதாவது சாவு என்றாகும் போது, மனித உரிமைகள் மீறல்……………..என்றெல்லாம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, மறுபடியும் கலாட்டா செய்வது………………இனி இதை “கல்லடி ஜிஹாத்” என்று கூட சொல்லலாம்!