Posted tagged ‘கரூர்’

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

நவம்பர் 23, 2015

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

Muslim youth become ISIS supporters, warriors

தமிழக ஜிஹாதிகள் துருக்கிக்குச் சென்றது எப்படி?: இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்[1]. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடுகளான இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது[2]: “சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் .எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், .எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, .எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது”, இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்[3]. முதலில் அவர்கள் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவர்களது குடும்பத்தாரை வரவழைத்தபோது, அழுது கொண்டே விசயங்களை வெளியிட்டனர். தாங்கள் வேலைதேடித்தான் சென்றோம் என்று கூறினர்.

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

தமிழ்நாடும், .எஸ் தொடர்புகளும்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஐ.எஸ் பற்றிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன[4]. ஆகஸ்ட்.2014ல், ராமநாதபுரம் மசூதி முன்பாக 26 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, சமூகவலைதளத்தில் பரப்பினர். விசாரித்து எச்சரித்து அவர்கள் அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 2014ல், சென்னையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் தற்கொலை குண்டுவெடிப்பில் கொலையுண்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 2014ல், வேலூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இஞ்சினியர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஐ.எஸ்.சில் சேர்ந்ததாக தெரிந்தது. தென்னிந்தியாவில் 150 ஐசிஸ் ஆதரவாளர்கள் உள்ளனராம்[5]. அப்படியென்றால், தமிழகத்தில் சுமார் 50 பேராவது இருக்க வேண்டும். “தி இந்து”, “இரு நண்பர்களின் கதை” என்று ஒரு கதையை “ஐ.எஸ் பைல்” என்ற படத்துடன் வெளியிட்டுள்ளது. இருவரும் ஜிஹாதித்துவத்தில் ஊறியவகளாக, தீவிரவாதிகளாக இருந்தாலும், ஏதோ “இரு நண்பர்களின் கதை” என்ற ரீதியில், தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் நியூ காலேஜில் படித்தவர்கள் தாம். அக்கதை சுருக்கம் பின்வருமாறு:

ISIL Chennai terror nexus - The Hindu graphics

இரு .எஸ் தீவிரவாதிகளின் கதை: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் [Gul Mohamed Maracachi Maraicar] இருவரும் பறங்கிப்பேட்டை அரசு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு ராயப்பேட்டை நியூ காலேஜில் சேர்ந்தனர். மரைக்காயர் ஐந்து வருடங்கள் சவுதி அரேபியாவில் இருந்து 2007ல் சிங்கப்பூருக்கு வந்தான். அதாவது 2002-07 வருடங்களில் அங்கிருந்திருக்கிறான். சிங்கப்பூரில் சாப்ட்வேர் வேலையில் இருந்தான். பிறகு, சில வருடங்கள் கழித்து இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 2008ல் அலி சிங்கப்பூர் குடிமகனானான்[6]. ஆனால், நவம்பர் 2013ல் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருவரும் முஸ்லிம்களின் நிலைப்பற்றி விவாதித்தனர். பிப்ரவரி 27, 2014 அன்று பக்ருத்தீனை தீவிரவாதத்திற்குட்படும் வகையில் முயன்றதாகவும், வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் மரைக்காயர், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்[7]. பக்ருத்தீன் அலியின் மனைவி, குழந்தைகளுடன் ஜனவரி.22, 2014 அன்று அபுதாபி வழியாக துருக்கிற்கு சென்றான். அலி இப்பொழுது சிரியா-துருக்கி எல்லையில் இருக்கிறான்[8]. அலி சிரியாவில் இருந்தாலும், அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளான். சென்னையில் டிசம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 காலத்தில் இருந்தபோது, சில நியூ காலேஜ் மற்றும் இதர மாணவர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துள்ளான். கடலூரில் ஒரு குரான் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறான். இவன் ஜிஹாதிகளை சேர்க்க ஒரு குழுவை நடத்தி வருகிறான். மாத சம்பளம் ரூ.20,000/- மற்றும் ஜிஹாதில் இறக்க நேர்ந்தால் ரூ.20 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்ற விவரங்களும் அறியப்பட்டன[9]. இப்பொழுது பக்ருத்தீன் ஐசிஸ்.சிக்காக போராடுகிறான், மரக்காயர் சிறையில் இருக்கிறான்[10].  நான் இப்படி எழுதி முடிக்கும் வேலையில், “தி ஹிந்து” தமிழிலும் அக்கதையை விவரமாக வெளியிட்டுள்ளது.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)[11]: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?! சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://www.maalaimalar.com/2015/11/21120740/intelligence-investigation-2-t.html

[2] தினமலர், .எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள், நவம்பர் 22, 2015.02:57.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1392623

[4] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[5] http://www.thehindu.com/news/national/150-is-supporters-in-south-india/article7904410.ece?ref=relatedNews

[6] https://www.youtube.com/watch?v=4lxEp4D8FTs

[7] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Singapore-Indians-involvement-in-Syrian-conflict-being-probed/articleshow/32542736.cms

[8] Singapore has deported an Indian-origin man for radicalising and helping a compatriot go to strife-torn Syria and have launched a probe into his journey “with the intention to undertake violence”. The Singapore Ministry of Home Affairs deported Gul Mohamed Maracachi Maraicar, 37, for radicalising Haja Fakkurudeen Usman Ali, 37, and helping him to go to Syria. Gul is a permanent resident of Singapore and had worked there as a system analyst. Ali, who worked as a supermarket manager and became a citizen of Singapore in 2008, allegedly left the country last November to fight against forces loyal to Syrian President Bashar al-Assad, the Ministry said Saturday. Officials were informed of his trip only once he left Singapore. The ministry, however, refused to comment on the investigation and deportation of Gul, a report in The Sunday Times said.

http://indianexpress.com/article/india/india-others/singapore-deports-indian-man-for-syrian-links/

[9] http://www.thehindu.com/news/national/is-files-a-tale-of-two-friends-one-makes-it-to-syria-the-other-cools-his-heels-in-jail/article7900874.ece?ref=relatedNews

[10]  The Hindu, A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail, reported by Josy Joseph, New Delhi, November 21, 2015.11:14 IST.

[11]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

நவம்பர் 23, 2015

.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

Bangalore Biswas becomes ISIS agent, techie workerடுவிட்டர் மூலம் .எஸ்.க்கு ஆட்கள் வேலைசேர்ப்பு: கடந்த வருடம் 2014ல் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை ஜாலஹள்ளி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்[1].  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான “@ShamiWitness” என்ற பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்[2]. அவனது இருப்பிடத்தில் சோதனை செய்ததில், அவனது கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் முதலியவற்றிலிருந்து பல விவரங்கள் தெரிய வந்தன. முன்னர் ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது[3]. அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - ShamiWitness - போட்டோநீண்ட நாள்களாக .எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்: இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]. மெஹ்தியிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள்களாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்டார் என்று, கர்நாடக டி.ஜி.பி லால்ரோக்குமா தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமன்றி, சட்டவிரோத சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் மெஹ்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தன் மகனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை நம்ப முடியவில்லை என்று, மெஹ்தியின் தந்தை பிஸ்வாஸ் தெரிவித்தார். மகன் இவ்வளவு வேலைகளை செய்து வந்தபோது, இவர் தெரியாது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. பட்கல் விசயத்தில் கூட பேற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ளோர் அனைவரும், எங்கள் குழந்தைகள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, என்று தான் சொல்லி வந்தனர்!

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - இரு முகங்கள்மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது: முஸ்லிம் இளைஞர்களை வேலைக்கு எடுப்பது, இந்தியாவிற்கு வெளியே அனுப்பி வைப்பது என்று செய்து வந்தான். பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அல்லது அந்நியநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவர்கள் ஏஜென்டுக்கு அல்லது ஏஜென்சிக்கு பணம் கொடுக்க வேண்டும், இங்கோ வேலைக்கு விரும்பி வருபவர்களுக்கு அவர்களே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின்  தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை அறிந்து எச்சரித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்[5]. இந்நிலையில் தான், பெங்களுர் வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற இரு தமிழ்நாட்டு முஸ்லிம் வாலிபர்களின் கதை வருகிறது. பாவம், துருக்கி அவர்களை நாடு கடத்த, பெங்களுருக்கே வந்து சேர்ந்து விட்டனராம்!

New college students become ISIS warriorsபுரசவாக்கம் மசூதியில் ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் சந்தித்தது எப்படி?: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்[6]. முன்னவர் பி.காம் பட்டதாரியாவார், தனது தந்தையின் துணிகடையில் வேலை பார்த்து வந்தார். பின்னவர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு ஒரு கடையில் வேலைக்கு வந்திருந்தார்[7]. ஆக, ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் எப்படி அறிமுகமானார்கள்? இருவருக்கும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? இருவரும் புரசவாக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் சந்தித்துள்ளனர்[8] என்று செய்திகள் கூறுகின்றன. பிறகு, மசூதிகள் தாம் இவர்கள் சந்திந்துக் கொண்டு அறிம்கமாவதற்கு தகுந்த இடமாக இருக்கின்றனவா? இவர்கள் தாமாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களா அல்லது யாராவது இணைப்பாக செயல்பட்டாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்[9]. அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்[10]என்று மேலும் செய்திகள் கூறுகின்றனர். ஒருவேளை, முழுவிவரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இணைத்தள உபயோகம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்விசயங்கள் எல்லாம் ரகசியமாகத்தான் பார்க்க முடியும், கண்டவர்கள் எல்லோரும் பார்க்க முடியாது.  அந்த வசதிகளை இவர்களுக்கு அளித்தது யார்? இவ்விருவருல் ஒருவன் நியூ காலேஜில் படித்தான் என்றால், அந்த ஹாஜா பக்ருதீன் மற்றும் குல் மொஹம்மது ஜோடிக்கும், இவனுக்கும் தொடர்பு இருந்ததா?

Bangalore to turkey and back- ISIS agent, techie workerசென்னை, பெங்களுர், இஸ்தான்புல் சென்றது: அப்படியென்றால், அத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாகிறது. அதன்படி, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து, துபாய்க்கு சென்றுள்ளனர்[11].  அதாவது, இவர்களுக்கு விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமது அடையாள விவரங்கள், விலாசம் முதலியவற்றைக் கொடுத்தான் அவை பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்[12]. ஆக, இஸ்தான்புல் நகரத்தில் இறங்கியதும், இவர்களை வரவேற்று, ஓட்டலுக்குச் சென்று தங்க வைத்தது யார் என்று தெரியவில்லை. சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்[13] என்றுதான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவ்வாறு செல்வதற்கு வேண்டிய அவசியம், தேவை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்[14].  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்[15]. பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்தனர். இத்தனைக்கும், பணம் தேவையாயிற்றே, யார், எவ்வாறு கொடுத்தனர்? பிறகு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

 

[1] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-190057.html

[2] It may be recalled that in December 2014, Bengaluru police had arrested Mehdi Masroor Biswas from the city for operating a pro-ISIS Twitter handle. Biswas owned @ShamiWitness, which had 17,700 followers.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] http://www.bbc.com/tamil/india/2014/12/141212_isistwitter

[4] http://www.bbc.com/tamil/india/2014/12/141213_indiatwitter

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/21125309/ISIS-The-extremist-movement-2-young-men-who-went-to.vpf

[6]  பாரத்.நியூச்.ஆன்லைன், .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள், 21 November, 2015.

[7] மாலைமலர், .எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 தமிழக வாலிபர்கள்: உளவுத்துறை விசாரணை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 21, 12:07 PM IST.

[8] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[9] http://bharathnewsonline.com/714/

[10] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள், சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST).

[11]  தினத்தந்தி, .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல், மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST.

[12] நியூ.இந்தியா நியூஸ், துருக்கிசிரியா எல்லையில் சிக்கிய .எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள், சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:15.04 AM GMT +05:30.

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/turkey-deports-2-tamil-nadu-men-trying-contact-isis-240380.html

[14] http://www.newindianews.com/view.php?23DA2cUMU42M4302lA2dyO322A03e3Ag2bImN3

[15]  http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/turkey-deports-2-tamil-nadu-men-for-trying-to-contact-isis-115112100031_1.html