சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது – முகமதியர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!
மனுதாரரின் மனுவை ஏற்க முடியாது[1]: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[2] “மேலும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் தலைமை ஹாஜிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இரு தரப்பினரும் சம்மதத்துடன் ‘தலாக்’ சொல்லி விட்டால், அது முஸ்லிம் சட்டத்தின்படி செல்லத்தக்கது தான். இதுதொடர்பான விசாரணையில், கணவன்–மனைவி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை ஹாஜி கூறியுள்ளார். எனவே மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், ” இவ்வாறு துணை கமிஷனர் கூறியிருந்தார்[3]. அதாவது ஷரீயத் கோர்ட்டுக்கு ஆதரவாக இவர் கூறியிருப்பது தெரிகிறது. சட்டம் அமூல்படுத்தும் அரசு அதிகாரிகள், இவ்வாறு பாரபட்சமாக செயல்படுவதுதான், இந்திய செக்யூலரிஸத்திற்கு அபாயம், ஆனால், அவ்வாறு இருப்பதும் பெருமையாக கருதுகிறார்கள். முற்போக்கு இத்தாந்தம் என்றெல்லாம் பேசுபவர்கள் இத்தகைய அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவது திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை[4]: இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “துணை கமிஷனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் நீதிமன்றத்தை போல வழிபாட்டு தலங்கள் செயல்படுவதையும் ஏற்க முடியாது. மேலும், மசூதிக்குள் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. வழிபாடு நடக்கும் இடம், அதாவது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்,” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[5]. நீதிபதியின் ஆணையின் பேரில், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எதற்கு வம்பு என்று இருந்து விடுவார்களா? சன் – டீவி கொடுக்கும் விவரங்களை, இங்கே பார்க்கலாம்[6].
ஷாபானு வழக்கு போன்று மறக்கப்படுமா?: பொதுவாக முகமதியர் தங்களது மதசட்டத்தில் நுழைய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தான் ஆர்பரித்துக் கொண்டிருப்பர். ராஜிவ் காந்தி ஆட்சியின் போது, ஷாபானு வழக்கில், ஷரீயத்தின் படியில்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட ஷாபானுவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று கருவிய தில்லி இமாம், அவரை கைது செய்ய நீதிமன்றங்கள் கைது செய்ய ஆணை பிறப்பித்தது, ஆனால், ஒன்றும் நடக்காதது, நீதிமன்ற தீர்ப்பை நீர்க்கும் விதத்தில் புதிய சட்டத்தை எடுத்து வந்தது, வயதான ஷாபானு இறந்தது என்பதையெல்லாம் இப்பொழுது மறந்திருக்கலாம். வயதான மூதாட்டிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதை, இரக்கமில்லாமல், மதசட்டம் என்ற போர்வையில், ஒரு ஆண் அத்தகைய காரியத்தை செய்ததையும், பெண்ணியம், பெண்கள் இயக்கங்கள் கூட மறந்திருக்கலாம். அப்பொழுது பிறக்காதவர்களுக்கு, இப்பொழுது சொல்லும் போது, தமாஷாகக் கூட இருக்கலாம்.
முகமதியர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா?: ஆனால், இனி, முகமதியர், இத்தீர்ப்பை ஏற்பார்களா மாட்டார்களா என்று பார்க்க வேண்டும். இதுவரை, இதை எதிர்த்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஷாபானு விசயத்தில் அல்லோல-கல்லோலப் பட்டது என்பது தெரிந்த விசயம் தான். ஆனால், இப்பொழுது, எதையும் காணவில்லை. பொது சிவில் சட்டம் என்று சொன்னால் கூட குதிக்கும், முகமதியர், அரசியல்வாதிகள், இதைப் பற்றி கருத்து, எதிப்பு எதையும் தெர்விக்காமல் இருப்பதும் நோக்கத்தக்கது. இப்பொழுதுள்ள அரசியல் குழப்ப நிலையில், இப்பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களா, அல்லது மேல் முறையீடு செய்யலாம் என்று இருக்கிறார்களா, அல்லது மனுதாரரை மிரட்டி வாபஸ் செய்ய கட்டாயப் படுத்துவார்களா என்று கவனிக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
21-12-2016
[1] Financial Express, Madras high court bans Sharia courts in mosques, By: FE Online | New Delhi | Updated: December 19, 2016 4:02 PM
[2] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9435069.ece
[3] http://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosquhttp://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosques/479331/es/479331/
[4] Hindusthan Times, Madras high court bans unauthorised Sharia courts in Tamil Nadu , Updated: Dec 19, 2016 18:19 IST.
[5] http://www.hindustantimes.com/india-news/madras-hc-bans-unauthorised-sharia-courts-in-tamil-nadu/story-LAYh4RyesKrK5fZLvSuokK.html
[6] https://www.youtube.com/watch?v=a6Lf5L6TE6w
அண்மைய பின்னூட்டங்கள்