பர்கா அணிந்து காரை ஓட்டியதால் ஃபிரான்ஸில் ஒரு பெண்மீது அபராதம் விதிக்கப் பட்டது: நான்டிஸ் ( Nantes, France), என்ற இடத்தில் சென்ற மாதம் (24-04-2010) 31 வயது பெண்மணி, பர்கா அணிந்து கொண்டு காரை ஓட்டியதால், வொபத்து ஏற்படலாம் என்றதாலும், மற்றும் அத்தகைய முறை அங்கு அனுமதிக்கப் படாதலாலும், £18 அபராதம் விதிக்கப்பட்டது.

கோல்கட்டா : டில்லியில் இருந்து வங்கதேச தலைநகர் தாக்காவுக்கு கோல்கட்டா வழியாக சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தை கடத்த சதி நடப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து விமானம் அவசரமாக கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது. இன்று காலையில் டில்லியில் இருந்து புறப்பட்ட விமானம் சரியாக 11.50 மணியளவில் கோல்கட்டா என்.எஸ்.சி., போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹைஜேக் வார்த்தையால் பீதி : விமானத்தில் தாக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 2 பேரின் நடமாட்டம் சந்தேகப்படும் படி இருந்துள்ளது. அவர்களை கூர்ந்து கவனித்த விமான சிப்பந்தி அவர்களில் ஒரு பெண் ஹைஜேக் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்தியதை கவனித்தார். இதனால் சந்தேகம் வலுக்கவே, இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் கோல்கட்டா ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து அனுமதி பெற்று விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் ஹைஜேக் என பேசிய 2 பேரையும் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்களிடம் விமான பயணத்துக்கான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் அவர்கள் விடுவிக்கப் படுவார்கள் என ஏர்போர்ட் வட்டாரம் தெரிவிக்கிறது.
http://tamil.webdunia.com/newsworld/news/national/1005/05/1100505062_1.htm
கொல்கத்தா வந்துகொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. புனேவிலிருந்து இன்று டெல்லி வழியாக கொல்கத்தா சென்று கொண்டிருந்த “ஸ்பைஸ் ஜெட்” விமானத்தில் இருந்த இரண்டு ரஷ்ய பயணிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. அதில் ஒரு பெண் பர்கா அணிந்திருந்தார்.இதனால் சந்தேகம் மேலும் வலுவடைந்தது. அந்த பெண்ணை முகத்தை மூடியிருக்கும் பர்காவை அகற்ற சொன்னபோது அவர் மறுத்துவிட்டார்.
இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததால், விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க கொல்கத்தா விமான நிலையத்தில் அனுமதி கோரினார். இதையடுத்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட அதிகாரிகள், விமானத்தில் ஏறி பயணிகளை கீழே இறக்கி, விமானம் முழுவதும் சோதனை நடத்தினர். அத்துடன் சந்தேகத்துக்கு இடமான 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படியான பொருள் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன் பர்கா அணிந்திருந்த பெண் ஓங்குதாங்காக நல்ல உயரமான உடல்வாகுடன் இருந்ததால், அது ஆணாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்பாக அமைந்து விட்டதாகவும் அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
அண்மைய பின்னூட்டங்கள்