Posted tagged ‘கஞ்சி’
ஏப்ரல் 17, 2020
ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].

அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.

ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார், “இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது[13]. ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.

ஈரோட்டில் தனித்தனியாக கஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.
© வேதபிரகாஷ்
17-04-2020

[1] நியூஸ்.தமிழ், நியூஸ்.தமிழ், ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!, By Searma Samy | Thu, 16 Apr 2020, By Searma Samy | Thu, 16 Apr 2020
[2] https://newstm.in/tamilnadu/tamil-nadu-government-imposes-restrictions-on-ramzan/c77058-w2931-cid538450-s11189.htm
[3] தினத்தந்தி, ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனை – இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM
[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/17080011/1265214/Discussion-on-Ramzan-festival.vpf
[5] தினகரன், பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி, 2020-04-16@ 18:05:50.
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=579522
[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்பு… வீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]
[8] https://tamil.oneindia.com/news/chennai/denial-of-permission-to-produce-fasting-porridge-in-mosques-382848.html
[9] தமிழ்.இந்து, ரமலான் நோன்புக் கஞ்சிக்கு 5,450 டன் அரிசி; பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சப்படாது: தலைமைச் செயலர் அறிவிப்பு, Published : 16 Apr 2020 06:37 PM
Last Updated : 16 Apr 2020 10:01 PM.
[10] https://www.hindutamil.in/news/tamilnadu/549886-5450-tonnes-of-rice-for-ramadan-fasting-porridge-porridge-is-not-feverish-in-mosque-notice-of-chief-secretary.html
[11] ஏசியா.நெட்.தமிழ், வீட்டிலேயே தொழுகை… பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!, By Asianet Tamil, Chennai, First Published 16, Apr 2020, 9:34 PM…
[12] https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-on-ramzan-festival-in-corona-curfew-period-q8w1zw
[13] புதியதலைமுறை, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு, Web Team, Published :16,Apr 2020 09:48 PM
[14] http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge
[15] தினமலர், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை, Added : ஏப் 15, 2020 09:02; https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561
[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561
பிரிவுகள்: அச்சம், அடிப்படைவாதம், அரசாங்கத்தை மிரட்டல், அரிசி, அரிசி அரசியல், அல்லா, அழிவு, அஹ்மதியா, ரமதான், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், ரம்ஜான் நோன்பு, ரம்ஜான் நோன்பு அரிசி, வக்ப், Uncategorized
Tags: இப்தர், இலவச அரிசி, உயிர்கொல்லி, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கஞ்சி குல்லா, கரோனா தொற்று, குல்லா கஞ்சி, கொரோனா, கொரோனா வைரஸ், துலுக்கர், தொற்று, பற்றிக் கொள்ளுதல், மசூதி, மானிய அரிசி, முஸ்லிம், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்லான், வியாதி, வைரஸ் கொரோனா
Comments: Be the first to comment
மே 14, 2018
ரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன?

11-05-2018 – நம்பிக்கையான துலுக்கருக்கு செக்யூலரிஸ அரிசி இலவசம்: செக்யூலரிஸம் பெயரில் ஏதாவது ஒரு பழக்கம் ஆரம்பித்து வைக்கப் பட்டால், அரசியல்வாதிகள் அதனைத் தொடர்ந்து கடைபிடிப்பது சகஜமாகி விட்டது. ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது[1]. இதுகுறித்து தமிழக அரசு 11-05-2018 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை[2]: “ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது[3]. இதன் மூலம் தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் பயன்பெறும்[4]. பள்ளிவாசல்களுக்கு தேவையான மொத்த அரிசியை வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசி வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு, ரூ.12.97 கோடி கூடுதல் செலவாகும்,” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. சென்ற வருடம் 2017- ரம்ஜான் கஞ்சி தயாரிக்க 4,900 டன் அரிசி வழங்கப்பட்டது[6]. 2011லிருந்து, ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த, இந்த பழக்கம் “இலவச அர்சி அரசியல்” தொடர்கிறது[7]. ரூ 12 கோடி செலவாகும் என்று குறிப்பிடுவதன் அவசியம் என்ன என்று பொது மக்களுக்கு விளக்கவில்லை. அதாவது “நீ கட்டும் வரி பணத்தைத் தான் இப்படி இலவசமாகக் கொடுக்கிறேன்,” என்று சொல்வது புரிந்து கொள்ள வேண்டும்.

ரம்ஜான் பெயரில் துலுக்கருக்கு அளிக்கப்படுவது இலவச அரிசியா, மானிய விலை அரிசியா?: அரசு அறிவிப்பு, “இலவச அரிசி” எனும்போது, “மானிய அரிசி” என்று துலுக்கர் குறிப்பிடுவது விசித்திரமாக உள்ளது. ரம்ஜான் மாதம் 16-05-2018 அன்று தொடங்க உள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படவேண்டிய மானிய விலை அரிசி இதுவரை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது[8]. அரசு அறிவித்தப் பிறகு, கொடுக்கவில்லை என்பது உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள், தங்களது புனித மாதமான ரம்ஜான் மாதம், வரும் புதன்கிழமை துவங்க உள்ளது. ரம்ஜான் மாதத்தின் 30 நாள்களும் பகல் முழுவதும் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல், நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் மறைந்த பின்னர், தினசரி மாலையில் நோன்பை முடிப்பார்கள். அப்போது, நோன்புக் கஞ்சி எனப்படும் அரிசிக்கஞ்சி குடிப்பது வழக்கம். இதற்காக, அரசு மானிய விலையில் அரசி வழங்கிவருகிறது. இந்த வருடம், நோன்புக்கஞ்சி காய்ச்ச வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அரசியை எந்த மாவட்டத்திலும் வழங்கவில்லை என்று தெரிகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 126 பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்கவில்லை என இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சிரிடம் புகார் அளித்தனர்[9]. இதுகுறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறுகையில், `நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பு பிடிக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை நோன்புக் கஞ்சி தயாரிக்க அரிசி கொடுக்கவில்லை. ஒருவாரமாக, இன்று வாருங்கள்… நாளை வாருங்கள், மாலை வாருங்கள் என்று கூறி அலைக்கழிக்கின்றனர். மானிய விலை அரிசியைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கொடுக்க முடியாது என்று கூற வேண்டும். இதுபோன்று இழுத்தடிப்பு செய்யக் கூடாது’ என்றனர்[10]. மேலும், புகாரைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்[11].

1947க்கு முன்னும், பின்னும் நடக்கும் ஹஜ், ரம்ஜான் கஞ்சி, இப்தர் விருந்து முதலியன: 1927லிருந்து “ஹஜ் கமிட்டி” செயல்பட்டு வருகிறது, அரசு உதவி “ஹஜ் யாத்திரிக்கைக்கு” செய்யப்பட்டு வருகிறது. 1947ற்கு பிறகும் தொடர்கிறது[12]. செக்யூலரிஸம் பின்பற்றிய நிலையில், எந்த அரசும் இதனை நிறுத்தவில்லை. ஆசார துலுக்கரும் இதனை ஒவ்வாதது “ஷிர்க்” என்று மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. தமிநாட்டு ஹஜ் கமிட்டி 1958ல் அமைக்கப்பட்டது, பாரத வெளியுறவுத் துறை விதிகளின் படிதான் [Haj Committee Act, 2002, (Central Act No.35 of 2002) செயல்பட்டு வருகிறது[13].

அதன் படி மற்றும் திமுக மூஸ்லிம்களுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் நிலையில், ஹஜ்ஜிற்கு போவது என்பது திராவிட கட்சிகள், விழாவாகவே கொண்டாடி பிரயாணிகளை வழியனுப்பி வைத்தனர். இப்தர் என்கின்ற இறுதி நாள் “சாப்பிடும் விழாவும்” அவ்வாறே, லட்சங்கள் செலவழித்து நடத்தப் பட்டு வருகின்றன. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், சமூக வலைத்தளங்கில் எதிர்க்கும் சிலர், அடிப்படை விசயங்கள் தெரியாமல், தனை செய்து வருகின்றனர். மோடியே இந்த வருடம் “அட்வான்சாக,” ரம்ஜான் முபாரக் “மன் கி பாத்” மூலம் தெரிவித்து விட்டார்!

இஸ்லாமும், ஆசாரமும் [ஹலால்], அநாசாரமும் [ஹராம்]: உண்மையான துலுக்கர் உலகத்தை “தாருல்-இஸ்லாம்,” மற்றும் “தாருல்-ஹராம்” என்று பிரித்துள்ளனர். “தாருல்-ஹராம்” பகுதிகளில் “காபிர்கள்” இருப்பதால், “ஜிஹாத்” மூலம் அங்குள்ள “குப்ரு தன்மை” முழுவதாக துடைத்தெரிய வரை, பொறுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்கிறார்கள். அதாவது “ஜிஹாத்” தொடர்ந்தாலும், அவர்களுடைய பொருட்களை, சொத்துகளை அனுபவிப்பது கூட “ஜிஹாத்” தான் என்ற விளக்கம் கொடுத்து, “ஜிசியா” பாணியில், கிடைப்பதை / கொடுப்பதை விடாதே, தட்டிக் கேள், உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொள், என்று தான், தக்லைவர்கள் அறிவுரை கொடுக்கிறார்கள். அதனால் தான் 11-05-2018 அன்று அறிவித்தவுடன், “அரிசி கொடு,” என்று கேட்டுவிட, அவர்கள் முறையாக, ஆவணங்களுடன் வந்து கேட்டார்களா இல்லையா, என்பதை எல்லாம், சரி பார்க்காமல், “நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார்”, “ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!”, என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்!

மோமின்கள், காபிர்களை வகைப்படுத்தும் முறையும், அவர்களின் பொருட்களை அனுபவிக்கும் உரிமைகளும்: மத்தியில் பிஜேபி ஆட்சி இருந்தாலும், இல்லாவிட்டாலும், “ஹஜ் உதவி” தொடர்கிறது, நாளைக்கு பிஜேபி தமிழகத்தை ஆண்டாலும், தொடரும். துலுக்கர், இந்தியா தங்களால் ஆளப்பட்ட இடம் என்று தான் கருதிக் கொண்டு, உள்ள இந்துக்களை “திம்மிகளாக” மதிக்கிறார்கள். அதனால் தான், அவர்களிடத்தில் அந்த ஆணவம், அகம்பாவம் முதலியவை உள்ளன. அதே நேரத்தில், ஜைனர் போன்ற நம்பிக்கையாளர்கள் உபவாசம் இருந்து இறக்கிறார்கள். இவர்களோ உபவாசம் பெயரில் தின்று வாழ்கிறார்கள். இடைக்காலத்தில், ஜைனர்கள் மத்தியதரைக்கடல் பகுதிகளில் இருந்ததாலும், அவர்கள் துலுக்கரான போது, பழக்க-வழக்கங்களை “தலைகீழாக” மாற்றியதாலும், இவ்வாறு உண்மையான உண்ணா நோன்பு, காலை முதல் மாலை வரை என்றாகியது போலும்!

- உண்மையான ஆசார துலுக்கன், காபிரிடமிருந்து எதையும் பெறக்கூடாது, ஆனால், ஒருகாலத்தில் எங்களின் அடிமைகள் தான் என்ற நினைப்பில் பெறுகிறார்கள்.
- காபிர்கள், திம்மிகளிடமிருந்து அல்லாவே கொடுக்க வைக்கிறார் என்று நியாயப்படுத்திக் கொண்டும் வாங்கித் தின்கிறார்கள்.
- திம்மி, தாருல்-இஸ்லாமின் சட்டப்படியான குடிமகன், ஹரபி தாருல்-இஸ்லாமின் புறம்போக்கு குடிமகன், அதனால் அனுபவிக்கலாம்.
- முனாபிக், துலுக்கனைப் போல நடிப்பவன், அதனால், இவன் மிகவும் மோசமானவன், முர்தத், முந்தைய துலுக்கன் – அடுத்த துரோகி, அரிசி வேகுமா?

- முஷ்ரிக் – பல கடவுளரை வணங்கும் கேடு கெட்டவன், தஹ்ரிய்யா – படைப்பில் உள்ள அனைத்தையும் நம்புகிறவன், அரிசி வேகுமா?
- முல்ஹித் – நாத்திகர், ஜின்டீக் – நபிக்கு பின்னால் நபி வருவர் போன்றதை நம்பும் வகையறாக்கள் – நாத்திக-திராவிடர் கொடுக்கும் அரிசி வேகுமா?
- அல்-கிதாபி – இறைவனால் வெளிப்படுத்திய புனித நூல்களைக் கொண்டவர் – யூதர் மற்றும் கிருத்துவர் மட்டும், பெரியாஸ்டுகள் அரிசி ஏற்குமா, வேகுமா?
- வேகும் – தின்கலாம் என்று எடுத்துக் காட்டப்பட்டதால், அந்த முறையை பின்பற்றுகின்றனர்.
© வேதபிரகாஷ்
14-05-2018

[1] தினமலர், ரம்ஜான் நோன்புக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி, Added : மே 10, 2018 18:54
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018316
[3] தி.இந்து, நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 5,145 டன் அரிசி: தமிழக அரசு அனுமதி, Published : 11 May 2018 07:45 IST; Updated : 11 May 2018 07:45 IST.
[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23845467.ece
[5] https://www.dailythanthi.com/News/State/2017/05/24190434/Ramzan-Festival–4900-tonnes-of-rice-for-school-gates.vpf
[6] மாலைமலர், ரமலானை முன்னிட்டு மசூதிகளுக்கு 5 ஆயிரம் டன் இலவச அரிசி வழங்க முதல்வர் உத்தரவு, பதிவு: மே 10, 2018 20:07
[7] https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/10200753/1162169/TN-to-provide-5000-tons-of-free-rice-to-mosques-during.vpf
[8] விகடன், நோன்புக் கஞ்சிக்கான மானிய விலை அரிசி வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! ஆட்சியரிடம் புகார், அருண் சின்னதுரை அருண் சின்னதுரை, Posted Date : 17:20 (14/05/2018); Last updated : 17:20 (14/05/2018)
[9] https://www.vikatan.com/news/tamilnadu/124989-muslim-jamath-peoples-files-complaint-against-officials-over-delay-in-distributing-rice-for-ramzan-gruel.html
[10] தமிழ்.ஈநாடு, ரமலான் நோன்பு கஞ்சிக்கு மானியம் அரிசி வழங்கவில்லை: ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு!, Published 14-May-2018 17:06 IST
[11] http://tamil.eenaduindia.com/State/Madurai/2018/05/14170627/Ramalan-does-not-grant-to-Kanji-Jamaat-executives.vpf
[12] http://hajcommittee.gov.in/
[13] http://hajjtn.com/
பிரிவுகள்: அம்மா அரிசி, அரிசி, அரிசி அரசியல், இலவச அரிசி, கஞ்சி அரிசி, கூழ் அரிசி, நாயுடு அரிசி, நோன்பு அரிசி, மானிய அரிசி, மோடி அரிசி, ரமதான், ரமலான், ரமழான், ரமஷான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் கஞ்சி அரிசி, ரம்ஜான் தாராவீஹ், ரம்ஜான் நோன்பு, ரம்ஜான் நோன்பு அரிசி, ஷிர்க், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹஜ் மானியம், ஹஜ் யாத்திரை, ஹவாலா
Tags: அரிசி, இலவச அரிசி, கஞ்சி, கஞ்சி அரிசி, கஞ்சி குல்லா, குல்லா கஞ்சி, கூழ், கூழ் கஞ்சி, நோன்பு, நோன்பு அரிசி, நோன்பு திறப்பது, மானிய அரிசி, ரஞான் அரிசி, ரமலான், ரமழான், ரம்ஜான், ரம்ஜான் அரிசி, ரம்ஜான் கஞ்சி, ரம்ஜான் தாராவீஹ், ஹஜ் மானியம்
Comments: 1 பின்னூட்டம்
ஜூன் 24, 2017
சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவ–முகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்? – ஜவாஹிருல்லாவுக்கு ரம்ஜான் முடியும் வரை கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு!

வெறுப்பை வைத்து, வெறுப்பை வளர்த்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கும்பல்: கோயம்புத்தூர் வன்முறையைப் பற்றி மூண்டும் விவரிக்க வேண்டிய அவசியல் இல்லை. முகமதிய அடிப்படவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிஹாதித் தீவிரவாதம் அதில் எப்படி வெளிப்பட்டது என்பது தெரிந்த விசயமே. இருப்பினும், ஜவாஹிருல்லாஹ் போன்றோர், “நவம்பர்-டிசம்பர் 1997ல், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது, காவி கும்பல் [saffron hooligans] கடைகளை சூரையாடியது, அதில் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்……,” என்றெல்லாம் ஜவாஹிருல்லா தனது அக்டோபர்.9. 2011 அறிக்கையில் குறிபிட்டார்[1]. அதாவது, வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற புகார், வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு என்ற நிலையில் வெளியியட்ட அறிக்கையில் அவ்வாறு கதை விடுகிறார். இப்பொழுது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகியான ஜவாஹிருல்லா [M H Jawahirulla] உள்ளி்ட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது, என்று செய்தி வருகின்றது.

- எம். எம். ஜவாஹிருல்லாஹ், தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் [H. Jawahirullah President of Tamilnadu Muslim Munnetra Kazhagam]
- எஸ். ஹைதர் அலி [S. Hyder Ali, General Secretary of TMMK]
- நிஸ்ஸார் அஹமது [Nissar Ahamed],
- ஜி. எம். ஷேக் [G.M. Sheikh]
- நல்ல மொஹம்மது களஞ்சியம் [Nalla Mohamed Kalanjiam].

அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டப்பிரிவுகளுக்கு எதிராக பணம் பெற்றது: கடந்த 1997-2000ம் காலகட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்அனுமதி பெறாமல், அந்நிய நிதிபெறுவதை ஒழுங்குப்படுத்தும் சட்டம் [Foreign Contribution (Regulations) Act, (FCRA) 1976] பிரிவுகளுக்கு எதிராகவும், டிசம்பர் 15, 1997 – ஜூன் 20, 2000 காலத்தில், கோயம்புத்தூர் முஸ்லிம் உதவி நிதி [Coimbatore Muslim Relief Fund (CMRF) ] என்ற பெயரில், வெளிநாடுகளில் இருந்து ரூ. 1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ஐ சட்டவிரோதமாகப் பெற்றது. பிறகு, அப்பணத்தை சௌகார்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்தது. அப்பொழுது அந்த நிறுவனமே பதிவ்வாகவில்லை, அனுமதியும் பெறப்படவில்லை. தமுமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது[2]. [120(B), R/W 4(1)(C) AND SECTIONS 23 R/W 6&11 AND U/S 25&22 OF FOREIGN CONTRIBUTION REGULATION ACT 1976, ALLEGATION IS COIMBATORE MUSLIM RELIEF FUND AN ORGANISATION RECEIVED CONTRIBUTION FROM FOREIGN SOURCES WITHOUT GETTING PRIOR PERMISSION FROM CENTRAL GOVT. RCMA 12001-A-0053, DATED 31-02-2001, SPE, CBI-ACP, CHENNAI, C.C.NO. 1123/2004] 19-01-2004 அன்று குற்ரப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது[3]. முதலில் வராத அவர்கள், ஜூன் 15, 2011 அன்று மாஜிஸ்ட்ரேட் முன்னர் தோன்றியதால், அந்த வாரன்ட் திரும்பப் பெற்றது[4]. செப்டம்பர் 30, 2004ல் நீதிமன்ற இக்குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்கியது[5]. அதற்கு தான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை, வாஜ்பாயி அரசு தான் வந்த நிதியைத் தடுத்தது, அரசியல் காழ்ப்புணர்வுடன் ஒன்று வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. மூலமாக, இரண்டு வழக்குகளை போட வைத்தார் என்றேல்லாம் கூறி தனது விலாசம் முதலியவற்றுடன் அறிக்கை விட்டார்[6]. அது மில்லி கெஜட் என்ற முஸ்லிம் நாளிதழில் காணப்பட்டது[7].

ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்: இந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்லமுகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, அனைவருக்கும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது[8]. இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது[9]. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய காலஅவகாசம் வழங்கவும், மேல்முறையீட்டு காலம் வரை தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்[10]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய வரும் 28-ம் தேதி வரை விலக்கு அளித்து, அதுவரை அவர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்[11].இவ்வாறு, மத காரணங்களுக்காக, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, செக்யூலரிஸ கொள்கைகளின் படி சரியாகத் தெரிவில்லை[12]. மேலும் சரண்டர் என்றால், கைது என்பது அமுங்கி விடும். ஊடக பப்ளிசிடி இல்லாமல் தப்பித்துக் கொள்ளல்லாம். எப்படியும் பைலில் / பிணையில் வெ;ளியிலும் வரலாம். PTI செய்தி என்பதனால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே வந்துள்ளது[13].

சட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக கிருத்துவ–முகமதியர்களுக்கு சலுகை அளிப்பது ஏன்?: முன்பு, ஒரு கிருத்துவ பாதிரிக்கு, தண்டனை கொடுக்காமல், வருத்தப் படுங்கள் [repentance] என்று ஆணையிட்டது ஞாபகம் இருக்கலாம். அதாவது, அவர்களது மதநம்பிக்கையின் படி, வருத்தப் பட்டால், பாவம் விலகி, அவர் நல்லவராகத் திருந்தி விடுவாராம். அப்படியென்றால், எல்லா குற்றவாளிகளுக்கும் அத்தகைய தண்டனை கொடுக்கலாமே? இப்பொழுது, ரம்ஜான் மாதம் என்பதால் 28-06-2017 வரை சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று நீதிபதி, போலீஸாருக்கு, உத்தரவிட்டிருப்பது, சட்டத்திற்கு முரணானது போன்றேயுள்ளது. ஏனெனில், மற்றவர்களுக்கு, மதரீதியிலாக, இத்தகைய சலுகைகளைக் கொய்டுப்பதில்லை. அப்படியிருக்கும் போது, கிருத்துவர்களுக்கும், முகமதியர்களுக்கும், இத்தகைய சலுகைகளை ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. முன்னர், காஞ்சிமட சங்கராச்சாரியார், தீபாவளி அன்றே கைது செய்யப்பட்டது கவனிக்கப் பட வேண்டும். பிறகு சட்டம், நீதி எல்லோருக்கும் ஒன்றாகத்தனே செயல்பட வேண்டும். ஆக செக்யூலரிஸ நாட்டில் இப்படியும் நடக்கும் போலிருக்கிறது.
© வேதபிரகாஷ்
22-06-2017

[1] Coimbatore a commercially vibrant city in Tamilnadu witnessed unprecedented carnage against Muslims in November-December 1997. 19 Muslims were killed and properties worth several million rupees were looted by saffron hooligans who were aided and abetted by the local police. Tamilnadu has never witnessed such a large scale riot and arson.
http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news
[2] DNA, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, Wed, 21 Jun 2017-08:11pm , PTI.
[3] The Hindu, Non-bailable warrants recalled, CHENNAI:, JUNE 15, 2011 00:00 IST ; UPDATED: JUNE 15, 2011 04:10 IST.
[4] A city magistrate court on Tuesday recalled the non-bailable warrants of arrest issued against an MLA and four others in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. On Monday, the Additional Chief Metropolitan Magistrate, Egmore, had issued the warrants against M.H.Jawahirullah, MLA, and four others in connection with a case in which the prosecution alleged that they had collected foreign contribution to the tune of Rs.two crore in the name of “Coimbatore Muslim Relief Fund,” violating the law. The charge sheet had been filed in the case. As the accused did not turn up in the court on Monday, the Additional CMM ordered issue of the warrants against them. On Tuesday, the five came to the court and the warrants against them were recalled. — Special Correspondent
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nonbailable-warrants-recalled/article2105543.ece
[5] http://www.dnaindia.com/india/report-madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case-2479714
[6] The CMRF did not receive any fund from any Foreign Government, Foreign Agency or Foreign Citizens. However the NDA Government led by Vajpayee slapped two cases against Coimbatore Muslim Relief Fund. One was through the Income Tax Department and another one was by the Central Bureau of Investigation. The Vajpayee government slapped these cases with political vendetta.
http://www.milligazette.com/news/2449-dr-jawahirullah-s-clarification-coimbatore-indian-muslims-riots-relief-work-news
[7] The Milli Gazette, Dr Jawahirullah’s clarification, Published Online: Oct 09, 2011.
M.H. Jawahirullah, President, Tamilnadu Muslim Munnetra Kazhagam, 7 Vada Maraicoir Street, Chennai 600 001; Email: jawahir[@]tmmk.in; 9 October 2011.
[8] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாட்டில் இருந்து ரூ1.55 கோடி அனுமதியின்றி வசூல்: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி, By: Mathi , Published: Monday, June 19, 2017, 15:10 [IST]
[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-court-confirms-one-year-jail-term-jawahirullah-286621.html
[10] தி.இந்து.தமிழ், ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் சரணடைய ஒருவாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: June 22, 2017 08:56 ISTUpdated: June 22, 2017 08:56 IST.
[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9732564.ece
[12] India Today, Madras HC exempts TMMK leader from surrendering in FCRA case, June 21, 2017 | UPDATED 20:05 IST.
[13] http://indiatoday.intoday.in/story/madras-hc-exempts-tmmk-leader-from-surrendering-in-fcra-case/1/984305.html
பிரிவுகள்: ஃபேஸ்புக், அன்சாரி, அப்துல் காதர், அல் - உம்மா, அல்-உம்மா, எஸ். ஹைதர் அலி, களஞ்சியம், சமத்துவம், ஜவாஹிருல்லா, ஜி. எம். ஷேக், நல்ல மொஹம்மது களஞ்சியம், நிஸார் அஹமது, நிஸ்ஸார் அஹமது, முஸ்லிம் முன்னேற்ற கழகம், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், மொஹம்மது களஞ்சியம்
Tags: அந்நிய பணம், அனுமதி, இஸ்லாம், எஸ். ஹைதர் அலி, கஞ்சி, களஞ்சியம், கைது, சட்டம், சமத்துவம், சமம், ஜவாஹிருல்லா, ஜி. எம். ஷேக், நல்ல மொஹம்மது களஞ்சியம், நிஸார் அஹமது, நிஸ்ஸார் அஹமது, நீதி, பணம், பிணை, மொஹம்மது களஞ்சியம், மோசடி, ரம்ஜான், ஹவாலா, ஹைதர் அலி
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 10, 2013
குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி – முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம்!

2013-2014 ஆண்டுகளில் இம்மாதிரியான தமாஷாக்கள் அதிகமாகவே இருக்கும்[1]: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[2]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது, என்று குறிப்பிட்டு இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். “திராவிடர்களே” இப்படியென்றால், “ஆரியர்களுக்கு” சொல்லித்தரவா வேண்டும். இதோ போட்டி ஆரம்பித்துவிட்டது. சொல்லிவைத்தால் மாதிரி, குல்லா விவகாரம் தலையெடுத்து விட்டது.

பாகிஸ்தானில் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா – வியாபாரம்: குல்லா போடுவதில், “தி ஹிந்து” போன்ற செக்யூலரிஸ ஊடகங்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. ரம்ஜான் மாலையில் “ஈத்-கா-சாந்த்”ன் ஒளி பரவ ஆரம்பித்து விட்டதாம், வர்ணித்திருக்கிறது[3]. இந்த “தி ஹிந்து”, என்டி-டிவியுடன் கூட்டு வைத்து செக்யூலரிஸத்தைப் பிழிந்து, ஊறவைத்து, ஊற்றிக் கொடுத்து போதையை ஏற்றி வருகிறது. இதற்கு பாகிஸ்தானில் வேறு கூட்டு – ஆமாம் என்டி-டிவி-பாகிஸ்தான்.
அமீர் லிகாயத் ஹுஸைன் தமாஷா பாகிஸ்தான் டிவி சரித்திரத்திலேயே மிகப்பெரிய வெற்றி நிகழ்சியாகும் என்ற செய்திகளை அள்ளி வீசியுள்ளது[4]. போதா குறைக்கு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகளைக் கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்[5]. இதெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறாதஆ இல்ல்லஈயா என்று நமது தமிழ்நாட்டு முஸ்லிம் பண்டிதர்கள் தாம் விவாதித்து அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சரி, இந்தியாவில் குல்லா போடாமல் இருப்பார்களா? இந்திய டிவிகளும் இந்த வியாபாரத்தைச் செய்துள்ளது, செய்து வருக்கிறது[6].

இந்ந்தியாவிலும் ரம்ஜானை வைத்துக் கொண்டு தமாஷா — அரசியல் – வியாபாரம்: 09-08-2013 அன்று ராஸா மூரத் என்ற நடிகர், மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சௌகானுடன் குல்லா போட்டுக் கொண்டு காட்சியளித்தார். போபாலில் ஈத்கா நிகழ்சியில் சௌகானும் குல்லா போட்டுக் கொண்டிருந்தார்[7]. அப்பொழுது ராஸா மூரத் இவரைப் பார்த்து மற்ற முதல்வர்கள் கற்றுக் கொள்ளவேண்டும்”, என்று பேசினார்[8]. குறிப்பாக நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார்[9]. அதாவது குல்லா போட்டால்தான் செக்யூலரிஸவாதி என்பது போல முஸ்லிம்கள் கொடுக்கும் புதிய விளக்கம் விசித்திரமாக இருக்கிறது.
முஸ்லிம்கள் குல்லா போட்டு ஏன் பிஜேபிக்காரகளை குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.
காங்கிரஸ்காரர்கள் தாம் குல்லா போட்டுக் கொள்ளவும், போடவும் தயாராக்க இருக்கிறார்களே? குல்லா போட்ட பிறகு கஞ்சி குடிக்க வேண்டாமா? என்ன, கஞ்சியா, இங்கு ஜெயலலிதா பைவ்—ஸ்டார் ஹோடல் தமாஷாவையும் மிஞ்சும் வகையில் உணவு வகைகள் இருக்கின்றன.

ரம்ஜான் – ஈத் செக்யூலரிஸ உணவு வகைகள்: வழக்கம் போல ஈத் தமாஷாக்கள் இல்லைகளை மீறிவிட்டன எனலாம். டிவி-செனல்கள் எல்லாம் இப்படி விதவிதமான சமையல்கள் செய்யப்படுகின்றன, உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன என்றெல்லாம் விவரித்தனர். ஹலீம், ஷீர்-குர்மா, சேவை என்று வர்ணனைகள்[10]. ஆனால், அவ்வுணவு எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்று விவரமாகக் காண்பிக்கப் படவில்லை.
குறிப்பாக ஆடு-மாடு-கோழி வகையற்றாக்கள் எப்படி கொல்லப்பட்டு, அறுத்து, உரித்து, பிரித்து, வெட்டி சமைக்கிறார்கள் என்பதனை காண்பிக்கவில்லை.
இப்படி அறுக்காமல், எப்படி கிடைக்கும்.
ஐந்து உடல்கள் அனுப்பப்பட்டன, என்று புலம்பிக் கொண்டிருந்த ஊடகங்கள், ஒரே நாளில் மாறிவிட்டதும் செக்யூலரிஸம் போலும். இதுவும் செக்யூலரிஸம் வகையில் நாளைக்கு விவாதிக்கப்படலாம். குல்லா போட்டால்தான் செக்யூலார்வாதி, என்றாகி விட்டப் பிறகு, நாளைக்கு கஞ்சி குடித்தால் தான் அந்த சான்றிதழை நாங்கள் கொடுப்போம், லுங்கி கட்டினால் தான் ஒப்புக் கொள்வோம், மாட்டிறைச்சி தின்றல் தான் உண்மையான செக்யூலார்வாதி, சுன்னத் செய்து கொண்டால் 100% செக்யூலர்வாதி,……………என்றெல்லாம் விளக்கம் கொடுப்பார்களோ?

செப்டம்பர் 2011ல் மோடி குல்லா அணிய மறுத்த விவகாரம்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை வலியுறுத்தி, செப்டம்பர் 2011ல், மூன்று நாள் உண்ணாவிரதம் (சத்பாவனா) மேற்கொண்டார். குஜராத் மாநில இஸ்லாமிய இமாம்களும் மோடியை சந்தித்து உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்தினார்கள். பிரானா என்ற கிராமத்தை சேர்ந்த சையது இமாம் சகி சயீது என்ற மதக்குருவும் மோடியை வாழ்த்த சென்றார். அப்போது அவர் மோடியிடம் ஒரு குல்லாவை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் மோடி குல்லாவை அணிய மறுத்து விட்டார். சால்வை மட்டும் போடுங்கள் என்றார். இதனால் அந்த மதகுரு சால்வையை மட்டும் போட்டு விட்டு திரும்பினார்[11].
இதைப் பாராட்டி, சிவசேனா கட்சிப் பத்திரிகை, “சாம்னா’வில் வெளியிடப்பட்ட கட்டுரையில்[12], “முஸ்லிம் மத குரு அளித்த குல்லாவை அணிய மறுத்த, மோடிக்கு பாராட்டுக்கள். சிறுபான்மையின மக்களை, “தாஜா‘ செய்வதால் மட்டுமே, மதசார்பின்மையை நிரூபிக்க முடியும் என்றில்லை. இதை, காங்., கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். மோடி தற்போதைய பாதையில் தொடர்ந்தால், டில்லியில் அவர் பிரதமராகி, ராஜ்பாத்தில் வலம் வரும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை”, என, தெரிவிக்கப்பட்டுள்ளது[13]. இந்த குல்லா விவகாரம் பற்றி தமிழ் ஊடகங்களும் அள்ளிக் கொட்டின.
வேதபிரகாஷ்
© 09-08-2013
[8] Murad standing alongside Chouhan, who had sported a skull cap while greeting the Muslims on the occasion of Eid al-Fitr, said the other chief ministers need to learn from the Madhya Pradesh chief minister that wearing a cap does not affect one’s religion. “I do not think much importance should be given to sporting a skull cap as wearing it does not mean anything much. It was time that Gujarat Chief Minister Narendra Modi learns some things from Chouhan and does not show his aversion to skull caps,” said Murad.
http://www.dnaindia.com/india/1872350/report-raza-murad-hits-back-at-uma-bharti-calls-her-c-grade-politician
பிரிவுகள்: குல்லா, கேப், சாப்பாடு, சௌகான், தொப்பி, நிதிஷ்குமார், பட்டினி, மூரத், மோடி, ராகுல்
Tags: ஈத், கஞ்சி, குருமா, குர்மா, குல்லா, கொண்டாட்டம், சௌகான். சௌஹான், தொப்பி, பிரியாணி, பீப், மோடி, ரம்ஜான்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 4, 2013
கஞ்சி குடிக்க ஐந்து நட்சத்திர ஓட்டல் – செக்யூலரிஸ அரசு, காபிர்கள் அழைப்பு, மோமின்களின் கூட்டம், எப்படி முடியும்?
காபிர்கள் அதிலும் நாத்திகர்கள் அதிலும் இந்துவிரோதிகள் நடத்தும் இப்தார் பார்ட்டிகள்: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது[1]:– “இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கி வரும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா, இஸ்லாமியப் பெருமக்களை கெளரவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்[2]. அதே போல் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, வருகிற 5–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை சென்னை, லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் இப்தார் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமியப் பெருமக்கள் [அறிஞர்கள்[3]], தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், அ.தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது[4]. இது ஜூலை 27ம் தேதி நடப்பதாக இருந்து ஏற்காடு எம்.எல்.ஏ பெருமாள் இறந்ததால் தள்ளிவைக்கப்பட்டது[5].
முஸ்லிம்களே மாறி-மாறி போட்டிப் போட்டுக் கொண்டு நடத்தும் பார்ட்டிகள்: ஓட்டல் இம்பீரியல் (எழும்பூர்) ஹாலில் திமுகவிற்கு மற்றும் அதிமுகவிற்கு என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தனித்தனியாக பார்டி நடத்தியது. போதாகுறைக்கு பிரிந்த கோஷ்டிகள் ஓன்றுக்கொன்று வசைமாறி பொழிந்து கொண்டன. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [the Indian Union Muslim League] சென்ற வாரம் திமுகவினருக்கு பார்ட்டி நடத்தியது. இப்பொழுது (ஆகஸ்ட் 2), பாத்திமா முஸாபர் அதிமுகவினருக்கு நடத்தியுள்ளார். வளர்மதி, எஸ். அப்துல் ரஹீம் முதலியோர் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் தான் இரண்டு பார்ட்டிகளும் நடந்துள்ளன. “அவர்கள் வந்தார்கள், உட்கார்ந்தார்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால், அவர்கள் தாம் கட்சி உடைய காரணமாக இருந்தார்கள்”, என்று பாத்திமா முஸாபர் திமுகவை விமர்சித்தார்[6]. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பாரதத்தை இரண்டாகப் பிரித்த மதவாத கட்சி, ஆனால், திராவிட கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்கின்றன. ரம்ஜான் வரும் போது, குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கின்றன. இருநிலைகளிலும், முஸ்லிம்கள் நாத்திக திராவிட கட்சிகள் இந்துக்களை ஏமாற்றி வருகின்றன.
மூன்றுபேரிச்சம்பழங்களும், முன்னூறுதின்பண்டங்களும்: “இப்தார்” என்றால் ரமதான் / ரம்ஜான் மாதத்தில் உபவாசத்தை, உண்ணாநோன்பை முடித்துக் கொள்வது, அதாவது சூரியன் உதிக்கும் முதல் மாலை வரை உண்ணாமல் இருக்கும் முஸ்லிம்கள் பிறகு உண்பார்கள். பொதுவாக “மக்ரிப்” நேரத்திற்குப் பிறகு, முஸ்லிம்கள் மொத்தமாக அல்லது குழுக்களாக சேர்ந்துண்டு அவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொள்வார்கள். முஹம்மது நபி மூன்று பேரிச்சம் பழங்களை உண்டு தனதுஅவ்வாறு உபவாசத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்று பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பலவிதமாக உண்டு விழா நடத்துகிறார்கள். போதாகுறைக்கு இந்தியாவில், கட்சிக்கு ஒரு பார்ட்டி நடத்துகிறார்கள். “நன்றாக / விதவிதமாக சாப்பிடலாம்” என்று இதற்காக ஒரு கூட்டமே வருகிறது.
தீவிரவாதத்திற்கு எதிராக போரை நடத்தி வரும் ஒபாமாவே இத்தகைய பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்.
முஸ்லிம்களின் விரோதி என்று சொல்லப்படும் பிஜேபியே இப்தார் பார்டி நடத்தி வருகிறது, அதில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இப்தார் பார்ட்டிகள் பெரிய வியாபாரமாகி விட்டது: ரோஸா இப்தார், ரமதான் இப்தார், இப்தார் கரீம், இப்தார் பார்டி என்று குறிப்பிடும் இதற்கு அழைப்பிதழ்களும் கொடுக்கப்படுகின்றன. பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன.
இந்தியா முழுவதிலும், அரசு சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கு கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன. தவிர கட்சிகள் சார்பில், முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் நடத்தப் படும் இப்தார் பார்ட்டிகளுக்கும் கோடிகள் செலவழிக்கப்படுக்கின்றன.
இதற்காக “ஸ்பான்சர்சிப்” அதாவது ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியும் அழைப்பிதழ்கள் அனுப்பப் படுகின்றன. இவ்வாறு, இது ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது. ஓட்டல்களில் “இப்தார் மெனு” என்று போட்டு வியாபாரம் செய்கின்றனர்.
2013-2014 ஆண்டுகளில்இம்மாதிரியானதமாஷாக்கள்அதிகமாகவேஇருக்கும்: தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இப்தார் பார்ட்டிகள் நடத்துகின்றன[7]. அடுத்த வருடம் தேர்தல் என்றால், இப்பார்டிகள் அதிகமாகவே இருக்கும் என்று தெரிகிறது. காபிர்-மோமின் கூட்டணிகள் ஜோராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கும். இதில் திராவிடப் போராளிகளான கருணாநிதி, அன்பழகன் போன்றோர் குல்லாபோட்டும், கழற்றி வைத்தும் கஞ்சி குடிப்பர். “உள்ளம் கவர் திருடர்கள்” தாமே, குல்லாப் போட்டவர்கள், போடுகிறவர்கள் பொறுத்துத்தான் போவார்கள். வேதபிரகாஷ் © 04-08-2013
[3] தினமணியில் “அறிஞர்கள்” என்றும், மாலைமலரில் “பெருமக்கள்” என்றும் உள்ளது.
பிரிவுகள்: அதிமுக, இப்தார், உபவாசம், கஞ்சி, காபிர், குல்லா, கொண்டாட்டம், திமுக, நோன்பு, போட்டி, ரமதான், ரமலான், ரமழான், ரம்ஜான், ரோஸா, வசூல், வியாபாரம், வேட்டை
Tags: அழைப்பிதழ், உபவாசம், கஞ்சி, கஞ்சி குல்லா, காபிர், குரான், குல்லா, குல்லா கஞ்சி, குல்லா போட்ட கருணாநிதி, கூட்டணி, கூட்டு, ஜிம்மி, தேர்தல், நோன்பு, பேரம், போட்டி, மோமின், ரமதான், ரம்ஜான், வசூல், வாசிப்பு, வியாபாரம், விளம்பரம், வேட்டை, ஹதீஸ்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜூலை 26, 2013
முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?
வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.
- குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
- இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
- பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
- தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
- முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
- முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி
இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும். தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.
ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.
Ø மிலாது நபி தினத்தன்று விடுமுறை,
Ø உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,
Ø அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,
Ø சிறுபான்மையினர் நல ஆணையம்,
Ø விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,
Ø உருது அகாடமி,
Ø காயிதே மில்லத் மணிமண்டபம்,
Ø இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,
Ø உமறுபுலவருக்கு மணிமண்டபம்,
Ø திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் –
என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].
தி.மு.க., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்): “லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு.க.,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க., ஆட்சியில்,
- மிலாது நபிக்கு விடுமுறை;
- உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
- சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
- ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
- விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].
ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:
1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
2. குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).
3. குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).
4. குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).
பிரிவுகள்: ஆடு, ஒட்டகம், கஞ்சி, கனிமொழி, கருணாநிதி, குருமா, கூழ், கேக், கொழுக்கொட்டை, கோழி, ஜின்னா, திறக்க, துறக்க, தொறக்க, நோன்பு, பிரியாணி, மாடு, ஸ்டாலின், ஹராம், ஹலால்
Tags: அல்லா, ஆடு, ஆத்திகம், கஞ்சி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கஞ்சி குல்லா, கரு, கருணாநிதி, காதர் மொகிதீன், காபிர், குருமா, குல்லா கஞ்சி, கூழ், கைம்மா, கொழுக்கொட்டை, கோழி, ஜின்னா, டி.கே.எஸ்.இளங்கோவன், திறக்க, துரைமுருகன், துறக்க, நாத்திகம், நோன்பு, பழநிமாணிக்கம், பிரியாணி, மாடு, முட்டை, ஸ்டாலின்
Comments: Be the first to comment
மார்ச் 17, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

லல்லு-பாஷ்வான்-குல்லா
ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

Omar Abdullah – Rahul-Mullah-Topi
எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].
வேதபிரகாஷ்
17-03-2013
பிரிவுகள்: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்
Comments: 9 பின்னூட்டங்கள்
செப்ரெம்பர் 2, 2010
காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010
காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு[1]: சிதம்பரம், ஜிஹாதினால் பேதி போன நிலையில், பிள்ளை கார்த்திக்கு, வேறுவிதமான யோசனை வந்து விட்டது போலும். “முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்,” என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். தேசிய நண்பர்கள் குழு சார்பில் புனித ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி. அப்துல்காதர் தலைமை வகித்தார். தாராஷபி தொகுத்து வழங்கினார்.

Anbalagan-without-cap
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேசும் போது, “தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலரும் போது மதுக்கடைகள் மூடப்படும்,” என்றார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: “ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்யவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது[2].

Anbazhagan-with-kulla
கார்த்திக்கின் புதிய கண்டு பிடிப்பு: “மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”: “எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராகத் தான் உள்ளனர்[3]. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையாக தான் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்களது கருத்தை ஆழமாக சொல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மற்ற பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”.

chiru-real life - not reel (நடிகராக இருக்கலாம், அதற்காக இப்படியா மாறுவேட போட்டிப் போன்று சேக் உடையெல்லாம் அணிந்து கொண்டு கஞ்சி குடிக்க வரவேண்டும்?)
திராவிடக் கட்சிகள் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் மதசார்பின்மை போய்விடும்: கார்த்தியின் அடுத்த கண்டு பிடிப்பு: மதச்சார்பின்மை கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு வசதி என்றால் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைக்கின்றன. பா.ஜ.,வின் எதிர்ப்பு இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது[4]. மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்படுகிறது[5]. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி அறிவு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். வறுமையை ஒழிக்க முடியம். விடுதலை கிடைக்கும்[6]. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.விழாவில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ராஜ்குமார், சுந்தரம், சிரஞ்சீவி, கராத்தே தியாகராஜன், , ஹசீனா சையத், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

BJP-Iftar-2005 - பாவம் பிஜேபி காரர்கள் கூட இப்படி குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டியிருக்கிறது!
கஞ்சி-குல்லா லிஸ்ட் நீளுகின்றது: எது எப்படியாகிலும், இந்த தடவை குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கூட்டம் ஜாஸ்தியாகவே உள்ளது. அப்பன்-பிள்ளை என்று போட்டிப் போட்டுக் கொண்டு குல்லா போட்டுக் கஞ்சி குடிக்க வந்து விட்டார்கள் போலும். அடுத்த வருடத்தில், பேரப்பிளைகள் வந்து விடுவார்களோ என்னமோ?

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை இதுதான் போலும்! ஃபிரோஸ் கான் என்கின்ற ஃபிரோஸ் கந்தி என்கின்ற, ஃபிரோஸ் காந்தியாக மாறிய, இந்திராவின் கணவருக்குப் பிறந்த ராபர்டோ ராஜிவ் காந்தி!

Karunanidhi-with-kulla
அப்பா, அப்பப்பா, ஐயோ அப்பா, இந்த படத்தை பிடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது! ஒரு நன்பர் அனுப்பி வைத்தார்! படத்தைப் பெரிது படுத்தினால், ஏதோ டச்-அப் செய்திருப்பது போல இருக்கிறது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் குல்லா போட்டது உண்மை, கஞ்சி குடித்தது உண்மை…………………
[1] தினமலர்,
காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு, செப்டம்பர் 02, 2010
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75927
[2] ஏதோ, ஸ்டாலின் பேசியதற்கெல்லாம் பதிலாக ஏதாவது பேச வேண்டும் என்ற தீர்மானத்தில் தயார் செய்து கொண்டு பேசியது பொல உள்ளது.
[3] அடிக்கடி ஜெயா டிவியைப் பார்க்கும் வழக்கம், கார்த்திக்கு அதிகமாகவே உள்ளது போல உள்ளது.
[4] பாவம் பிஜேபி இனி அதோகதிதான். பிஜேபி இன்னுமொரு காங்கிரஸ் ஆனால் காங்கிரஸ் காலி, இல்லை காங்கிரஸ் இன்னுமொரு பிஜேபி ஆனால், பிஜேபி காலி.
[5] பாவம் ஸ்டாலின், பட்டியல் இட்டுக் காட்டியதை பொய் என்கிறார் போலும்!
[6] ஆஹா, பாவம் முஸ்லீம்கள், அவர்கள் விடுதலையில்லாமல், இவர்தான் விடுதலை கொட்க்கப் போகிறார்போல இருக்கிறது. இணை வைக்கிறாரோ என்னவோ?
பிரிவுகள்: அடையாளம், அமாவாசையும் அப்துல்காருக்கும், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, இந்தியா, இமாம், இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், கஞ்சி, கஞ்சி குல்லா, கருணாநிதி, கர்பலா, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, குல்லா கஞ்சி, கொடியேற்றம், சுன்னத், சுன்னி, சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலார் அரசாங்கம், ஜஹல்லியா, ஜாகிர் நாயக், ஜின்னா, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜெலட்டின் குச்சிகள், தமுமுக, பள்ளிகள், மதரஸாக்கள்
Tags: ஃபத்வா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கஞ்சி, கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கஞ்சி குல்லா, காஷ்மீரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, குல்லா கஞ்சி, சிறுபான்மையினர், ஜிஹாத், பள்ளிகள், புனிதப்போர், மதரஸாக்கள், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள்
Comments: 7 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 31, 2010
குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்!
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் முதல்வர் கலைஞர் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்[1]: சென்ற வருடம் அன்பழகன் குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து உளறிவிட்டு போனார். இந்த தடவை, கருணாநிதி தனது மகனை அனுப்பிவைத்துவிட்டார்போலும். சென்னை, ஆக.31 துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.8.2010) தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில்[2] நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது :

குல்லா-போட்ட-ஸ்டாலின்-மாறன்-2010
31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஸ்டாலின்: “இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு உரையாற்றிய திருப்பூர் அல்தாப் அவர்கள் ஒன்றை நினைவுக் கூறினார். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தவறுவதில்லை என்று கூறினார்[3]. எப்போதும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குபவர் தலைவர் கலைஞர். நானும் 31 ஆண்டுகளாக தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்[4].

H. D. Kumaraswamy 2007
நான் சிறப்பு விருந்தினர் அல்ல, உங்களில் ஒருவன் நான்: என்னுடைய கனிவான கோரிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு முறையும் அழைப்பிதழில் என்னுடைய பெயரை சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகின்றீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களில் ஒருவன் நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்று வருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களில் ஒருவனாக என்னை கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். இங்கு பேசிய பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களும், தம்பி தயாநிதிமாறன் அவர்களும் ஒன்றை குறிப்பிட்டனர். தலைவர் கலைஞர் ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்றும், உங்களுக்காக நடக்கும் ஆட்சி என்றும் குறிப்பிட்டார்கள். எதிர் கட்சித் தலைவர் நம்முடைய ஆட்சியைப் பற்றி கூறும் போது மைனாரிட்டி ஆட்சி என்று கூறுவார்கள். அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் இது மைனாரிட்டி ஆட்சி தான். இஸ்லாமிய பெருமக்கள் போன்ற மைனாரிட்டி மக்களுக்கான ஆட்சி என்று தொடர்ந்து பதில் கூறுவார்.

Omar Abdullah - Rahul-Mullah-Topi
முஸ்லீம்களுக்காக செய்யப்பட்ட சாதனைப்பட்டியல்: கலைஞர் அவர்கள் எத்தனையோ சிறப்பான திட்டங்களை சிறுபான்மை மக்களுக்காக வகுத்து நிறைவேற்றி வருகிறார். தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் பல சாதனைகளை செய்து வருகிறார். அந்த சாதனை குறிப்புகளை பார்க்கும் போது, அது ஒரு பெரும்பட்டியலாக உள்ளது.
1969ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை கடந்த அ.தி.மு.க. அரசு 2001 இல் ரத்து செய்தது. 15.11.2006 முதல் மீலாது நபி நாளை அரசு விடுமுறை நாளாக மீண்டும் அறிவித்தது தலைவர் கலைஞர் அவர்களின் கழக ஆட்சியில் தான். 1973 ஆம் ஆண்டு உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கலைஞர் தான்.
1974ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லுரிக்கு கண்ணியம் மிக்க காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்டியதும் தலைவர் கலைஞர்தான்.
1989ஆம் ஆண்டு இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் சிறுபான்மையினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது.
1998 இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பது 2200 ஆக உயர்த்தப் பட்டு, 2008 இல் 2400 ஆகவும் உயர்த்தப்பட்டது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். 1999ஆம் ஆண்டு வரை ஹஜ் புனிதப் பயணத்திற்கு குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையை கை விட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியதும் தலைவர் கலைஞர்தான்.
1999ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் தனியே பிரித்து தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று உருவாக் கியவர் கலைஞர். ஆனால், செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு 2003இல் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் இணைத்துவிட்டது. 2006இல் ஆட்சிப் பொறுப் பிற்கு வந்த கலைஞர் மீண்டும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை தனியே செயல்படச் செய்து, அதன் மூலம், சிறுபான்மைச் சமுதாய மக்களுக்குத் தி.மு.க. அரசு தொடர்ந்து உதவி வருகின்றது.
2000 ஆம் ஆண்டு இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப் பட்டு 21.7.2000 அன்று உருது அகாடமி தொடங்கப்பட்டது. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டினை 15.9.2007இல் அண்ணா அவர்களின் 99ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கியதும் தலைவர் கலைஞர் அவர்களே.
2008 இல் சீறாப் புராணம் பாடிய உமறுப் புலவருக்கு எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப் புலவர் மணிமண்டபம் ஏற்படுத்தியதும் தலைவர் கலைஞர்தான். உலமாக்கள் நல வாரியம் 24.8.2009 அன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழக மேலவையிலும், டில்லி மேலவையிலும் முஸ்லிம் பிரதிநிதிகளை இடம் பெறச் செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
2006 ஆம் ஆண்டு 5 ஆம் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு இரண்டு இஸ்லாமியர்களை தமிழக அமைச்சர்களாக அமர்த்தி அழகு பார்த்தவரும் கலைஞர் தான். தொடர்ந்து முஸ்லிம் பெருமக்களுக்கு பாடுபட்டு, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தலைவர் கலைஞருக்கும், கழக ஆட்சிக்கும் பக்க பலமாக இருந்து துணைபுரிய நீங்கள் எல்லாம் உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டு கொள்கிறேன்[5]. சிறப்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த திருப்பூர் அல்தாப் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்”, இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

mulayam singh yadavs iftar diplomacy muslims
ஜெயலலிதாவின் இஃப்தார் பார்ட்டி[6]: அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது: “மதத்தின் மீது மாறாப் பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல், ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகியவை இஸ்லாத்தின் ஐந்து தூண்களாகும். இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் இடப்பட்ட கட்டளை நோன்பு! பெரியவர் முதல் சிறியவர் வரை உணவு உண்ணாமல், நீர்கூட பருகாமல் நோன்பினை மேற்கொண்டு உள்ளத் தூய்மையுடன் இறைவனை வழிபட்டு, இல்லாதார்க்கு தர்மம் செய்யும் பேரு இந்த ரமலான் மாதத்தில்தான் கிடைக்கிறது. இந்நோன்பிருத்தல் மூலம் இறைப் பற்று அதிகமாவதுடன், அறிவியல் அடிப்படையிலும் மிகச் சிறந்த பயனளிக்கிறது. பிறருக்கு உதவி செய்து வாழ்பவர்களை காலம் என்றும் ஏற்றிப் புகழும் என்பதற்கு ஒரு சிறு கதையை சொல்கிறேன்.

Jaya Participates Iftar Party
ஜெயலலிதா கூறிய கதை: ஒரு முறை கால்பந்து, இறைவனிடம் போய் முறையிட்டதாம். “நானும் புல்லாங்குழலும் காற்றை மையமாக வைத்துத்தான் இயங்குகிறோம். புல்லாங்குழலை எல்லோரும் உதட்டோடு வைத்து கொஞ்சுகிறார்கள். ஆனால், என்னை மட்டும் எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள். இறைவா! உனது படைப்பில் ஏன் இந்தப் பாகுபாடு?” என்று கால்பந்து ஆதங்கத்தோடு கேட்டதாம். உடனே இறைவன் சொன்னாராம் “நீ சொல்வது உண்மைதான். புல்லாங்குழலும் நீயும் காற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறீர்கள். புல்லாங்குழல், தான் உள்வாங்கும் காற்றை அழகிய இசையாக உடனே பிறருக்கு கொடுத்துவிடுகிறது. ஆனால், நீயோ, உள்வாங்கும் காற்றை யாருக்கும் கொடுக்காமல் உனக்குள்ளே வைத்துக் கொள்கிறாய். அதனால்தான் உன்னை எல்லோரும் எட்டி எட்டி உதைக்கிறார்கள்.” இந்தக் கதை சொல்லுகின்ற கருத்து என்னவென்றால், கருமிகளை காலம் எட்டி உதைத்துவிடும்; ஆனால், கொடுத்து உதவுகிற ஈகை குணம் கொண்டவர்களை வரலாறு தன் குறிப்பேட்டில் என்றும் பதித்து வைத்துக் கொள்ளும், புகழ்ந்து மகிழும் என்பதுதான். இதனை வலியுறுத்துவது போலவே இஸ்லாம் மதத்தின் இணையில்லா தத்துவங்களில் ஒன்றாகவே பிறருக்கு உதவிடும் உன்னத நோக்கம் இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் வலியுறுத்தப்படுகிறது. அத்தகைய உயரிய நோன்பினை நோற்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் நடத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என்றார் ஜெயலலிதா.

லல்லு-பாஷ்வான்-குல்லா
கருணாநிதி கலந்து கொண்டால், இந்துமதத்தைப் பற்றி அவதூறு பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்: கருணாநிதி குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டு, பல தடவை இந்து மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஆனால், வேடிக்கையென்னவென்றால், இணைத்தளங்களில் கூட, ஒரு புகைப்படம்கூட இல்லாமல், நீக்கியிருப்பது, பெரிய அதிசயம்தான். சென்ற வருடம், கருணாநிதிக்கு, உடல் நலம் சரியில்லை என்று, சென்னை, செப். 17, 2009 அன்று அன்பழகன் கலந்துகொண்டார்: “”கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது” என்று க. அன்பழகன் தெரிவித்தார். “ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை’யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசினார்[7].

ராவ்-குல்லா-ஆந்திரா
காஃபிர் பணத்தில் இஃப்தார் பார்ட்டி நடத்தலாமா, சாப்பிடலாமா? இஃப்தார் பார்ட்டி என்றாலே, செக்யுலார் அரசு தன் செலவில், இப்படி விருந்துகளைக் கொடுத்து லட்சக் கணக்கில் பணத்தை செலவவட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி, காஃபிர்கள் கொடுக்கும் பணத்தில், இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி, கஞ்சி குடிக்கலாமா? நன்றாக சாப்பிடலாமா? அதுமட்டுமல்லாது, எல்லா அரசியல்வாத்களும், ஏதோ மாறுவேடப் போட்டி நடத்துவது போல, வகை-வகையான குல்லாக்கள் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிக்க வந்து விடுகிறார்கள்!
[1] http://www.viduthalai.periyar.org.in/20100831/news16.html
[2] http://thatstamil.oneindia.in/news/2010/08/31/dmk-protector-minorities-rights-stalin.html
[3] இப்போழுதெல்லாம் ஏன் கலந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை. முஸ்லீம்களே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களா, அல்லது கருணாநிதியே செல்வதை நிறுத்தி விட்டாரா அல்லது அவ்வாறு யாராவது அறிவுரை சொன்னார்களா?.
[4] அதாவது 31 வருடங்களாக, குல்லா போட்டு கஞ்சி குடிக்கிறாராம், அதனால் முஸ்லீம்களில் ஒருவராகி விடுவாரா?
[5] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=73811
[6] http://www.hindu.com/2010/08/19/stories/2010081954920400.htm
பிரிவுகள்: இமாம்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாம், உலமா வாரியம், உலமாக்கள், கஞ்சி, கஞ்சி குல்லா, கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குல்லா, குல்லா கஞ்சி, தயாநிதி மாறன், ரமஷான், றமலான், றமழான், ஸ்டாலின்
Tags: இஃப்தார், கஞ்சி, கஞ்சி குல்லா, காஃபிர், குல்லா, குல்லா கஞ்சி, நாத்திக காஃபிர், நோன்பு திறப்பது, மோமின்-காஃபிர், ரமலான், ரமளான், ரமழான், ரம்ஜான், றமளான், றமழான்
Comments: 10 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்