Posted tagged ‘கஜ்வா இ ஹிந்த்’

இந்துக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் இறுதி எச்சரிக்கை – இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் – கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

ஜனவரி 6, 2016

இந்துக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் இறுதி எச்சரிக்கை – இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் – கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

False propaganda of Zaid Hamid - The Express Tribune, Pakistan

இந்துக்கள் முஸ்லிம்களாக மாற வேண்டும் இறுதி எச்சரிக்கை[1]: “இந்த செய்தி உலகத்தில் உள்ள எல்லா இந்துக்களுக்கும், பண்டிட்டுகள், சூத்திரர்கள், தலித்துகள் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக பண்டிட்டுகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்களுக்கு மொஹம்மது தான் கடைசி நபி என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்துக்கள் தங்களது புனித நூல்களை விட்டுவிட்டு இஸ்லாத்துக்கு வரும்படி அழைக்கிறோம். இந்தியாவில் உள்ள முஜாஹித்தீன் மற்றும் முஜ்ஜின்கள் இதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதுதான் அவர்களுக்கு இறுதியான செய்தியாகும்”, என்று இணைதளத்தில் வெளியிட்டுள்ளான். அதாவது, இந்துக்கள் குரானை ஏற்றுக் கொள்ள வேண்டும், முஜாஹித்தின்களுக்கு பணிய வேண்டும், இல்லையென்றால் செத்து மடிய வேண்டும் என்று அறிவித்தான்[2]. இத்தகைய வார்த்தைப்பிரயோகமே, இவன் உள்நோக்கத்துடன் பேசுகிறான் என்று தெரிகிறது. ஏனெனில், இந்தியாவில், இவனைப்பற்றி யாருக்கும் தெரியாது எனலாம், ஆனால், பிராமணர், சுத்திரர், தலித்துகள் என்றெல்லாம் பேசுவது, மக்களைப் பிரிக்க செய்யும் சதி என்றாகிறது.

Jamia Uloom ul Islamia Binori Town and Jamia Binoria International have jointly issued a Fatwa declaring Zaid Hamid and his followers as Kafir.

ஜெயித் ஹமீதால் பாகிஸ்தானில் ஏகப்பட்டப் பிரச்சினை: உள்நாட்டிலேயே, இவன் மீது பல குற்றச்சாட்டுகள், வழக்குகள் முதலியன போடப்பட்டுள்ளன. இவன் ஐ.எஸ்.ஐயின் ஏஜென்ட், மாதம் ரூ. 6,06,500/- பெற்றுவருகிறான், பல பத்திரிக்கையாளர்கள், இஸ்லாமிய பண்டிதர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான் என்றெல்லாம் செய்திகள் உள்ளன[3]. இமாத் காலித் என்ற அவரது ஆள், பாகிஸ்தானிய ராணுவ தளபதி அஸ்பக் பர்வேஸ் கயானியை [army chief Gen Ashfaq Parvez Kayan] ஒலைசெய்ய திட்டமிட்டான் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[4]. ஜெயித் ஹமீத் மற்றும் யூசுப் கஸாப் குறிப்பிட்ட ஒற்றுமைகளைக் கொண்டுள்ளனர். தங்களை எதிர்ப்பவர்கள் எல்லோருமே மொஹம்மது நபிக்கு எதிரானவர்கள், அதனால், அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று போதித்து வருகின்றனர். ஜலால்புரி கொலைவழக்கில் எப்.ஐ.ஆரில் இவன் பெயர் உள்ளது[5].  TTP தன்னை குர்ஸான் ராணுவம் என்று கூறிக்கொள்கிறது, ஜெயித் ஹமீதோ தன்னை “கஜ்வா-இ-ஹிந்த்”தின் தலைவன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளான். மேலும், இவன் தன்னை “மஹதி” மற்றும் “நபி” என்றெல்லாம் அழைத்துக் கொண்டது, ஆசார முஸ்லிம்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஜாமியா உலூம் உல் இஸ்லாமியா பினோரி டவுன் மற்றும் பினோரியா இன்டெர்நேஷனல், இவன் மற்றும் இவனைப் பின்பற்றுபவர்கள் “காபிர்கள்” என்று அறிவிக்கப்பட்டு, பத்வா 06-12-2011 அன்று கொடுக்கப்பட்டுள்ளது. இவன், மற்றவர்களைக் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இவனே ரா மற்றும் யூதர்களின் ஏஜென்ட், பாகிஸ்தானிய ராணுவம் இவனை வெளிப்படுத்தி காட்டியுள்ளது என்றெல்லாம் விவகாரங்கள் உள்ளன.

Zaid Hamid used ISI money to conspire against democracy, judiciary army and media 2013

பாகிஸ்தானின், “தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்” இவனது இரட்டை வேடத்தை, போலித்தனத்தை வெளிக்காட்டியுள்ளது[6].

  1. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் உண்மையில் முஸ்லிம்கள் தான், அவர்கள் பாகிஸ்தானுக்குத் தான் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
  2. தங்கத்தை வைத்து பணத்தை மதிப்பீடு செய்யும் முறை, யூதர்களின் சதியாகும்.
  3. பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்த்தியவகள் எல்லோருமே இந்துக்கள் தாம். ஏனெனில், அவர்கள் சுன்னத் செய்து கொண்டிருக்கவில்லை.
  4. தில்லி கோட்டையின் உச்சியில் பாகிஸ்தான் கொடி விரைவில் பறக்கும்.
  5. முஸ்லிம் அல்லாத நாடுகளில் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்று வெடிக்கமுடியாமல் உபயோகமற்று விடும் அல்லது அவர்களுடைய நாடுகளிலேயே வெடித்து விடும்.
  6. 9/11 எப்படி மேற்கத்தைய ஜையோனிஸ திட்டத்தினால் ஏற்படுத்தப் பட்டதோ, அதேபோல, 2008 குண்டுவெடிப்பும் “ஹிந்து-ஜையோனிஸ”க் கூட்டு சதியால் ஏற்படுத்தப்பட்டது.
  7. ஆப்கானிஸ்தானத்தில், நஜிபுல்லாவின் உடல் எப்படி தொங்கவிடப்பட்டதோ, ந்தே போல, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் செத்த உடல்கள், இஸ்லாமாபாதில், கொம்புகளில் தொங்கவிடப்படும்.

முல்லாக்கள் எதிராக திரண்டது

ஜெயித் ஹமீத் காபிர் என்றால், இந்துக்களைக் கொல் என்று எப்படி சொல்கிறான்?: ஆக, 06-12-2011 அன்று முதல், இவனே காபிர் நிலையை அடைந்த பிறகு, இவன் மற்றவர்களை “காபிர்” என்று குறிப்பிட அதிகாரம் உள்ளதா? இல்லை என்றால், யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் பத்வா கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், அதை அமூல் படுத்துவதோ, அமூல் படுத்தாததோ, அவரவர் சௌகரியம், சந்தர்ப்பவாதம் மற்றும் ஆதிக்கத்தின் தன்மையைப் பொறுத்தது என்ற நிலையில் உள்ளது என்றாகிறது. இருப்பினும், இவன் இந்துக்கள் கொல்லப்பட வேண்டும் என்ற கொலைவெறியோடு பேசிக் கொண்டிருக்கிறான். சல்மான் ருஷ்டிக்கு பத்வா போட்ட போது, பிரபலப்படுத்தி கலாட்டா செய்தார்கள். ஆனால், இவன் தன்னையே நபி, மஹதி என்றெல்லாம் கூறிக்கொண்டாலும், பத்வா போட்டு கண்டுகொள்ளமல் இருக்கிறார்கள். இருப்பினும், பாகிஸ்தான் ஒரு “இஸ்லாமிய நாடு” என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளது. இவையெல்லாம் இஸ்லாத்தின் முரண்பாடா, முகமதியர்களின் முரண்பாடா, பத்வாக்களின் செய்ல்பாடடற்றத் தன்மையா?

ஜெயித் ஹமீத் கொல்லப்பட்டு விட்டான்

சவுதி அரேபியாவில் கைது, சிறை, விடுவிப்பு முதலியன (ஜீன்அக்டோபர் 2015): கடந்த ஜூன் மாதம் 2015ல் சவுதி அரேபியாவில் இவன் கைது செய்யப்பட்டான்[7]. ஜெயித் ஹமீத் தனிப்பட்ட முறையில் அங்கு சென்ற போது, சவுதி அரேபிய அரசாட்சிக்கு எதிராக பேசிய குற்றத்திற்காக அங்கு கைது செய்யப்பட்டது  தெரிவிக்கப்பட்டது[8]. எட்டாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1000-1200 கசையடி தண்டனை விதிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்லப்பட்டது[9]. செய்திகளும் தாராளமாக வெளிவந்தன. சிலர் அவன் கொலையுண்டான் என்று கூட டுவிட்டரில் செய்தியை வெளியிட்டனர். பிறகு, அக்டோபரில் விடுவிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன[10]. பாகிஸ்தானிய பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவு அதிகாரிகள் அவனது விடுதலைக்குப் பாடுபட்டதாகத் தெரிகிறது[11]. அந்த அளவுக்கு அதிகாரிகள் அவனுக்கு ஏன் உதவ வேண்டும் மற்றும் வக்காலத்து வாங்க வேண்டும் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர்களது தொடர்புகள் நிரூபணம் ஆகின்றன. பதிலுக்கு அவனும் தான் நன்றாக உள்ளேன், பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து விட்டேன், என்று டுவிட்டரில் பதிலளித்தான். இதற்குக் கூட, ரா தான் காரணம் என்று டுவிட்டரில் பதிவு செய்தான்[12]. ஆனால், தான் “2×3” அறையில் வைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்டான்.

© வேதபிரகாஷ்

06-01-2016


 

[1] http://albakistan.com/2011/09/07/hindus-convert-to-islam-or-get-killed-zaid-hamid/

[2] http://isi-intersevicesintelligence.blogspot.in/2011/01/pakistan-army-and-isi-links-with-zaid.html

[3] Emaad Khalid who was Zaid Hamid’s Staff Officer, Media Coordinator and Personal Assistant/Accountant from 2009 to 2013, has finally decided to leave Zaid Hamid and Brasstacks. He has written a 111 page document that exposes all the dirty works of Zaid Hamid. It includes his financial & moral corruption and more importantly his anti-state agenda. Some important points from the document are: 1) Zaid Hamid receives Rs. 6,06,500 from ISI per month. 2) Zaid Hamid has a hitlist that includes prominent journalists like Hamid Mir, Najam Sethi, Nusrat Javed and scholars like Hafiz Tahir Mahmood Ashrafi. Emaad Khalid has also written about Zaid Hamid’s role in the murder of Maulana Saeed Ahmad Jalalpuri in March, 2010. 3) Zaid Hamid is instigating junior officers of Pakistan Army to stage a coup against COAS General Ashfaq Parvez Kiyani and the Federal Goverment. https://zheupdates.wordpress.com/category/exposition/page/3/

[4] http://www.dawn.com/news/1057478

[5] http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/national/zaid-hamid-named-in-jalalpuri-murder-fir-330

[6] http://tribune.com.pk/story/11701/will-the-real-zaid-hamid-please-stand-up/

[7] http://arynews.tv/en/fo-confirms-zaid-hamids-arrest-in-saudi-arabia/

[8] http://dunyanews.tv/en/Pakistan/286239-Zaid-Hamid-arrested-in-Saudi-Arabia-for-speaking-

[9] Prominent hardline commentator and self-styled ‘Defense Analyst’ Zaid Hamid has been sentenced for eight years and 1,200 lashes for criticizing Saudi government, according to circles close to Mr. Hamid and in touch with recent developments in his case.

http://en.dailypakistan.com.pk/pakistan/zahid-hamid-sentenced-to-eight-years-prison-1200-lashes-for-criticising-saudi-govt/

[10] http://en.dailypakistan.com.pk/headline/zaid-hamid-released-by-saudi-arabia-back-in-pakistan/

[11] Sources close to Hamid claimed that Pakistani security agencies and foreign office officials played key in his release. Pakistan’s strong stance pushed Saudi authorities to change their mind about convicting him for the charges of hate speech. Earlier there were rumours circulating online that Zaid Hamid was possibly killed during his detention Saudi Arabia. However the family of the renowned analyst has dismissed the claims saying that “he is in good health and people should not listen to any propaganda news of his death.”

[12] http://en.dailypakistan.com.pk/headline/revealed-why-zaid-hamid-was-detained-in-saudi-arabia/

இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கருவும் இன்னொரு பாகிஸ்தானிய கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

ஜனவரி 6, 2016

இந்துக்களை கொல்ல வேண்டும் என்று கருவும் இன்னொரு பாகிஸ்தானிய கொலைவெறியன் ஜெயித் ஹமீத்!

Hindus convert to Islam or get Killed Zaid Hamid

 ஜெயித் ஹமீத் (Zaid Hamid) என்கின்ற சையது ஜெயித் ஜமான் ஹமீது [Syed Zaid Zaman Hamid] என்ற இன்னொரு பாகிஸ்தானி “அரசியல் விமர்சகர்” என்ற ரீதியில் பல பொய்யான விசயங்களைப் பரப்பி வருகிறான்.

  1. இந்தியாவின் ரா, இஸ்ரேலின் மொஸ்ஸாத் மற்றும் அமெரிக்காவின் சிஐஏ தான் பாகிஸ்தானின் நலன்களுக்கு எதிராக வேலை செய்கின்றன [‘Zionist/Hindu/Western lobbies’ working against the political interests of Pakistan and Islam],
  2. யஹூதி, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ [Yahoodi, Hindu and Christian masters] எஜமானர்களுக்காக சில பாகிஸ்தானிய துரோகிகள் வேலை செய்கின்றனர்,
  3. ஓரின சேர்க்கை என்பது இந்திய கலாச்சாரத்திலிருந்து உருவானது [‘sheds light on the filthy Indian culture in which homosexuality is the ingredient of Hinduism.’],
  4. பாகிஸ்தானுக்கு எதிராக பல ஸயோனிஸ்ட்-ஹிந்து-மேற்கத்தைய சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன [many Zionist-Hindu-Western. lobbies working in the region as ‘Pakistan ke khilaf sazish’ (conspiracies against Pakistan)]

என்று பேசி வருகிறான்[1].  “ஹிந்து ஸயோனிஸ்டு”களின் கூட்டு சதி என்று 2008 மும்பை தாக்குதல் பற்றி விமர்சித்தான். நரேந்திர மோடியின் பாதுகாப்பு செயலர், அஜித் டோவல் பற்றி அடிக்கடி தாறுமாறாக விமர்சிப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளான். பாகிஸ்தான் டிவி செனல்களில் இவனை கூப்பிட்டு பேச வைப்பதால், புகழ் பெற்றுள்ளான். பொதுவாக இந்துக்களுக்கு எதிராக, துவேசமான கருத்துகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளான். சில பாகிஸ்தானியர் அதனை விமர்சித்துள்ளனர்[2].

Zaid Hamid Calls for Beheading of Hindus in Afghanistan ...

பாகிஸ்தானில் இவனது நிலை: ராவல்பிண்டியில் பிராஸ்டேக்ஸ் [BrassTacks] என்ற ஆலோசனை நிறுவனம் வைத்து நடத்தி வருகிறான்[3]. டிவி தொலைக் காட்சிகளில் சூபி-ஜிஹாதித்துவம், வெறிபிடித்த-அதித்தீவிரமான நாட்டுப்பற்று மற்றும் ராணுவத்தை ஆதரிக்கும் போக்கில் [Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance] பேசுவது, பல இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இவனுக்கு டுவிட்டரில் 108,000 பின்பற்றுபவர்கள் மற்றும் பேஸ்புக்கில் 573,000 லைக்குகள் கொண்டுள்ளான். ஆப்கானிஸ்தான் ஹிஹாதில் பங்கு கொண்டுள்ளாதக் கூறிக்கொள்கிறான்[4]. அல்லமா இக்பாலினால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிகொள்ளும் இவன், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளன். ஆப்கானிஸ்தானிய ஜிஹாத் [Afghan Jihad], கஜ்வா-இ-ஹிந்த்[‘Ghazva-i-Hind’], அலித் பின் வாலித் [Khalid bin Waleed], ஒட்டோமான் சுல்தான் மொஹம்மது பதே [Ottoman Sultan Mohammad Fateh] முதலியவற்றைப் பற்றி எழுதியுள்ளான்.

Zaid Hamid asks to wage jihad against India and isreal

கஜ்வா இந்து [Ghazwa-e-Hind]: மற்ற இந்து-விரோதிகளைப் போல, இவனும், அந்த “ஹிந்துஸ்தானத்தின் மீதான போர்” என்ற சித்தாந்தத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது தெரிகிறது. நபிகள் நாயகம் தனது இறுதிநாட்களில் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது இந்தியாவில் போர் ஒன்று நடக்கும். அதற்கு பெயர் “கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்று நபிகள் நாயகம் தெரிவித்தார்[5]. இந்தியாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களுக்கு, தன்னுடைய முந்தைய கூட்டாளிகளின் அந்தஸ்து கிடைக்கும், அதாவது, முஜாஹித்தீன் / சகாபாக்களின் நிலை கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான இந்த ஜிஹாத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள், இந்துக்களைக் கொல்வார்கள், மற்றவர்களை சிறை பிடிப்பார்கள். அடிப்படைவாத, ஜிஹாதியும் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும், இந்தியாவை இஸ்லாம் ஆக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக பேசி வருவது விசித்திரமாக உள்ளது. இத்தகைய விசயங்களை வைத்துக் கொண்டு வெறிபிடித்த முஸ்லிம்கள், பாகிஸ்தானிய ஜிஹாதிகள் மற்றும் இதர அடிப்படைவாதிகள் விசத்தைக் கக்கி வருகின்றனர் என்று தெரிகிறது.

Zaid Hamid, Guardian Angel of Pakistan Army and ISI எட்ச்

கஜ்வா இந்து ஜிஹாத் மூலம் பழைய முகலாய அல்லது இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும்: ஜெயித் ஹமீதைப் பொறுத்த வரையிலும், தனது மூதாதையர்கள் ஹிந்துக்கள் தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறான். அதாவது, தான் மற்ற இதர மூதாதையர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தப்பித்துக் கொண்டான் என்று சொல்கிறான் போலும். ராணுவ விமர்சகர் (defense analyst) என்று தன்னை சொல்லிக் கொள்ளும், இவன் எப்பொழுதுமே, இந்தியாவுக்கு விரோதமாகவே பேசிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. முந்தைய முகலாய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும் போன்ற பேச்சுகளும் விடியோக்களில் உள்ளன. இந்துக்கள் மதம் மாற வேண்டும், இல்லை கொல்லப்படவேண்டும் என்று பேசும் விடியோ இங்குள்ளது[6]. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களின் தலைகள் வெட்டப்பட வேண்டும் [झैद हामिद का अफगानिस्तान में हिन्दुओ के कत्लेआम का ऐलान] என்று பேசும் விடியோ இங்குள்ளது[7]. அகண்ட பாகிஸ்தான் அமைக்க வேண்டும், பாகிஸ்தான் இந்தியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் பேசிவருவதும் வேடிக்கையாக இருக்கிறது. 2016-புதிய வருடத்திற்கான திட்டம்-முடிவு என்பதில் கூட ஹிந்துக்களைப் பற்றி கேவலமாக கமென்ட் அடித்துள்ளான்[8]. மற்றவர்களைப் போல அந்த ஆதாரமில்லாத ஹதீஸ்கள் மீதுதான், தன்னுடைய வாதங்களை வைத்துள்ளான் என்று தெரிகிறது.

ஜெயித் ஹமீத் ஐஎஸை ஏஜென்ட்

அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில்ஹிந்த்பற்றிக் காணப்படுவது: ஹதீஸ்கள் என்பது மொஹம்மது இப்படி சொன்னார் என்று அவரது உறவினர்கள், நண்பர்கள் கூறியுள்ளதாக பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். அம்மதத்தலைவர்கள், காஜிக்கள், உலேமாக்கள் இடையே கருத்து வேறுபாடுள்ளது. சில உண்மை, சில பொய்; சில அதிகாரப்பூவமானது, சில இடைசெருகல், என்று பலவித சச்சரவுகள் உள்ளன. அத்தகைய வகையில் அதிகாரப் பூர்வமில்லாத, மெய்யானது என்று ஏற்றுக் கொள்ளப்படாத ஹதீஸ்களில் “ஹிந்த்” பற்றிக் காணப்படுவது என்னவென்று பார்ப்போம். அவற்றைப் பற்றி “ஹிந்த்” என்ற ஹதீஸுக்கள் உள்ளதாக ஐந்து குறிப்பிடப்படுகின்றன[9]. நபியின் மனைவிகளில் ஒருத்தி, இந்தியாவிலிருந்து வந்தவள் என்றும் குறிப்பிள்ளது. பிறகும் அவர் எப்படி இந்தியாவுக்கு எதிராக இருந்தார் என்று தெரியவில்லை.

  1. ஹஜரத் அபு ஹுரைராஹ் (ரலி), மொஹம்மது நபி தன்னிடம் சொன்னதாக கூறுவது[10], “இந்த உம்மாவில், படைகள் சிந்த்-ஹிந்த் நோக்கிப் புறப்படும்”.
  1. அல்லா நெருப்பிலிருந்து இரண்டு குழுக்களைக் காப்பாற்றியுள்ளார். ஒன்று இந்தியாவைத் தாக்க செல்லும், இன்னொன்று மரியத்தின் மகனுடம் இருக்கும் சைனியத்தை எதிர்க்கும்[11].
  1. நிச்சயமாக, இரு படை இந்துஸ்தானுடன் சணையிடும்……………..[12].
  1. ஜெருசலேத்தின் அரசன் ஹிந்துஸ்தான் நோக்கி படையுடன் செல்வான். ஹிந்த் நாட்டை அழிப்பான், செல்வங்களைக் கொள்ளையெடிப்பான், அவற்றை வைத்து, ஜெருசலேத்தை அலங்கரிப்பான். தஜ்ஜல் வரும் வரை அவர்கள் ஹிந்துஸ்தானத்தில் தங்கியிருப்பார்கள்[13].
  1. உம்மாவின் சில வீரர்கள் ஹிந்துஸ்தானுடன் போரிடுவார்கள். அல்லா அவர்களுக்கு உதவுவான், இந்திய அரசர்கள் சங்கிலில் சிக்குவதையும் அவர்கள் காண்பார்கள். பிறகு அவர்கள் சிரியாவை நோக்கி செல்வார்கள், அங்கு மரியத்தின் மகனை சந்திப்பார்கள்[14].

“சிந்த்-ஹிந்த்” என்ற வார்த்தை அரேபிய மொழியில் “சித்தாந்த்” என்ற முறையிலும் உபயோகத்தில் உள்ளது. அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்களை பாக்தாத்திற்கு வரவழைத்து, சமஸ்கிருத நூல்கள், அரேபியத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதனால், அரேபியர் மூலம் கலை, விஞ்ஞானம், மருத்துவம், வானியல் மற்றும் தொழிற்நுட்பம் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. ஆனால், அவற்றையெல்லாம் விடுத்து, இந்துக்களைக் கொல்வோம் என்று வெறியூட்டும் இவனது திரிபு விளக்கத்தை கவனிக்க வேண்டும்.

 

© வேதபிரகாஷ்

06-01-2016

[1] http://www.dawn.com/news/812980/in-defence-of-reason

[2] Nadeem F. Paracha (11 August 2009). “In defence of reason”Dawn. Retrieved 11 September 2015.

[3] http://www.brasstacks.pk/

[4] In the world of Pakistani media personalities, he is truly a strange combination, bringing together elements of Sufi-jihadi Islamism, revanchist ultra-nationalism and an unabashed pro-military stance. For example, he has 108,000 followers on his Twitter account, while Hamid’s official Facebook page has over 573,500 ‘likes’.  He also claims to have fought in the Afghan Jihad; http://www.dawn.com/news/1191979

[5] http://defence.pk/threads/allah-has-bestowed-pakistanis-the-honour-to-destroy-india-kill-hindus-islamic-cleric.416392/

[6] https://www.youtube.com/watch?v=oRe7CgPgK_U

[7] https://www.youtube.com/watch?v=CT30KDfDD9A; http://tune.pk/video/2800610/zaid-hamid-calls-for-beheading-of-hindus-in-afghanistan

[8] 2016 will be my year – Zaid Hamid –“After my return from Saudi Arabia where I enjoyed their traditional hospitality in a 2×3 cell, I am slowly realising that 2016 will be my year. I have been whipped up to a frenzy on this inevitability by my friends and fellow revolutionaries. First and foremost, to all those who said that I have been humiliated in 2015, all I can say is that it won’t hurt me because I am used to it. Plus, you are probably the child of some filthy Hindu-Zionist dog. During my time in prison I worked on 17th Generation Warfare methods that I shall slowly try and disseminate in between my public statements, trying to butter Raheel Shareef. I have discovered how to weaponise the gas from eating prison food lobia. It can be deployed in place of tactical small nukes. I am also looking forward to achieving the pinnacle of my conspiracy-laden and hate speech-driven media career this coming year by finally getting a guest spot on Comedy Nights with Kapil.”

http://tns.thenews.com.pk/new-year-resolutions-zaid-hamid-hamza-abbasi-bilal-lashari-ishaq-dar/#.VoxXkbZ95dg

[9] http://english.ghazwa-e-hind.org/

[10] “In this Ummah, the troops would be headed towards Sindh & Hind”,

http://english.ghazwa-e-hind.org/hadith-1-ghazwa-e-hind-english/

[11] “Two groups amongst My Ummah would be such, to whom Allah has freed from fire; One group would attack India & the Second would be that who would accompany Isa Ibn-e-Maryam (A.S.).”

http://english.ghazwa-e-hind.org/hadith-2-ghazwa-e-hind-english/

[12] “Definitely, one of your troop would do a war with Hindustan, Allah would grant success to those warriors, as far as they would bring their kings by dragging them in chains / fetters. And Allah would forgive those warriors (by the Blessing of this great war). And when those Muslims would return, they would find Hazrat Isa Ibn-e-Maryam(A.S.) in Syria (Shaam)”.

http://english.ghazwa-e-hind.org/hadith-3-ghazwa-e-hind-english/

[13] “A King of Jerusalem (Bait-ul-Muqaddas) would make a troop move forward towards Hindustan. The Warriors destroy the land of Hind; would possess its treasures, then King would use those treasures for the décor of Jerusalem. That troop would bring the Indian kings in front of King (of Jerusalem). His Warriors by King’s order would conquer all the area between East & West. And would stay in Hindustan till the issue of Dajjal”.

http://english.ghazwa-e-hind.org/hadith-4-ghazwa-e-hind-english/

[14] “Some people of My Ummah will fight with Hindustan, Allah would grant them with success, even they would find the Indian kings being trapped in fetters. Allah would forgive those Warriors. When they would move towards Syria, then would find Isa Ibn-e-Maryam (A.S.) over there.”

http://english.ghazwa-e-hind.org/hadith-5-ghazwa-e-hind-english/

இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார் – சொல்வது இர்பான் உல் ஹக்!

ஜனவரி 5, 2016

இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார்சொல்வது இர்பான் உல் ஹக்!

Allah has given Pakistan honour to kill Hindus- JANUARY 3, 2016 6-21 PM BY ROBERT SPENCERசாஹிப்பஸிரத் ஜனாப் இர்பான் உல் ஹக் சாஹிப் அவர்களின் ஜூன் 14, 2011 அன்று ஆற்றிய உரை: இந்தியாவை அழித்து இந்துக்களை கொல்ல அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார் என பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் தெரிவித்துள்ளார்[1]. அப்படித்தான் பாகிஸ்தானியர் செய்து வருகிறார்களா, அதன்படியே அக்ஷர்தாம், 26/11, பாராளுமன்ற தாக்குதல், பல இடங்களில் குண்டுவெடிப்பு, அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு முதலியன நடந்து வருகின்றனவா? முட்டாள் காபி இந்துக்கள் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா? அப்படியென்றால் மனித உரிமைகள் பேசும் யாரும் இதைப் பற்றி கேட்க முடியாது போலும். பாகிஸ்தானில் பிறந்து கனடாவில் வசிக்கும் பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான தாரக் பத்தாஹ் [Tarek Fatah] 03-01-2016, ஞாயிற்றுக்கிழமை அன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்[2]. அந்த வீடியோவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய தலைவரும், முன்னாள் வங்கி ஊழியருமான இர்பான் உல் ஹக் உரையாற்றுகிறார். அதில் தான், இப்பேச்சு இடம் பெற்றுள்ளது. ஜூன் 14, 2011 அன்று அவர் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது[3]. சுமார் ஐந்தாண்டுகள் கழித்து, இப்பொழுது வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. ஆப்கானிஸ்தானத்தில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவத தாக்குதல் நடக்கிறது. பதான்கோட்டில், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பதுங்கித் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Irfan ul Haq speech - extract from Masqad-e-Wajood-e-pakistan 04-06-2011கஜ்வா இந்து [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுக்கப்பட்டது: மக்ஸத்-இ-வஜூத்-இ-பாகிஸ்தான் என்ற உரையாடலிலிருந்து சுருக்கத்தை, பதிவு செய்யப்பட்டுள்ளது. “இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு உரிமை அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தானியர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்றே கருத வேண்டும்”, என்று விளக்கமாக பேசியுள்ளது ஜிஹாதி மனத்தின் வக்கிரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது[4].  தாரக் பத்தாஹ் சமூகத்தில் விசத்தைக் கக்குவதாக உள்ளது விமர்சித்துள்ளார்[5]. ஆங்கிலத்தில், இன்னொருவர் வேறுவிதமாக விளக்கம் அளிப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்[6]. இவர் பாகிஸ்தானை கிண்டல் செய்வது போல இருந்தாலும், இந்தியாவைக் கடுமையாகத் தாக்குகிறார். இந்துக்களை சாடுகிறார். பொதுவாக கஜ்வா இ இந்து” [Ghazwa-e-Hind] என்ற சொற்றொடருக்கு திரிபு விளக்கம் கொடுத்து, மதவெறியூட்டி, ஜிஹாதி தீயூட்டி, இந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்களைத் தூண்டிவிடும் போக்கு காணப்படுகிறது. இதை சில ஆங்கில இணைதளங்களும் அப்படியே வெளியிட்டுள்ளன[7]. ஆனால், அதை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ இல்லை. சகிப்புத் தன்மை பேசி விவாதித்து வந்த பிரபல ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை எனலாம்.

க்ரெஅடெர் பாகிச்டன், ௸௹அழ்ந எ ஹீன்ட் எட்ச்உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் விக்கிர வழிபாடு நடக்கிறது: இர்பான் உல் ஹக் பேசுகிறார், “சிலை வழிபாட்டு வழக்கம் அரபு நாடுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது[8]. அல்லாஹ் நபிகள் நாயகத்திற்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே அளித்ததால், அவர் இறந்துவிட்டார். நபிகள் நாயகத்தின் பணி அவரது ஆயுட்காலத்தில் முடிந்துவிடவில்லை[9].

அரபு நாடுகளுக்கு வெளியே சிலை வழிபாட்டை ஒழிக்கும் வேலையை செய்ய வேண்டி உள்ளது[10]. நபிகள் நாயகம் தனது இறுதிநாட்களில் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது இந்தியாவில் போர் ஒன்று நடக்கும். அதற்கு பெயர்கஜ்வா இந்து [Ghazwa-e-Hind] என்று நபிகள் நாயகம் தெரிவித்தார்[11]. இந்தியாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ளும் முஸ்லீம்களுக்கு, தன்னுடைய முந்தைய கூட்டாளிகளின் அந்தஸ்து கிடைக்கும், அதாவது, முஜாஹித்தீன் / சகாபாக்களின் நிலை கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கு எதிரான இந்த ஜிஹாத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம்கள், இந்துக்களைக் கொல்வார்கள், மற்றவர்களை சிறை பிடிப்பார்கள். இப்படி முஸ்லிம் மதத்தலைவர்கள், இஸ்லாத்தைத் திரித்துக் கூறி விளக்கம் அளித்து, முஸ்லிம்களை தூண்டிவிட்டு, தீவிரவாதிகளாக தயார் செய்து வருகின்றனர். “அவர் ஏதோ கொஞ்சம் சொல்லியிருக்கிறார்”, என்றால், மிச்சம் வைத்துள்ளதை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விளக்குவது, நபியை மிஞ்சும் செயலாகாதா, அதனை, ஆசாரமான இஸ்லாம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை. நபிக்கு இணை வைக்கும் முறை போன்றுள்ளது. இவர் சொல்லும் இக்கதை குரான், ஹதீஸ் அல்லது ஷரீயத், எதில் உள்ளது என்று தெரியவில்லை. அப்படி இல்லாத கதையை, நபி மற்றும் அல்லாவின் பெயரால் உண்டாக்குவது, சரியா?

அவர்களுக்கு இந்தியாவில் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றிக்குப் பிறகு அவர்கள் சிரியாவில் இருக்கும் ஏசுவின் படைகளுடன் சேர்ந்து கொள்வார்கள்”.  அதாவது, “கயாமத்” என்கின்ற இறுதி நாள் [the prophesized day of Qayamat (Qayama in Arabic, the end of times] போரின் போது, ஏசு அவதாரம் எடுக்கும் போது, அவரது படையை எதிர்கொள்வார் என்கிறார்.  எல்லோரும் இறந்த பிறகு, இவர்கள் மட்டும் என்ன செய்வார்களோ? இனி இஸ்லாமிய நாடுகளில் புகைப்படம் எடுக்க மாட்டார்கள், அடையாளத்திற்ககக் கூட எடுக்க மாட்டார்கள், சிலைகள் எல்லாம் இருக்காது என்று நம்பலாம்.

5000 years of Pakistan - Mortimem wheelerபாகிஸ்தான் 632 CEல் தான் பிறந்தது: இர்பான் உல் ஹக் தொடர்கிறார், “நபிகள் நாயகம் இந்த வார்த்தைகளை கூறிய நாளில் தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

அதாவது அந்த நாளில் தான், 632 CEல் தான் பாகிஸ்தான் பிறந்தது. அந்த நாளில் தான் இப்பகுதியில் வாழும் மக்கள் / பாகிஸ்தானில் வசிக்கும் மக்கள் இந்தியாவில் சிலை வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த உலகத்தில் கற்சிலைகளை வழிபடும் இடம் உள்ளது என்றால், அது இந்திய துணைக்கண்டம் தான். கல்லால் செய்த சிலைகளை இந்தியாவில் தான் வழிபடுகிறார்கள். வேறு எங்கும் இல்லை. ஆகையால், நபிகளின் நெருங்கியவர்கள் என்ற நிலை கொடுக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தானுக்கான சிறந்த அதிருஷ்டம் ஆகும்.” 632 CEல் தான் பாகிஸ்தான் பிறந்தது”, என்றெல்லாம் சொல்வது, பாகிஸ்தானியர்களை வெறியூட்டுவதற்காகத்தான் என்று புரிகிறது. இக்பாலுக்கு, ஜின்னாவுக்குக் கூட அந்த உண்மை தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போனால், அல்லா தான் பாகிஸ்தானை உருவாக்கினர் என்று கூட சொல்வார்கள் போலிருக்கிறது. பாகிஸ்தானில் சிலைகள், போட்டோக்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அவற்றை அழித்து விடுவார்களா?

இதற்கு மேலும் பேசிக்கொண்டு போகிறார், ஆனால், அவை மொழிபெயர்க்கப்படவில்லை.

© வேதபிரகாஷ்

05-01-2015

[1] The Siasat Daily, Pakistanis are blessed with the honour to destroy India, kill Hindus: cleric, January 3, 2016.

[2] http://tarekfatah.com/why-does-pakistan-seek-a-war-with-india-its-ghazwa-e-hind-stupid/

[3] http://www.siasat.com/news/video-pakistanis-blessed-honour-destroy-india-kill-hindus-cleric%E2%80%8B-895988/

[4] Zeenews, Allah has bestowed Pakistanis the honour to destroy India, kill Hindus: Islamic cleric​, Last Updated: Sunday, January 3, 2016 – 18:01.

[5] Tarek Fatah, Why does Pakistan’s Mullah-Military seek a War with India? It’s Ghazwa-e-Hind, stupid, January 3, 2016.

[6] https://youtu.be/xCpWrMMnWNw

[7] Firstpost, Pakistan was created to destroy India and Hinduism: 2011 video of Islamic cleric resurfaces, by FP Staff  Jan 4, 2016 17:43 IST.

[8] http://www.firstpost.com/world/pakistan-was-created-to-destroy-india-and-hinduism-2011-video-of-islamic-cleric-resurfaces-2569916.html

[9] நியூ இந்தியா நியூஸ், இந்துக்களை கொல்லும் கவுரவத்தை அல்லாஹ் பாகிஸ்தானியர்களுக்கு அளித்துள்ளார்: இஸ்லாமிய தலைவர் (வீடியோ இணைப்பு), திங்கட்கிழமை, 04 சனவரி 2016, 06:25.43 AM GMT +05:30.

[10] http://zeenews.india.com/news/india/islamic-cleric-provokes-pakistanis-to-destroy-idol-worship-in-india-wipe-out-hindus_1841098.html

[11] http://defence.pk/threads/allah-has-bestowed-pakistanis-the-honour-to-destroy-india-kill-hindus-islamic-cleric.416392/