Posted tagged ‘ஒற்றுமை’

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

செப்ரெம்பர் 25, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்மற்ற முயற்சிகள், முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் மூலம் தொடருமா? (3)

முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் (Muslim Rashtriya Manch (MRM) – 2002ல் துவக்கி வைக்கப் பட்டது: கே. எஸ். சுதர்சன் எப்படி கிருத்துவர்களுடன் உரையாடல் ஆரம்பித்தாரோ, அடே போல, முஸ்லிகளுடனும் உரையாடல் வைத்துக் கொள்ள, முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் / முஸ்லீம் தேசிய மன்றம் ஆரம்பித்து வைக்கப் பட்டது[1]. இந்திய முஸ்லீம்களின் அமைப்பான இது ராஷ்டிரிய சுயமசேவாக் சங்கத்துடன் இணைந்தது. இவ்வமைப்பு ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. எஸ். சுதர்சன் என்பவரால் 24 டிசம்பர் 2002 அன்று நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் நோக்கம் முஸ்லீம் சமூகத்தில் இந்திய தேசிய உணர்வு, நாட்டுப் பற்று ஊட்டுவதுடன், சங்கப்பரிவாரின் இந்துத்துவா கொள்கைகளை இந்திய முஸ்லீம்கள் அறியச் செய்வதாகும். இதன் தேசியத் தலைவராக முகமது அப்சல் உள்ளார். இந்தியாவின் 26 மாநிலங்களில் உள்ள 300 மாவட்டங்களில் 10 இலட்சம் உறுப்பினரகள் இவ்வமைப்பில் உள்ளனர். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா குறித்து 2015-இல் முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் யோகா மற்றும் இஸ்லாம் தலைப்பில் நூல் ஒன்றை இசுலாமியர்களுக்காக வெளியிட்டது. முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் மகளிர் அணி, இந்தியாவில் முத்தலாக் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதை வரவேற்றுள்ளது.

15-09-1984 – அப்துல் சமதுசூரியநாராயண ராவ் சந்திப்புதுக்ளக்: முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு என்று துக்ளக்கில் அப்துல் சமது-சூரியநாராயண ராவ் உரையாடல் வெளிவந்தது. அதில் சில சுமுகமான கருத்துகள் வெளிவந்தன. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலான முஸ்லிம்கள் முன்னர் இந்துக்களாக இருந்தனர், மதம் மாறினர், ஒற்றுமையாக இருக்க வேண்டும் போன்ற கருத்துகள் பேசப் பட்டன. அப்துல் சமது தம் முன்னோர்கள் இந்துக்கள் என்பதனையும் ஒப்புக் கொண்டார். பிறகு ஆத்ரவு-எதிர்ப்பு-கண்டன விமர்சனம் முதலியன நடந்தன. அவற்றில் சில துக்ளக்கில் “வாசகர் கடிதம்” பக்கத்தில் வெளியிடப் பட்டது. பிறகு, அல்லயன்ஸ் பதிப்பகம் அவற்றைத் தொகுத்து புத்தகமாகக் கூட வெளியிட்டது. ஆனால், பிறகு அது மறக்கப் பட்டது எனலாம். ஏனெனில், அத்தகைய உரையாடல்கள் நடக்கவில்லை அல்லது அந்த அளவுக்கு நெருங்கி வரவில்லை. அரசியல், கூட்டணி போன்ற விவகாரங்களால், விலகி சென்றனர் போலும்.

வடவிந்தியாதென்னிந்தியா வேற்றுமை: வட இந்தியாவில், பொதுவாக, இந்துக்கள்-முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கிறார்கள், தினசரி வேலைகளில் பங்கு கொள்கிறார்கள். இந்து பண்டிகைகளில், பெரும்பாலும், முஸ்லிம்களின் பங்கு உள்ளது. நவராத்திரி-தசரா விழாக்களில் பந்தல், சிலைகள், அலங்காரம் முதலியவற்றை அமைப்பதில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர். வைஷ்ணவி தேவி கோவில் பக்தர்களுக்கு உதவுவதிலும், அவர்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுக்கு வியாபாரமாக, வாழ்வாதார தொழிலாகக் கூட இருக்கலாம். இருப்பினும், அத்தகைய இணைந்து செல்லும் போக்கு உள்ளது. ஆஜ்மீர் மற்ற தர்காக்களில் இந்துக்களும் பெருமளவில் வந்து செல்கின்றனர். அதே போல, தெற்கில் நாகூருக்கு  இந்துக்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். ரம்ஜான் இஃப்தர் பார்ட்டிகளிலும் இணைகின்றனர். சேர்ந்து உண்கின்றனர், பொழுது போக்குகின்றனர். பெரும்பான்மையான முஸ்லிம்களும் இதைத்தான் விருமுகின்றனர். தெற்கில் குறிப்பாக, கேரளா, தமிழகம், கர்நாடகா, தெலிங்கானா போன்ற மாநிலங்களில் சில இயக்கங்கள், முஸ்லிம்களை பிரித்து, அடிப்படைவாதிகளாக, பயங்கரவாதிகளாக, தீவிரவாதிகளாக, மாற்ற முயல்கின்றனர். அதனால், இரு சமூகங்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மோதல்களும் ஏற்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள், மிக மோசமாக, எல்லைகளைக் கடந்து வன்முறைகளுக்குச் சென்று விடுகிறார்கள். குண்டு வைத்தல், கலவரங்களை உண்டாக்குதல், அப்பாவி மக்களைக் கொல்லுதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், பிளவுகள் அதிகமாகின்றன, தீவிரமடைகின்றன.

தமிழகத்தில் இத்தகைய உரையாடல்ளுக்கு வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை: ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் இஸ்லாத்தை விட்டு விரட்ட வேண்டும் என தமிழக ஜாமஅத்துல் உலமா சபைக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைத்துள்ளது[2]. சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அத்தகைய இணைப்புகளை எதிர்க்கிறது. ஆகையால் தமிழ் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் ஜாமத்துல் உலமா சபை முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இஸ்லாத்தை விட்டு நீக்கி அவர்களுடன் முஸ்லீம்கள் எந்தவொரு தொடர்பும் வைக்க கூடாது என மார்க உத்தரவு போடவேண்டும். அதே போல் தமிழக அரசும் உளவுத்துறை மூலம் ஆர்எஸ்எஸ் பாஜகவின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நிர்வாகிகளை சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 2022ல் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான் என்று மோஹன் பகவத் பேசியது: இஸ்லாமிய மக்களுக்கு எதிரான இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் அனைவராலும் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், `இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஓர் இந்து கூறுகிறார் என்றால், அவர் ஒரு இந்துவே அல்ல’ என்றும், `இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான்’ என்றும் நேற்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார்.. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமியப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த முனைவர் க்வாஜா இஃப்திகார் அஹ்மத் என்பவர் எழுதிய ‘தி மீட்டிங்ஸ் ஆஃப் மைண்ட்ஸ்: எ பிரிட்ஜிங் இனிஷியேட்டிவ்’ (The meeting’s of mind’s : A bridging initiative) என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “நாம் அனைவரும் கடந்த 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்திய தேசத்தின் மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணுதான். எனவே, இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கெனவே இணைந்துதான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[3]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “இங்கு அரசியலால் சில பணிகளைச் செய்ய முடியாது. அதன் மூலம் மக்களை இணைக்க முடியாது. அரசியல் எப்போதும் மக்களை இணைக்கும் கருவியாக இருக்காது. அது மக்கள் இடையிலான ஒற்றுமையைச் சிதைக்கும் ஆயுதமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது என ஒரு இந்து கூறுகிறார் என்றால், அவர் ஓர் இந்துவே அல்ல[4]. பசு புனிதமான விலங்குதான், ஆனால், மற்றவர்களைக் கொலை செய்பவர்கள்கூட இந்துத்துவா தத்துவத்துக்கு எதிரானவர்களே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்[5]. இத்தகையவர்களைச் சட்டம் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தண்டிக்க வேண்டும். மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்,” என்றார்[6].

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை[7]: தொடர்ந்து மோஹன் பகவத் பேசியது, “தற்போது இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருப்பது போன்ற மாய பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் அந்தச் சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. இங்கு இஸ்லாமியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்[8]. இந்தியாவில் ஒற்றுமை இல்லையென்றால் வளர்ச்சி என்பது துளியும் சாத்தியமில்லை. எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் இயக்கத்துக்குக் கட்சி அரசியலில் விருப்பமில்லை. தேசத்தின் நலனே எங்களுக்கு முக்கியம்,” என்றார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் இந்தப் பேச்சை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்[9]. உத்தரப்பிரதேசத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை வலுப்படுத்த பாஜக-வின் யோகி ஆதித்யநாத் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் வேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த ‘இஸ்லாமிய ஆதரவு நிலைப்பாடு’ பேச்சு அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது[10].

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட்: மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்[11]. இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெலு, ரக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த குற்றவாளிகளிக்கு இந்துத்துவா அரசு ஆதரவளிக்கிறது. அலிமுதீனின் கொலையாளிகள் மத்திய அமைச்சரின் கையால் மாலை அணிவிக்கப்படுகிறார்கள்,” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்[12]. இதற்கு ட்விட்டரில் பலர் எதிர்க் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

25-09-2022


[1] It was on December 24, 2002 a group of nationalist Muslims and functionaries of the Rashtriya Swayamsevak Sangh (RSS) came together in Delhi. http://muslimrashtriyamanch.org/default.aspx

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், RSS-ன் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்சில் உள்ளவர்களை இஸ்லாத்தில் இருந்தே விரட்டுங்க.. தடா ரஹீம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jul 4, 2022, 12:10 PM IST.

https://tamil.asianetnews.com/politics/remove-from-islam-those-in-muslim-rashtriya-manch-which-is-a-subsidiary-organization-of-rss-tada-rahim–rehh84

[3] தமிழ்.நியூஸ்18, இந்தியாவில் முஸ்லீம்கள் வாழக்கூடாது எனக்கூறுபவன் இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு, NEWS18 TAMIL, Published by:Ramprasath H, First published: July 05, 2021, 06:40 IST; LAST UPDATED : JULY 05, 2021, 06:46 IST

[4] https://tamil.news18.com/news/national/anyone-who-says-muslims-should-not-live-in-india-is-not-hindu-mohan-bhagwat-hrp-496409.html

[5] தமிழ்.சமயம், முஸ்லிம் வாழக்கூடாது என்று சொல்லும் இந்து இந்துவே அல்லஆர்.எஸ்.எஸ். தலைவர் அதிரடி,  Divakar M | Samayam Tamil | Updated: 4 Jul 2021, 9:48 pm

[6] https://tamil.samayam.com/latest-news/india-news/it-is-not-the-hindus-who-say-that-muslims-should-not-live-saying-mohan-bhagwat/articleshow/84119597.cms

[7] தினமலர், முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத், Updated : ஜூலை 05, 2021  09:41 |  Added : ஜூலை 05, 2021  09:38

[8] https://www.dinamalar.com/news_detail.asp?id=2796967

[9] விகடன், இஸ்லாமியர்கள் இங்கு வாழக் கூடாது என்று சொல்பவர் இந்துவே கிடையாது!’ –ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், சே. பாலாஜி, Published: 05 Jul 2021 9 AM; Updated: 05 Jul 2021 9 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/if-a-hindu-says-no-muslim-should-live-here-that-person-not-be-hindu-says-rss-chief-mohan-bhagwat

[11] நியூஸ்.தமிழ்.7, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கருத்து: ஓவைசி ஆவேச ட்வீட், by Gayathri VenkatesanJuly 5, 2021.

[12] https://news7tamil.live/asaduddin-owaisi-on-rss-chiefs-remarks.html

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

நவம்பர் 11, 2013

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த ட்தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

Acharya Pramod Krishan with Baba Ram dev

பத்வா மௌலானாவின் விவரங்கள்: தௌகீர் ராஸா கான், இதிஹாத்-இ-மில்லத் கவுன்சில் [ Ittehad-e- Millat Council] என்ற தீவிரகருத்துக்களைப் பரப்பி வரும் இயக்கத்தின் தலைவர். என்ற அடிப்படை முஸ்லிம் ஏற்கெனவே கலவரங்களைத் தூண்டி விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். புஸ்ஸின் தலைக்கு ரூ ஒரு கோடி என்று அறிவித்து பத்வா போட்டவர். அதாவது, தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமுக்கு எதிராக எழுதினார் என்ற காரணத்திற்காக, அயத்துல்லா கோமேனி மாதிரி, தண்டனை விதித்து, யாராவது அவரைக் கொன்று தலை வெட்டிக் கொண்டு வந்தால் பணம் கொடுக்கப்படும் என்று அர்த்தமாம். அதே மாதிரி, பிறகு தஸ்லிமா நஸ் ரீன் என்ற பங்களாதேச தலைக்கு ரூ 5 லட்சம் என்று அறிவித்தவர். இப்படி பத்வா போட்டு பிரபலமாகியதால், இவரை “பத்வா மௌலானா” என்றே அழைக்கப் படுகிறார்.

after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan

அரவிந்த் கேசரிவால் தௌகீர்ராஸாகானை சந்தித்தது:  ஒன்பது நாட்களுக்கு முன்னர் 01-11-2013 அன்று அரவிந்த் கேசரிவால் என்கின்ற “ஆம் ஆத்மி கட்சி”த் தலைவர், இந்த கம்யூனல், அடிப்படைவாத, தீவிரவாத கொள்கைளைக் கடைப்பிடிக்கும் மௌலானாவை பிரெய்லியில் சந்தித்து தங்கள் கட்சிற்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது “கம்யுனிலிஸத்துடன் ஜோடி சேர்கிறார், ஓட்டுவங்கி அரசியல் நடத்த்ய்கிறார்ரென்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் இவரைக் கடுமையாக சாடினார்கள்[1]. மீம் அப்சல் என்ற காங்கிரஸ் கட்சி ஊடக பேச்சாளர், அரவிந்த் கேசரிவாலின் அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பதில் உள்ளது, அதனால் முஸ்லிம்களை கால்பந்து போல நினைக்கிறார்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[2]. அரவிந்த் கேசரிவாலோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, என்று சப்பைக்கட்டியதோடு, ஏதோ பெரிய இஸ்லாமிய பண்டிதர் போல, முப்தியால் தான் பத்வா போட முடியும், மௌலானாவால் பத்வா போட முடியாது என்று விளக்கம் கொடுத்தார். வேடிக்கையென்னவென்றால், இதனை எந்த முப்தியோ, மௌலானாவோ தவறு அல்லது சரி என்று சொல்லவில்லை, இல்லை என்ன காபிராகிய நீர், எங்கள் மதவவிசயங்களைப் பற்றி வியாக்யானம் செய்கிறாயே, என்று கண்டிக்கவில்லை.

Digvijay and Tauqeer together 2013

காங்கிரஸ் ஊக்குவிக்கும் சாமியார்கள்: காங்கிரஸுக்கு நெருங்கிய சாமியாரான, ஆச்சார்யா பிரமோத் கிருஷண் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்[3]. அது மட்டுமல்லாது மோடிக்கு எதிராக பேசும் சாமி என்றும் குறிப்பிடத் தக்கது[4]. பல போலி சாமியார்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். பாபா ராம் தேவ் விசயத்தில், அவர்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாலகிருஷ்ணனின் போலி பாஸ்போர்ட் வழக்கில் பங்கு கொண்டுள்ளார்[5]. இவர் பேசும் விதம், நடந்து கொள்ளும் போக்கு முதலியவற்றைப் பார்க்கும் போது, காங்கிரஸுக்கு சார்பாக, இந்து நலன்களுக்கு எதிராக செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. இதனால், இந்து சந்நியாசிகளின் ஒற்றுமை குலைகிறது. அதாவது, சந்நியாசிகள், மடாதிபதிகள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸும், காங்கிரஸ் ஆதரவு சந்நியாசிகளும் வேலை செய்கின்றனர் என்ரும் தெரிகிறது.

some-swami, Tahil Ali, Dig, Tauqir Raza, Acharya Pramod Krishan

மதவெறிக் கொண்டவர் “இந்து-முஸ்லிம்” பாடுபடப் போகிறாராம்: “கல்கி மஹோத்சவம்” என்ற நிகழ்சியில் கலந்து கொண்டபோது, 10-11-2013 அன்று தனக்கு வலது பக்கத்தில் தாரிக் அன்வர் [Union Minister of State for Agriculture Tariq Anwar] மற்றும் இடது பக்கத்தில் தௌகீர் ராஸா கான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோருமே ஒரே மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நடுவில் திக்விஜய் நன்றக குனிந்து, தௌகீர் ராஸா கானின் பின்பக்கத்தில் ஸ்வாமியுடன் ஏதோ பேசியதும் வீடியோவில் தெர்கிறது[6]. அதாவது அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்ரு காட்டிக் கொள்கின்றனர். திக்விஜய் சிங்கோ, தௌகீர் ராஸா கானைப் புகழ்ந்து, அவர் ஸ்வாமியுடன் சேர்ந்து கொண்டு “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறார். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்[7], என்று பாராட்டி பேசினார்[8]. மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவரை மதவாதி போல பார்க்கக் கூடாது என்றெல்லாம் விளக்கினார்.

Beware of anti-Hindu hindus

கோசாலையைத் திறந்து வைத்து பசுவதையைப் பற்றி பேசினாராம்: தௌகீர் ராஸா கான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொலைசெய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் முறையை எதிர்க்கிறேன். இப்படியே பசுக்கள் கொல்லப்பட்டால், நாளைக்கு குழந்தைகள் குடிக்க பாலே இருக்காது, என்று ஒரு பசு காப்பகத்தைத் திறந்து வைக்கும் போது பேசினார்[9]. பிறகு தௌகீர் ராஸா கான், ஊடகக்காரர்களுடன் பேசும் போது, தான் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார். பத்வா விசயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்[10].

TAUQEER REZA KHAN

காங்கிரசஸின் வஞ்சக திட்டம்: முன்னர் ராமஜன்ம பூமி விசயத்தில், காங்கிரஸே முந்தி கொண்டது. முலாயம் சிங் யாதவோ, கரசேகர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இந்துக்களைக் கொன்று, முல்லாயம் சிங் யாதவ் ஆனார். இப்பொழுது, சோனியா இந்து சாமியார்களைப் பிரிக்க சட்ய்ஹி செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பதவி, பணம், அதிகாரம் இருப்பதனால், சோனியா இவர்களை சுலபமாக வளைத்து விடுகிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு இந்து எழுச்சியையும் அடக்க இவ்வாறான எதிர்மறையான செயல்களை செய்து வருவது தெரிகிறது. முன்னர் அஜாரே ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் தான், ஊழல் எதிர்ப்பி போராட்டம் நடத்துகிறார் என்பது போல செய்தி வந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டார். அரசியல்வாதிகளை எதிர்ப்பதானால், கட்சி தொடங்கி தேர்தலில் நில்லுங்கள் என்ரு கபில் சிபல் சவால் விட்டார். இவ்விதமாக காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை அடக்கியது. அரவிந்த கேசரிவால் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி விட்டார். இதனால், காங்கிரசூக்குத் தான் ஆதாயம்.

© வேதபிரகாஷ்

11-11-2013


. [1] Earlier on November 1, Arvind Kejriwal met Maulana Tauqeer Raza Khan in Bareilly, which sparked a political conspiracy as Congress claimed that the AAP leader is playing a communal card ahead of the Assembly election in Delhi. http://www.niticentral.com/?p=155911

[2] Congress spokesman Meem Afzal had alleged that Kejriwal “whose politics originated with the backing of the RSS was trying to make Muslims a football” for electoral mileage.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[3] The function was organised by Swami Pramod Krishnan, who is said to have good relations with the Congress. Krishnan also praised the cleric and said people like him were needed to promote communal harmony in the country

[5] Pramod Krishnan, who is a litigant in the fake passport case filed against Balkrishan, even feared that Shankar Dev may have been killed by them as their guru knew of the fake documents that were submitted by him at Bareilly passport office to procure the passport.

http://www.tribuneindia.com/2012/20120806/dun.htm#7

[7] Speaking at the inauguration of Kalki Mahotsava here last night, Digvijay praised Raza, who enjoys minister of state rank in SP government in Uttar Pradesh, and said that he along with Acharya Pramod Krishnan have started a mission of Hindu-Muslim unity in the country.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-arvind-kejriwal-digvijay-singh-praises-controversial-muslim-clerictauqeer-raza-khan/articleshow/25562343.cms

[8] Dig vijay Singh on Sunday shared the stage with controversial Muslim cleric Tauqeer Raza Khan praised him for working for ‘Hindu-Muslim unity’. his party attacked AAP leader Arvind Kejriwal following his meeting with the religious leader.

http://zeenews.india.com/news/nation/digvijay-praises-tauqeer-raza-says-he-started-mission-of-hindu-muslim-unity_889072.html

[9] Inaugurating a cow shelter, Raza said the manner in which thousands of cattles were being slaughtered and exported to foreign countries was a matter of great concern and if it was not stopped a day would come when the children in the country would not get milk to drink.He said that a joint campaign was needed to save cattle.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[10] Tauqeer Razadenied having any hand in the violence. He has also denied that he had issued any “fatwa” against Taslima Nasreen.

http://www.deccanherald.com/content/368211/digvijay-shares-stage-039controversial039-cleric.html