Posted tagged ‘ஒருத்துவ’

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

ஏப்ரல் 27, 2013

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

Clash between Muslim groups in constructing mosque

முஸ்லிம்கள் எல்லோரும் சமம்: பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, ஒரு வித்தியாசமும் இல்லை, தோளோடு தோள் இணைந்து, தொட்டுக் கொண்டு, இடித்துக் கொண்டு தொழுகை செய்வோம், ஒன்றாக இருப்போம், சாப்பிடுவோம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு வருவர். ஆனால், அச்சமத்துவ, சகோதரத்துவ, ஏகத்துவ, ஒருத்துவ நிலையில் எப்படி முஸ்லீம்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்பது கூர்மையாக ஆய்வதற்குரியது[1]. சன்னி-ஷியா மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் முதலியவை உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை[2]. ஆனால், “அமைதிப் பூங்கா”, “வந்தாரை வாழவைக்கும்” என்றெல்லாம் போற்றப்படுகின்ற தமிழகத்தில் எப்படி அத்தகைய மோதல்கள் நடக்கலாம்.

Fight among the Muslims - Kadaiyanallur, Tit

இஸ்லாமியர்களுக்குள்சண்டைஏன்?: சைவம் தழைத்தோங்கிய திருநெல்வேலியில், கடையநல்லூரில் இப்பொழுது முஸ்லிம்கள் ஜனத்தொகைப் பெருகியுள்ளது. இப்பிரச்சினை மீனாட்சிபுரம் மதமாற்றத்திலிருந்தே ஆரம்பிக்கிறது[3]. அதற்கேற்றார்போல, அவர்களது தமிழ்நாடு ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, என்று பல அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பணம் வருவதனால்[4], மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவது, தொழுகை நடத்துவது, விழாக்கள் நடத்துவது என்ற உள்விஷயங்களில் பெரிய புரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்[5]. கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தார் முதலியோருக்கு மோதல், அடிதடி முதலியவை எப்பொழுதும் உள்ளது போலிருக்கிறது, ஏனெனில் அதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[6].

Kadayanallur clash between Muslim groups.3

TNTJ மற்றும் TMMK மோதல்கள்: தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், TNTJ மற்றும் TMMK இடையில் பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

  • 2006ல் மஸ்ஜித்-உர்-ரஹ்மான் என்ற மசூதியை யார் நிர்வகிப்பது என்ற விஷயத்தில் TNTJ மற்றும் TMMK இடையில் சண்டையிட்டுக் கொண்டனர்[7]. இதை அனைத்துலக ரீதியில் பெரிதுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[8].
  • ஜனவரி 2008ல் அல்-முபாரக் மஸ்ஜிதை நிர்வகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது[9].
  • 2009ல் தேர்தல் பிரச்சரத்தின்போது மோதல் ஏற்பட்டது[10].
  • செபடம்பர் 2010ல் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்[11].
  • கடந்த மார்ச்சில் கூட மசூதியில் பிரச்சினை ஏற்பட்டது, ஒருவர் தாக்கப்பட்டார்[12].

இதோ அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்சியாக, சண்டையாக, சச்சரவாக நினைக்க வேண்டாம். செக்யூலரிஸத்தில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாநிலத்தில், நுண்ணறிவு, பிரித்தறிவு, செம்மறிவு, என்றெல்லாம் கொண்டுள்ள அறிவிஜீவிகள் கொண்ட தமிழகத்தில் தான் இவ்வாறு முஸ்லீம்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், முகமதியர்கள், துலுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றவர்கள்[13] அடித்துக் கொள்கின்றனர்.

Kadayanallur clash between Muslim groups.4

மசூதி, அரபுப்பள்ளிக்கூடம், மர்கஸ், மதரஸாஎதுகட்டுவதால்பிரச்சினை: தமிழ் ஊடகங்கள் பிரச்சினை ஏற்பட்டது ஒரு மசூதி, பள்ளிவாசல், அரபுப் பள்ளிக்கூடம் கட்டுவதால் ஏற்பட்டது என்கின்றன. TNTJ “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[14] என்று குறிப்பிடுகின்றது. மர்கஸாவா, மதரஸாவா என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. அதே மாதிரி எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம்கள் கூறுவதும் வித்தியாசமாக உள்ளது.

தினமலர்சொல்வது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை[15] பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது[16].

TNTJ சொல்வது: “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[17].

மாலைமலர்கூறுவது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது[18].

தினமணி கூறுவது: கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம்[19].

ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.

தினத்தந்திகூறுவது: கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்[20].  இங்கு “இரு தரப்பினர்” என்று குறிப்பிட்டு, பிரச்சினைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

நெல்லை-ஆன்-லைன் கூறுவது: தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய அலுவலகம் கட்டும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு பேட்டை ஜமாத் எதிர்ப்புத் தெரிவித்தனர்[21].

இங்கு அரபிப் பள்ளி என்பது “மதரஸா” ஆகுமா, ஒருவேளை அதைத்தான் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. மதரஸாக்களில் நடப்பவைப் பற்றி பற்பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[22]. தலிபானின் மதரஸாக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

செக்யூலரிஸஊடகங்கள்உண்மையைச்சொல்கின்றனவா?: மேற்குறிப்பிட்டபடி, தமிழக நாளிதழ்கள் நிகழ்வுகளின் உண்மையினை திருத்தியோ, மாற்றியோ, மறைத்தோ வெளியிடுகின்றன. “இரு பிரிவினர்களுக்கு” என்றால் எப்படி படிக்க வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்து-முஸ்லீம்கள்
  • சன்னி-ஷியா / சுன்னி-ஷியா
  • சையது-லெப்பை
  • முஸ்லிம்-எஸ்.சி
  • முஸ்லிம்-தலித்துகள்
  • TNTJ – TMMK

இப்படி எந்த இரு பிரிவினரை எடுத்துக் கொள்வது. இதை எழுதும் நேரத்திலே, பள்ளக்கால் பொதுக்குடியில் முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே டேற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது என்று செய்தி வருகிறது[23]. எனவே, “செக்யூலரிஸம்” என்ற போர்வையிலேயோ, வேறு எந்த பாரபடசம் அல்லது ஆதரவு, விருப்பு-வெறுப்பு ரீதிகளில் செய்திகளை வெளியிடுவதால், படிப்பவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனால், முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி விடுவர். பந்த, கடையடைப்பு, போராட்டம், ஆர்பாட்டம் என்று எல்லோரையும் படுத்திவிடுவர்.

வேதபிரகாஷ்

27-04-2013


[4] அயல்நாட்டு பணமாற்றத்தில் கடையநல்லூர் முக்கிய ஊராக இருக்கிறது. அனைத்துலக அளவில் தெரியப்பட்டும் உள்ளது. மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நன்கொடைகளும் வருகின்றன.

[6] கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் – Thursday, April 18, 2013.

[9] கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more at: http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

[10] பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: http://tamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html

[11] Two persons were shot dead and 10 injured in a shootout following a clash between two groups over observing a fast at Thiruvidaicherry in this district last last night.Police said, misunderstanding between a section of Muslims belonging to Tamil Nadu Thowheed Jamad (TNTJ)and another belonging to Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) often led to clashes. Since last evening, the two groups were quarrelling and when they assembled in the mosque late last night, they clashed and exchanged fire with country made revolvers.– (UNI) –  http://news.webindia123.com/news/articles/India/20100906/1581449.html

[12] கடையநல்லூர்,: கடையநல்லூரில் பள்ளிவாச லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுலைமான் (79). கடையநல்லூர் வடக்கு அய்யாபுரத்தில் உள்ள செய்யது அப்துல்லா கலிபா சாகிப் பள்ளிவாசலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலை பூட்டும் போது அதே தெருவை சேர்ந்த கபீத்ரஹ்மான், ஷேக் மைதீன் ஆகியோர், ‘‘நாங்கள் உள்ளே இருக்கும்போது எப்படி பள்ளிவாசலை பூட்டலாம்?’’ என்று கூறி அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கபீத்ரஹ்மான் போலீசில் அளித்த புகாரில்,  நானும், ஷேக்மைதீனும் பள்ளிவாசலில் இருக்கும்போது வடக்கு அய்யாபுரத்தை சேர்ந்த சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 4 பேரும் தாக்கியதில் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக கபீத்ரஹ்மான், ஷேக்மைதீன், சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=181750&cat=504

[13] சரித்திரரீதியில் காலக்கட்டங்களில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இன்று குறிப்பிட்ட வார்த்தைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்துகின்றனர்.

[23] The timely initiative taken by the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam averted a clash between Muslims and Dalits of Pallakkaalpothukkudi near Ambasamudram in the district recently. – TIRUNELVELI, April 26, 2013

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/communal-clash-averted/article4656034.ece