Posted tagged ‘ஒரிஸா’

ஒரிஸாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளரும் விதம்

ஜூலை 20, 2010

ஒரிஸாவில் இஸ்லாமிய தீவிரவாதம் வளரும் விதம்

திடீரென்று ஒரிஸாவிலிருந்து ஆயிரக்கணக்கான வங்காளதேஷ ஊடுருவல்காரர்கள் நாடு கடத்தல் என்ரு செய்திகள் வருவது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் ஊடுருவல்கள் பத்தாண்டுகள் மேலாக நடந்து வருகின்றன.  2004ல் இந்தியக் கொடி எரிக்கப்பட்டபோதுதான், விஷயம் வெளியே வந்தது.

2002ல் ரகசியமாக ரேடியோ நிலையம் நடத்தப்பட்டது[1]: 2002ல், உள்ளேயுள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஒரு ரேடியோ நிலையமும் கண்டுபிடிக்கப் பட்டது. அத்தகைய குக்கிராமத்தில், எப்படி அவர்கள் ரேடியோ நிலையம் அமைத்தனர் என்று சோதனையிட்டவர்களே வியந்துவிட்டனராம். கிராமத்துப்  போர்வையில் இத்தகைய ஓற்றர்வேலை செய்ய ஹுஜி போன்ற தீவிரவாத இயக்கத்தினரால்தான் முடியும் என்று பிறகு தெரிய வருகிறது.

ஜூலை 2004: சில நாட்களுக்கு முன்னர் – ஜுலையில் – பிடாரகனிக விலங்குகள் வாழ்விடம் மற்றும் கடல்வாழ் விலங்ககத்தின் காவலாளி இவர்களால் கொலைசெய்யப்பட்டான்[2]. தீவிரவாதிகளுக்கு பலதரப்பட்ட வியாபாரங்கள். விலங்குகளில் அரிய வகையை கடத்திச்சென்று விற்றால் பணம் கிடைக்கும் என்றால், அதிலும் ஈடுபடுவதுதான் வேலை. இதைஞ்சலாக இருந்ததால், அவன் அகற்றப்பட்டான்.

ஆகஸ்ட் 15, 2004[3]: கேந்திரபாரா மாவட்டம் பங்களாதேஷத்திலிருந்து உள்ளே நுழைந்த முஸ்லீம்களின் இடமாக மாறி, நாளடைவில் தீவிரவாத வன்முறை செயல்களும்  வளர்ந்து வந்துள்ளன. ஆகஸ்ட் 15, 2004ல் கனக்நகர் நடுபள்ளியில் ஐந்து பங்களாதேஷத்தவர் இந்தியதேசியக் கொடியை கிழித்து பிறகு அதனை எரித்துவிட்டு ஓடிவிட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும் அதனைத் தடுக்க முயன்ற போது, அவர்களை அந்த முஸ்லீம்கள் நன்றாக அடித்துவிட்டுச் சென்றனர். முஸ்லீம்கள் அதிகமானால், எப்படி முதலில் இந்தியவிரோத குணம் வெளிப்படும் என்பதற்கு இது ஒரு சான்று.

போலீஸாரிடம் புகார் கொடுத்தபோது கண்டுகொள்ளாமல் இருந்ததால், மாஜுஸ்டிரேட் மற்றும் எஸ்.பி முதலியோரிடம் ஆசிரியர்கள் புகார் கொடுத்தனர். அதிலிருந்து போலீஸார் இந்த ஊடுருவல்காரர்கள் நட்பு வெளிப்படுகிறது. அத்தகைய போலீஸாரை இந்தியா வைத்துக் ம்கொண்டுள்ளது என்பதை பார்க்கும் போது, ஜிஹாதிகள் ஏன் உள்ளே நுழைய மாட்டார்கள்? கேந்திரபார இந்த முஸ்லீம்களின் தொல்லையால் அதிகமாக பத்திக்கப்பட்டுள்ளது எனலாம். ஆகஸ்ட் மாத ஆரம்பித்தில் வருவாய்துறையினர் மேற்கொண்ட சோதனையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் காடு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிடிக்கப் பட்டது.

மேற்குவங்கத்லிருந்து ஒரிஸாவிற்கு நுழைந்து கடற்கரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்வது (2006): ஹர்கத்-உல்-ஜிஹாதி எ-இஸ்லாமி (ஹுஜி) என்ற தீவிரவாத அமைப்பு வங்காளதேஷத்தில் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்து வருகிறது. ஹைதரபாத் குண்டுவெடிப்புகளுக்கு இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தாம் சந்தேகிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஒரு பெண் கைதாகியபோது, அவர்களது தொடர்பு மற்றும் நாசவேலையின் வலை பற்றிய உண்மை வெளியாகியது. வேலூரில், ஒரு முஸ்லீம் புரொஃபசரே அடைக்கலம் கொடுத்து, ஊக்குவித்து வந்தார்[4]. ஒரு திமுக அமைச்சருடன், அந்த பெண்ணின் பெயர் அடிபட்டதால், விஷயம் முழுவதுமாக அமுக்கப்பட்டுவிட்டது[5]. இவ்வாறு, அவர்கள் ஊடுருவி, ஒத்திகைப் பார்த்து, உள்ளூர் பிரச்சினகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி, செயல்படுவதால், அமைதியாகவே, தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வது தெரிகிறது. கலவரம், குண்டு வெடிப்பு எனும்பொதுதான், விஷயம் வெளியே வந்து விடுகிறது. அவ்வாறு திட்டமிட்டபடியே ஒரிஸாவில் பரவினர்.

Good-conduct-certificates-for-teroor-links-2007

Good-conduct-certificates-for-teroor-links-2007

திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்த பங்களாதேச மக்கள் இந்திய பிரஜைகள் ஆகும் விதம் (ஆகஸ்ட் 2007): கேந்திரபாரா, நவரங்கபூர், மல்கங்கிரி, புபனேஸ்வர், பூரி, சில்கா, கஞ்சம், பலாசோர், கியோஞ்சர் முதலிய இடங்களில் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் பரவியுள்ளனர். இவர்கள் புறம்போக்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் குடிசைப் போட்டுக் கொண்டு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். பிறகு, கள்ளக்கடத்தல், கள்ள நோட்டுகள் பட்டுவாடா, திருட்டு முதலிய வேலகளில் ஈடுபட்டு பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்திக் கொள்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் போலீஸ்காரர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்கின்றனர். அதாவது அவர்களுக்கு பணம், பெண்கள் முதலியவை சப்ளை செய்து வருகின்றனர்.

Paki-fake-notes-circulation-inTN

Paki-fake-notes-circulation-inTN

செரிப் ஹகாக், மசூத் ஹலாக், பௌசூதீன் முதலியோர் பாகிஸ்தானில் அச்சடித்த ரூ.1000/- கள்ளநோட்டுகளை லட்சக்கணக்கில் வைத்திருந்ததற்காகவும், புழக்கத்தில் விட்டதர்காகவும் சென்னையில் பிடிபட்ட வங்கதேச ஆட்கள்.

ஐதரபாத் குண்டுவெடிப்பு: பெண் தீவிரவாதி – சாகி ரப்சஞ்சானி – வேலூரில் இருந்து படித்தவர் (2004-2007)[6]: ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய தீவிரவாதி சாகி ரப்சஞ்சானி வேலூர் பெண்கள் கல்லூரியில் படித்தவர் என்பது தெரிய வந்துள்ளது. ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 43 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஹர்கத் உல் ஜிகாதி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்தான் சாகி ரப்சஞ்சானி என்ற பெண் தீவிரவாதி. இநத குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இவர், வேலூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து வந்தது தெரிய வந்துள்ளது[7]. சாகி, வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.வேலூர் காட்பாடியில் வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தவர் இந்த சாகி. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் தமது செல்போனை போலீசார் கைப்பற்றியதையடுத்து, சாகி தலைமறைவானார். இந்நிலையில்தான், சாகி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சாகியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Huji-terrorist-arrested-in-Chennai-2007

Huji-terrorist-arrested-in-Chennai-2007

ஐதராபாத்தில் என் கூட்டாளிகள்தான் குண்டு வைத்தனர்-இஸ்லாமிய பயங்கரவாதி ரிஸ்வான் ஹாஜி வாக்குமூலம் : “ஐதராபாத், செப். 22, 2007-ஐதராபாத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி 2 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 43 பேர் பலியானார்கள். இது தொடர்பாக தீவிரவாதி ரிஸ்வான் ஹாஜியை போலீசார் கைது செய்தனர். அவன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் வங்காள தேசத்தில் உள்ள ஷிட்டகாங். எனது தந்தை ஜாஸ்னல். முஸ்லீம் மதத்தில் தீவிர பற்று கொண்டவர். இதனால் என்னை மதரசாவில் படிக்க வைக்க விரும்பினார். ஆனால் எனக்கு வங்காளதேசத்தில் உள்ள மதரசாவில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து நான் கிழக்கு வங்காளத்தில் உள்ள மாமா முகைதீன் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள மதரசாவில் படித்தேன். பின்னர் உருது, அரேபிக் மொழி படிப்பதற்காக விசா, பாஸ்போர்ட் இல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் பகுதிக்கு வந்தேன். அதன் பிறகு தான் ஐதராபாத்தில் உள்ள கயத்நகருக்கு வந்தேன். அந்த சமயத்தில்தான் எனது சகோதரி சாகி ரப்சஞ்சானி வேலூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தாள். அதன் பிறகு அவளைப் பார்க்க அங்கு அடிக்கடி சென்று வந்தேன். நான் ஐதராபாத்தில் தங்கி இருந்த போது வங்காள தேசத்தை சேர்ந்த கலீல், முஸ்லியுதீன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. முஸ்லியுதீன் எனக்கு நிறைய பண உதவி செய்தார். சில நாட்களுக்கு பிறகுதான் அவர் `யூஜி’ தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் எனக்கு `ஜிகாத்’ பற்றி சொல்லிக் கொடுத்தார். பின்னர் எனக்கும் அதில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. நானும் ஐதராபாத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் `ஜிகாத்’ பற்றி பிரசாரம் செய்தேன். `யூஜி’ இயக்கத்தில் இளைஞர்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டேன். அப்போதுதான் முஸ்லிதீன் என்னிடம் ஐதராபாத் தில் காஷ்மீரைப் போல் புனிதப்போர் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் புனிதப் போருக்காக பெட்ரோல் குண்டு தயாரித்தார். நான் அவருக்கு பெட்ரோல் வாங்கி கொடுத்தேன். ஆனால் கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி எனக்கு எதவும் தெரியாது. அந்த குண்டு வெடிப்பை கலீலும், முஸ்லியாதீனும்தான் நடத்தி இருக்க வேண்டும். அந்த குண்டு வெடிப்புக்கு பிறகு 2 பேரும் மாயமாகி விட்டார்கள். அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது”, இவ்வாறு அவன் கூறினான்.

முஸ்லீம் ஓட்டுவங்கி வளரும் விதம் (ஆகஸ்ட் 2008)[8]:  பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ரேஷன்கார்ட் முதல் வாக்காளர் அட்டைவரை வங்கிவிடுகின்றனர். அதாவது, இந்திய பிரஜைகளாகிவிடுகின்றனர். புகாரின் அடிப்படையில், கேந்திரபாரவில், துணை கலெக்டர் முரளிதர மாலிக் என்பவர் ஆணையில் கடந்த சென்ஸஸ் போது, சோதனையிட்டபோது, 30,000 பங்களாதேச மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு, அவை நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜகசிங்கபூர் கடற்கரைப்பகுதிகளில் “பங்களாதேஷ வாக்காளர்” எண்ணிக்கை உயருகிறது (மார்ச் 2009)[9]: 2004ல் இந்தியக் கொடியை எரித்த முஸ்லீம்களை எப்படி அரசியல்வாதிகள் ரேஷன்கார்ட், வாக்காளர் அடையாள அட்டைக் ஒடுத்து வளர்க்கிறார்கள் என்று பார்த்தால், மேற்கு வங்காளத்தில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தனரோ, அதே மாதிரியான வழியை ஒரிஸாவிலும் பின்பற்றியூள்ளனர் என்று தெரிகிறது. ஒரிஸாவில் அளவிற்கு அதிகமாக போய்விட்டதால், அது வெளிப்பட்டுவிட்டது. தலைக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, இரண்டு இடங்களில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்தபோது, உள்ளூர் மக்களே புகார் கொடுத்ததால், வசமாக மாட்டிக் கொண்டனர். உண்மை வெளிவந்து விட்டது.

ஹுஜி தளபதி முகம்மது அம்ஜத் சென்னையில் கைது[10](ஜனவரி.18, 2010): சென்னை / ஹைதராபாத், ஜன.18- ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (ஹுஜி) என்னும் தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தளபதி முகம்மது அம்ஜத் என்னும் காஜா இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு, ஆந்திரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் போஸீஸôர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை மூலம் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை ஆந்திரப் போலீஸôர் தங்கள் கட்டுப்பாட்டில் அழைத்துச் சென்றனர். குடியரசுத் தினத்தன்று சென்னை அல்லது ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்ததாக ஆந்திர காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் 2007ம் ஆண்டு நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இவர் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும், பாஜக தலைவர் இந்திரசேன ரெட்டியை 2004ல் கொல்ல முயன்ற சதி வழக்கிலும் இவர் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் தென்னிந்தியத் தலைவரான இவர், வங்கதேசத்தை மையமாக வைத்து தனது தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்தி வந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்[11].

HuJI’s  South India top commander nabbed
January 18, 2010; Zeenews Bureau

Chennai: In a major breakthrough, Harkat-ul-Jihad-al-Islami’s top commander in South India Amjad was on Monday nabbed from Chennai on Monday[12].

Amjad alias- Shaikh Abdul Khwaja, who is thought to be Bangladesh based HuJI’s second-in-command, is alleged to be the mastermind behind the 2007 Hyderabad twin blasts that went off at the crowded Gokul Chat and Lumbini Park in Hyderabad leaving 42 people dead.

He was also wanted in the sensational 2005 Task force office suicide bomb attack case, in which a home guard was killed. Amjad is a native of Hyderabad.

As per reports, Khwaja, who was hiding in Karachi since 2003, had come back to India to target Republic day function in one of the South Indian cities.

He is now being brought to Hyderabad for further investigations.

48 ஊடுருவல்காரர்கள் நாடுகடத்தப்பட்டனர் (ஜூலை 2010): சட்டத்திற்குப் புறம்பாக ஊடுருவல் செய்து, பிரச்சினைகள் ஏற்படுத்தி வந்த கோடிக்கணக்கில் உள்ள முஸ்லீம்களில், லட்சங்கள் அடையாளங்காணப்பட்டு, அதில் 48 பேர் உடனடியாக நாடு கடத்த ஆணையிடப்பட்டுள்ளது மற்ற 4035 பேர்களும் அனுப்ப ஏற்பாடுக்லள் நடக்கிறது. நவீன் பட்நாயக், முதலமைச்சர் சட்டமன்றத்தில், இதைப் பற்றிய விவாதத்தில் கடைசியாக உண்மையை ஒப்புக் கொண்டு, ஜூலை 16, 2010 அன்று இவ்வறு நடவடிக்கை எடுப்பதாக விளக்கினார்[13].


[1] A couple of years ago, a small radio station clandestinely run by a Bangladeshi infiltrator was unearthed at an interior village of the coastal district.

[2] . Some time back, a guard of the Bhitarakanika Wildlife Park and Maine Sanctuary, famous for its turtle nesting grounds, bird sanctuary and crocodile breeding centre, was murdered by a group of suspected Bangladeshi infiltrators.

[3] Deccan Herald, Tension in Orissa over burning of national flag, Illegal Bangladeshi migrants allegedly forced their way into a government school and tore and burned the tricolour, BHUBANESWAR, DHNS: Thursday, August 19, 2004

http://archive.deccanherald.com/Deccanherald/aug192004/n4.asp

[4] தமிழ் ஊடகங்கள், இவ்விஷயங்களை பெருமளவில் மறைத்தனர். மறைக்கப் பாடுபட்டனர். இன்றோ, தளங்களினின்று காணாமாலேயே போய்விட்டுள்ளன.

[5] அந்த அமைச்சர் முன்பு கவிதை எழுதி வாசித்தாளாம். ஆண்டுவ்விழா மலரில், அவளது கவிதையும் வெளிவந்ததாம். உஷாராண அமைச்சர் அனைவற்றைம் அழிக்கச் சொல்லிவிட்டாராம்.

[6] ‘ஐதரபாத் குண்டுவெடிப்பு: பெண் தீவிரவாதி வேலூரில் படித்தவர்’ சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 4 செப்டம்பர் 2007   (19:22 IST); http://in.tamil.yahoo.com/News/Regional/0709/04/1070904050_1.htm

[7] இதற்கெல்லாம் எப்படி பணம் வந்தது, அண்ணன்காரன் எப்படி கொண்டு வந்து கொடுத்தான். முதலிய விவரங்களும் பல கதைகளை வெலிப்படுத்தின. உள்ளூர் ஆதரவாளர்களையும் காட்டிகொடுத்தது.

[8] Anurjay Dhal,  ABVP ask Naveen to deport Bangladeshi infiltrators as early as possible,  Thursday, August 07, 2008; http://www.orissadiary.com/Shownews.asp?id=7740

[9] Rise of Bangladeshi voters in costal villages of Orissa’s Jagsinghpur district , Tuesday, March 17, 2009; http://www.orissadiary.com/CurrentNews.asp?id=11429

[10] http://www.dinamani.com/edition/print.aspx?artid=184375

[11] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=24916

[12] http://timesofindia.indiatimes.com/Videos/News/HuJIs-second-in-command-arrested-in-Chennai/videoshow/5473169.cms

[13] Indian Express, Orissa deports 48 Bangladeshi infiltrators, by Agencies,  Posted: Jul 19, 2010 at 1629 hrs IST;  http://www.expressindia.com/latest-news/Orissa-deports-48-Bangladeshi-infiltrators/648767/