Posted tagged ‘ஒபாமாவின் யுத்தம்’

தீவிரவாதத்திற்கான கேன்ஸரே பாகிஸ்தானில்தான் உள்ளது: சொல்வது ஒபாமா!

செப்ரெம்பர் 22, 2010

தீவிரவாதத்திற்கான கேன்ஸரே பாகிஸ்தானில்தான் உள்ளது: சொல்வது ஒபாமா!

பாகிஸ்தான் ஒரு நம்பகத்தன்மையற்ற மற்றும் நேர்மையில்லாத பார்ட்னர்: பாப் வுட்வார்ட் என்ற பத்திரிக்கையாளரால் எழுதபட்ட “ஒபாமாவின் யுத்தம்” என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளது. தேசிய புலனாய்வு இயக்குனர், நவம்பர் 2008 வெற்றிற்குப் பிறகு, தீவிவாதத்திற்கான எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தைப் பொறுத்த மட்டிலும், பாகிஸ்தான் ஒரு நம்பகத்தன்மையற்ற மற்றும் நேர்மையில்லாத பார்ட்னர் என்று சொன்னாராம். ஒபாமா ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு நாட்களுக்கு பிறகு அவரிடம் மெக்-கோனெல் என்ற தேசிய புலனாய்வு இயக்குனர், பாகிஸ்தானை நம்பமுடியாது என்றாராம்.

cover-Obamas-Wars-பாப் வுட்வார்ட்

cover-Obamas-Wars-பாப் வுட்வார்ட்

தீவிரவாதத்திற்கான கேன்ஸர் புரையோடிருக்கிறது: அல்-குவைதா மற்றும் தாலிபானிற்கு, பாகிஸ்தானிலிருந்து கிடைக்கும் ஆதரவு இருக்கும் வரை, அங்கு தீவிரவாதத்திற்கான கேன்ஸர் புரையோடிருக்கிறது, அதனால், அது தீமையைத்தான் விளைவிக்கும். ஆகையால் அங்குள்ள மக்களுக்கு நாம் இதை தெளிவாக சொல்லவேண்டியுள்ளது என்றாராம்[1]. ஆக ஆப்கானிஸ்தானைப் பற்றிய கொள்கையில், வாஷிங்டனில் கருத்து வேறுபாடு அதிகமாகவே இருந்தது என்கிறார்[2]. இந்தியாவில், இத்தகைய கருத்தைச் சொல்ல, எந்த அதிகாரிக்கும் துணிவில்லை. 26/11 அன்று அமைதியாக இருங்கள் என்று சொல்லுவார்கள் அவ்வளவுதான்!

சர்வதேச பயங்கரவாதியும், அல்காய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை பிடிக்கும் அல்லது கொல்லும்வரை ஓயமாட்டோம்: வாஷிங்டன், செப்.11, 2010: சர்வதேச பயங்கரவாதியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லேடனை பிடிக்கும் அல்லது கொல்லும்வரை ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைத்து பத்து நாட்களில் மேலே குறிப்பிட்ட செய்தி வருகிறது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகளும், படை வீரர்களும் மனம் தளர்ந்துவிடவில்லை. பின்லேடனை தீர்த்துக்கட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நியூயார்க்கில் அல்-காய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி (செப்டம்பர் 11) அதிபர் ஒபாமா வாஷிங்டனின் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள அல்-காய்தா தீவிரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

இது இஸ்லாமியர்களுக்கு எதிரான போரல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்[3]: அவர் மேலும் கூறியது: நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நடத்தவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே போர் நடத்துகிறோம். இஸ்லாம் என்ற போர்வையில் யாரெல்லாம் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு எதிராகவே நாங்கள் போர் புரிகிறோம்.கடந்த இரு ஆண்டுகளாக அல்-காய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்தி வருகிறோம். இந்த போரில் நல்ல பலன்கிட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் புகலிடம் அடைந்துள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளால் நமது தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அந்த அமைப்பின் தலைவர் பின்லேடன் தாக்குதலுக்குப் பயந்து பூமிக்கடியில் பதுங்கியுள்ளார். எதற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு மிரட்டல் விடுத்து வந்த ஜவாஹிரியின் செயல்பாடும் முடங்கிவிட்டது. இதெல்லாம் அமெரிக்கப் படைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

ஈவிரக்கமின்றி பலரைக் கொல்லுவதற்கு ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவினரோ துணிந்து உயிரைத் துறக்கத் தயாராகவுள்ள போக்கு மோசமானது: பின்லேடனையும், ஜவாஹிரியையும் உயிருடன் பிடித்துவிட்டாலோ, கொன்றுவிட்டாலோ அமெரிக்காவின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடப்போவதில்லை. எனினும் இருவரையும் தீர்த்துக்கட்டுவதற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது.  கடந்த 8 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை மேற்கொண்டபோதிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நமது நாட்டை முழுமையாக காத்துள்ளோமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். இதனால் மனம் துவண்டுவிடத் தேவையில்லை. பயங்கரவாதிகளின் எத்தகைய சவாலையும் சமாளிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். இப்போதைய காலக்கட்டத்தில் ஈவிரக்கமின்றி பலரைக் கொல்லுவதற்கு ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவினரோ துணிந்து உயிரைத் துறக்கத் தயாராகவுள்ளனர் என்றே நினைக்கிறேன். இதுபோன்ற போக்கு மோசமானது. மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது என்றார்[4].

ஒசாமாவைப் பற்றிய முரணான செய்திகள்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குலின் முக்கிய குற்றவாளியும், அல் கொய்தா மற்றும் பல்வேறு பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்பின் தலைவைனுமான ஒசாமா பின்லேடன் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டோம் என்று ஐரோப்பிய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இத்தகவல்கள் வெளியாயின. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவரின் பெயர் பாதுகாப்பு கருதி குறிப்பிடப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பேட்டியில் அவர் கூறியதாவது : இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் தஞ்சம் புகுந்த பின்லேடனுக்கு மிகவும் நெருக்கமான சிலர் தந்த தகவல்களின் அடிப்படையில் ஐரோப்பிய உளவுத்துறை பின்லேடனை மிக அருகில் நெருங்கியதாகவும், ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னரே பின்லேடன் தப்பிச் சென்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரையில் மர்மமாகவே உள்ள பின்லேடன் தற்போது, அன்றாட செயலாக்கப் பணிகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, ஆலோசனைகள் வழங்குவதிலேயே, அதிக ஈடுபாடு காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வதிர்ச்சித் தகவல்கள் சர்வதேச பயங்கரவாதச் சதிச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புக்களிடையே அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


[1] Indian Express, Obama believes ‘cancer of terrorism’ is in Pak: Book, Wed Sep 22 2010, 15:28 hrs

http://www.indianexpress.com/news/Obama-believes—cancer-of-terrorism—is-in-Pak–Book/686098

[2] http://blogs.abcnews.com/politicalpunch/2010/09/white-house-reacts-to-nyt-report-about-woodward-book.html#tp

Obama Aides Divided on Afghan Strategy, According to New Book

http://www.voanews.com/english/news/asia/Obama-Aides-Divided-on-Afghan-Strategy-According-to-New-Book-103520379.html

[3] இந்தியாவும், காஷ்மீர் விஷயத்தில், இவ்வாறு சொல்லி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, பேசி அவட்களிடத்தில் எந்த பலனையும் காண / அடைய முடியாது, ஏனெனில் அவர்கள் தங்களுடைய பிரிவினைவாத்கத்தில் குறியாக உள்ளார்கள்.

[4] அதாவது மனித வெடிகுண்டுகள், தற்கொலத் தாக்குதல்கள், ஜிஹாதி பயங்கரவாதத்தைக் குறிப்பிட்டு சாடுகிறார். சிதம்பரம் இதை கவனமாகப் படித்து, தைரியத்தை வளர்த்துக் கொண்டால் சரி!