Posted tagged ‘ஒசாமா’

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

நவம்பர் 24, 2012

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

ஜிஹாத் தவறு என்றல் இனி ஜிஹாத நடத்துவது கூடாது: “அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னை மன்னியும். இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது” (“Allah kasam, maaf kar do. Chhod do, aisi galti dobara nahin hogi.”) என்று முணுமுணுத்தாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[1]. அதாவது அல்லாவின் பெயரால் ஜிஹாத் என்று “புனிதப் போரை” நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் – பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று கொன்று குவித்துவிட்டு, “இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது”, என்று பாவ மன்னிப்புப் போல கேட்டு முறையிட்டால் அல்லா மன்னிப்பாரா அல்லது இறந்த உயிர்கள் திரும்பக் கிடைக்குமா? அப்படியென்றால், இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் தவறு என்றாகிறது. எனவே பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் மற்றவர்களுக்கு இந்த உண்மையைச் சொல்லி அவர்களைத் திருத்த வேண்டும். அல்லாவின் பெயரால் தவறுகள் – இத்தகைய குரூரக் கொலைகள் நடப்பது ஏன்? இனிமேலாவது, தாலிபான், ஹிஜ்பு முஜாஹித்தீன், அல்லா புலிகள், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு, குண்டுகள்  வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வதை நிருத்துவார்களா?

ஜிஹாத் பெயரில் முஸ்லீம்கள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதை நிறுத்தி விட வேண்டும்: ஜிஹாத் என்பது முஹம்மது நபி காலத்தில் நடத்தப் பட்டது. அப்பொழுது அவருக்கு எதிராக செயல்பட்டவட்கள் தாம் காபிர்கள். எனவே இப்பொழுது அவர் பெயரால் அல்லது இஸ்லாம் / அல்லா பெயரால் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது தவறு என்றாகிறது. உலகத்தில் முஸ்லீம் அல்லதவர்கள் எல்லோரும் அப்படி காபிர்கள் என்றாகி வுடமாட்டார்கள். அல்லா மன்னிக்கமாட்டார் என்றால், இனி இக்காலத்தில் ஜிஹாத் பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது, உலகத்தில் உண்மையிலேயே அமைதி நிலவும். பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள், முல்லாக்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் அமைதியான இஸ்லாமை கடைபிடிக்க அறிவுரை சொல்லவேண்டும்.

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள்  –  இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்: தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற அமெரிக்கா, பாகிஸ்தான் ஒத்துழைப்புடன், பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த ஒசாமா இன் லேடனை ரகசியமான முறையில், படை பலத்துடன் சென்று பிடித்தது, கொன்றது, ரகசியமாகவே எங்கோ அவனது உடலை புதைத்தது என்று தான் செய்திகள் வந்தன, வீடியோக்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தியாவில், கசாப்பின் தூக்குத் தண்டனை, ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக நடத்தப் பட்டு, அவனுக்கு எல்லா வசதிகள் (கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு), உரிமைகள் முதலியவை கொடுக்கப்பட்டு (சட்டப்படி வக்கீல், மேல் முறையீடு முதலியவை), தூக்குத் தண்டனை வேண்டுமா-கூடாதா என்று ஊடகங்களில் விவாதம் செய்யப்பட்டு, ……………………கடைசியாக கொடுக்கப்பட்டது (இப்பொழ்ய்து கூட “தி ஹிந்து” வழக்கம் போல மாற்றுக் கருத்துக் கொண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது[2]). அதற்கு முன்னர் கூட, பாகிஸ்தானிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கே உலகத்தில் எல்லா உண்மைகளும் தெரிந்து விடுமோ என்று அவனது உடலைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இவ்விஷயத்தில் நிச்சயமாக, அமைதியை, சாந்தத்தை விரும்ம்பும் இந்தியா தனித்து நிற்கிறது. இதனை பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-11-2012


[2] சயீது ஷா, ஜிஹாத் பூமியின் மத்தியில் ஒரு பெயரித் தேடி அலைந்தது, http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-name-in-jihadi-heartland/article4120446.ece; அதாவது இத்தகைய கருத்து சுதந்திரம் இந்தியாவில் தான் கொடுக்கப் படும், வேறெந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முஸ்லீம் / இஸ்லாமிய நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

N. Venkatesan, Keeping the nation in dark, http://www.thehindu.com/opinion/lead/keeping-the-nation-in-the-dark/article4120378.ece

Editorial, The hangman’s justice, http://www.thehindu.com/opinion/editorial/the-hangmans-justice/article4120370.ece

Amruta Bayntal and Soumojit Banerjee, Kasab hangs, justice for 26/11 still elusive, http://www.thehindu.com/news/states/other-states/kasab-hangs-justice-for-2611-still-elusive/article4118491.ece