பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி–தீவிரவாதம் வளறும் விதம் (3)
PFI ஆட்கள் கைது மற்றும் சியரியாவில் இறப்பு: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. “சத்திய சரனி” என்ற நிறுவனம்[2], அவ்வாறு பணம் பெற்றதையும் ஒப்புக் கொண்டார்[3]. அதேபோல, “சத்திய சரனி” யின் பெண்களின் பிரிவு தலைவி, ஜைனபா ஒரு பக்கம் தாங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறோம், அதற்கான சான்றிதழ்கள் கொடுக்கப் படுகின்றன என்றும், இன்னொரு பக்கம், இல்லை, தங்களது நிறுவனம், இஸ்லாம் பற்றி போதிக்கிறது, அவ்வளவுதான், என்ற ரீதியிலும் பேசியுள்ளார்[4].
ஐந்து பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது[5]: ஆறு பேர் கைது செய்யப்பட்டதை பொலீஸார் உறுதி செய்தது[6]. முன்னர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையில் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்தனர் என்று செய்தி வந்தது[7]. இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த மாவட்டத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் சிரியாவில் பலியானது உறுதியாகி உள்ளது. இறந்தவர்கள் –
- ஷநாத் (வயது 25) சலாட்பகுதியை சேர்ந்தவர்,
- ரிஷல் (30) வலாபட்டனம்,
- ஷமீர் (45)
- அவரது மகன் சல்மான் (20) பப்பினிசேரி,
- ஷாஜீர் (25) எச்சூர்
ஆகியோர் என அடையாளம் தெரிந்து உள்ளது[8]. ஆகவே, நிச்சயமாக, இவர்களது பெற்றோர்கள் மறுக்க, மறைக்க முடியாது. ஆனால், தெரிந்து அவர்கள் எப்படி, தம் மகன்கள் ஐசிஸில் சேர ஒப்புக் கொண்டார்கள் என்பது புதிராக உள்ளது. இல்லை, அந்த அளவிற்கு அவர்களும் மூளைசலவை செய்யப்பட்டுள்ளனர் போலும். மேலும் அதே பகுதியை சேர்ந்த 15 வாலிபர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேரள போலீசாரால் அக்டோபர் 26 ம் தேதி கைது செய்யப்பட்ட U.K. ஹம்சா இவர்களை ஐ.எஸ் நெட்வொர்க்கில் சேர அழைத்துச் சென்றார். அவர்களில் சிலர் இன்னும் சிரியாவில் இருக்கிறார்கள்.
தீவிரவாத நட்பு, தீவிரவாதத்தில் தான் முடியும்; சென்ற வாரம், பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள் நிரூபணம் ஆகும் முறையில், கைதுகள், கொலைகள் நடந்த செய்திகள் வெளியாகின. இப்பொழுது இத்தகைய குரூர செயல்திட்ட விலக்கம் மூலம் ஜிஹாதித்துவத்தின் ஒடிய முகம் வெட்ட வெளிச்சமாகிறது! இதுவா மனிதத்தன்மை? எந்த மனிதன் இதனை தெய்வீகம் என்பான்? ஆனால், துலுக்க வெறியர்கள், இவற்றை கடவுள் பெயரில் தான் செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் அறிந்தும், தமிழகத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளாகத் துடிக்கும் நடிகர்களும் அமைதியாக இருப்பது, மாறாக இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவது, அவர்களது ஆதரவு மற்றும் தொடர்புகளைக் காட்டுகிறது எனலாம். திரையுகத்தைப் பொறுத்த வரையில், தாவூத் இப்ராஹிம் உதவியில்லாமல், எவனும் படத்தை வெற்றியாக வெளியிட முடியாது. அவனுக்குண்டான கப்பம், வசூலிக்கப் பட்டு சென்று விடுகிறது என்று தெரிகிறது. அந்நிலையில், இவர்களும், அவர்களால் சந்தோசமாக வைக்கப்படுகின்றனர் என்றாகிறது, இல்லையெனில், எல்லாவற்றையும் அறிந்தும், அறியாதது போல மேடைகளில் சமமாக உட்கார்ந்து கொள்ளுதலும், சந்தோசமாக பொழுது கழிப்பதும், பல கதைகளை சொல்கின்றன என்றாகிறது. பொது மக்களுக்கு விரோதமான, அத்தகைய உறவு நிச்சயமாக ஒரு நாள் பேரிழப்பில் தான் சென்று முடிவடையும் என்பது திண்ணம்.
கேரளா ஏன், எப்படி, எவ்வாறு ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்கிறது?: ஐசிஸிக்கு, இந்த மலபார் பகுதியிலிருந்து, தீவிரவாதத்திற்கு எப்படி இளைஞர்கள் சுலபமாகக் கிடைக்கிறார்கள்? இதைப் பற்றி அலசும் போது கவனிக்க வேண்டிய காரணிகள் சுருக்கமாகக் கொடுக்கப் படுகின்றன[9]. முகமதியரிடையே ஒரு பக்கம் படிப்பின்மை, இன்னொரு பக்கம் ஐ.டி. இஞ்ஜினியரிங் என்று படித்துள்ள நிலை என்றுள்ளது. ஐ.டி படித்த இளைஞர்கள் சுலபமாக ஜிஹாதித்துவத்திற்கு மாறுவது, பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வது. மற்ற மத-அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிக் குழுக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பது. வளைகுடா நாடுகளுடன் எல்லோருக்கும் தொடர்புகள் இருப்பது. வேலையின்மையைப் பயன்படுத்தி, வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்ற நிலையில் ஆள் சேர்ப்பது. அதிக முகமதியர் மக்கட்தொகை உள்ள இடங்கள், கடைகள் முதலிய இடங்களில் முஸ்லிம் அல்லாத இளம்பெண்களை கவர்ந்து, மதம் மாற்றி, லவ்-ஜிஹாத் மூலம் கல்யாணம் செய்து வைப்பது. லவ்-ஜிஹாத் மூலம் வசீகரித்து, பெண்ணோடு அனுப்பி வைப்பது. சம்பந்தப் பட்ட குடும்பத்தினருக்கு தவறாமல், மாதன் தோறும் பணம் வந்துக் கொண்டிருப்பது. விசா, பாஸ்போர்ட், மணி-எக்ஸ்சேஞ்ச், விமான டிக்கெட்,…..போன்றவற்றில் முகமதியர் ஆதிக்கம் செல்லுத்துவதால், பண-பரிமாற்றம், ஆட்கள் எளிதாகச் சென்று வருதல் போன்றவை சுலபமாக நடந்து வருகிறது. விவரங்களும் அவர்களுடனே இருந்து விடுகிறது. அனைத்திற்கும் மேலாக அரசியல் செல்வாக்கு, போலிஸ் முதலிய துறைகளில் பெரிய பதவிகளில் இருக்கும் முகமதியர்களின் உதவி முதலியவை அவர்களை சட்டப்பிடிகளிலிருந்தும் தப்பித்துக்க் கொள்ள உதவுகிறது. இப்பொழுது, கம்யூனிஸ கூட்டாட்சி வந்த பிறகு, அரசுக்கு சித்தாந்த போராட்டங்களில் ஈடுபடவே நேரமில்லாத நிலையில், ஜிஹாதிகள் சுலபமாக தங்களது செயல்களை செய்ய ஆரம்பித்து விட்டனர்[10].
© வேதபிரகாஷ்
17-11-2017
[1] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.
[2] PO Karuvambram, Cherani, Manjeri – 676123, Kerala, India, Tel: +91 483 2765010, Email: saranimail@gmail.com, http://www.sathyasarani.org/
[3] On Tuesday, 31-10-2017, India Today TV aired the explosive sting report which laid bare a nexus between Islamic extremist groups and Popular Front of India. Ahmed Shareef, a senior PFI leader and associate editor of group mouthpiece Gulf Thejas was the first to be caught on camera. He claimed before undercover reporters that a key aim of PFI was to create an Islamic state in India and later spread it to the rest of the world. He also revealed the modus operandi of illegal fund transactions from the Gulf to Kerala. Shareef said that Sathya Sarani in Malappuram, which is considered an Islamic education institution, received a lot of money through hawala.
India Today, Six PFI members joined ISIS; police say, P S Gopikrishnan Unnithan Posted by Ganesh Kumar Radha Udayakumar, Thiruvananthapuram, November 3, 2017 | UPDATED 06:19 IST
[4] AS Zainaba, president of the AFI’s women’s wing, said on hidden camera Sathya Sarani is a conversion factory masquerading as an educational organisation. http://indiatoday.intoday.in/story/kerala-police-pfi-isis-kannur/1/1081364.html
[5] தினத்தந்தி, ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் சிரியாவில் பலி கேரள போலீசார் உறுதி
[6] Deccan Chronicle, 6 more youth from Kerala join ISIS, confirm police, ANI, Published Nov 2, 2017, 7:10 pm IST; Updated Nov 2, 2017, 7:10 pm IST
[7] http://www.deccanchronicle.com/nation/current-affairs/021117/6-more-youth-from-kerala-join-isis-confirm-police.html
[8] http://www.dailythanthi.com/News/TopNews/2017/10/28140247/Kerala-Police-confirm-deaths-of-five-ISlinked-men.vpf
[9] முதல் ஐந்து காரணிகள் ஏசியா நெட் செய்தியிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளது:
Asianet.newsable, Why India could soon be under a ‘Made in Kerala’ threat, by T. S. Sudhir, October 27, 2017. 10:51 am.
[10] http://newsable.asianetnews.com/editorial/why-india-could-soon-be-under-a-made-in-kerala-threat
அண்மைய பின்னூட்டங்கள்